கணக்காய்வுத் துறை: 20 மில்லியன் ரிங்கிட் பாலத்துக்கு பொதுப் பணித்துறை…

அருகில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கான 20 மில்லியன் ரிங்கிட் பாலத்தை சரவாக் பொதுப் பணித் துறை 'மறந்து விட்டதாக' தனது அறிக்கை குறிப்பிடவில்லை என தலைமைக் கணக்காய்வாளர் துறை இன்று விளக்கமளித்துள்ளது. பொதுப் பணித் துறை அந்த இணைப்புச் சாலைக்கு 'யோசனை கூறவில்லை' என்று மட்டுமே அந்த அறிக்கையில்…

போலீஸ் சட்டத்துறைத் தலைவர் மீதான நூலை இன்னமும் ஆராய்கிறது

சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் குறித்து Tan Sri Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah (டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேய்ல்: மோசடிக்காரர், பொய்யர், குற்றவாளி) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை போலீசார் இன்னமும் ஆராய்ந்து வருகிறார்கள். அந்நூல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள விரும்பிய ஈப்போ…

மலேசியாகினிக்கு எதிராக ஏஜி மேல்முறையீடு

மலேசியாகினிக்கு செய்தித்தாள் வெளியிடும் உரிமம் கொடுக்க மறுத்த உள்துறை அமைச்சின் முடிவைத் தள்ளுபடி செய்த கோலாலும்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகமும் அமைச்சும் மேல்முறையீட்டைப் பதிவு செய்துள்ளன. அதை ஏஜி அலுவலகத்தின் சிவில் வழக்குப் பிரிவுத் தலைவர் அசிசா நவாவி இன்று உறுதிப்படுத்தினார்.…

டிபிகேஎல் கேமராக்களில் பெரும்பாலானவை பழுதடைந்தவை

கோலாலம்பூரில் போக்குவரத்தைக் கண்காணிக்க ரிம 366 மில்லியன் செலவில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பாதிக்கு மேற்பட்டவை சரியாக வேலை செய்வதில்லை என்று 2011 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது. போக்குவரத்து நிலவரத்தைக் கண்காணிக்க 255 சிசிடிவி கேமராக்களும் விபத்துகளைக் கண்டதும் தானாகவே தகவல் சொல்ல 728 கேமராக்களும் பொருத்தப்பட்டன. இந்த…

கணக்கறிக்கை: அரசுதுறைகளின் தரம் உயர்ந்துள்ளது

தலைமைக் கணக்காய்வாளரின் 2011ஆம் ஆண்டுக் கணக்கறிக்கை, இரண்டுவார தாமதத்துக்குப் பின்னர் இன்றுகாலை கேள்விநேரத்துக்குப் பின்னர்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 456 நிதிநிலை விவர அறிக்கைகள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றில் 413 தணிக்கை செய்யப்பட்டவை என்றும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் விடுத்த அறிக்கை கூறியது. “அவற்றில் 388க்கு (85.1விழுக்காடு) கடிந்துரையின்றி…

கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்

தலைமைக் கணக்காய்வாளரின் 2011ஆம் ஆண்டுக் கணக்கறிக்கை, இரண்டு வார தாமதத்துக்குப் பின்னர் இன்று காலை பின்னேரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று இதனைத் தெரிவிக்கிறது. தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால், இரண்டாமாண்டாக அது பட்ஜெட்டுக்குபின்…

ஜாஹிட்: சுவாராம் மீது நடவடிக்கை எடுப்பதும் எடுக்காததும் ஏஜியைப் பொறுத்தது

அரசாங்கம், சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்)-வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை சட்டத்துறைத் துறைத் தலைவர் அலுவலகத்திடமே விட்டுவிடும். இதனைத் தெரிவித்த தற்காப்பு அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அரசாங்கம் இரண்டு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கிய விவகாரம் பற்றி நாடாளுமன்றத்திலும் பல…

ஏஜி குறித்து கேள்விகேட்க செராஸ் எம்பிக்கு அனுமதி மறுப்பு

சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் தொழில் ரீதியாக தவறான நடந்துகொண்டார் என்று கூறப்பட்டிருப்பதன்மீது போலீசார் மேற்கொண்ட விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பிய செராஸ் எம்பி டான் கொக் வாய், அதன் தொடர்பில்  நாடாளுமன்றத்தில் கேட்டிருந்த கேள்வியை மக்களவை தலைவர் பண்டிகார் அமின் மூலியா நிராகரித்தார்.…

ஏஜி அலுவலகம்: சுவாராம் மீதான சிசிஎம் புலனாய்வு முழுமையாக இல்லை

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் சுவாராம் எனப்படும் Suara Rakyat Malaysia மற்றும் Suara Initiatif Sdn Bhd ஆகியவை புரிந்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்கள் பற்றியும் அதன் கணக்குகள் பற்றியும் மேலும் ஆய்வு நடத்துமாறு சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத்துக்கு ஏஜி என்னும் சட்டத்துறைத் தலைவர்…

ஏஜி: திருத்தப்பட்ட ஆதாரச் சட்டத்தில் வலுவான சாட்சியங்கள் தேவை

1950ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஆதாரச் சட்டம் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் முன்னர் அரசு தரப்பு விரிவான புலனாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் ஒரு நபருடைய பெயர் இணைக்கப்பட்டுள்ளதால் அவர் மீது எளிதாகக் குற்றம் சாட்டி விட…

