மாற்றுத்திறனாளி பாலனின் இறுதி ஆசை நிறைவேறுமா?

எஸ் அருட்செல்வன் | “அண்ணா, பாலனின் கண்கள் திறந்திருக்கின்றன. அவரது கனவு இன்னும் நிறைவேறவில்லை.” இந்த வார்த்தை மிகவும் வலி நிறைந்தது. பாலனோடு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வேதனையை அனுபவித்தவரின் உருக்கம் அது. பி.எஸ்.எம் கட்சியில் பாலனுடன் மிகவும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த தீனாவின் உருக்கம் அது. 10…

மலேசியாவில் பூர்வக்குடி மக்களின் துயரம் தொடர்கதையா?

-சிவா லெனின் மலேசியாவில் வாழும் பூர்வக்குடியினர், நாளுக்கு நாள் பல்வேறு சிக்கல்களையும் பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வருவதோடு, அவர்கள் தங்களின் வாழ்வியல் முறையையே இழந்து வரும் நிலை உருவாகியுள்ளது. இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் எனவும் பூர்வக்குடியினர் எனவும் வரையறுக்கப்படும் அந்தச் சமூகம் நாளுக்கு நாள் மலேசியாவிற்கு அந்நியமாகி வருகிறார்கள். அவர்களுக்கெதிரான…

அம்னோ-பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் –…

அடுத்த தேர்தலில் தேசிய முன்னனிக்குப் பதில் கூட்டுக்கட்சியாக உருவாக இருக்கும் அம்னோ – பாஸ் ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் என்றார் சேவியர் ஜெயக்குமார். நேற்று இரவு தமிழ் அறவாரியத்தின் நிதிதிரட்டும் நிகழ்வில் சிறப்பு உரையாற்றிய நீர், நில இயற்கைவள அமைச்சர் டாக்டர். சேவியர், நம்பிக்கைக்கூட்டணியின் சவால்கள்…

NGK –  நந்த கோபாலன் குமரன் திரைப்பார்வை: யதார்த்த அரசியலின்…

‘உனக்கு அரசியலில் ஈடுபாடு உண்டா?’ என்கிற கேள்வி மிகப் பிரபலமான ஒன்றாகும். எனக்கு அக்கேள்வி ‘உனக்கு சாப்பிடுவதில் ஈடுபாடு உண்டா?’ என்பது போலவே ஒலிக்கும். நாட்டின் மைய அரசியலோடு ஒவ்வொரு குடிமகனும் இணைக்கப்பட்டுள்ளான் என்றும் ஓட்டுப் போடுவதிலிருந்து அரசியலாட்சி அமைக்கப்படுவதில் ஒரு சாமான்யனுக்கு இருக்கும் உரிமை வரை எதையுமே…

மனம் எனும் மருந்து

மனம் அடக்கப்பட வேண்டியது அல்ல; ஆளப்படவேண்டியது. உலகில் மிகப்பெரிய ஆராய்சிகள் எல்லாம் மனித மனதினைப் பற்றி நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனதின் செயல்பாடுகளை அத்தனை எளிதாக அறிய இயலவில்லை. ஒவ்வொரு வினாடியும் அது ஓராயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்கிறது. ஒவ்வொரு மனிதரையும் படைத்து ஆளுக்கொரு…

நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன்

மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon…

‘மே 18’ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – உலகத் தமிழர் நினைவில்…

சிவாலெனின் தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடியத் தமிழினத்தை முற்றாக அழித்திட இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும்…

தமிழ்மொழிக் காப்பகம்! இனி நம் தமிழை இனிதாக காக்கும்! –…

மொழி என்பது ஒரு இனத்தின் முகம். அதுவும் தமிழ்மொழி போன்ற உலக செம்மொழியை தாய்மொழியாகக் கொண்டது தமிழினம்.  அதன் அருமை பெருமைகளை உணர்ந்தும் உணராமலும் தமிழர்கள் வாழ்ந்து வருவது தமிழ்மொழியின் நிலைத்தன்மை மீது அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதை எதிர் கொள்ளும் வகையில் தமிழ்மொழிக்கான காப்பகத்தை மலேசிய அரசாங்கம் அமைத்துள்ளது.…

குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுகாண, பிஎஸ்எம்-ன் ஆலோசனைகள்

பக்காத்தான் ஹராப்பான் (பிச்) நிர்வாகம் ஆட்சிக்கு வந்தபின்னரும், மலேசியர்களுக்கான குடியுரிமை சிக்கலுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கவலையை எழுப்பியுள்ளதாக அண்மையில், பத்திரிகைகள் / ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மலேசிய நண்பன் நாளிதழ் (14.03.2019), பொதுத் தேர்தலின் போது மக்களின் வாக்குகளைக் கவருவதற்கு மட்டுமே பாரிசான் நேசனல்…

பொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதலில் குழப்பமா? சேவியர் ஜெயக்குமார் விளக்குகிறார்!

பஹாங் மாநில, குவாந்தான் பகுதியில் பொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதல் மற்றும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்திருந்த தடை மார்ச் மாதம்  31ந்தேதியுடன்  முடிவுக்கு வருவதாகப் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள  அறிவிக்கையால்  மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று  நீர் நிலம் இயற்கைவள  அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.  பொக்ஸ்சைட்…

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை வளர்க்கிறது!

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா? என்ற வினாவுடன் ஒரு செய்தியை 10.3.2019-ஆம் தேதி மலேசிய இன்று வெளியிட்டிருந்ததது. அதில், தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள  தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின்போக்கு கண்டனதிற்கு உரியது என்று சாடப்பட்டிருந்தது. இன்று கிடைத்த தகவலின் படி,…

அம்னோ – பாஸ் கூட்டணி, ஒற்றுமைக்கு உலை  வைக்கும்! முன்னேற்றத்தை…

அம்னோ – பாஸ் கூட்டணி வழி மலாய்க்காரர்களை  மட்டுமே வைத்து ஆட்சி  நடத்த  முற்படுவது  நாட்டின்   ஒற்றுமைக்கு  உலை  வைக்கும் என்றும், சுதந்திரத்திற்கு  முன்பு  பேசப்பட்டு  உறுதி  அளிக்கப்பட்ட  மதச்  சார்பற்ற  நாடு  என்பதுபோன்ற நோக்கங்களை புறக்கணிப்பது நாட்டின் முன்னேற்றதிற்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும் விவரிக்கிறார் கட்டுரையாளர்- ஆர்.…

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா?

தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள  தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின்போக்கு கண்டனதிற்கு உரியது என்கிறார் வல்லினத்தின் இணைய இதழ் ஆசிரியர் ம. நவீன். மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வருடம் தோறும் நடத்தப்படும் மொழிப் போட்டிக்களுக்கான அறிக்கை இவ்வாண்டும் மலாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது மலேசியத்…

நீதி தேவதையின் நிலை! – கி.சீலதாஸ் 

சட்டத்திற்குப்  புறம்பாக  ஏதாவது  தவறு  நேர்ந்துவிட்டாலோ,  அல்லது  ஒருவருக்கு  இழைக்கப்படும்  தவறுக்குத்  தீர்வு   தேடி  போவது  நீதிமன்றத்திற்கு.  நீதிமன்றம்  இயங்குவதற்கு  எதற்கு?  நீதி  வழங்க:  ‘அப்பழுக்கற்ற  நீதி  வழங்க’. பத்தொன்பதாம்  நூற்றாண்டின்  இறுதியில்  இங்கிலாந்தின்  மேல்முறையீட்டு    நீதிமன்றத்தின்  தலைவர்  ஒரு  கேள்வியை  முன்வைத்தார்.  நீதிமன்றம்  என்றால்  என்ன?  என்பதே …

‘மூன்றாம் முற்போக்கு சக்தி’ – செமினி இடைத்தேர்தலில் பி.எஸ்.எம். கட்சியால்…

கருத்து | நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான் - பிஎச்) 14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ14) அறிக்கை, விரிவான சீர்திருத்தங்களை முன்னெடுக்க உள்ளதாக உறுதியளித்தது, இதனால், தேசிய முன்னணி (பாரிசான் நேசனல் -பிஎன்) ஆட்சியின் கீழ் இருந்தது போல் அல்லாமல், மிகவும் வித்தியாசமான ஓர் அரசாங்கம் அமையவுள்ளது என்று…

