1எம்டிபி மீது வழக்குரைஞர் மன்ற அவசரக் கூட்டம்

மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்  1எம்டிபி  விவகாரம்  பற்றி  விவாதிக்க  அவசர  பொது  கூட்டமொன்றை(இஜிஎம்)க்  கூட்டியுள்ளது. கோலாலும்பூர்  தங்குவிடுதி  ஒன்றில்  நடைபெறும் அக்கூட்டத்துக்கு  ஆயிரத்து மேற்பட்ட  வழக்குரைஞர்கள்  வருகை  தந்துள்ளனர். இஜிஎமில் 1எம்டிபிமீது  அரச  விசாரணை  ஆணையம்(ஆர்சிஐ)  அமைக்க  அரசாங்கத்துக்கு  அழுத்தம்  கொடுப்பதா  அல்லது  அவ்வூழல்  பற்றிய  விசாரணைகளுக்குத்  தடையாக …

தும்பாட் எம்பி-இன் கட்சித் தாவலால் பாஸ் பிகேஆருடன் உறவுகளை முறித்துக்…

தும்பாட்  எம்பி  கமருடின்  ஜாப்பார்  பாஸிலிருந்து  விலகி  பிகேஆரில்  சேர்ந்திருப்பதை  அடுத்து  பிகேஆருடன்  உறவுகள்  முறித்துக்கொள்ளப்படுமா  என்பதை  பாஸ்  அறிவிக்க  வேண்டும். பாஸின் பொக்கோக்  செனா  எம்பி  மாபுஸ்  ஒமார்  இவ்வாறு  கேட்டுக்கொண்டிருக்கிறார். பாஸ்  அக்கட்சியிலிருந்து  பிரிந்து  சென்று  பார்டி  அமானா  ரக்யாட் எனத்  தனிக்  கட்சி  அமைத்த, …

பேரரசர் சிவப்புச் சட்டை பேரணியை நிறுத்த வேண்டும், என்ஜிஒ-கள் கோரிக்கை

சிவப்புச் சட்டையினர் செப்டெம்பர் 16 இல் நடத்த திட்டமிட்டிருக்கும் பெர்சே எதிர்ப்பு பேரணியை நிறுத்த வேண்டும் என்று 20 அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணி பேரரசரிடம் ஒரு மனுவை இன்று தாக்கல் செய்தது. இதுவரையில் கிடைத்துள்ள தகவல்படி இந்த எதிர்ப்பு பேரணி இரத்தக்களரியில் முடிவடையலாம் என்ற கருத்து நிலவுகிறது…

அல்டான்துயா ஷரீபூ கொலை பற்றி நிகழ்ச்சி தயாரித்த செய்தியாளர் நாடு…

மங்கோலிய  நாட்டவரான அல்டான்துயா ஷரீபூ கொலை  தொடர்பில் புலனாய்வு ஆவணப்படம்  தயாரித்த  அல் ஜசீரா  செய்தியாளர்  நிகழ்ச்சி  தயாரிப்பில்  ஈடுபட்டிருந்தபோதே  நாடு கடத்தப்பட்டார். அல் ஜசீராவின்  வாராந்திர  நிகழ்ச்சியான  101 East-இல்  இத்தகவல்  தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய  செய்தியாளரான  மேரி  என் ஜோலியின்  நடவடிக்கை “மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்”…

போலீசுக்குத் தெரிவிக்காவிட்டால் பேரணி சட்டவிரோதமாகிவிடும்

செப்டம்பர்  16-இல்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும் பெர்ஹிம்புனான்  மாருவா மலாயு  சிகப்புச்  சட்டைப்  பேரணி  பற்றி  அதன்  ஏற்பாட்டாளர்கள்  போலீசுக்குத்  தகவல் தெரிவிக்க  வேண்டும்.  தெரிவிக்காவிட்டால்  அது சட்டவிரோத  பேரணியாகி  விடும். பேரணி  ஏற்பாட்டாளர்கள்  பேரணி  நடக்கும்  இடத்துக்குச்  சொந்தக்காரர்களிடமிருந்தும்  அனுமதி  பெற  வேண்டும்  என கோலாலும்பூர்  போலீஸ்  துணைத் …

