நூலாசிரியர்: அன்வாரிடம் நூலின் பதிப்புரிமையை விற்க முயன்றேன், மிரட்டிப் பணம்…

அன்வார் இப்ராகிம் ஏன் பிரதமராகும் தகுதியற்றவர் என்ற நூலை எழுதிய ஆசிரியர், அந்த நூலை வைத்து பிகேஆர் தலைவரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். அந்த நூலின் ஆசிரியரான யகாயா இஸ்மாயில். அந்நூலின் பதிப்புரையை வாங்குவதற்கு அன்வாருக்கும் சுங்கை பட்டானி எம்பி ஜொஹாரி அப்துலுக்கும் ஒரு…

மாநாட்டில் ஜம்ரி வினோத்தைப் பேச விட்டிருக்கக் கூடாது: பெர்லிஸ் பாஸ்…

நேற்று பாஸ் முக்தமார்(பேராளர் மாநாடு) தொடக்க விழாவில் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க்கின் மாணவர் முகம்மட் ஜம்ரி வினோத் காளிமுத்துவைச் சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேச வைத்ததைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதை பெர்லிஸ் பாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பெர்லிஸ் பாஸ் இளைஞர் பிரிவு பேராளர் முகம்மட்…

அல்டான்துயாபோல் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாராம் ஹசிக்

2006-இல் மங்கோலிய பெண்ணான அல்டான்துயா ஷரீபு ஷா ஆலம் காட்டுக்குள் வைத்து இரண்டு முறை சுடப்பட்டார். அத்துடன் நின்றுவிடவில்லை. அவரது உடலுக்கு வெடிவைத்து சுக்கு நூறாக தகர்க்கப்பட்டது. அக்கொலை தொடர்பில் போலீஸ் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இருவர்மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால்,…

உணவு நச்சுத்தன்மையால் 110 மாணவர்கள் பாதிப்பு

சிலாங்கூர், காஜாங், பண்டார் ஸ்ரீ புத்ராவில் உள்ள ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றுக்காக செர்டாங் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐயுறப்படுகிறது. 110 மாணவர்களில் 90 பேர் பெண்கள், 20 பேர்…

அன்வாரின் உதவியாளர் காணாமல் போகவில்லை, விடுப்பில் உள்ளார்- பேராக் பிகேஆர்…

பேராக் பிகேஆர் தலைவர் ஃபார்ஹாஷ் வாவா செல்வடோர் விடுப்பில் சென்றிருப்பதாகவும் அவர் எப்போதும் கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் துணைத் தலைவர் எம் ஏ. தினகரன் கூறினார். பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளருமான ஃபார்ஹாஷுடன் தான் எப்போதும் தொடர்பில் இருப்பதாகவும் தினகரன் கூறினார். “அவர் மாநில தலைமைத்துவத்தின்…

பாலியல் வீடியோ: கட்சியிலேயே நடக்கும் உள்குத்து வேலை – அஸ்மின்…

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாச காணொளிகள் கசியவிடப்பட்டது கட்சியில் உள்ள சிலரது கைங்கரியம் என்று உறுதியாக நம்புகிறார். ஆபாச காணொளி சமூக ஊடகங்களில் பரவலான பிறகு மாநில பிகேஆர் தலைவர் ஒருவரைக் காணவில்லை என்று செய்தி வெளிவந்திருப்பதை அடுத்து ஆபாச காணொளிகள்…

துணைப் பிரதமர், அன்வாருக்கு இடம்விட்டு பதவி துறக்க மாட்டார்

டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் துணைப் பிரதமர் பதவியை அவரின் கணவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைத்துவிட்டு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையைப் புறம் தள்ளினார். “அதற்கு அவசியமே இல்லை. டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர். நான் துணைப் பிரதமர் என்பது நாங்கள் ஒப்புக்கொண்ட ஒன்று”, என…

இந்தக் காலத்தில் தட்டம்மையால் சாவு- நடக்கக்கூடாத ஒன்று: டாக்டர் சுப்ரா

கிளந்தானில் ஓராங் அஸ்லிகள் 15பேரின் திடீர் இறப்புக்கு வருத்தம் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், இப்படிப்பட்ட சாவு இக்காலத்தில் நடந்திருக்கக் கூடாது என்றார். குவா மூசாங், கம்போங் கோலா கோ-வில் பதேக் பூர்வ குடிமக்களைப் பாதித்த நோய் குறித்து முக நூலில் டாக்டர் சுப்ரமணியம் கருத்துத்…

