இந்திய சமுதாயம் இலவச அரிசிக்காக தெருவில் கையேந்தி நிற்கின்றது!

இந்தப் படம் நேற்று செமின்ஞியில் பிரதமர் நஜீப் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக இலவச அரிசி பொட்டலங்கள் கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாகும். ஒரு அரிசி பொட்டலத்துக்காக இந்தியர்களை கையேந்த வைத்து பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டனர். இந்த நிலமை மாற வேண்டும்.…

வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வாசகர்கள் அனைவருக்கும் செம்பருத்தி இணையத்தளத்தின் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 'இல்லங்கள்தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள்தோறும் தங்கட்டும் இன்பங்கள்!' மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளைபொருள்களை வைத்து புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று இறைவனை…

இயலாத நிலையில் இந்திராணி; உதவி செய்ய தலைவர்கள் முன்வருவார்களா?

கடந்த சனிக்கிழமை (05.01.2013) ஜசெக தனது தேர்தல் பிரச்சார கனரக ஊர்தியில் காராக்கில் பிரச்சாரம் செய்தது. இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின்போது காராக் தாமன் மக்முர் என்ற வட்டாரத்தில் வசிக்கும் திருமதி இந்திராணி (வயது 39) என்ற பெண்மனி,…

சிறுபான்மையினர் என்ற ஒப்பாரி ஏன்?

இந்நாட்டு இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் எழுப்பப்படும்போது அவர்கள் சிறுபான்மையினர் என்று முத்தாப்புடன் தொடங்கிறது. இந்நாட்டு இந்தியர்கள் இந்நாட்டின் குடிமக்கள், இந்திய மலேசியர்கள். குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் இந்நாட்டு இதர குடிமக்களுடன் (சீன மலேசியர், மலாய்/இந்தோனேசிய மலேசியர், சாபா, சரவாக் மலேசியர்) சேர்ந்த பெரும்பான்மையினராவர். அப்பெரும்பான்மையினருக்குள் சிறுபான்மையினர் இருக்க…

நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் 631…

சிலாங்கூர் மாநிலத்தில் நாடாற்றவர்களாக உள்ள மலேசியர்களின் சிவப்பு நிற அடையாள அட்டை விண்ணப்ப பாரங்களின் ஒரு தொகுதியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளது. புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசிய பதிவுத் துறை தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மாநில அரசுக்கும் தேசியப் பதிவுத் துறை…

நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகம் நூற்றுக்கணக்கான…

நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசியப் பதிவுத் துறை தலைமையத்தின் முன்னால் பிகேஆர் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. [VIDEO | 05:46mins] காலை மணி 10 வாக்கில் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் புத்ராஜெயா நீதித்…

பிபிபி: 300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதை நிரூபியுங்கள்

இந்த நாட்டில் 300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதாக தாம் கூறிகொள்வதை பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் மெய்பிக்க வேண்டும் என பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி இன்று கேட்டுக் கொண்டுள்ளது. "300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதை மெய்பிக்குமாறு நாங்கள் சுரேந்திரனிடம் கூறியுள்ளோம். கற்பனையாக எந்த எண்ணிக்கையையும்…

‘நாடற்ற இந்தியர் எண்ணிக்கை குறித்து பிரதமர் பொய் சொல்கிறார்’

மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ள இந்தியர் எண்ணிக்கை 9,000தான் என்று பிரதமர் கூறியிருப்பதைச் சாடுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். “பிரதமரின் அறிவிப்பில் உண்மையில்லை. அது நாடற்றவர்களாக உள்ள இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் அருவறுக்கத்தக்க முயற்சி; அந்த எண்ணிக்கை 9,000 என்பது அடிப்படையற்றது, அறிவுக்குப் பொருந்தாதது”, என்று சுரேந்திரன்…

மலாய்க்காரர்களின் மலத் தொட்டியை தூக்க வந்தவர்களாம் இந்தியர்கள்!

மலாய்க்காரர்களின் மலத் தொட்டியை தூக்குவதற்கும் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்திய சீன வந்தேறிகளை பிரிட்டிஷ்காரர்கள் இங்கு அழைத்து வந்தனர் என்று கமார்ஸன் முஸ்தாபா என்பவன் தன்னுடைய முகநூல் (Facebook) எழுதியிருக்கிறான். சீனர்களைப் பொறுத்தவரை சுரங்கங்களில் வேலை பார்ப்பதற்கும் பிரிட்டிஷ் கூலிகளாக இருப்பதற்கும் தருவிக்கப்பட்டனர் என்றும் அவன் குறிப்பிட்டுள்ளான். "மலாய்க்காரர்கள்…

இந்தியர் பொருளாதார மேம்பாட்டுக்கான 10 அம்சங்களை மஇகா பிரதமரிடம் வற்புறுத்த…

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், டிசம்பர் 9, 2012. பிரதமர் நஜிப் துன் ராசாக் இன்று  தெடக்கிய 66 வது ம.இ.கா பொதுப் பேரவையில் என்ன சொல்லப் போகிறார் என்பது  இந்தியச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரின் கேள்விகளாக இருந்திருக்கும். அண்மையில்  சுங்கை சிப்புட்டில்  நிகழ்த்திய தீபாவளி…

“…நாம் ஓர் ஓரங்கட்டப்பட்ட சமூகம்… அதில் சந்தேகமே இல்லை”, ஜி.பழனிவேல்

இந்த நாட்டின் இன்றையக் குடிமக்களின் அடித்தளம் வந்தேறிகள். அவர்களில் முக்கியமானவர்கள் இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் ஆவர். சுதந்திர மலேசியாவின் பிரதமர்கள் அனைவரும் வந்தேறிகள்தான். இன்றையப் பிரதமர் நஜிப் ரசாக் இந்தோனேசிய வந்தேறி. சுலவாசியிலிருந்து குடியேறியவர்களின் பரம்பரையைச் சேர்ந்த இவர் இந்தப் பின்னணி குறித்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். நஜிப் ரசாக்கை…