பிரதமருக்கு அல்டான்துயாவைத் தெரியாது: அல் ஜசீராவிடம் பிஎம்ஓ வலியுறுத்து

“பிரதமர்  நஜிப்  ரசாக்குக்  காலஞ்சென்ற அவரைத்  தெரியாது, அவரைப்  பார்த்ததில்லை,  பேசியதில்லை” இது, இன்று அல் ஜசீரா  தொலைக்காட்சியில் ஒளியேறிய  மங்கோலிய  பெண்  அல்டான்துயா  ஷரீபுவின்  கொலையை  விவரிக்கும்  பரபரப்பூட்டும்  ஆவணப்படம்  மீது  பிரதமர்  அலுவலகத்தின்  அதிகாரப்பூர்வமான  எதிர்வினையாகும். “போலீஸ்  விசாரணை,   மலேசிய  உயர்  நீதிமன்றம்,  முறையீட்டு  நீதிமன்றம், …

‘முன்னாள் பாஸ் உறுப்பினர்கள் அமானாவில் சேர்வதைவிட பிகேஆரில் சேர்வது நல்லது’

முன்னாள்  பாஸ்  உறுப்பினர்கள்,  பிகேஆரில்  சேரலாம்  ஆனால்  பாஸிலிருந்து  பிரிந்து  சென்ற  அமானா  கட்சியில்  சேராமல் இருப்பது  நல்லது. ஏனென்றால்  அமானா,  பாஸ்  கட்சியை “ஒழித்துக்கட்ட”  விரும்புகிறது. பாஸ்  உதவித்  தலைவர்  இஸ்கண்டர்  அப்துல்  சமட்  இவ்வாறு  கூறினார்.  தும்பாட்  எம்பி  கமருடின்  ஜாப்பாரும்  சிலாங்கூரின்  முன்னாள்  மந்திரி …

புத்ரா ஜெயா: ஹாங்காங் கிரெடிட் சுவிஸ் வங்கியில் பிரதமருக்குக் கணக்கு…

ஹாங்காங்கில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்குகளை  அந்நாட்டுப்  போலீசார் புலனாய்வு  செய்வது  “அரசியல்  நோக்கம்கொண்ட”  போலீஸ்  புகார்களை  அடிப்படையாகக்  கொண்டு  மேற்கொள்ளப்படும்  நடவடிக்கை  என  புத்ரா  ஜெயா கூறியது. முன்னாள்  பத்து  கவான்  அம்னோ  உதவித்  தலைவர்  கைருடின்  அபு  ஹாசான்  ஆகஸ்ட்  3-இல்,  ஹாங்காங்கில் …

பெர்சே 4 காரணமாகத்தான் கித்தா லவான் ஆர்ப்பாட்டக்கார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது

ஆண்டுத் தொடக்கத்தில்  நடந்த  கித்தா  லவான்  ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது  போலீஸ்  திடீர்  நடவடிக்கை  எடுத்திருப்பதற்கு  அண்மையில்  நடந்த  பெர்சே 4  பேரணிதான்  காரணம்  என்று  மனித உரிமை  கண்காணிப்பு அமைப்பு (HRW) கூறுகிறது. “ஒரு  அமைதிப்  பேரணி  நடந்து  ஆறு  மாதங்கள்  ஆன  பின்னர்  அதன்  ஏற்பாட்டாளர்கள்மீது  குற்றம்  சுமத்தப்படுகிறது …

மகாதிர்: ரிம2.6 பில்லியன் பற்றிய விசாரணையைத் தடுப்பது அப்பணம் சட்டவிரோதமானது…

  பணத்தை 'ஹலால்' வழியில் பெற்றிருந்தால், நஜிப் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார். ரிம2.6 பில்லியன் சம்பந்தப்பட்ட விசாரணையை தடுப்பதற்கு பிரதமர் நஜிப் ரசாக் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை அந்தப் பணம் சட்டவிரோதமான வகையில் பெறப்பட்டது என்பதை நிரூபிக்கிறது என்றாரவர். இஸ்லாத்தில் அனுமதிக்கப்படும் ஹலால்…

புவா: 1எம்டிபி கசிவு பற்றிப் பழிபோட நான்தான் ‘வசதியாக சிக்கிக்…

டிஏபி  நாடாளுமன்ற  உறுப்பினர்  டோனி  புவா,   1எம்டிபி  பற்றிய தகவலை  யுஎஸ்  நாளேடான  த  வால்  ஸ்திரிட்  ஜர்னலுக்குக்  கசியவிட்டவர்  என்று  தம்மீது  பழி  போடுவது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  ஆதரவான  வலைப்பதிவர்களுக்கு வசதியாக  இருக்கிறது  என்றார். தேசிய கண்காய்வுத்  துறை  தயாரித்த  இடைக்காலக்  கணக்காய்வு  அறிக்கை …

