‘நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்’ – ஆர்கே…

'நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்' என்ற முதுமொழி மஇகா  இப்போது எதிர்நோக்கியுள்ள குழப்பத்தை தெளிவாக வருணிக்கிறது. ஒரு காலத்தில் அந்த நாட்டில் வளம் கொழித்தது. அதற்கு வல்லமையும் செல்வமும் நிறைந்திருந்தது. ஆற்றல் மிக்க மலேசிய இந்தியர்கள் அரசியல்  பெருமக்களாக உயர்ந்து பெரும் செல்வத்தைச் சேர்க்க உதவியது. ஆனால்…

மஇகா தலைவர் தேர்தல் செப்டம்பர் 22ல் நிகழும்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் மஇகா தலைவர் தேர்தல் செப்டம்பர் 22ல் நிகழும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கப்பதிவதிகாரி அலுவலக நிபந்தனைகளுக்கு ஏற்ப கட்சியின் எல்லாப்  பதவிகளுக்கான தேர்தல் இவ்வாண்டுக்குள் நிகழும் என்று மஇகா தலைவர் ஜி  பழனிவேல் தெரிவித்தார். அவர் இன்று கோலாலம்பூரில் மஇகா மத்திய செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர்  நிருபர்களிடம்…

In MIC, Old is Gold – Saravanan

MIC vice-president M Saravanan has come to the defence of the party’s branch chairmen, above 50-years-old, who have been asked to quit the party to pave the way for younger blood.  “Before we ask them…

பதவியைப் புறக்கணிக்க மஇகா ஒன்றும் மசீச-வைப்போல் பணக்காரக் கட்சி அல்லவே’

‘மஇகா, பேராக் ஆட்சிக்குழுவில் அளிக்கப்படும் இடங்களை அவசரப்பட்டு நிராகரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள மஇகா வியூக இயக்குனர் வேள்பாரி, அக்கட்சி மசீச-வைப்போல் “பொருளாதார வலுவுள்ள” கட்சி அல்ல என்றார். “மஇகா ஒன்றும் மசீச அல்ல. மசீச அப்படிப்பட்ட நிலைபாட்டைக் கடைப்பிடிக்கலாம். சீனர் சமூகம் பொருளாதார வலு படைத்தது. அச்…

புறக்கணிக்கப் போவதாக மஇகா மருட்டல்!

பேரா மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவி மஇகா-வுக்கு வழங்கப்படாவிட்டால் அந்த மாநில அரசாங்கப் பதவிகள் எதனையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என மஇகா மருட்டியுள்ளது. அந்தப் பதவி ஒர் இந்தியருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என அது தெரிவித்துள்ளது. 12வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பேரா மாநிலத்தை 2009ம் ஆண்டு…

இரண்டு மஇகா உயர் தலைவர்களை வேள்பாரி சாடுகிறார்

போலீஸ் தடுப்புக் காவலில் அண்மைய காலமாக நிகழ்ந்துள்ள மரணங்கள் தொடர்பில்- பெரும்பாலும்  இந்திய சமூகம் சம்பந்தப்பட்டவை- ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம்  செய்ய மஇகா திட்டமிடுகின்றது. எப்போது எங்கு அந்த சாலை ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பற்றி விவாதிக்கத் தாம் இந்த வாரம் மற்ற  அரசு சாரா அமைப்புக்களுடன்…

ஹிண்டராப் : மோகனும், உதயகுமாரும் வாயை மூடிக் கொள்ள வேண்டும்

மஇகா இளைஞர் தலைவர் டி மோகனும் ஹிண்டராப்பின் பெயரளவு தலைவர் பி உதயகுமாரும் 'வாயை மூடிக் கொண்டு' தனது தலைவர் பி வேதமூர்த்தியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துணை அமைச்சராக நியமித்ததை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹிண்ட்ராப் கூறியுள்ளது. "அந்த அம்சத்தை தொடர்ந்து…