யாருக்கு எரிபொருள் உதவித் தொகை? புரியாத நிலையில் பெட்ரோல் நிலையங்கள்

ஜூலையில் செயல்படுத்தப்படவுள்ள குறிப்பிட்ட தரப்பினருக்கானது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் உதவித் தொகைத் திட்டம் குறித்து தங்களுக்கு இன்னும் சரியான முறையில் விளக்கமளிக்கப்படவில்லை என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர். அத்திட்டம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு எரிபொருள் உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அது எப்படிச்…

மூன்று வயது குழந்தை இறந்தது: ஓராங் அஸ்லி இறப்பு எண்ணிக்கை…

கோத்தா பாரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று வயது ஓராங் அஸ்லி குழந்தை நேற்று மாலை இறந்தது. “மருத்துவ மனை சவப் பரிசோதனை செய்து இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய முயலும்”, என பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். “இதனுடன் சேர்ந்து கோலா கோ-வில்…

ஆபாச காணொளி: பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் விசாரணை நடத்த…

கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாச காணொளிமீது பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜோகூர் பிகேஆர் தலைவர் ஹசான் அப்துல் கரிம் வலியுறுத்தினார். குற்றம் சாட்டியவர், குற்றம் சாட்டப்பட்டவர் இருவருமே பிகேஆரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கட்சி விசாரணை செய்வதுதான்…

‘வான் அசிசா பதவி விலகி துணைப் பிரதமர் பதவியை அன்வாருக்கு…

துணைப் பிரதமராக உள்ள டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அவரது பதவியை அவரின் கணவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைத்து விட்டு பதவி விலக வேண்டும் என்கிறார் சிலாங்கூர் பெர்சத்து பொருளாளர் முகம்மட் ஷயிட் ரோஸ்லி. ஜெராம் சட்டமன்ற உறுப்பினருமான முகம்மட் ஷயிட், அது டாக்டர் மகாதிர் முகம்மட்…

ரொசாலி முகம்மட் செபராங் பிறை மேயராகிறார்

செபராங் பிறை முனிசிபல் மன்றம்(எம்பிஎஸ்பி) மாநகராட்சி மன்றமாக(எம்பிஎஸ்பி) தரம் உயர்த்தப்பட்டதும் முனிசிபல் மன்றத் தலைவர் ரொசாலி முகம்மட் மேயராகப் பொறுப்பேற்பார். ரொசாலியை மேயராக நியமிக்க கடந்த புதன்கிழமை நடந்த மாநில ஆட்சிக்குழு(எக்ஸ்கோ)க் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக பினாங்கு எக்ஸ்கோ ஜக்தீப் சிங் தியோ கூறினார். என்றாலும், பேரரசர் சுல்தான் அப்துல்லா…

அன்வார் : ஆபாச காணொளி விவகாரத்தில் எனக்கோ என் ஆதரவாளர்களுக்கோ…

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், சமுக ஊடகங்களில் வலம்வரும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியைக் களங்கப்படுத்தும் ஆபாச காணொளிகள் விவகாரத்தில் தமக்கும் தம் ஆதரவாளர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார். எல்லாரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாரவர். “நாங்கள் அதைச் செய்ய…

அஸ்மின் குடும்பத்தாரை எண்ணி வருத்தம் கொள்கிறார் வான் அசிசா

துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஆபாச காணொளி ஒன்றுடன் தொடர்புப்படுத்திப் பேசப்படும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் குடும்பத்தாரை நினைக்கையில் வருத்தமாக உள்ளது என்றார். “இந்தச் ‘சாக்கடை அரசியல்’ எனக்குப் பிடிக்காத ஒன்று. நானும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அஸ்மின் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்”,…

ஜெயக்குமார் : இங்கிலாந்து முறையில், தனியார் கிளினிக் மருத்துவக் கட்டணங்களைக்…

இங்கிலாந்தில், நடைமுறைபடுத்தப்படும் தேசியச் சுகாதாரச் சேவை (என்எச்எஸ்) போன்ற சுகாதார முறைகள், தனியார் பொது மருத்துவ ஆலோசனைக்கான குறைந்த கட்டணப் பிரச்சனையைத் தீர்க்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகின்றன. இந்த முறையின் அடிப்படையில், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசாங்கம் ஒரு மருத்துவருக்கு ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தும் என்று…

