கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்

கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு எங்களின் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். பல்லின பண்பாட்டை ஒருங்கிணைத்துக்கொண்டு பீடு நடை போடும் மலேசியா நமக்கெல்லாம் கிடைத்த ஓர் அபூர்வமான வரப்பிரசாதம். அதிகமான பெருநாட்களை கொண்டு பல்லின மக்களின் மாறுபட்ட சமயங்களை அனுசரித்து, கடவுளை பல கோணங்களில் வழிபட நமக்கெல்லாம் இங்கு வழியும் …

அரசியல் தவளைகளுக்கு பேராசை பெரும் நஷ்டம்!

இராகவன் கருப்பையா -கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்பு அரசாங்கத்தை அநியாயமாகக் கவிழ்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் தவளைகள் தற்போது 'காலொடிந்த' நிலையில் முடங்கிக் கிடக்கின்றனர். நாட்டின் அரசியல் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத, 'ஷெரட்டன் நகர்வு' எனப்படும் அச்சம்பவத்தை வெற்றிகரமாக அரங்கேற்றியக் கும்பலில் முக்கியப்…

அம்னோவின் மீட்சிக்கு இனவாத அரசியல் இனி பயனளிக்காது

இராகவன் கருப்பையா - அறுபது ஆண்டுகளுக்கும் மேல் பிரதான அரசியல் கட்சியாக நாட்டை வழி நடத்திய அம்னோ தனது எதிர் காலத்தைப் பற்றித் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டிய காலம் கணிந்து விட்டது. அக்கட்சியின் தேய்மானம் கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலின் போது தொடங்கி சன்னம் சன்னமாக…

35 மணி நேர சுவரா நாட்டிய சாதனைக் கொண்டாட்டம்

கிள்ளான்  ஸ்ரீராதாகிருஷ்ணன் இசை கலை மையம் மற்றும் இணை அமைப்பாளர், SRFA என்ற  கலை மற்றும் கலாச்சார சங்கம், மாநில கலாச்சாரம் மற்றும் கலைத் துறை (JKKN) உடன் இணைந்து, டிசம்பர் 18, 2022 அன்று மித்ராவில் "சுவரநாட்டிய: சாதனை கொண்டாட்டம்" என்ற நிகழ்வை  வெற்றிகரமாக கொண்டாடினர். கிள்ளான்…

விதுர நீதியும் மலேசிய அரசியலும் – கி.சீலதாஸ்

எந்தத் தேர்தலிலும் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தமது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று முழக்கமிடுவது ஒன்றும் விசித்திரமல்ல. போட்டியிடும் ஒவ்வொருவரும் வெற்றியில் தான் நம்பிக்கை கொண்டிருப்பர். ஆனால், நடந்து முடிந்த பதினைந்தாம் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும், கூட்டணிக்கும் அறிது பெரும்பான்மை கிடைக்காமல் போனது ஆச்சரியம்தான்.…

பட்டதாரி மாணவர்களின் குத்தாட்டம் – சாதனையா, வேதனையா?

இராகவன் கருப்பையா - அண்மையில் நடைபெற்ற உள்நாட்டு பல்கலைக் கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவின் போது இந்திய மாணவர்கள் சிலர் போட்ட குத்தாட்டம் நம்மில் பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. அது  சமுதாயத்திற்கு அவமானத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறதா? ஓர் உழைக்கும் வர்க்கத்தின் அன்றாட வெளிப்பாடாக இருக்கும் ஏழ்மைப் பண்பாடு அவர்களின் வேதனையையும் வெளிப்படுத்தும்.…

வீட்டை இழக்கும் தோட்ட மக்களுக்கு போராட்டம்  ஒரு தொடர்கதையே!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடு தழுவிய நிலையில் தோட்டங்களில் வசித்து வந்த நமது சமூகத்தினர், மேம்பாட்டு நீரோட்டத்தில் பலதடவை விடுபட்டுப் போனது ஒரு சோகமான அத்தியாயம். இருந்த போதிலும் பல அரசாங்கங்கள் மாறியுள்ள நிலையிலும் இந்தத் துயரம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் நமக்கு வேதனையளிக்கும் ஒரு…

புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்னால் இஸ்மாயில் சப்ரியுடன் செய்தது போல்தான் உள்ளது…

இந்த ஒப்பந்தத்தில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை என்றும், தேசிய வளர்ச்சி மற்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதற்கு இது உதவும் என்றும் ஃபஹ்மி ஃபட்சில் கூறுகிறார். எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் உள்ள கூட்டணிகளுக்கு இடையேயான ஒப்பந்தம் வெளிப்படையான…

கட்சிகளின்  ஒப்பந்தம்,  நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஓர் அவமானம் – மஇகா…

கட்சிகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்  நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அவமானம் என்று மஇகா பொதுச்செயலாளர் ஆர்.டி.ராஜசேகரன் சாடியுள்ளார். இது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்று வலியுறுத்திய, இந்த  பாரிசான் நேஷனல் (பிஎன்) உச்ச கவுன்சில் உறுப்பினராகவும் உள்ள ராஜசேகரன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் அதை நிராகரிக்க…

அன்வாருடன் ‘வரலாற்று’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் கட்சி தலைவர்கள்

பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று முறைப்படி ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கையெழுத்திடும் விழாவில் அன்வார், பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, சபா முதல்வர் ஹாஜிஜி நூர், சரவாக்…

இந்தியர் ஏழ்மையை அகற்ற தேசிய கொள்கை தேவை – இன…

இராகவன் கருப்பையா - இம்மாதத் தொடக்கத்தில் நாட்டின் 10ஆவது பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது அமைச்சரவையை அறிவித்த போது ஒரு இந்தியருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக ஏமாற்றமடைந்த நம் சமூகத்தினர் உரிமைகுரலை சற்று உக்கிரமாகக் குரல் எழுப்பினார்கள். அதே போல கடந்த வாரம் துணையமைச்சர்கள் பட்டியலை அவர்…

இலவு காத்த கிளியான  ம.இ.கா-வின் சிவராஜ், சமூக போராளியாக மாற…

இராகவன் கருப்பையா - கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் நடந்த 2 பொதுத் தேர்தல்களில் தோல்வியடைந்த ம.இ.கா.வின் இதர வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் அடைந்த ஏமாற்றங்கள் சற்று வித்தியாசமானவை. அக்கட்சியின் தலைமைத்துவத்தில் உள்ளவர்களிலேயே சற்றுத் துணிச்சலாகவும் துடுக்காகவும் பேசக் கூடிய ஒரே தலைவர்…

அன்வார் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு என்னவாகும்?

டிசம்பர் 19 அன்று நடைபெறவிருக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிமின் நம்பிக்கை வாக்கெடுப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் தெளிவான உத்தரவுகளைப் பெறவில்லை. இதை ஜெலேபு எம்பி ஜலாலுதீன் அலியாஸ் (மேலே) வெளிப்படுத்தியதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது. இதுவரை எந்த அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை…

பெரிக்காத்தான் சாதனையும் மகாதீரின் வேதனையும்

இராகவன் கருப்பையா -  எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தானின் தற்போதைய அபரித வளர்ச்சி முன்னாள் பிரதமர் மகாதீரின் திட்டமிட்ட இனவெறிக் கனவு என்றால் அது மிகையில்லை. தனியொரு மனிதனாக இருந்து, 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி', என்பதைப் போல பெர்சத்து கட்சியைத் தோற்றுவித்து இன்றைய அதன் வளர்ச்சிக்கு வித்திட்டு…

மலேசியர்களைப் பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை

கி.சீலதாஸ் - பிரதமர் அன்வர் இபுராஹீம் தமது அமைச்சரவையை அறிவித்துவிட்டார். முன்னாள் பிரதமர் இஸ்மாயில் பிரதமராக நியமிக்கப்பட்டபோது அவர் அந்தப் பதவியில் தொடர்வதற்குத் துணையாக இருந்தவர்கள் யாவருக்கும் அமைச்சர் பதவியையும் மேலும் பல தரமான பொறுப்புகளோடு நல்ல வருவாய் தரும் பதவிகளில் அமர்த்தி தன் பதவியைத் தற்காத்துக் கொண்டார். அன்வர்…