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மஇகா தலைமைச் செயலாளர் பதவி துறந்தார்

எஸ் முருகேசன் மஇகா தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். 13வது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி துறக்கப் போவதாக தாம் அளித்த உறுதிமொழிக்கு  இணங்க அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார். மே 5ம் தேதி நிகழ்ந்த தேர்தலில் அவர், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியை…

சுல்கிப்லியை ஆதரிக்க வேண்டாம் என மஇகா கேட்டுக் கொள்கிறது

ஷா அலாம் நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் சுல்கிப்லி நூர்டின் குறித்த  தமது அதிருப்தியை மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த பெர்க்காசா தலைவருக்கு தங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் இந்தியர்களைக்  கேட்டுக் கொண்டார். இந்தியர்கள் பற்றி சுல்கிப்லி…

சுல் நோர்டின் நியமனம் குறித்து மஇகா, பிஎன் வேட்பாளர்கள் கருத்துச்…

பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது  பற்றி  மஇகாவையும் மற்ற பிஎன் கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள்  தங்கள்  நிலைபாட்டினைத் தெரிவிக்க வேண்டும்.  தெரிவிப்பார்களா?  என்று சவால் விடுத்துள்ளார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ. சுல்கிப்ளியை பிஎன் வேட்பாளராக…

மஇகா, இழந்த நாடாளுமன்றத் தொகுதிகளை மீட்க உறுதி பூண்டுள்ளது (விரிவாக)

2008 பொதுத் தேர்தலில் தான் இழந்த அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றப்  போவதாக மஇகா உறுதி அளித்துள்ளது. அந்தத் தொகுதிகள் அனைத்திலும் மஇகா வெற்றி பெறும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜி பழனிவேல் இன்று கூறினார். அவர் 13வது பொதுத் தேர்தலுக்கான மஇகா…

அந்நியப்பட்டுபோன மஇகா-விற்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

கடந்த 12வது பொதுத் தேர்தல் வரை மலேசிய இந்தியர்களின் காவலனாகவும் அவர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே கட்சியாகவும் மஇகா விளங்கியது. ஆனால், 12-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் இந்தியர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் இந்தியர்களின் அரசியல் பார்வையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்…

மஇகா இளைஞர் பிரிவு: ரித்துவான் தீ மீது உள்துறை அமைச்சு…

Universiti Pertahanan Nasional என்னும் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளர் ரித்துவான் தீ அண்மையில் எழுதிய ஒரு கட்டுரை இந்திய சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாகக் கூறிக் கொண்ட மஇகா இளைஞர் பிரிவு அவருக்கு 'ஒரு பாடம்' கற்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. சினார் ஹரியானில் கடந்த வாரம்…

“பழனிவேலுவினால ரோட்டத் தாண்ட முடிஞ்சா… நான் மொட்டை போடுறேன் முருகா!”

முருகா, தைப்பூசம் முடிஞ்சி ஒரு வாரத்துக்குப் பிறகு இதை நான் வேண்ட சில காரணம் இருக்கு. கூட்டம் குறையுமுன்னு பார்த்தா 'ஒற்றுமை பொங்கலுக்கு' எங்க பிரதமர் தந்த ஓஸி பேருந்தால பத்துமலையில கடுமையான நெரிசல். உன்னைப் பார்க்க மக்கள் 'ஒற்றுமை பொங்கல்' பேருந்தைப் பயன்படுத்திக்கிட்டதைப் பத்தி எங்க பிரதமருக்கு…

மஇகா-வுக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே எனக் கூறப்படுவதை ஜாம்ரி…

பேராக்கில் 13வது பொதுத் தேர்தலில் மஇகா-வுக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்படுவதை பேராக் மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிர் நிராகரித்துள்ளார். அது சில தரப்புக்களின் வெறும் ஊகமே என அந்த மாநில பிஎன் தலைவருமான ஜாம்ரி சொன்னார். "நடப்பு கோட்டா அடிப்படையில் அமைந்த…

