சிலாங்கூர் பத்துமலைப் பணிக்குழு உறுப்பினர்களை அறிவித்தது

பத்துமலைக்கு அருகில் 'கொண்டோ' திட்டம் ஒன்றுக்கு அரசாங்க அனுமதி வழங்கப்பட்டது மீது விசாரணை நடத்த ஐவர் கொண்ட குழுவை சிலாங்கூர் அரசாங்கம் இன்று பெயர் குறிப்பிட்டது. கிள்ளான் மாவட்ட ஒராங் புசார் அப்துல் கனி பாத்தே அஹிர், நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம் நாச்சியப்பன், முன்னாள்…

கொண்டோ திட்டம்: லியு பதவி விலகத் தயாரா என்று சக…

பத்து மலை இந்து கோயிலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்ச்சைக்குரிய 29-மாடி கொண்டோமினிய திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை என்றால்,  டிஏபி சகாவும் ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோனி லியு பதவி துறப்பாரா என்று ஒரு கேள்வியைப் போட்டு  எம். மனோகரன் (டிஏபி- கோத்தா ஆலம் ஷா) மாநிலச்…

மசீச: பத்து மலை கொண்டோவுக்கு சிலாங்கூர் மந்திரி புசாரே காரணம்

பத்து மலை கொண்டோமினியம் கட்டுவதற்கு செலாயாங் கவுன்சிலர்கள் யார் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் இறுதிப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்தான் என்கிறார் சிலாங்கூர் மசீச தலைவர் டோனல்ட் லிம். பாரிசான் நேசனலின்கீழ் இருந்த செலாயாங் நகராட்சி மன்றம்(எம்பிஎஸ்) கொண்டோவுக்குத் திட்டமிட மட்டுமே ஒப்புதல்…

‘டோல்மைட் தீர்வு வழங்கிய பின்னர் சுற்றுச் சூழல் துறை சரி…

பத்துமலைக்கு அருகில் சர்ச்சைக்குரிய 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் (கொண்டோ) திட்டம் மீது அதன் மேம்பாட்டாளரான டோல்மைட் சென் பெர்ஹாட் 'பொறியியல் தீர்வு' ஒன்றை சமர்பித்த பின்னர் சுற்றுச் சூழல் துறையும் கனிவள மண் அறிவியல் துறையும் அந்தத் திட்டத்துக்கு 'ஆட்சேபம் தெரிவிக்கவில்லை'. "அந்த கொண்டோவைக்…

பத்துமலை ‘கொண்டோ’ அனுமதியில் பக்காத்தானுக்கும் பங்கு உண்டு என்கிறார் சோர்

பத்துமலை 'கொண்டோ' திட்டம் அங்கீகரிக்கப்பட்ட விஷயத்திலிருந்து பக்காத்தான் ராக்யாட் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களை முழுமையாக விலக்கிக் கொள்ள முடியாது என வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சோர் சீ ஹியூங் கூறுகிறார். அந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டதில் அவர்களுக்கும் ஓரளவு பங்கு உண்டு என்றார் அவர். செலாயாங் நகராட்சி…

எம்பிஎஸ் தலைவர் மாற்றம் சட்டவிரோதமானது

ஓர் ஊராட்சிமன்ற தலைவரை மாற்றும் அதிகாரம் பொதுச்சேவை இலாகாவுக்கு (பிஎஸ்டி) இல்லை என்று செலயாங் முனிசிபல் கவுன்சில் கூறுகிறது. அந்த இலாகா நேற்று செலயாங் முனிசிபல் கவுன்சில் தலைவர் ஸைனால் அபிடின் அலலாவை இந்தான் என்று அழைக்கப்படும் தேசிய பொதுநிர்வாக கழகத்திற்கு மாற்றியது ஊராட்சி சட்டம் 1976 ஐ…

கொண்டோ சர்ச்சை: செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் இடம் மாற்றப்பட்டார்

செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் ஜைனல் அபிடின் ஆலாலா-வை 24 மணி நேர முன்னறிவுப்புடன் புத்ராஜெயா இடம் மாற்றம் செய்துள்ளது. மாநில அரசாங்கத்துக்கு விரக்தியை ஏற்படுத்துவதே அந்த நடவடிக்கையின் நோக்கம் எனக் கருதப்படுகின்றது. பத்துமலை கோவில் வளாகத்துக்கு அருகில் 29 மாடி ஆடம்பர அடுக்குமாடி வீட்டு (கொண்டோ) திட்டத்தை…

