ஏஜி ஆவதற்கு இனம் முக்கியம் அல்ல, சட்ட நுணுக்கம் தெரிந்தவரா…

சட்டத்துறைத் தலைவர் போன்ற அரசாங்க உயர்ப் பதவிகளுக்கு ஆள்களை நியமுக்கும்போது இனம் பார்த்து நியமிக்க வேண்டிய அவசியமில்லை என கேமரன் மலை எம்பி ரம்லி முகம்மட் நூர் கூறினார். இனத்தைப் பார்க்கக் கூடாது, நியமனம் செய்யப்படுபவருக்குத் தகுதி இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் என்றாரவர். “என்னைக் கேட்டால் சட்டத்துறைத்…

தெங்கு ரசாலி: மகாதிர் நலமே வாழ பிரார்த்தனை செய்வீர்- அவரில்லை…

ஒரு காலத்தில் பிரதமர் மகாதிரின் பரம வைரியாக விளங்கிய அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, தம் பகையாளி நலமே வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். “நான் இதைக் கேலியாகக் குறிப்பிடவில்லை. அவர் நல்லா இருக்க வேண்டுமென்று மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். “இப்போதைய நிலையில் மகாதிருக்கு…

டிஏபி, மசீச செராமா’வைப் போலிஸ் தடுத்து நிறுத்தியது

செமினி இடைத்தேர்தல் | நேற்றிரவு, 100 மீட்டர் இடைவெளியில் நடைபெறவிருந்த இரு ‘செராமா’க்களை - மசீச மற்றும் டிஏபி – போலிஸ் தடுத்து நிறுத்தியது. விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, அம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) ஆதரவாளர்கள் சிலர், செமினி உணவுக் கடைகளுக்கு அருகில்,…

பாஸ்-இன் ஆதரவு எனக்குத் தேவையில்லை, மகாதிர் கூறுகிறார்

எதிர்க்கட்சிகளின் ஆதரவு, குறிப்பாக பாஸ் கட்சியின் ஆதரவு தனக்கு தேவையில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதிர் இன்று கூறியுள்ளார். மாறாக, தனக்கு பக்காத்தான் ஹராப்பானின் (பிஎச்) ஆதரவுதான் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “எனக்கு, 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக. மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு வேண்டும். “எனக்கு பாஸ்-இன்…

காலில்: இனி வரும் தேர்தல்களில் பாஸ் அம்னோவை எதிர்க்காது

செமிஞ்யே தேர்தல்| இனி வரும் தேர்தல்களில் பாஸும் அம்னோவும் ஒன்றை எதிர்த்து மற்றொன்று போட்டியிடுவதைத் தவிர்க்கும். அதற்காக இரண்டும் ஒரு கூட்டுக் குழுவை அமைக்கவுள்ளன. நேற்றிரவு, ஒரு செராமாவில் பாஸ் இளைஞர் தலைவர் முகம்மட் காலில் அப்துல் ஹாடி இதைத் தெரிவித்தார். “வரும் தேர்தல்களில் மும்முனைப் போட்டி இருக்காது.…

இனவாதத்தைத் தூவுகிறார் நஸ்ரி

செமிஞ்யே தேர்தல்| பக்கத்தான் ஹரப்பான் பலவீனமாக இருக்கிறது அதனால்தான் அது மலாய் உரிமைகளை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கின்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசிஸ். மலாய்க்காரர்- அல்லாதார் தலைமை நீதிபதியாகவும் சட்டத்துறை தலைவராகவும் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருப்பது இதைத்தான் காண்பிக்கிறது என…

இந்திராவின் முன்னாள் கணவரைக் கண்டுபிடிப்பவருக்கு RM10,000 பரிசு

இந்திராகாந்தியின் கணவர், முகமட் ரிட்டுவான் அப்துல்லா பற்றிய தகவல்களைக் கொடுப்பவர்களுக்கு, ‘இந்திரா காந்தி எக்‌ஷன் டீம்’ (இங்காட்) RM10,000 பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளது. 2009-ல், தனது 11 மாதக் குழந்தை, பிரசன்னா டிக்‌ஷாவுடன் வீட்டை விட்டு வெளியேறிய ரிட்டுவானை, காவல்துறையினராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருதலைப்பட்சமாக,…

