போலீஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்து: வழக்குரைஞர் மன்றத்துக்கு வலியுறுத்து

போலீசின் அதிகாரம் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி  என்ஜிஓ- உறுப்பினர்கள் சுமார் 30பேர் கோலாலம்பூரில் வழக்குரைஞர் மன்றத்துக்குமுன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், போலீஸ் மீதான தாக்குதல்களை, செப்டம்பர் 26-இல், ஜாலான் கூச்சாய் லாமாவில் நிகழ்ந்ததைப் போன்ற சம்பவங்களை வழக்குரைஞர் மன்றம் கண்டிக்கவும் வேண்டும்…

மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம்: அந்நிய நிதி உதவியில் எந்தத் தவறும்…

அந்நிய நிதி உதவிகள் நாட்டின் சட்டத்திற்கு இணங்க இருக்கும் வரையில் அதில் எந்தத் தவறும் இல்லை என மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் கருதுகிறது. "சிறப்புத் திட்டங்களுக்காக மலேசிய வழக்குரைஞர் மன்றத்திற்குக் கூட அந்நிய நிதிகள் பெறப்படுகின்றன. நாட்டின் சட்டங்கள் மீறப்படாத வரையில் வெளிநாடுகளிலிருந்து அரசாங்கங்களோ தனியார் அமைப்புக்களோ பணம்…

ஆதாரச் சட்டத்தின் பிரிவு 114ஏ-யை ரத்துச் செய்வதற்கு இரண்டு வழிகள்

சர்ச்சையை உருவாக்கியுள்ள ஆதாரச் சட்டத்தின் பிரிவு 114ஏ அரசமைப்புச்  சட்ட  விதிகளுக்கு  ஏற்ப மறு  ஆய்வு செய்தின் மூலம் ரத்துச் செய்ய முடியும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கூறுகிறார். கூட்டரசு அரசமைப்பின் 5(1), 8(1) பிரிவுகள், "சட்டத்துக்கு முரணாக எந்த ஒரு நபருடைய உயிர் அல்லது தனிப்பட்ட…

ஹனிப் வழக்குரைஞர் மன்றத்தையும் அம்பிகாவையும் சந்திக்க விரும்புகிறார்

கடந்த ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சுயேட்சை ஆலோசனைக் குழு வழக்குரைஞர் மன்றம் மற்றும் அம்பிகா சீனிவாசன் ஆகியோரைச் சந்தித்து அன்று என்ன நடந்தது என்று விவாதிப்பதற்காக சந்திப்புக்கான நேரம் கேட்டு ஒரு கடிதத்தை இன்று அனுப்பியுள்ளது.…

வழக்குரைஞர் மன்றம்:அகதிகளுக்கு வேலை செய்யும் உரிமை தேவை

அகதிகளாக இருப்பவர்கள் வேலை தேடவும் வேலை செய்யவும் இடமளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. உலக அகதிகள் தினத்தையொட்டி வெளியிட்டிருக்கும் செய்தியொன்றில் மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ, அகதிகள் வேலை செய்ய முன்பே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும்…

வழக்குரைஞர் மன்றம்: பெர்சே மீது இரண்டு விசாரணைகள் ஏன்?

பெர்சே 3.0 பேரணியில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்)த்துக்குத்தான் உண்டு என்கிறது  வழக்குரைஞர் மன்றம். எனவே, அப்பேரணிமீது விசாரணை நடத்த அரசு-ஆதரவுபெற்ற சுயேச்சை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பது பொருளற்றது என்றது கூறியது. “சட்டப்பூர்வமாகவும் சுயேச்சையாகவும் செயல்படும் சுஹாகாம், தான் விசாரணை…

பெர்சே 3.0 பேரணி மீது வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக்…

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி தொடர்பிலான விசயங்களை விவாதிக்க வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக் கூட்டத்தைக் (இஜிஎம்) கூட்டுகிறது. அந்த இஜிஎம் கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் அடுத்த வெள்ளிக்கிழமை நிகழும் என அந்த மன்றத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரத்துவச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பெர்சே 3.0,…

வழக்குரைஞர் மன்றம்: பிஎஸ்சி அறிக்கை முழுமையானதும் நிறைவானதுமாய் இல்லை

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கை "முழுமையானதும் இல்லை, நிறைவானதும் இல்லை" என வழக்குரைஞர் மன்றம் கருதுகிறது. அந்தக் குழு வழங்கியுள்ள 22 பரிந்துரைகளில் சில, சரியான பாதையில் எடுக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்ட வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ, உருப்படியான…