முழு உறைவிடப் பள்ளிகளில் அனைத்து வகை பள்ளி மாணவர்களும் கற்க…

குணசேகரன் கந்தசுவாமி - முழு உறைவிடப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh) 80-களில் இருந்து மலேசியாவில் செயல்படுகின்றன. புறநகர் மாணவர்களுக்கு நிலையான மற்றும் உகந்த பள்ளிச் சூழலை வழங்குவதன் மூலம் கல்வி அமைப்பில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக முதலில் இப்பள்ளி திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் முழு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு 30…

தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிப்பதில் இஸ்ரேல் வெற்றி –…

உலக அளவில் இரட்டையர்கள் பிறப்பின் சதவிகிதம் சுமார் 1.1% ஆகும். ஒரே கருமுட்டையில் ஒரே உருவம் (Identical twins) கொண்டு பிறப்பவர்களின் சதவிகிதம் 0.3% ஆகும். அதிலும், கிரேனியோபேகஸ் (Craniopagus twins) என்று அழைக்கப்படும் தலைப் பகுதி ஒட்டிய இரட்டையர்கள் 2.5 மில்லியனில் ஒன்று மட்டுமே பிறக்கின்றது. இப்பிறப்பின்…

வல்லரசுகளையே ஆட்டிப்படைக்கும் கோவிட் பெருந்தோற்றும் – கி.சீலதாஸ்

மனிதக் குலத்தைத் தாக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால், இந்த நோயைத் தரும் விஷக்கிருமி பலவிதமாக மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, வைரஸ் துகள்கள் சராசரி முப்பது விதமாக மாறும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரும்பான்மை பரவும்…

விழுதுகள் இல்லாத ஆஸ்ட்ரோ, மொட்டை மரமாகக் காட்சி தரும்! –…

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சி, கடந்த வாரத்தோடு ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 14 ஆண்டுகளாக நாட்டு நடப்பையும் அதன் காரணக் காரியங்களையும் ஆய்ந்து, மலேசிய இந்தியர்களின் சிந்தனையைத் தூண்டும் ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்த விழுதுகள், இன்று இல்லை. விழுதுகளுக்கு மாற்றாக, அதினும் சிறப்பான ஒரு நிகழ்ச்சி விரைவில் நம்மைச் சந்திக்குமெனச் சொல்லப்படுகிறது.…

தடுப்பூசி போட்டவர்களை ‘லம்டா’ மற்றும் ‘டெல்தா’ கோவிட் உருமாற்றம் (Variant)…

கவிதா கருணாநிதி - 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் சார்ஸ் கோவ் 2 (SARS-COV-2) என்ற கிருமி முதலில் தோன்றப்பட்டு உலகம் முழுவதும் காட்டுத் தீப் போலப் பரவிக் கோரோனா வைரஸ் டிசிஸ் (கோவிட் 19) உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைகின்றது. கோவிட் உலகளவில் 217 மில்லியன்…

கோவிட் இருக்கா, இல்லையா? எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள்!

கவிதா கருணாநிதி - நாம் கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளோமா என்று மூன்று பரிசோதனைகளின் வழி தெரிந்து கொள்ளலாம்.இந்த மூன்று கோவிட் பரிசோதனைகளும் வெவ்வேறு வகைப்படும். முதல் பரிசோதனை வகை மொலெகுலர் டெஸ்ட்(Molecular Test) எனப்படுவதாகும். பி.சி.ஆர் டெஸ்டிங் (PCR Testing) இந்த வகையைச் சார்ந்ததாகும்.  நம் மூக்கின் வழியே  அடித்தொண்டையைப்…

மலேசிய குடும்பத்தை உருவாக்க மக்கள் தயார், பிரதமர் தயாரா? –…

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டின் ஒன்பதாம் பிரதமராகப் பதவியேற்றதும் மலேசியர்களை நோக்கி முதல் வேண்டுகோள் விடுத்தார். அது வேண்டுகோளா அல்லது அவரின் தனிப்பட்ட அபிப்பராயமா, இரண்டில் எது என்பதைக் கிரகிக்க முடியவில்லை. ஏனெனில், அரசியல்வாதிகள் பொதுவாகவே ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் சிந்திப்பார்கள்.  சிந்தித்துப் பேசும் பழக்கம்…