130 அந்நியர்கள் பிடிபட்டனர்

நேற்றிரவு குடிநுழைவுத் துறை காஜாங்கிலும் பூச்சோங்கிலும் மேற்கொண்ட ஓர் அதிரடி நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 130 அந்நியர்கள் கைதானார்கள். காஜாங் கொண்டோமினிய வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைதானவர்களில் 78 பேர் நைஜிரியர்கள், அறுவர் பிலிப்பினோக்கள், ஒருவர் இந்தியர், ஒருவர் பாகிஸ்தானியர் , ஒரு வயதுக்கும் மூன்று வயதுக்குக்குமிடைப்பட்ட குழந்தைகள்…

சிஐடி தலைவர்: ஹசிக் விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்

பிகேஆர் சாந்துபோங் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ்மீது விசாரணை நடக்கிறது, விசாரணை முடிந்ததும் பிணையில் விடுவிக்கப்படுவார் எனக் கூட்டரசு குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஹுசிர் முகம்மட் கூறினார். “விசாரணை இன்றே முடிந்து விடலாம். முடிந்ததும் விடுவிக்கப்படுவார்”, என்றவர் மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டபோது தெரிவித்தார். நேற்று மாலை…

துணை அமைச்சரிடம் போலீஸ் ஐந்து மணி நேரம் விசாரணை

மூலத் தொழில் துணை அமைச்சர் ஷம்சுல் இஸ்கண்டார் முகம்மட் அகின், தன் தனிச் செயலரின் பாலியல் காணொளி விவகாரம் தொடர்பில் போலீஸ் 5 தன்னிடம் விசாரணை நடத்தியதை உறுதிப்படுத்தினார். நேற்றிரவு 7 மணிக்கு மலாக்கா போலீஸ் தலைமையகம் சென்றதாகவும் விசாரணை 5 மணி நேரம் நீடித்ததாகவும் ஷம்சுல் தெரிவித்தார்.…

2 வாரத்தில், கணவரையும் 3 பிள்ளைகளையும் இழந்தார் சோம்

“நான் மிகவும் கவலையாக இருக்கிறேன், கணவரும் 3 பிள்ளைகளும் இறந்துவிட்டனர்,” என குவா மூசாங், கம்போங் குவாலா கோவைவில், பாத்தேக் இனத்தைச் சேர்ந்த சோம் ங்காய், 50, எனும் பெண்மணி வருத்தத்துடன் கூறினார். தன் கணவர், ஹம்டான் கிளாடியும், தனது 3 பிள்ளைகளும் - லைலா, ரோமி மற்றும்…

ரஃபிசி : வீடியோ பிரச்சனையில் என்னைத் தொடர்புப்படுத்த வேண்டாம்

பொருளாதார விவகார அமைச்சர், அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோவுடன் தன்னைத் தொடர்புபடுத்துவதை, தான் விரும்பவில்லை என்று ரஃபிசி ரம்லி வலியுறுத்தினார். “அந்த விஷயத்தில் சம்பந்தப்பட நான் விரும்பவில்லை, அது கட்சி அளவில் ஆனாலும் சரி……….. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை விசாரிக்கட்டும்,” என மலேசியாகினியிடம் அவர் இன்று தெரிவித்தார்.…

பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் ஐஆர்டி-யில் புகார்

சிலாங்கூரில், தங்களது முதலாளிகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள், சிலாங்கூர் தொழில்துறை தொடர்பு இலாகாவில் (ஐஆர்டி), தொழில்துறை தொடர்பு சட்டம் 20-ம் பிரிவின் கீழ், மனு தாக்கல் செய்தனர். நேற்று, 8 பள்ளிகளில், பல்வேறு ஒப்பந்த நிறுவனங்களால் பணிக்கமர்த்தப்பட்ட அந்த 35 தொழிலாளர்களும், கடந்த மே 31-ம்…

அமைச்சருடன் பல தடவை ‘தனித்திருந்தது’ உண்டு- ஹசிக்

சந்துபோங் பிகேஆர் தொகுதி இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் ஹசிஸ், பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியுடன் பல தடவை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது உண்டு என்று திரும்பவும் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை முகநூலில் பதிவிட்டிருந்த அவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அக்காணொளி பொய்யானது என்று குறிப்பிட்டிருப்பது…