கையேந்தும் நிலையில் இந்திய சமுதாயம்! ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு…

புத்ரா ஜெயாவில் 1 கோடி 20 இலட்சம் வெள்ளி செலவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்கப்படவுள்ளதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் இந்திய தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான ச. சாமிவேலு அறிவித்துள்ளார். புத்ரா ஜெயாவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்க மத்திய அரசாங்கம் 1 ஏக்கர் நிலத்தை…

‘டாட்டாரான் மெர்டேகா பொங்கல் விழாவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்வர்’

பிப்ரவரி 2-இல், டாட்டாரான் மெர்டேகாவில் நடைபெறும் பொங்கல் ஒற்றுமை விழாவில் 50,000-த்துக்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன் கூறினார். அந்நிகழ்வு மாலை 6மணிக்குத் தொடங்கி இரவு மணி 8.30 வரை நடைபெறும் என்றவர் தெரிவித்தார். அவ்விழாவில்,பல்வேறு பாரம்பரிய கலைகள் இடம்பெறும் என்றும்  இந்தியக்…

நியாட்: மஇகா 145 தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணிக்கிறது

தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் நலன்களை மஇகா தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான ஒதுக்கீடுகளைப் பெறுவதிலிருந்து பகுதி உதவி பெறும் 145 தமிழ்ப் பள்ளிகளை மஇகா தலைவர் ஜி பழனிவேல் ஒதுக்கி வைத்துள்ளதாக அது கூறியது. அந்தப்…

அதிகமாக ஒன்னும் கேக்கல, கொஞ்சம் பாத்து குடுங்க சார்!

ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் கட்டணம் எவ்வளவு என்று கேட்டால், ஆட்டோக்காரர் மீட்டரை பார்ப்பார். ஆளைப் பார்ப்பார். பின்னர் முழங்கையைச் சொறிவார். அதன் பின்னர் "பாத்து குடுங்க சார்", என்று கூறுவார். கடந்த வெள்ளிக்கிழமை த ஸ்டார் நாளிதழில் "We didn't ask for a lot" என்ற செய்தியைக்…

பிரதமர்: நாடற்ற இந்தியர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது

அடையாளக் கார்டு இல்லாததால் 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் நாடற்றவர்களாக இருப்பதாக பக்காத்தான் ராக்யாட் கூறிக் கொள்வதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நிராகரித்துள்ளார். இன்று காலை கோலாலம்பூரில் மஇகா பொதுப் பேரவையில் உரையாற்றிய நஜிப்,  அந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்றார். "முதலாவதாக 300,000 நாடற்ற இந்தியர்கள்…

சரவணன் : இந்திய சமூகம் பிஎன்-னிலிருந்து தனித்திருக்க முடியாது

இந்திய சமூகம் மற்ற சமூகங்களுடன் தேசிய மேம்பாட்டு நீரோட்டத்தில் இணைந்திருக்க வேண்டுமானால் அது பிஎன்-னிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது என மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் கூறுகிறார். மற்ற அரசியல் கட்சிகளை ஆதரித்தால் முன்னேற்றகரமான சமுதாயத்திலிருந்து பெரும்பான்மை இந்தியர்கள் விடுபட்டு விடுவர் என அவர் சொன்னார். அவர் நேற்றிரவு…

சிப்பாங் பூசை மேடை உடைப்பு : மஇகா ஆர்ப்பாட்டத்தில் வெறும்…

அண்மையில் சிப்பாங்கில்  வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடை சிப்பாங் நகராண்மைக் கழகத்தினால் உடைக்கப்பட்டதை கண்டித்து சிலாங்கூர் மாநில அரசு பணிமனைக்கு முன்னால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மஇகா இளைஞர் பகுதி ஏற்பாடு செய்தியிருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார்…