புதிய இருதய சிகிச்சை –  ஐஜேன்-னின் புத்தாக்க கண்டு பிடிப்பு…

தேசிய இருதய சிகிச்சை மையம் (IJN) ட்ரைஸ்குபிட் ரிகர்ஜிடேஷன் (tricuspid regurgitation) அல்லது கசிவு இதய வால்வுகளால் (leaky heart valves) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சிகிச்சை முறையை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இச்சிகிச்சை ட்ரிக்வால்வு ® டிரான்ஸ்காதீட்டர் பைகாவல் வால்வுகள் சிஸ்டம் (பயோப்ரோஸ்டெசிஸ்) (Tricvalve® Transcatheter Bicaval Valves…

இனவாத அரசியலில் இலவு காத்த கிளிகளாக இந்தியர்கள்!

இராகவன் கருப்பையா - திங்கள்கிழமை (30/8/21) பதவியேற்ற நாட்டின் புதிய அமைச்சரவையில் மனிதவள அமைச்சராகச் சரவணனும் சுற்றுலாத்துறை துணையமைச்சர் சந்திரக் குமாருமாக 2 இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதில் அதிர்ச்சியோ ஆத்திரமோ ஆச்சரியமோ படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் பிரதமர் மஹியாடின் அறிவித்த அமைச்சரவையிலும்…

அவதிப்படும் ஆசிரியர்களும் – பள்ளிப்பிள்ளைகளின் எதிர்காலமும்

இராகவன் கருப்பையா -  கோறனி நச்சிலினால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டிருந்த போதிலும் உலகின் பல நாடுகளில் பள்ளிக் கூடங்கள் கிட்டதட்ட வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டன.ஆனால் நமது பிள்ளைகள் இன்னமும் இலக்கற்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருப்பது பரிதாபகரமான நிலைதான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆசிரியர் - மாணவர் உறவுகளில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள…

நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 4

இந்த நீல பெருங்கடல் வியூகத்தை வணிக நிறுவனம் மட்டுமன்றி இலாப நோக்கு இல்லாத அரசு அல்லது தனியார் நிறுவங்களும் பயன்படுத்தலாம். இந்த உத்தி ஒரு மாற்றுச்சிந்தனை. வழக்கமாக நாம் பயன்படுத்தும் வியூகத் திட்டத்திற்கு (Long Term Strategic Plan) மாற்றாக, விரைந்து குறுகிய காலத்திலேயேப் பலன்களைப் பெறுவதற்கு இந்த…

தீதும் நன்றும் பிறர் தர வாரா – கபட அரசியலில்…

கடந்த ஆகஸ்ட் 16-இல் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் பிரதமர் பதவியைத் துறந்தார். மாமன்னரும் அதை ஏற்றுக்கொண்டு புதிய பிரதமரை நியமிக்கும் வரை முகைதீனையே பராமரிப்புப் பிரதமராக நியமித்துள்ளார். பதவி துறந்த பின், முகைதீன் யாசின் நாட்டுக்கு ஆற்றிய தமது உரையில், சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த…

புதிய அமைச்சரவைக்கு திறமைசாலிகள் வேண்டும்!

இராகவன் கருப்பையா -நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள இஸ்மாய்ல் சப்ரிக்கு அடுத்து வரும் சில தினங்கள் மிகவும் முக்கியமான நாள்களாகக் கருதப்படுகிறது. இவ்வாரத்தில் தனது புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் யார் யாருக்கு எந்தெந்தப் பொறுப்புகளை வழங்கவிருக்கிறார் என்பதை அறிவதற்குப் பொது மக்கள் கழுகுப் பார்வையைக்…

மக்கள் விரும்பும் ஆட்சிக்கு காலம் கணிவது எப்போது? – இராகவன்…

மலேசிய அரசியல் வரலாற்றில் 2ஆவது முறையாக மக்கள் விரும்பாத ஒருவர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவும் வெறும் 18 மாதங்களில் இரு முறை நாடு தலைமைத்துவ  மாற்றங்களுக்கு இலக்காகியுள்ளது சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலின் போது பிரதமராவதற்கானப்…

ஓரின அரசியல் ஆதிக்கமும், ஊழல் உருவாக்கமும்!  

