அம்னோவின் தற்போதைய உதவித் தலைவர் மீண்டும் வெற்றி பெற்றனர்

அம்னோ கட்சியின் தேர்தலில் தற்போது உதவித் தலைவர்களாக இருக்கும் அஹ்மட் ஸாகிட் ஹமிடி, ஷாப்பி அப்டாய் மற்றும் ஹிசாமுடின் ஹுசேன் ஆகியோர் மீண்டும் பேராளர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளனர். ஹமிடி 185 வாக்குகளும், ஷாப்பி மற்றும் ஹிசாமுடின் ஆகியோர் முறையே 174 மற்றும் 100 வாக்குகளும் பெற்றனர்…

இன்று அம்னோ தேர்தல்

அம்னோ தலைவர், துணைத் தலைவர் பதவிகள் போட்டியின்றி முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் இப்போது உதவித் தலைவருக்கான தேர்தல் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்காக அறுவர் போட்டியிடுகின்றனர். நடப்பு உதவித் தலைவர்களான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் உசேன், ஷாபி அப்டால் ஆகியோரை எதிர்த்து…

என் மகன் ஆசிபெற்ற வேட்பாளர் அல்லவே: மகாதிர் அங்கலாய்ப்பு

அம்னோ பேராளர்கள் நாளைதான் வாக்களிப்பார்கள்.  ஆனாலும்  அக்கட்சியின் முன்னாள் தலைவர்  டாக்டர் மகாதிர், உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்  ஆறு வேட்பாளர்களில்  ஒருவராகிய தம் புதல்வர் முகிரிஸ் வெற்றிபெற மாட்டார் என்பது தமக்கு இன்றே தெரிந்து விட்டது  எனக் கூறிக்கொள்கிறார். “அம்னோவில், தலைவர்  யாரை விரும்புகிறாரோ அவர்களைத்தான் பேராளர்கள்…

உதவித் தலைவர் தேர்தல்: ஹிஷாமையும் முக்ரிசையும் முந்திக்கொண்டு செல்கிறார் அலி…

அம்னோவில் உதவித் தலைவர் தேர்தலில் முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தம் பரவலாக நிலவும் எதிர்பார்ப்பைக் கவிழ்த்து விடுவார்போலத் தெரிகிறது. மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்காக நடைபெறும் தேர்தல் பற்றிய அண்மைய கணிப்பு இது: குற்றத்தடுப்புச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டு வந்ததாலும் பல்வேறு விவகாரங்களில் கடுமையான போக்கை…

டிவி விவாதத்துக்கு முக்ரிஸ் சம்மதிக்கிறார்; ஹிஷாம் மறுக்கிறார்

அம்னோ உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தொலைக்காட்சியில் விவாதமிடுவது தேவையற்றது என்று நினைக்கிறார் ஹிஷாமுடின் உசேன். அது பற்றிக் கருத்துரைத்த நடப்பு உதவித் தலைவர்களில் ஒருவரான ஹிஷாம், “உலகம் கூடி அம்னோ தலைவிதியை முடிவு செய்யப்போவதில்லை. அம்னோ உறுப்பினர்கள் அத்தனை பேரும்கூட வாக்களிக்கப் போவதில்லை”, பிறகு எதற்கு…

துப்பாக்கி வைத்திருப்பதாக சொன்னார் பங் மொக்தார்

மற்றவர்களை நாவால் சுட்டுக் காயப்படுத்துவதில் பேர் போனவர் பங் மொக்தார் ரடின்.  அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அந்த எம்பி,  உண்மையிலேயே சுடும் ஆயுதத்தை, ஒரு துப்பாக்கியை வைத்திருக்கிறாராம். நாட்டில் குற்றச்செயல்கள் பெருகி வருவதால் கலக்கமடைந்துள்ள அந்த கினாபாதாங்கான் எம்பி,  இப்போது துப்பாக்கி இல்லாமல் வெளியில் போவதில்லையாம். இன்று…

மகாதிர்: மக்களுக்கு வேறு வழி இல்லாததால் அம்னோ வென்றது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மக்களுக்கு வேறு வழியில்லை அதனால்தான் அம்னோ வென்றது என்று கூறியிருப்பது பொதுத் தேர்தல் வெற்றியால் அம்னோ அடைந்த உற்சாகத்தை அப்படியே குன்றி போக வைத்துள்ளது. “13வது பொதுத் தேர்தலில் அம்னோதான் கூடுதல் இடங்களை வென்ற கட்சி என்று நாம் பாராட்டி மகிழலாம்.…