அம்னோவின் அதிரடி நடவடிக்கை, அனுவார் மூசா பதவி நீக்கம்  

முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சரான, அம்னோ பிரிவு தலைவர் அனுவார் மூசா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு நடந்த அம்னோ சுப்ரீம் கவுன்சில் கூட்டத்தில் பதவி நீக்கம் செய்ய முடிவு செய்த மூன்று கட்சிப் பிரிவுத் தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை மலேசியாகினி அறிந்தது. "கட்சியை…

புதிய அரசாங்கத்தில் சிறப்பு தூதர்களுக்கு வேலையில்லை

இராகவன் கருப்பையா - பொதுத் தேர்தலில் தோற்றுப் போனவர்களையும் 'எனக்கும் ஏதாவது ஒரு பதவி வேண்டும்' என்று சிணுங்குபவர்களையும் சமாதானப்படுத்தும் நோக்கத்தில், அவசியமே இல்லாதப் பதவிகளை உருவாக்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்தக்  காலம் கடந்துவிட்டது. 'சிறப்புத் தூதர்கள்', 'சிறப்பு ஆலோசகர்கள்', போன்ற பெயர்களில் இவர்களுக்கென மாதந்தோறும் இலட்சக்கணக்கில் செலவிடப்பட்டு…

சரித்திரம் தீர்ப்பளிக்கட்டும் – டிஏபி-யின் நான்கு அமைச்சர் பதவிகள் குறித்து…

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் 28 பேர் கொண்ட அமைச்சரவையில் தனது கட்சிக்கு 4 அமைச்சர் பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டதிற்கு  ஆதரவாளர்கள் அதிருப்திக்கு டிஏபி-யின் பொதுச்செயலாளர் அந்தோணி லோக் பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்தார். 15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் கீழ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும்,…

புதிய அரசாங்கத்தில் சிறப்புத் தூதர்களுக்கு வேலையில்லை

இராகவன் கருப்பையா - பொதுத் தேர்தலில் தோற்றுப் போனவர்களையும் 'எனக்கும் ஏதாவது ஒரு பதவி வேண்டும்' என்று சிணுங்குபவர்களையும் சமாதானப்படுத்தும் நோக்கத்தில், அவசியமே இல்லாதப் பதவிகளை உறுவாக்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்தக்  காலம் கடந்துவிட்டது. 'சிறப்புத் தூதர்கள்', 'சிறப்பு ஆலோசகர்கள்', போன்ற பெயர்களில் இவர்களுக்கென மாதந்தோறும் இலட்சக்கணக்கில் செலவிடப்பட்டு வந்த…

அம்னோவின் வீழ்ச்சியும் – மதவாதத்தின் எழுச்சியும்  

இராகவன் கருப்பையா - மலேசிய அரசியலில் அசைக்க முடியாத ஜாம்பவானாக 60 ஆண்டுகளுக்கும் மேல் தடம் பதித்த மூத்தக் கட்சியான அம்னோ தற்போது வரலாறு காணாத வகையில் பள்ளத்தில் விழுந்துக் கிடக்கிறது. இரும்புக் கரங்களுடன் அரசாங்கத்தை நிர்வகித்த அக்கட்சி ஒரு விடயத்தை வெளிக் கொணர்ந்தால் அதுதான் நாட்டிற்கே வேத வாக்காக…

விக்னேஸ்வரன் பதவி விலகினால் மஇகா மீட்சி காணுமா?

இராகவன் கருப்பையா -நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று அதன் தலைவர் விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என அடி மட்ட உறுப்பினர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாகவே தேசிய முன்னணியின் அனைத்து கட்சிகளும் மிகவும் மோசமான வகையில் பின்னடைவு அடைந்தனர். அதோடு…