ஆந்திர சிறையில் 3000 தமிழர்கள்

வழக்கு நடத்த முடியாமலும், ஜாமின் பெற சாத்தியம் இல்லாததாலும் சுமார் 2,700 முதல் 3,000 தமிழர்கள் ஆந்திர சிறைகளில் தவித்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவருமே மரம் வெட்டுபவர்கள் ஆவர். முறையான ஆதாரம் இல்லாமல் செம்மரம் கடத்துவது போன்ற பல்வேறு…

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காணாமல் போன 100 குளங்கள்.. கண்டுபிடிக்க ஆட்சியர்…

திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் காணாமல் போன 100 குளங்களை கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவில் உலகப்புகழ்பெற்றது. இந்த கோவிலுக்க வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு 14 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிரிவலப்…

6 ஆயிரத்தை வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சம் கிடைத்திருக்கும்… கமல்…

மதுரை : ஓட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டீர்கள், ஓட்டுக்கு 6 ஆயிரம் வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சமே கிடைத்திருக்கும் என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைத்து மதுரை ஒத்தகடை மாநாட்டில் உரையாற்றிய கமல் பேசியதாவது : எனது கட்சியின் கொள்கைகள்…

தனது கட்சியின் இலக்கு என்ன? – கமல் ஹாசன் விளக்கம்

மதுரையில் இன்று (புதன்கிழமை) மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். ''37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்து கொண்டிருந்த கூட்டத்தை தற்போது நீங்கள் பார்த்து…

கர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி…

பெங்களூர்: கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி, பெங்களூரில் பேரணி நடத்தி, அம்மாநில ஆளுநரிடம் தமிழ் அமைப்பினர் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக தமிழ் இயக்கம் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் எழுத்துக்களை கன்னட அமைப்பினர்…

ஆந்திராவில் இறந்த ஐவரின் உடற்கூறாய்வை மீண்டும் நடத்தவேண்டும்: செயற்பாட்டாளர் கோரிக்கை

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மலைவாழ் தொழிலாளர்களின் உடல்கள் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒன்டி மிட்டா என்ற இடத்தில், ஒரு ஏரியில் மிதந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் கல்வராயன் மலையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் செம்மரம் வெட்டச் சென்றவர்களாக இருக்கலாம் என்ற ஐயம்…

பெண்களுக்கு இலவச நாப்கின்கள்.. பா.ஜ.க., காங்கிரஸ் வாக்குறுதி..

மேகாலயாவில் வரும் 27-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. வாக்குகளைப் பெறுவதற்காக மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அவ்வகையில்,  சமீபத்தில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களைக் கவரும் வகையில் வித்தியாசமான வாக்குறுதியை அளித்துள்ளது.…

இந்தியாவை சூறையாடும் நரேந்திர மோதி – ட்விட்டரில் விளாசும் ராகுல்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகமான ட்விட்டரில் #ModiRobsIndia என்ற ஹாஷ்டேக்கில் பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக சாடி கருத்துகளை பதிவு செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்குமுன் இந்திய வங்கிகள் வரலாற்றிலேயே நடந்த மிகப் பெரிய மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி…

அழிவின் விளிம்பில் தமிழகத்தின் கோட்டா, தோடா உட்பட 42 இந்திய…

டெல்லி: தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட 42 இந்திய மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றனவாம். இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகள் மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. இந்த மொழிகளை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பேசுகின்றனர். இதில் 42 வட்டார மொழிகளை 10,000க்கும் குறைவானோர்தான்…

ஆந்திரா வனப்பகுதி ஏரியில், 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு.. நடந்தது…

ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை சிறைபிடித்து வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று  மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமையும்: எடப்பாடியார் நம்பிக்கை

கோவை : மத்திய அரசு அடுத்த ஆறு வாரங்களுக்குள் நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி நதி நீர் விவகாரம் குறித்த…

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராமத்தில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக விளைநிலங்களை பாழாக்கக் கூடாது என புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் 2 கட்டங்களாக போராட்டம் நடத்தினர். முதல் கட்டமாக 22 நாட்களும் 2-வது கட்டமாக…

பாஜகவின் சித்து விளையாட்டு -வேல்முருகன் சந்தேகம்

காவிரியில் தமிழகத்திற்கு 264 டி.எம்.சி. நீர் கேட்ட நிலையில் 177.25 டி.எம்.சி. நீர் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்…

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! பெ.…

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான…

திருப்பதி அருகே 13 தமிழர்கள் கைது..