ஏர் ஏசியாவைப் புறக்கணிக்குமாறு அம்னோ மூத்த உறுப்பினர்கள் வேண்டுகோள்

அம்னோ உறுப்பினர்கள் குறைந்த கட்டண விமான நிறுவனங்களான ஏர் ஏசியாவையும் ஏர் ஏசியா  எக்ஸ்-ஸையும் புறக்கணிக்க வேண்டும் என அம்னோ மூத்த உறுப்பினர்கள் குழு ஒன்று கேட்டுக்  கொண்டுள்ளது. ‘Apa lagi Cina mahu?’ (சீனர்களுக்கு வேறு என்ன வேண்டும் ?) என்னும் தலைப்பில் உத்துசான்  மலேசியா இரண்டு…

‘பினாங்கு பிஎன் தலைவராக அம்னோ ஆளையே நியமிப்பீர்’

பினாங்கு மலாய் காங்கிரஸ் (பிஎம்சி), அம்னோ தலைவர் ஒருவரே பினாங்கில் பிஎன் தலைவராக நியமிக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சி மட்டுமே 10 இடங்களை வென்றதையும் அதன் மலாய்க்காரர்-அல்லாத பங்காளிக் கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை என்பதையும் பார்க்கையில் இதுவே நியாயமான முடிவுமாகும் என்று…

‘நஜிப் கேட்டுக் கொண்டால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி பேசப்படும்’

அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அழைப்பு விடுத்தால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி  பாஸ் கட்சி பரிசீலிக்கும். இவ்வாறு அந்தக் கட்சியின் உலாமா மன்றத் தலைவர் ஹரூண் தாயிப் கூறுகிறர. அந்த அழைப்பு வெளிப்படையாக இருந்தால் தாம் பாஸ் அந்த யோசனையைத் தீவிரமாக கருதும் என அவர்…

ஹாடி : அம்னோ மூழ்குகிறது அதனுடன் சேர்ந்து நாங்களும் மூழ்க…

மலாய்க்காரர்கள் ஐக்கியமடைய வேண்டும் என அம்னோவில் உள்ளவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை பாஸ்  தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். அந்த மலாய் தேசியவாதக் கட்சி 'மூழ்கிக் கொண்டிருக்கிறது, அதனை இனிமேல் காப்பாற்ற முடியாது' என  அவர் வருணித்தார். மூழ்கிக் கொண்டிருக்கும் அம்னோவுடன் பாஸ் சேர்ந்தால் அதுவும் மூழ்கி விடும்…

சீன வாக்காளர்கள் மீது நம்பிக்கை இழக்க வேண்டாம் என அம்னோவுக்கு…

மே 5 பொதுத் தேர்தலில் மலேசிய சீனர்களுடைய ஆதரவை இழந்ததால் மேலும் வலது பக்கம் திரும்ப  அம்னோ முடிவு செய்யுமானால் அது அரசியல் தற்கொலையாக இருக்கும் என அம்னோ உச்ச மன்ற  உறுப்பினர் சைபுடின் அப்துல்லா தமது கட்சியை எச்சரித்துள்ளார். அம்னோ தனது மிதவாத சித்தாந்தத்தைத் தொடர வேண்டும்…

அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ கைது செய்யப்பட்டார்

அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ கைது செய்யப்பட்டுள்ளதாக அரச மலேசியப் போலீஸ்  படை டிவிட்டரில் அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவாளர் கிங் ஜேசனும் கைது செய்யப்பட்டுள்ளார். "போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக பாப்பாகோமோ-வும் கிங் ஜேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர்," என  அந்த டிவிட்டர் பதிவு கூறியது. பாப்பாகோமோ…

அம்னோ மகளிர் துணைத் தலைவர் சுயேச்சை வேட்பாளரானார்

அம்னோ மகளிர் துணைத் தலைவர் கமிலியா இப்ராகிம், கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால் அத்தொகுதியில்  மும்முனை போட்டி உருவாகியுள்ளது. அவருடன் கலில் இதாம் லிம்(பாஸ்), வான் முகம்மட் கைரில் அனுவார் வான் அஹ்மட் (பிஎன்) ஆகியோரும் அங்கு களமிறங்குகின்றனர். பிஎன்,  அவருக்கு அவர் விரும்பிய…

ஒதுக்கப்பட்டதால் அம்னோ மகளிர் துணைத் தலைவி ஏமாற்றம்

தம்மை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு வேட்பாளராக நிறுத்தாது குறித்து அம்னோ மகளிர் துணைத் தலைவி காமிலியா இப்ராஹிம் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அந்தப் பிரிவின் உயர் தலைவர்கள் ஆற்றியுள்ள பங்கை கூட்டணி அங்கீகரிக்கத் தவறி விட்டதையே அது  காட்டுகிறது என அவர் சொன்னார். மகளிர்…