பத்துமலை: தீங்கு இழைத்த பாரிசான் நிபந்தனை விதித்து மக்களைத் தூண்டக்கூடாது

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், நவம்பர் 14, 2012. குற்றவாளி திருந்துவதற்கு நிபந்தனை விதிப்பதா? பத்துமலைக்கு தீங்கிழைத்த பாரிசான் மக்களை பக்கதானுக்கு எதிராகத் தூண்டிவிட முயற்சிப்பதா? இதனைச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளவர் பிரதமர் நஜிப். அவர் பத்துமலையை காப்பாற்ற புதிய நிபந்தனை விதிக்கிறார். நிபந்தனை விதிக்கும் அருகதை…

நஜிப்: பிஎன் வென்றால், பத்துமலை “கொண்டோ” குப்பையில் எறியப்படும்

பாரிசான் மீண்டும் சிலாங்கூர் மாநில ஆட்சியைக் கைப்பற்றினால், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பத்துமலை 29 மாடி கொண்டோ திட்டத்தை குப்பையில் எறியும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று உறுதியளித்தார். அதோடு மட்டுமல்ல. பத்துமலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளம் என்ற தகுதி பெறுவதற்கு உலக பாரம்பரிய ஆணையத்தில் மலேசியாவின்…

கூட்டக் குறிப்புக்கள் வெளியான பின்னர் கோகிலன் ‘கொண்டோ’ அங்கீகாரம் குறித்து…

பத்து மலையில் சர்ச்சைக்குரிய டோலோமைட் பார்க் அவினியூ ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்தை வெளியுறவுத் துணை அமைச்சர் ஏ கோகிலன் பிள்ளை அங்கீகரித்தார் என்பதைக் காட்டும் செலாயாங் நகராட்சி மன்ற கூட்டக் குறிப்புக்கள் காட்டிய பின்னர் அது குறித்து கருத்துரைக்க கோகிலன் மறுத்து விட்டார். அந்தத் திட்டம்…

லியூ: சிலாங்கூர் பத்துமலை ‘கொண்டோ’ அங்கீகாரத்தை ரத்துச் செய்யக் கூடும்

சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் துறை தெரிவித்த ஆட்சேபங்களை அலட்சியம் செய்ததற்காக பத்து மலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டோல்மைட் பார்க் அவினியூ கொண்டோமினியம் திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாநில அரசாங்கம் ரத்துச் செய்யக் கூடும். அந்தத் தகவலை இன்று மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ வெளியிட்டார்.…

‘பத்துமலை கொண்டோ அங்கீகரிக்கப்பட்ட கூட்டத்தில் அந்த இருவரும் இல்லை’

வெளியுறவுத் துணை அமைச்சர் ஏ கோகிலன் பிள்ளையும் உலு சிலாங்கூர் எம்பி கமலநாதனும் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்த போது பத்துமலைக் கோவிலுக்கு அருகில் சர்ச்சைக்குரிய 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதிக்கு (கொண்டோ) அங்கீகாரம் வழங்கிய செலாயாங் நகராட்சி மன்ற முழு வாரியக் கூட்டத்தில் இல்லை.…

பத்துமலை ‘கொண்டோ’ பணிக்குழு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

புகழ் பெற்ற பத்துமலை கோவிலை சுற்றிலும் மேற்கொள்ளப்படுகின்ற மேம்பாடுகளை ஆய்வு செய்வதற்கான சுயேச்சைப் பணிக் குழு விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும். சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அந்தத் தகவலை வெளியிட்டார். அந்தக் குழுவுக்கு ஐந்து முதல் ஏழு உறுப்பினர்கள் வரையில் நியமிப்பது என மாநில…

கோகிலன்: “பத்துமலை கொண்டோ விவகாரத்தில் எனக்குச் சம்பந்தம் இல்லை”

வெளியுறவு துணை அமைச்சர் ஏ.கோகிலன் பிள்ளை, தாம் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் பத்துமலை ஆலயத்துக்கு அருகில் 29-மாடி கொண்டொமினியம் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது என்றாலும் அனுமதி கொடுப்பதில் தாம் சம்பந்தப்படவில்லை என்றார். அவருக்குத் தொடர்புண்டு என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு கூறியுள்ளதை மறுத்த கோகிலன்,…

பத்து மலை ‘கொண்டோ’: சுயேச்சை பணிக் குழு அமைக்கப்பட்டது

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்துக்கு அருகில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுவதைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளை சுயேச்சை பணிக் குழு ஒன்று ஆராயும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "முடிவு செய்யும் போது நாங்கள் வெளிப்படையாக நடந்து கொள்வதை மக்களுக்குக் காட்ட நாங்கள்…