கைரி: அம்னோ இளைஞர்கள் சிகப்புப் பேரணியில் கலந்துகொள்ளத் தடை இல்லை

அம்னோ  இளைஞர்  பகுதி  அதன்  உறுப்பினர்கள்  செப்டம்பர் 16  பேரணியில்  கலந்துகொள்வதைத்  தடுக்கவில்லை. “பிரதமரின்  கருத்துகளை  எடுத்துரைக்க  விரும்புகிறேன். அதுவே  கட்சியின் நிலைப்பாடாகும்”, என்று அம்னோ  இளைஞர்  பகுதித்  தலைவரும்  இளைஞர்  விளையாட்டுத்  துறை  அமைச்சருமான  கைரி ஜலாலுடின்  அது பற்றி  வினவியபோது  கூறினார். நேற்று  அம்னோ  உச்சமன்றக் …

சிலாங்கூர் பாஸ் கட்சியினர் சிகப்புச் சட்டைப் பேரணியில் கலந்துகொள்ளத் தடை

சிலாங்கூர்  பாஸ்,  அதன்  உறுப்பினர்கள்  செப்டம்பர்  16-இல்  நடைபெறும் ‘ஹிம்புனான்  மாருவா  மலாயு’  என்றழைக்கப்படும்  சிகப்புச்  சட்டைப்  பேரணியில்  கலந்துகொள்ளக்  கூடாது  எனத்  தடை  விதித்துள்ளது. சிலாங்கூர்  பாஸ்  செயலாளர்  முகம்மட்  கைருடின்  ஒத்மான், அக்கட்சி  இன  அடிப்படையில்  அமைந்த  பேரணிகளுக்கு  எதிரி  என்றார். “இனங்களுக்கிடையில்  பதற்றத்தை  உண்டுபண்ணும் …

2016 பட்ஜெட்டில் ஜிஎஸ்டி-யைக் குறைப்பீர்: சிறு வணிகர்கள் வலியுறுத்து

அக்டோபர்  இறுதியில்  தாக்கல்  செய்யப்படும்   2016  பட்ஜெட்டில்  பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)யில்  மாற்றம்  செய்யப்பட  வேண்டும். இதுவே  சிறு  வணிகர்களின்  எதிர்பார்ப்பு. மலேசியாகினி  கிள்ளான்  பள்ளத்தாக்கில் பல  வணிகர்களைத்  தொடர்புகொண்டு  பேசியது. அவர்கள்  அனைவருமே  இவ்வாண்டு  ஏப்ரல்  மாதம்  அமலுக்கு  வந்த  6 விழுகாட்டு வரியை  எண்ணிக்  கவலைப்படுவது …

புவா: 1எம்டிபி காணாமல்போன யுஎஸ்$1.4 பில்லியனுக்கு தான் பொறுப்பல்ல என்பதை…

அபு  டாபியில்  உள்ள  இண்டர்நேசனல்  பெட்ரோல்  இன்வெஸ்ட்மெண்ட்  நிறுவனத்துக்கு (ஐபிஐசி)  வழங்கப்பட  வேண்டிய  யுஎஸ்1.4 பில்லியன்  காணாமல்  போனதற்கு  1எம்டிபி  பொறுப்பல்ல  என்றால்  அந்நிறுவனம்  அதை  நிரூபிக்க  வேண்டும்  என்று  பெட்டாலுங்  ஜெயா  உத்தாரா எம்பி  டோனி  புவா  கூறினார். வால்  ஸ்திரிட்  ஜர்னல் நேற்று  வெளியிட்டிருந்த  செய்தியில், …

WSJ செய்திகள் பொய்யென்றால் எம்சிஎம்சி நடவடிக்கை எடுக்கும்

1எம்டிபி  மீது பொய்யான  செய்திகளை  வெளியிட்டதாக  தெரிய  வந்தால் மலேசிய  தொடர்பு, பல்லூடக  ஆணையம்(எம்சிஎம்சி)  வால் ஸ்திரிட்  ஜர்னல்மீது   நடவடிக்கை  எடுக்கும். “அச்செய்திகள்  தீய  நோக்கம்  கொண்டவை  என்பதால்  தேவையான  நடவடிக்கைகளை  எடுக்குமாறு  எம்சிஎம்சி  பணிக்கப்படும்”, என தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சைட்  கெருவாக் இன்று  புத்ரா  ஜெயாவில் …

மகாதிர்: பெர்சே பேரணிக்குச் சென்றதற்காகக் கைது செய்ய வேண்டுமா, தாராளமாக…

பெர்சே 4 பேரணியில்  கலந்துகொண்டதற்காக  போலீசார்  தம்மைக்  கைது  செய்ய  விரும்பினால்  தாராளமாகக்  கைது  செய்யலாம்  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார். “அது  அவர்களின்  உரிமை. கைது  செய்வதாக  இருந்தால் செய்யுங்கள். இதில்   ஒத்துழைக்க   என்ன  இருக்கிறது”, என  மகாதிர்  சுபாங்  வீமான  நிலையத்தில் …

