மலேசியா சமயச் சார்பற்ற நாடல்ல: நஸ்ரி திட்டவட்டம்

மலேசியா உருவானபோது அது சமயச் சார்பற்ற நாடாக உருவாக்கப்படவில்லை. இதனை வலியுறுத்திய பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், அது அவ்வாறு அறிவிக்கப்பட்டதுமில்லை, அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதும் இல்லை என்றார். இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் இவ்வாறு கூறினார். “மலேசியா, மலாய் ஆட்சியாளர்களைக்…

சிங்கப்பூர் அரசதந்திரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மலேசியா விளக்குகிறது

கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியில் மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை ஸ்ட்ரெயிட்ஸ் டைமஸ் நாளேட்டில் வெளியான கடிதங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம் பதில் அளித்துள்ளது. முதலில் மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள…

மலேசியா நொடித்துப் போகாது என்று இட்ரிஸ் ஜாலா இப்போது கூறுகிறார்

மலேசியா நொடித்துப் போகாது என பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா இப்போது கூறுகிறார். உதவித் தொகைகள் குறைக்கப்படாவிட்டால் கடன் நெருக்கடியில் மூழ்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளைப் போன்ற நிலையை மலேசியாவும் அடையக் கூடும் என அவர் கடந்த ஆண்டு எச்சரித்திருந்ததற்கு முரணாக இன்றைய கருத்து அமைந்துள்ளது. 2020க்குள் உயர்ந்த…

பொருளாதார சுதந்திர குறியீட்டில் மலேசியாவுக்கு விழுந்த அடி

இவ்வாண்டுக்கான பொருளாதார சுதந்திர அளவை மதிப்பீடு செய்யும் குறியீட்டில் இடம் பெற்றுள்ள 140 நாடுகளில் மலேசியா 78வது இடத்துக்கு தாழ்ந்து விட்டது. அரசாங்கத்தின் அளவு,  வலிமையான பணத்திற்கான வாய்ப்புக்கள் ஆகியவை உட்பட பல துறைகளில் நாட்டின் அடைவு நிலை அந்தக் குறியீட்டில் மோசமாகப் பதிவாகியுள்ளதே அதற்குக் காரணம் ஆகும்.…