சுவாராம்மீது வழக்கு:சிசிஎம் இன்று ஏஜியைச் சந்திக்கிறது

சுவாராமின் வாகனமாக செயல்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்மீது வழக்கு தொடுக்குமாறு மலேசிய நிறுவனங்களின் ஆணையம்(சிசிஎம்) சட்டத்துதுறைத் தலைவரிடம் பரிந்துரைக்கும்.  இன்று கோலாலம்பூரில் சிசிஎம் தலைமையகக் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்நாட்டு வாணிக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், இன்று மாலை மணி 4-க்குச்…

ஏஜி அலுவலகம்: பெர்சே 2.0 தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு…

அரசு சார்பற்ற அமைப்புக்களைக் கொண்ட பெர்சே 2.0 கூட்டணி சட்ட விரோதமான அமைப்பு எனப் பிரகடனம் செய்வதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் விடுத்த ஆணையை ரத்துச் செய்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு செய்யாது. அந்தத் தகவலை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர்…

ஏஜி, பிஎன்-னுக்கு பெரிய தடைக்கல் என்கிறார் பாங்

அப்துல் கனி பட்டெய்லை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காரணம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஏஜி மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) ஆலோசனைக் குழு உறுப்பினர்…

ஏஜியைத் தூண்டிவிட முயல்கிறாரா கைரி?

ஏப்ரல் 28பேரணியில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்குப் பொறுப்பேற்கும் கடப்பாட்டிலிருந்து பெர்சே விடுவிக்கப்படவில்லை என்று அம்னோ இளைஞர் தலைவர் ஜமாலுடின் அபு பக்கார் கருத்துத் தெரிவித்திருப்பது சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் பணியில் குறுக்கிடுவதற்கு ஒப்பாகும். சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் ஏஜிக்கு மட்டுமே உண்டு என்று பாஸ் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி…

அன்வார் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக ஏஜி முறையீடு

குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் இப்ராஹிமை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர்(ஏஜி)அலுவலகம் மேல் முறையீட்டை சமர்பித்துள்ளது. முறையீட்டுக்கான மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டதை ஏஜி அலுவலகத்தில் வழக்கு விசாரணை, முறையீட்டுப் பீரிவின் தலைவர் கமாலுதின் முகமட் சைட் இன்று உறுதிப்படுத்தினார். "அது சமர்பிக்கப்பட்டுள்ளது.…

நஸ்ரி: அரசாங்க ஆணையைப் பெற்ற வழக்குரைஞர் ஏஜி மீது வழக்குப்…

அரசாங்கத்திடமிருந்து சிறப்பு ஆணையைப் பெறும் வழக்குரைஞர் ஒருவர், ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பில் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியும் என சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். "தனி நபர் என்ற முறையில் ஏஜி மீது அவருக்கு…

ஏஜி குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்கள் வழி போலீஸ் அதிகாரத்தைப்…

ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அலுவலக ஆணைக்கு இணங்க பல பிரபலமான கிரிமினல் வழக்குகள் மறைக்கப்பட்டிருக்கலாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ் புலனாய்வுகளில் ஏஜி நிலை வலுப்படுத்தப்பட்டுள்ளதே அதற்குக் காரணம். அதனால் அவரது அலுவலகம் எந்த நேரத்திலும் ஒரு…

ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குற்றமற்றவர்கள்! – சட்டத்துறை தலைவருக்கு குறிப்பானை

ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு கணேசன் தலைமையில் அவ்வமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு வி.சம்புலிங்கம் மற்றும் திரு கு.பாலகிருஷ்ணன் உட்பட 54  ஹிண்ட்ராப்  மனித உரிமை போராட்டவாதிகள்  மீது சுமத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான, அடிப்படையற்ற வழக்கை மலேசிய சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனெரல்) தள்ளுபடி செய்ய…

ஏஜி அலுவலகம் வழக்குத் தொடர மறுப்பதாக எம்ஏசிசி பழி போடுகிறது

எம்ஏசிசி தனது பார்வைக்குக் கொண்டு வரப்படும் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்கிறது. ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவற்றை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மறுக்கிறது. "எம்ஏசிசி புலனாய்வு செய்யாத விவகாரம் ஏதும் இருந்தால் என்னிடம் காட்டுங்கள். நாங்கள் விசாரிக்காத…

ஏஜி,மூசாமீது நடுவர் மன்றம் அமைக்கும் அவசரத் தீர்மானம் நிராகரிப்பு

சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுக்கும் அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் நிராகரித்தார். சுபாங் எம்பி ஆர்.சிவராசா (பிகேஆர்),பதிவு செய்த அத்தீர்மானம் திட்டவட்டமாக எதையும்…

பாஸ்: ஏஜியை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும்

நாட்டின் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்லுக்கு எதிராக கூறப்படும் ஊழல் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட அத்துமீறல்கள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாஸ் கோருகிறது. "அரசமைப்புச் சட்டத்தின் கீழ்  உருவாக்கப்பட்ட ஏஜியின் அலுவலகத்திற்கு இது ஒரு கரும்புள்ளியாகும்", என்று…