இராகவன் கருப்பையா - பிரதமர் மஹியாடின் தனது பதவியைத் தொடர்ந்து தற்காத்துக் கொள்வதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராய் உள்ளார் என்பதையே புலப்படுத்துகிறது வெள்ளிக்கிழமை (6.8.2021) மாலை அவர் செய்த அறிவிப்பு. அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கு ஆதரவளித்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனத் தொலைக்காட்சியில்…

அடுத்த பிரதமருக்கு 10 பேர் தயாராகி வருகிறார்கள்!

இராகவன் கருப்பையா - 'புத்திசாலிகள் மற்றவர்கள் செய்யும் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். முட்டாள்கள்தான் சொந்தத் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்,' என ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உள்ளது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கோறனி நச்சிலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நம் நாடு இன்னமும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை…

நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 3

நீங்கள் முன்னோடியா பின்னோடியா? ~ முனைவர் இரா. குமரன் வேலு முதலில் முன்னோடி என்பதற்கும் பின்னோடி என்பதற்கும் விளக்கம் காண்போம். ஒரு புதிய நடைமுறை, புதிய வழிமுறை, புதிய உத்தி, புத்தாக்க கண்டுபிடிப்பு, புதிய கருவி என பலவகை ஏடல்களை முதன் முதலில் நீங்கள்தான் அறிமுகப்படுத்தினீர் என்றால் நீங்கள்…

அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை – கி.சீலதாஸ்

மலேசிய அரசியல்வாதிகள் அடிக்கடி அரசமைப்புச் சட்டச் சிக்கல்களைக் கிளப்புவதில் ஆர்வமுடையவர்களாகத் திகழ்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது நாடாளுமன்றமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கோவிட்-19 காரணமாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கும். அதன் கடுமையும், கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிப்புற்றோரின் எண்ணிக்கையும்…

நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 2

இந்த நீல பெருங்கடல் வியூகம் (Blue Ocean Strategy), யாரோ ஒரு சில கல்விமான்களின் ஏரணச் சிந்தனையில் உதித்த உத்தி அல்ல. இது கல்விக் கோட்பாடும் (academic theory) அல்ல. இது நடைமுறையில், பயன்பாட்டில் உள்ள உத்திகளின் தொகுப்பு. காலங்காலமாக (100 ஆண்டுக்கும் மேல்) நிலைத்து நிற்கும் பல்வேறு…

நீல பெருங்கடல் வியூகம்  – பாகம் 1

வணிக முன்னேற்றம் தொடர்பான உத்தியாக தொடங்கி, இன்று எல்லா வகையான முன்னேற்றத்திற்கும் தோதான ஓர் உத்தியாக, ஒரு பகுத்தாய்வுக் கருவியாக, ஒரு பகுப்பாய்வுச் சிந்தனை ஊக்கியாக மிளிர்கிறது நீல பெருங்கடல் உத்தி அல்லது வியூகம் (Blue Ocean Strategy). இயக்கம் நடத்துவோர், சொந்தத் தொழில் புரிவோர், கல்விக் கூடங்களை…

கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்குங்கள் – கவிதா கருணாநிதி

தற்போது கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும் என்ற அரசாங்க ஆலோசனையின் கீழ் நம்மில் பெரும்பாலோர் இந்தத் தடுப்பூசியைப் போட வரிசையில் நிற்கிறோம். இருப்பினும் ஒரு தரப்பினர், இந்தத் தடுப்பூசியைப் போட மறுக்கின்றனர். இது ஒவ்வொருவரின் மனநிலையைச் சாற்றிய ஒன்றாகக் கருதினாலும், எது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது என…

நாடாளுமன்றமா, நாடகமேடையா?

இராகவன் கருப்பையா - ஜூலை 26ஆம் தேதியிலிருந்து 5 நாள்களுக்கு நாடாளுமன்றம் கூடும் என அரசாங்கம் அறிவித்த அன்றே, நடக்கவிருக்கும் இலட்சணத்தை கணித்திருப்பார்கள், அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட நாட்டு மக்கள். தற்போது உள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தரங்கெட்ட போக்கை அறிந்து வைத்திருக்கும் பொது மக்கள் அந்த…