கொழும்பு சிறைச்சாலைக்கு விக்னேஸ்வரன் திடீர் விஜயம்! கைதிகளின் நிலை குறித்து…

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கொழும்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு, அவர்களைப் பார்வையிட்டார். அங்கு தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். கைதிகளின் நிலை குறித்து லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில், அரசியல் கைதிகள் விடுதலை…

எம்மால் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரமுடியாது! ஐ.நா.குழு

இலங்கைக்கு வருகைதந்துள்ள காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஐ.நா. குழு எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தாம்  மேறகொண்ட விசாரணைகள் குறித்த இறுதி முடிவை தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் காணாமல் போனோர்களின் உறவுகளை சந்தித்த ஐ.நா. குழுவினார் காணாமல் போனவர்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்கள் உள்ளிட்ட அனைத்து…

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பா? புனர்வாழ்வா?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்திவிட்டு அவர்களை விடுதலை செய்வதா என்பது தொடர்பில் அரசு நாளை முடிவெடுக்கவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அலரிமாளிகையில் நாளை திங்கள் கிழமை கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

சம்பந்தன் மீது முழு அளவில் நம்பிக்கை உள்ளது: தர்மலிங்கம் சித்தார்தன்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எந்த வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் லங்காசிறி செய்தி சேவைக்கு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்மைப்பு எனும் போது இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற…

அரசுக்கு அழுத்தம் வழங்கும் தரப்பாக ஐ.நா. செயற்குழு இருக்கவேண்டும்! காணாமல்போனோரின்…

இலங்கை அரசுக்கும் எமக்கும் இடையில் தொடர்பாளர்களாக மாத்திரம் ஐ.நாவின் காணாமல்போனோர் செயற்குழு இருப்பதால் எமக்கு எந்தப் பலனுமில்லை என காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. செயற்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அங்கு பிரத்தியேக இடம் ஒன்றில் வைத்து,…

அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுங்கள்! ஜனாதிபதிக்கு அகில இலங்கை சைவமகா…

அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபையினர் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடாக இந்த மனு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை வரலாற்றில் நல்லாட்சி எனும் மாற்றத்துக்காக தியாக உணர்வோடு…

மட்டக்களப்பில் ஐ.நா.சாட்சியங்களை பதிவு செய்தது: கண்ணீருடன் கதறிய உறவினர்கள்

கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர். மட்டக்களப்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த அவர்கள் அங்கு ஒரு குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். https://youtu.be/3HPnTJKYcqw இதேபோன்று மட்டக்களப்பு…

கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் சரியாக செயற்படாவிடில் போராட்டம் வேறு வடிவம்…

அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் நல்லதொரு பதிலை தராவிட்டால் எமது போராட்டம் வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் இன்று முன்னொடுக்கப்பட்ட ஹர்த்தால்…

தமிழர்களை ஏமாற்றி போர்ச் சூழலுக்குள் தள்ளிவிட்டார் மைத்திரி! சரவணபவன்

தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் பதவியைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழர்களுக்கு  எந்தவொரு நன்மையையும் செய்யாமல், அரசியல் கைதிகளைக் கூட விடுதலை செய்யாமல் தமிழர்களை அவர் மீண்டும் போர்க் காலச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை…

புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது அநீதியானதல்ல: சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவது அநீதியானதல்ல என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர், புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்வதில் எவ்வித அநீதியும் கிடையாது.…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண…

வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவரும் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த்…

யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு ஐ நா குழுவினர் பயணம்

இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக ஐ நா வல்லுநர் குழு தெரிவித்துள்ளனர். "முடிந்ததைச் செய்வதாக" ஐ நா அதிகாரிகள் கூறுகிறார்கள். வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஐ நா அதிகாரிகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தமது அமர்வுகளை வியாழக்கிழமை நடத்தினர்.…

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் முழுவதும் கதவடைப்பு…

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணம் முழுவதும் இன்று பூரண கர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் அரசியல் கைதிகள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்…

காலதாமதமின்றி விடுவிக்கப்படுவதுடன் அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்

இலங்கையின் சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகள் அனைவரும் காலதாமதமின்றி விடுதலை செய்யப்படுவதுடன் அவர்களின் பாதுகாப்பும்  உறுதிப்படுத்தப்பட  வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவையினராகிய நாம் இலங்கை அரசிடமும், சர்வதேச நாடுகள் முன்பும் எமது கோரிக்கையினை முன்வைக்கின்றோம். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின்…

சம்பந்தன் அரசியல் கைதிகளின் அருகில் இல்லாமை பொருத்தமற்றது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள், தங்கள் விடுதலையை வலியுறுத்தி இங்கு உண்ணாவிரதம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில்,  எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், டெல்லியில் இருப்பது சரியில்லையென  சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,  ஒருவருக்கு,…

யாழில் ஐ.நா பிரதிநிதிகள்: காணாமல் போனோரின் உறவுகள் கண்ணீர் மல்க…

ஜ.நா மனிதவுரிமை ஆணைக்குழு தீர்மானம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பான கண்காணிப்பை மேற்கொள்ளும் ஜ.நா கண்காணிப்பு குழு இன்றைய தினம் யாழ் வருகை தந்துள்ள நிலையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு குறித்த குழு யாழ் வந்திருந்தது இதன்போது யாழ்.…

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை – நேரடி பயனம் மைத்திரி

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டறிவதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக்குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். உணவு உற்பத்தி தேசியவேலைத்…

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களை வைத்து பலர் அரசியல் செய்கின்றார்கள்:…

அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருந்தும் இன்றுவரை எந்தவொரு தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன், இந்த தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களை வைத்துக்கொண்டு பலர் அரசியல் செய்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார். தீபத் திருநாளாகிய இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின்…

இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான விசேட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் துணையுடன்…

புதிய அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்படவில்லை: வடக்கு முதல்வர்

புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை  என வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென கோரி வடமாகாண சபை சார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்து  விட்டபோதும்,…

ஐ நா அதிகாரிகளுடன் காணாமல் போனோரைத் தேடும் குழு பேசியது…

வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ நா வல்லுநர்கள் குழு இலங்கை சென்றுள்ளது. அரசின் அழைப்பில் அங்கு சென்றுள்ள அந்தக் குழு எதிர்வரும் 18ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு செல்லவுள்ளனர். இந்தக் குழுவினரை இன்று-திங்கட்கிழமை, இலங்கையில் காணாமல் போனோரைத் தேடி அறியும் குழுவினர் சந்தித்து பேசியுள்ளனர்.…

தமிழினத்தை அழித்த அரக்கர்களுக்கு தண்டனை வழங்கும் நாளாக இந்நாள் அமையட்டும்!…

தமிழ் இனத்தையும், எங்கள் சமயத்தையும் அழித்து ஒழிக்க உறுதி பூண்டு செயற்பட்டு வரும் மனித அரக்கர்களுக்கு இறைவன் தகுந்த தண்டனை வழங்கி அவர்களை நல்வர்களாக மாற்றும் நன்நாளாகவும், இந்த தீபாவளி அமையட்டும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச்…

நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய த.தே.கூவின் முதல் தோல்வி! சம்பந்தன் என்ன…

இலங்கையின் நல்லாட்சியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு முதல் தோல்வி ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் ஜனாதிபதியின் உறுதி என்று சம்பந்தன் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பு இன்று பொய்யாகிப்போயுள்ளது. தமது விடுதலையை கோரி கடந்த 12ஆம் திகதி அரசியல்…