ஆந்திர மாநில வனப்பகுதியில் கிடைக்கும் செம்மரங்களுக்கு, சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளதால் அவற்றை சட்டவிரோதமாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க ஆந்திர வனத்துறையும் காவல்துறையும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித்  தொழிலாளர்களை…

காவிரி: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 10 முக்கிய அம்சங்கள்

கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் 10 முக்கிய அம்சங்கள். 1. இரு மாநிலங்களுக்கு இடையே பாய்ந்தோடும் நதிகள் அனைத்திற்கும் எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது. அவை தேசிய சொத்தாகும். 2. காவிரி…

சமஸ்கிருதத்தைவிட பழமையான, அழகான மொழி தமிழ்.. சொல்வது மோடி!

டெல்லி: சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் பழமையான மொழி என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் பள்ளி மாணவர்களுடனான 'பரிக்ஷா பே சர்ச்சா' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோடி இவ்வாறு பேசினார். மோடி மேலும் கூறுகையில், உங்களில் சில மாணவர்களுடன் உங்கள் தாய் மொழியில் உரையாட முடியாததற்கு வருந்துகிறேன். நாம் பல…

உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு- காலந்தோறும் நீடிக்கும் காவிரி நதிநீர் பிரச்சனை…

சென்னை: தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான காவிரி நதிநீர் விவகாரமானது இரு நூற்றாண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு அளிக்கப் போகும் தீர்ப்பு இப்பிரச்சனைக்கு முடிவைக் கொண்டு வருமா? என்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு. 2007-ல் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம்,…

கர்நாடகாவிலிருந்து முதல் குரல்.. ஹிந்தி திணிப்பை எதிர்த்து உருவாகும் திராவிட…

சென்னை: திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா அளித்துள்ள பேட்டி முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடம் என்ற சொல்லாடலை தமிழகம் போல, கர்நாடகா உள்ளிட்ட பிற தென் மாநிலங்கள் பயன்படுத்தாமல் இருந்த சூழலில், கர்நாடகாவில் இருந்து, திராவிட மாநிலங்களை முன்னிறுத்தி வந்துள்ளது.…

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், 06 பேர் சுட்டுக்கொலை..

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு அருகே சன்ஜவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுமார் 400 பேர், ஊடுருவல் செய்வதற்கு தயார்…

சாமியாரின், பதஞ்சலி பொருட்கள் ரூ.9 ஆயிரம் கோடிக்கு விற்பனை, விளம்பரத்துக்கு…

நாடு முழுவதும் பதஞ்சலி யோகா மையங்கள் நடத்தி வரும் யோகா குரு பாபா ராம்தேவ் சில வருடங்களுக்கு முன் பதஞ்சலி நுகர்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார். இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மிகப்பெரிய ஆய்வுக்கூடம் நிறுவினார். இங்கு உணவுப் பொருட்கள், நுகர் பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆயுர்வேத மருந்துகள் என…

மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கருவி சோதனை வெற்றி ‘இஸ்ரோ’…

ஆலந்தூர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’வின் தலைவர் சிவன், சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சந்திரயான்-2 செயற்கைக்கோளை செலுத்துவதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தற்போது இது தொடர்பான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்தபின்னர் சந்திரயான்-2…

ஓஎன்ஜிசிக்கு எதிராக கிராம மக்கள் முற்றுகை போராட்டம்… திருவாரூர் அருகே…

திருவாரூர்: திருவாரூர் அருகே கடம்பங்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உட்பட கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிமாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் முற்றுகைப் போராட்டத்தால் பதற்றம் நிலவுகிறது. திருவாரூர்…