கர்பால் சிலாங்கூர் அரசிடம் சொல்கிறார்: பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை இப்போது…

பத்துமலை 'கொண்டோ' (ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி) திட்டம் தொடர்பான சர்ச்சையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு பக்காத்தான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தத் திட்டம் தொடர்பில் அவரது பக்காத்தான் சகாக்கள் பிஎன் மீது குற்றம்…

கோபாலா: கொண்டோ விவகாரத்தில் பக்காத்தானின் ‘இந்து-எதிர்ப்பு’முகம் தெரிகிறது

UPDATED 5.43PM இந்துக்கள் புனிதமாகப் போற்றும் பத்துமலை ஆலயத்துக்கு அருகில் 29-மாடி கொண்டோமினியம் கட்டும் விவகாரத்தில் பக்காத்தான் ரக்யாட்டின் “இந்து-எதிர்ப்பு” முகம் வெளிப்படுவதாகக் கூறுகிறார் பாடாங் செராய் எம்பி என்.கோபாலகிருஷ்ணன். “பத்துமலை ஆலய விவகாரத்தை நினைக்கும்போது கவலை மேலிடுகிறது. அது இந்திய சமூகத்தின் இன்னுமொரு  அடையாளச் சின்னத்தை அழிக்க…

குலா: பத்துமலை கொண்டோ சர்ச்சையில் பிஎன் பாச்சா பலிக்கவில்லை

“செய்வதையெல்லாம் செய்துவிட்டு  பழியைத் தூக்கி பக்காத்தான் ரக்யாட்மீது போடும்” பிஎன்னின் பழக்கத்துக்கு பத்துமலை கொண்டோ சர்ச்சை இன்னுமொரு எடுத்துக்காட்டாகும் என்கிறார்  டிஏபி உதவித் தலைவர் எம்.குலசேகரன். பர்மா சென்றுள்ள அந்த ஈப்போ பாராட் எம்பி, மின்னஞ்சல்வழி மலேசியாகினியைத் தொடர்புகொண்டு, “இச்சம்பவம் 1990-இல் டிஏபி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தால் அப்போதைய  சிலாங்கூர்…

பத்துமலை நடராஜாவுக்கும், சரவணனுக்கும் ஒரு சவால்

-அண. பாக்கியநாதன், அக்டோபர் 27, 2012. பத்துமலை வட்டாரத்தில் 29 மாடி கொண்டோ விவகாரம் அடுத்த தேர்தலுக்கு இந்திய மக்களை திசைத்திருப்ப நடராஜா ஆடும் நாடகம். சாட்டையடிக்கு சரியான பதிலுரைக்க இயலாமல் கேட்பவரின் சமயத்தைச் சுட்டிக் காட்டி ஒதுங்கி நிற்கச் சொல்லும் சரவணன். நீங்கள் இருவரும் சமய சீர்திருத்தத்திற்கு…

சர்ச்சைக்குரிய ‘கொண்டோவை’ பிஎன் அங்கீகரித்தை ஆவணங்கள் காட்டுகின்றன

"பத்துமலைக் கோவிலுக்கு அருகில் சர்ச்சைக்குரிய ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியது பிஎன் ஆகும். பக்காத்தான் ராக்யாட் அல்ல. அதனை நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மாநில அரசாங்கத்திடம் இப்போது உள்ளன." அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி கட்டப்படவிருக்கும் பகுதிக்கு வருகை அளித்த ஊராட்சித்…

பத்துமலையை காப்பதில் இன, மத வேறுபாடுகளுக்கு பக்காத்தானில் இடமில்லை, சேவியர்

பக்காத்தான் அரசு மீதும், எங்கள் நேர்மை மீதும் நம்பிக்கை வைத்துள்ள மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் என் நன்றியை, பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, ம.இ.கா கிளை நிலை நிர்வாக உறுப்பினர்களுக்கு, ம.இ.கா வின் தேசிய தலைவர் பழனிவேலே ஆணையிட்டும்,  பத்துமலையில் ஆலயப் பாதுகாப்பு…

பத்துமலை: நடராஜாவின் ‘நம்பிக்கை’ தோற்கடிக்கப்பட்டது

பத்துமலையில் 29 மாடி கொண்டோமினியம் கட்டுவதற்கு அனுமதியளித்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய சமூகத்தின் நலனைப் பாதுகாக்க பத்துமலையில் கூட்டப்படும் மக்கள் அமைதிப் பேரணியில் "லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குவார்கள்" என்று பத்துமலை கோயில்…