அம்னோ: முஸ்தாபாவும் ஹாராக்காவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

செக்ஸ் வீடியோ விவகாரத்தில் அம்னோவை இழுத்ததற்காக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் அந்தக் கட்சியின் அதிகாரத்துவ ஏடான ஹாராக்காவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோரும் கடிதம் ஒன்றை நேற்று அம்னோ சமர்பித்தது. இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் அந்த வீடியோவில் முஸ்தாபாவைப் போன்று தோற்றமளிக்கும்…

அன்வார் பேராக் வரட்டும், ‘புதைத்து விடுகிறேன்’; ஜாஹிட் சூளுரை

பேராக்கில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிட வந்தால் அவர் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியாதபடி செய்வோம் என்று சூளுரைத்துள்ளார் அம்மாநில  அம்னோ தலைவர் முகம்மட் ஜாஹிட் ஹமிடி. “அவரது தோல்வியை உறுதி செய்வோம்”, என்றாரவர். இன்று புத்ரா வாணிக மையத்தில் பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்…

அம்னோ எம்பி: அரசியல் வன்முறைக்கு எதிரான நிலைபாட்டை வலுப்படுத்த வேண்டும்

13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்துவரும் அரசியல் வன்முறையைக் கண்டிப்பதில் அம்னோ இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கருத்தை அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா ஏற்றுக்கொள்கிறார். “அதை நான் ஒப்புக்கொள்கிறேன். கடுமையாகக் கண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது”, என அவர் கினிடிவி நேர்காணலில் கூறினார்.…

பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் முன்னாள் அம்னோ பொருளாளருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்

Fiscal Capital Sdn Bhd என்ற நிறுவனத்தின் வழியாக 60 பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் முன்னாள் அம்னோ தலைமைப் பொருளாளர் அப்துல் அஸிம் முகமட் ஜாபிடிக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றின் மீது ஆறு தொலைத் தொடர்பு switch-களை கொள்முதல் செய்ததில் ஏமாற்றியதாகவும் மோசடி செய்ததாகவும் ஆவணங்களைப் போலியாக தயாரித்தததாகவும் 12…

காணொளி குறித்து அம்னோ தலைமைச் செயலாளர் ஆத்திரம்

பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்,  நேற்றுத் தமக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த ஒரு காணொளி சித்திரிப்பதுபோல், பிஎன் வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகளை வழங்கியதில்லை என்று மறுத்துள்ளார். விவேகக் கைபேசி வழி தமக்கு அனாமதேயமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த அக்காணொளி  மாற்றரசுக் கட்சியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்றாரவர். அந்தக்…

பினாங்கு மலாய்க்காரர்களை உண்மையிலேயே ஏமாற்றியது யார்?

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான், “மலாய்க்காரர்கள் செயல்முனைப்பற்றவர்களாக இருந்தால் மறைந்து போவார்கள்” என்று கூறியது குறித்து டிஏபி போலீசில் புகார் செய்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கீர் ஜோகாரி, ஜாலான் பட்டானியில் உள்ள வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்…

பேராக் அம்னோவில் பிளவு: கேட்டுக் குதூகலிக்கிறது பக்காத்தான்

மூன்று மத்திய அமைச்சர்கள் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்திருப்பது வெளி மாநில அம்னோவில் ஏற்பட்டுள்ள பிளவை மூடிமறைக்கும் நாடகமாகும் என்று பேராக் பாஸ் தேர்தல் இயக்குனர் அஸ்முனி அல்வி கூறுகிறார். கடந்த சில மாதங்களாகவே, எதிர்வரும் தேர்தலில் அம்னோ உதவித்…

ஆர்சி-இடம் உண்மை உரைக்க தயாரா? அன்வாருக்கு அம்னோ சவால்

சாபா குடியேற்றக்காரர்கள்மீது  விசாரணை நடத்தும்  அரச ஆணையத்திடம் (ஆர்சிஐ) கள்ளக் குடியேறிகள் பற்றிய உண்மையைச் சொல்லும் துணிச்சல் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு உண்டா என்று சாபா அம்னோ தொடர்புக்குழு துணைத் தலைவர் சாலே சைட் குருவாக் சவால் விடுத்துள்ளார். அதைச் சொல்லும்  கடப்பாடு அன்வாருக்கு உண்டு…