இலங்கை கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இலங்கையில் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் கடற்படை முகாம் மூடப்பட்டு உள்ளது. கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெலிசராவில் கடற்படை முகாம் உள்ளது. அங்கு ஒரு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய மற்ற…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுக்கு அடுத்த புதிய சவால்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (இடது) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (வலது) இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை உரிய முறையில் நடத்திக் கொள்ள முடியாத நிலைமைக்கு மத்தியில் தேர்தல் பிற்போடப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மார்ச் மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்றத்…

’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட தேவையில்லை’

ஏ.சி.எம் பௌசுல் அலிம் ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும்  அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் தற்போதைய…

கொழும்பில் 1010 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினமும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது. முன்னதாக,…

24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றாளர் இல்லை

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் இனங்காணப்படவில்லை என தொற்று நோயியில் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் பூரண குணமடைந்த ஐந்து பேர் நேற்று (16) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 163ஆக காணப்படுகின்றது. இதுவரை…

கொரோனா வைரஸ்: ஐ.பி.எல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கும் இலங்கை

கொரோனா தொற்று காரணமாக மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட் - 19 வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுமையாக முடங்கியுள்ள நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக…

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் அமைச்சரின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பிருந்தமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று, புதன்கிழமை, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிற்கும்,…

சுகாதார அமைச்சின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் டயலொக்

படத்தில் இடமிருந்து வலம் : டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும நிலை பேண்தகு பிரிவு சிறப்பாளர் ஜெயராஜசிங்கம் ஐங்கரராஜ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும நிலை பேண்தகு பிரிவு தலைவர் சரித ரத்வத்த, பனதுரா அடிப்படை மருத்துவமனை வைத்தியர் டாக்டர் லசித் எதிரிசூரிய, பொது சுகாதார…

கொரோனாவைரஸ்: துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள் – இலங்கை அவலம்

இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன  அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள பின்னணியில்…

கொரோனா வைரஸ்: இலங்கை – உடல்களை தகனம் செய்ய இஸ்லாமியர்கள்…

இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை தகனம் செய்யும் வகையில் அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (11) வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்…

அந்நியர்கள் நுழைந்தால் அறியத்தரவும்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுழைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்…

கொரோனா வைரஸ்: 20 ஆண்டுகளுக்கு பின்னர் சுத்தமான இலங்கை

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது. இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் கடந்த 20 வருட கால வரலாற்றில் வளிமண்டல காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்த…

கொரோனா வைரஸ்: இலங்கையில் விடுதலையான 2961 கைதிகளில் தமிழர்கள் இருக்கிறார்களா?

இலங்கையில் கொரோனாவால் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கும் நோக்கத்தோடு, இலங்கை சிறைச்சாலைகளில் இருந்து 2961 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17 முதல் ஏப்ரல் 4 வரை இவர்கள் பல கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. ஜனாதிபதி…

கொரோனா வைரஸ்: ’இலங்கையில் 2000 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க…

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், 178 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இவர்களில் ஐவர் உயிரிழந்துள்ள அதேவேளை, 34 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது. அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் தொடர்ந்து…

கொரோனா அச்சுறுத்தலிலும் ஆதாயம் தேடும் ராஜபக்‌ஷக்கள்

உயிரிழப்பு ஏதுமின்றி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை இலங்கை கடந்துவிடும் என்ற நம்பிக்கை, நாட்டு மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்திருக்கின்றது. இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்திருக்கிறார்கள். அந்த இருவரின் உடல்நிலையில் ஏற்கெனவே காணப்பட்ட சிக்கல்கள் குறித்து வைத்தியத்துறையினர் விளக்கமளித்து, கொரோனா மரணங்கள்…

பொதுமக்களின் நேர்மையே கொரோனாவுக்கான மருந்து

கொரோனா வைரஸ் என பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற புதிய நோய், இனம், மதம், சாதி, அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பாராமல், நாடுகளில் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், முழு உலகையும் பற்றிப் படர்ந்து, உலகையே உலுக்கிக் கொண்டுள்ளது. ஆனால், அதையும் தமது இனவாத நோக்கங்களை நிறைவு செய்து கொள்வதற்காகச்…

மூடி இல்லாத முகங்கள் கேட்டோம்…

அமர்க்களம், படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..’ என்ற பாடல், 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில், பட்டிதொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தது. இந்தப் பாடல் தனித்துவமானது. ‘அமர்க்களம்’ படத்தையே, சமர்க்களம் ஆக்கியது எனலாம். அதாவது, கதாநாயகன் எவற்றை எல்லாம் விரும்பிக் (நியாயமாக, ஏற்றுக்…

கொரோனா வைரஸ்: இலங்கையில் முதல் மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.…

கொரோனா வைரஸ்: சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு இலங்கையில் கட்டுப்பாடு

இலங்கையில் கடந்த 8 நாட்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் அங்காங்கே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதன்படி, இலங்கையில் இன்றைய தினமும் நால்வர் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது. நாட்டில் இதுவரை 110…

அரசாங்கம் + கொரோனா = மக்கள்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின்…

கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையில் முழுமையாக முடங்கிய தமிழ் மற்றும்…

இலங்கையின் களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம கிராமத்தை முடக்குவதற்குப் பாதுகாப்பு பிரிவினர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர். கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நபர்…

தமிழர்கள் கொலைக்கு மரண தண்டனை பெற்ற முன்னாள் ராணுவ சார்ஜன்ட்…

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க 26 மார்ச் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையிலிருந்து இன்று முற்பகல் அவர் வெளியேறியதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோன்…

இலங்கையில் தமிழர் பகுதியில் கொரோனா தொற்று:வட மாகாண பகுதிகளின் நிலை…

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இன்றைய தினம் புதிதாக நான்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது. அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 222 பேர்…