முஸ்லிம்-அல்லாதார் சிவப்புச் சட்டைப் பேரணியைத் தவிர்ப்பது நல்லது

பெர்சே  பேரணிக்கு  எதிர்ப்பாக   செப்டம்பர்  16-இல்  நடைபெறும்  பேரணியின்போது   முஸ்லிம்- அல்லாதார்  கோலாலும்பூரில்  இல்லாமலிருப்பது  நல்லது  என  மலாய்  என்ஜி-கள்   கூட்டமைப்பின்  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  கூறினார். குறிப்பிட்ட  தேதியில்  முஸ்லிம்- அல்லாதார்  மாநகர்  மையப்  பகுதியைவிட்டு  விலகி  இருக்க  வேண்டும்   என்று  கூறும்  செய்திகள்  வலம் …

பாஸ் ஆதரவாளர் மன்றம் ஆயர் பூத்தேயில் குவான் எங்கை எதிர்த்து…

பாஸ்  ஆதரவாளர்  மன்றம் (டிஎச்பிபி),  அடுத்த  பொதுத்  தேர்தலில் பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான் எங்கை  எதிர்த்து அவரது  மாநிலச்  சட்டமன்றத்  தொகுதியான  ஆயர்  பூத்தேயில்  களமிறங்கத்  தயாராக  உள்ளது. பாஸ்  அத்தொகுதியில் ஒருவரைக்  களமிறக்க  முடிவு  செய்தால் தாங்கள்  அதற்கு ஆயத்தமாக இருப்பதாக டிஎச்பிபி  தலைவர் என்.…

நஜிப் பதவி விலகிக் கட்சிக்காக தியாகம் செய்ய வேண்டும்: அம்னோ…

இன்று கட்சியிலிருந்து  நீக்கப்படுவார்  என  எதிர்பார்க்கப்படும்  அம்னோ  மகளிர்  தலைவர்  ஒருவர்,  கட்சியிலிருந்து  வெளியேற  வேண்டியவர்  அம்னோ  தலைவரும்  பிரதமருமான  நஜிப்  அப்துல்  ரசாக்தான்  என்றார். நஜிப்தான்  கட்சிக்காக  தியாகம்  செய்ய  வேண்டும்  அடிக்கடி  கூறி  வருகிறார். அதற்கேற்ப,  அவரே  பதவி  விலகி  தியாகம்  செய்திட  வேண்டும்  என…

பெர்சே என்றால் கொதித்துப் போகும் ஜாஹிட் ‘சிகப்புச் சட்டை’ குறித்து…

சிகப்புச்  சட்டை  பெர்சே-எதிர்ப்புப்  பேரணியில் தடையின்றிக்  கலந்துகொள்ள  அம்னோ  உறுப்பினர்களுக்கு துணைப்  பிரதமர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  அனுமதி  அளித்திருப்பது  குறித்து  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர் லிம்  கிட்  சியாங்  கேள்வி  எழுப்பியுள்ளார். “பெர்சே 4 பேரணில்  கலந்துகொள்வோர்  தண்டிக்கப்படுவார்கள் என  மிரட்டிய  ஜாஹிட், இப்போது  சிகப்புச்  சட்டைப் …

காற்றின் தரம் சீரடைந்தது

இன்று  காலை  நாட்டில்  பல  இடங்களில்  காற்றின்  தரம் நல்ல  நிலையில்  அல்லது  மிதமான  நிலையில்  இருந்தது. ஆனால்,  மூன்று  இடங்களில்  மட்டும் காற்று  உடல்நலனுக்குக்  கேடு  செய்யும்  வகையில்  இருந்தது. இன்று  காலை  8 மணிக்கு  மலாக்கா  நகரம் (112),  புக்கிட்  ரம்பாய் (107)ம்  நீலாய் (103)…

பாஸ் ‘சிவப்புச் சட்டை’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாது

செப்டம்பர்  16-இல்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும் ‘சிவப்புச்  சட்டை’ப்  பேரணியில்  பாஸ்  பங்கேற்காது. அப்பேரணி   மலேசிய  தினத்தில்  நடத்தப்படுவது  ஏற்கத்தக்கதல்ல  என்று  அக்கட்சியின்  தலைமைச்  செயலாளர்  தகியுடின் ஹசான்  கூறினார். “மலேசிய  தினத்தைச்  சமய, இன,  பண்பாடு, அரசியல்  நிலைப்பாடு போன்ற  வேறுபாடின்றி  அனைத்து  மலேசியர்களும் ஒரு  சுதந்திர  நாளாகக் …