செமிஞ்யே-இல் பிஎன் வெற்றிக்கான அறிகுறி முன்கூட்டியே தெரிகிறாம்: நஜிப் கூறுகிறார்

செமிஞ்யே தேர்தல்| பிஎன் வேட்பாளர் சக்கரியா ஹனாபிக்காக பரப்புரை செய்துவரும் முன்னாள் பிரதமரான நஜிப் அப்துல் ரசாக், செமிஞ்யேயில் பிஎன் வெற்றி பெறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் அதே வேளை பக்கத்தான் ஹரப்பான் கூட்டங்களுக்கு ஆதரவே இல்லை என்றும் கூறினார். நேற்றிரவு தாமான் தாசெக் கெசுமாவில், சுமார் ஆயிரம்…

முன்அனுமதி பெற்றால் மட்டுமே ஜாகிர் பினாங்கில் பிரச்சாரம் செய்ய முடியும்

ஜாகிர் நாய்க் ஒரு வெளியார். அவர் பினாங்கில் இஸ்லாமிய பரப்புரை செய்ய விரும்பினால் அதற்கு அனுமதி பெற வேண்டும். இதைத் தெரிவித்த பினாங்கு துணை முதலமைச்சர் அஹ்மட் ஸாகியுடின் அப்துல் ரஹ்மான், இந்த விதிமுறை வெளிநாட்டைச் சேர்ந்த எல்லாச் சமயப் பிரச்சாரகர்களுக்கும் பொருந்தும் என்றார். இதுவரை ஜாகிரோ, அவரது…

சமயத்தை இழிவுபடுத்தினால் நடவடிக்கை

சமயத்தை இழிவுபடுத்தி நாட்டின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் எச்சரித்துள்ளார். “இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப் படுவார்கள்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் ஆபத்தான…

இந்திராவின் மகள் 11 வருடங்களாகப் பள்ளிக்குப் போகவில்லை

‘இந்திரா காந்தி எக்‌ஷன் டீம்’ (இங்காட்) என, தங்களை அடையாளப்படுத்தி கொண்ட ஓர் அரசு சாரா அமைப்பு, நாளை, பெட்டாலிங் ஜெயாவில், ஓர் ‘அதிர்ச்சி தரும் செய்தி’யைப் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியிடப்போவதாகக் கூறியுள்ளது. இதுபற்றி மலேசியாகினியிடம் பேசிய, அதன் தலைவர் அருண் துரைசாமி, அவற்றுள் ஒன்று, காணாமல் போன…

நிதி அமைச்சர் : நாட்டின் கடன் இன்னும் RM1 டிரில்லியன்…

கடந்த 2018 இறுதி நிலவரப்படி, நாட்டின் கடன் RM1 டிரில்லியன் ரிங்கிட்டில் உள்ளது என நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று தெரிவித்தார். RM1.087 டிரில்லியனில் இருந்த முந்தையக் கடனை, தற்போதைய அரசாங்கம்  குறைத்துள்ளது என்று அவர் கூறினார். “நாங்கள் கடனை வெற்றிகரமாகக் குறைத்துள்ளோம்…. ஆனால், அது இன்னும்…

கியுபெக்ஸ்: 1.7மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை ஒன்றும் அதிகமில்லை

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பொதுச் சேவை ஊழியர் எண்ணிக்கை மிக அதிகம் என்று குறிப்பிட்டதற்குப் பதிலளித்த அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸ், மலேசிய மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அரசுப் பணியாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்று கூறியது. “மகாதிர் அவர், 2003-இல் அரசாங்கத்தைவிட்டு விலகியபோது…

செனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர் தரப்பு வலியுறுத்து

கூட்டரசுப் பிரதேச பிகேஆர் இளைஞர் பிரிவு, செனட்டர்களுக்கான வயது வரம்பு குறைக்கப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களைக் குறிப்பாக டேவான் நெகரா(மேலவை) சீரமைப்புக் குழுவில் உள்ளவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இளைஞர்களின் குரல்களும் மேலவையில் ஒலிக்க அப்படி ஒரு திருத்தம் தேவை என இளைஞர் பிரிவு தொகுதித் தலைவர் நயிம்…

ஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி மன்றம் அனுமதி மறுப்பு

அனைத்துலக இஸ்லாமிய பிரச்சாரக் கழகம்(ஐபிஎஸ்ஐ), சர்ச்சைக்குரிய சமயப் பேச்சாளர் ஜாகிர் நாய்க்கின் சொற்பொழிவை பினாங்கு சிட்டி ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி கேட்டு செய்திருந்த விண்ணப்பத்தை பினாங்கு நகராட்சி மன்றம்(எம்பிபிபி) நிராகரித்தது. ஐபிஎஸ்ஐ-இன் விண்ணப்பத்தைப் “பரிசீலனை செய்வதற்கில்லை” என எம்பிபிபியின் சமூகச் சேவை இயக்குனர் ரஷிடா ஜலாலுடின் பிப்ரவரி 13…

ஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ் மீது குற்றம் சுமத்தக்கூடாது

செமினி இடைத்தேர்தல் | டிஏபி மற்றும் பிகேஆர் தேர்தல் இயந்திரங்கள், பெர்சத்து வேட்பாளர் வெற்றிக்காக உழைக்கவில்லை என பாஸ் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, பிஎச் வேட்பாளர் ஐமான், பிஎன் வேட்பாளர் – பாஸ் ஆதரிக்கும் - ஜக்காரியாவிடம் தோற்றுப்போனால், பாஸ் மீது குற்றம் சுமத்தக்கூடாது என அப்துல் ஹாடி…

வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் இரத்து, பி.எஸ்.எம். ஏமாற்றம்

செமினி இடைத்தேர்தல் | செமினி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இடையிலான விவாதத்தை, இரத்து செய்த பெர்சேவின் முடிவில் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) தனது ஏமாற்றத்தைத் தெரிவித்தது. இது மற்ற வேட்பாளர்கள் தங்களது கருத்துகளை வெளிபடுத்தும் வாய்ப்பைக் கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அது கூறியுள்ளது. தேசிய முன்னணி (பிஎன்) மற்றும்…

செமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து செய்தது

செமினி இடைத்தேர்தல் | பிப்ரவரி 25-ம் தேதி, நடத்த திட்டமிடப்பட்ட செமினி இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தைப் பெர்சே இரத்து செய்துள்ளது. தேர்தல் கண்காணிப்புக் குழுவான ‘பெர்சே’, பி.என் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் அதில் பங்கேற்க இணக்கம் தெரிவிக்காததால், விவாத மேடை இரத்து செய்யப்படுவதாக, இன்று ஓர்…

பிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது

செமினி இடைத்தேர்தல் | பெர்சே ஏற்பாடு செய்திருக்கும் விவாத அரங்கம், மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது, மாறாக வேட்பாளர்களைப் புகழடைய செய்வதே அதன் நோக்கம் என பிஎன் வேட்பாளர் ஜக்காரியா ஹனாஃபி கூறியுள்ளார். மக்களை அணுகி, அவர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த விரும்பியதால், அந்த விவாத…

ஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை கொடுத்தது அம்னோ –…

14வது பொதுத் தேர்தலில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு அதிகமான இடங்களில் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர்களுக்குப் பண உதவி செய்தது அம்னோவாம். சரவாக் ரிப்போர்ட் கூறுகிறது. அப்போது அம்னோ பொருளாளராக இருந்த சாலே சைட் கெருவாக் பாஸின் பேங்க் இஸ்லாம் கணக்கில் ரிம2.5 மில்லியனை ரொக்கமாக போட்டார் என சரவாக்…

15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் எரிச்சலடைந்த இல்லத்தரசி

வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சுரைடா கமருடின், இன்று வீடு வாங்குவோருக்கு உதவும் அரசாங்கத்தின் FundMyHome-DepositKu திட்டத்தைத் தொடக்கிவைத்து விட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இடையில் புகுந்த ஒரு குடும்பத் தலைவி அமைச்சரின் கவனத்தை ஈர்த்தார். ஹபிசா அப்துல் ரஹ்மான்,34, வீட்டுக் கடனுக்காக 15க்கு மேற்பட்ட தடவை விண்ணப்பம்…

சிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்- வான் அசிசா

மங்கோலிய மாடல் அழகி அல்டான்துன்யாவைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட சிருல் அஸ்ஹார் உமரை ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவருவது தொடர்பாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் விவாதிக்கப்படும் என்று துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். “மலேசியாவின் கட்டாய மரண தண்டனைச் சட்டத்தை மாற்றி அமைத்தால்…

மகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க ஆர்சிஐ

நீதித் துறையில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹமிட் சுல்தான் அபு பக்கார் கூறியதை விசாரிக்க அரசாங்கம் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைக்கும் என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உறுதிப்படுத்தியுள்ளார். “ஆர்சிஐ அமைக்கப் போகிறோம்.அது நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்மீது விசாரணை நடத்தும்”, என்று மகாதிர் இன்று…