பக்காத்தான் பரப்புரையைப் புறக்கணிப்பீர்: திரெங்கானு இந்தியர்களுக்கு வலியுறுத்து

மாற்றரசுக் கட்சிகளின் பரப்புரையை நம்ப வேண்டாம் என திரெங்கானு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடும் எதிர்த்தரப்பின் முயற்சிகளை இந்திய சமூகம் புறந்தள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர் வான் அப்துல் ஹகிம் வான் மொக்தார், அவர்கள் அரசாங்கம் எப்போதும் தங்கள் நலனைக்…

மலேசிய இந்தியர்களுடைய நிலை பற்றி ஒர் எம்பி துணை அமைச்சருடன்…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுடைய நிலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தவறி விட்டதாகக் கூறி மலேசிய இந்திய எம்பி ஒருவர் மக்களவையில் பிஎன் துணை அமைச்சர் ஓருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். "இந்தியர்கள் ஒரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்றாம் தரக் குடி மக்களாகியுள்ளனர்," என ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் இன்று…

இந்தியர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ அல்லர்!

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், அக்டோபர் 12, 2012. புதிய வரவு செலவு திட்டத்தை முன்வைத்த போது முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளின் சீரமைப்புக்கு100 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் அறிவித்தார். எனினும் நடப்பு அரசு கொள்கையின்படி, தமிழ்ப்பள்ளிகளுக்கான சீரமைப்பு வேலைகள் எதுவாக இருப்பினும் அவை…

நெற்களஞ்சிய திட்டத்தில் இந்தியர்களுக்கு வாய்ப்புண்டா?, ஹிண்ட்ராப் சவால்

-வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி. 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்த பிரதமர், மலேசியாவின் அரிசி உற்பத்தியை பெருக்கும் வகையில் மேலும் நான்கு  நெற்களஞ்சிய பகுதிகளை உருவாக்கப் போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார். சுமார் 19,000  ஹெக்டர் (46,950 ஐம்பது ஏக்கர்)  நிலப் பரப்பில்…

அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 30, 2012. பொதுச் சேவை துறை, அண்மையில் தொழிற்துறை அமைச்சுக்காக 21 பட்டதாரிகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! இது  குறித்து சென்ற வாரம் வருத்தம் தெரிவித்திருந்தார் ம.இ.கா. தலைவர்  ஜி. பழனிவேல்.  அதே வாரத்தில், அரசாங்க முகப்பு…

இந்திய வணிகர்களுக்கான 180 மில்லியன் ரிங்கிட் கடனை மானியமாக மாற்றுவீர்!

பிரதமர் அவர்கள் 180 மில்லியன் ரிங்கிட் கடனை இந்திய சமுதாயத்துக்கு வழங்க முன்வந்துள்ளது மற்றோரு வாக்கு வாங்கும் யுக்தி போலும்!   இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்திருந்தாலும் மலாய் அல்லாத பிற இன குடிமக்களுக்கு பிரத்தியேக சலுகை ஏதும் இல்லை என்பதை அனைவரும் அறிவர். குறிப்பாக அரசாங்க…

பினாங்கு டிஏபி நடத்திய கூட்டத்துக்கு பெருந்திரளாக மக்கள் திரண்டனர்

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உட்பட பல இந்தியர் பிரச்னைகளை விவாதிப்பதற்காக நேற்று பினாங்கில் டிஏபி ஏற்பாடு செய்த கூட்டத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். ஜார்ஜ் டவுனில் உள்ள பினாங்கு சீனர் நகர மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். மாநில டிஏபி தலைவரும்…

Success of BERSIH 3.0 is important for Indians…

-Senator Dr.S. Ramakrishnan, April 26, 2012   Malaysians of all walks of life gathered on July 2011 Bersih 2.0 rally to call for fair and free elections in Malaysia. Despite the government threatening and warning…

“கெடாவில் பிஎன்னுக்கு இந்தியர்களின் ஆதரவு 80 விழுக்காடு உயர்ந்துள்ளது”

கெடா மாநிலத்தில் பாரிசான் நேசனலின் தலைமைத்துவதற்கு இந்திய சமூகத்தின் ஆதரவு 80 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மாநில பாரிசான் தலைவர் அஹ்மாட் பாஷா முகமட் ஹனிபா கூறினார். அந்த அளவிலான ஆதரவுடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மாநிலத்தை எதிர்கட்சியிடமிருந்து பிஎன் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக…

இந்தியர்கள் யுனிட் டிரஸ்ட் பங்குகள் வாங்குவதை வங்கிகள் தடுக்கின்றன

பிரதமர்துறை துணை அமைச்சர் எஸ்.கே தேவமணி, இந்தியர்கள் ஏஎஸ்எம், ஏஎஸ்1எம் பங்குகள் வாங்குவதை ஊக்குவிக்காத சில வங்கிகளைச் சாடியுள்ளார். “இந்தியர்கள் அப்பங்குகளை வாங்க முற்படும்போது பங்குகள் விற்று முடிந்துவிட்டன என்றும் இன்னும் பல காரணங்களையும் அவர்கள் கூறுகின்றனர்.வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை பறிபோய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு.…

துணைப் பிரதமர் இந்தியர்களை அவமதிக்கிறார்

[செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்] அண்மையில் பாகோவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வொன்றில் நாடு சுதந்திரமடைந்த இந்த 54 ஆண்டுகளில் பாரிசான் நேஷனல் அரசாங்கம் இந்திய சமூகத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை என துணைப் Read More