எங்கே போனீர்கள் என்ஜிஓ? வேதமூர்த்திக்கு குரல் கொடுங்கள் – இராகவன்…

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்..... என மகாகவி பாரதியார் பாடினார். அதே போல, என்று தனியும் நம் ஒற்றுமை தாகம்? கடந்த மே 9ஆம் தேதியன்று  'மலேசியா பாரு' பிறந்ததில் இருந்து நிறைய மாற்றங்கள், மறுமலர்ச்சி, சுதந்திரம், என பல விஷயங்களில் நாம் குதூகலம் அடைந்து கொண்டிருக்கும்…

மலேசியர்களும்  சமஉரிமைகளும்…!

கி.சீலதாஸ், டிசம்பர் 3, 2018. இன, சமய  வேறுபாடுகளைத் நீக்கும்  நோக்கத்தோடுதான்  21.12.1965- இல்  ஐநா  ஒரு  தீர்மானத்தை  நிறைவேற்றியது. அந்தத்  தீர்மானத்தை  அனைத்துலக  நாடுகள்  அங்கீகரித்து கையொப்பமிட  வேண்டும்.  இந்தத்  தீர்மானத்தில்  மலேசியா  இன்னும்  கையொப்பமிடவில்லை.  பல  இஸ்லாமிய  நாடுகள்  இந்த ஒப்பந்தத்தில்  கையொப்பமிட்டுள்ளன  என்பது  குறிப்பிடத்தக்கது. …

ஒரு கரண்டி ‘இந்திய’ இரத்தம்! மகாதிர் ஒப்புதல்

கி.சீலதாஸ், நவம்பர் 15, 2018. பிரதமர்  துன்  மகாதீர்  முகம்மது  எந்த  இனத்தைச்  சேர்ந்தவர்  என்ற  சர்ச்சை  நெடுங்காலமாக  இருந்து  வருகிறது.   அவரை  இந்திய  வம்சாவளித்  தோன்றல்  என்றார்கள்.  பாகிஸ்தானிய  வம்சாவளித்  தோன்றல்  என்றும்  சொல்லப்பட்டது.  மகாதீர்  முதன்முதலில்  பிரதமரானதும்  கேரளத்தின்  பிரபல  பத்திரிகையாளர்கள்:  “நம்ம  ஆள்  மலேசியாவை …

சீ பீல்டு அம்பாள்  தேர்வு வைத்திருக்கிறாள்!- சாமானியன்

சுமார் 147 ஆண்டுகள் வரலாற்று பின்னணியைக் கொண்ட சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம் உடைபடும் ஆபத்தில் இருக்கிறது. மலேசிய இந்துக்களின் மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த  அச்சுறுத்தல். இத்திரு நாட்டில் இந்து  ஆலயங்கள் முன்னேற்ற திட்டங்கள் என்ற பெயரில் தொடர்ந்து பகடை காய்களாக உருட்டுப்படுவது நம்…

கட்சிகள் மாறின., ஆட்சியும் மாறியது..,ஆனால்,  அட  போங்கய்யா! -கி. தமிழ்ச்செல்வன்

இந்த மாதம் 22-ஆம் தேதிக்கு (22.11.2018) பிறகு 147 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம்  தரை மட்டமாகி மண்ணோடு மண்ணாய் தவிடு பொடியாகும் அபாயத்தில் உள்ளது. பண பலமில்லாத , அதிகாரமில்லாத ஆலய நிர்வாகமும், சில நல்ல உள்ளங்களும் தங்களால் இயன்ற மட்டும்…

பட்ஜெட்டில்  இந்தியர்களின் சிக்கல்களுக்கான தீர்வுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகளோடு ஓர்…

பக்காத்தான் ஹராப்பான் என்ற நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்புப் பகுதி ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அது ஒரு மிக முக்கியமான பகுதியாகும். மிகவும் கவனமாக தொடர்ந்து இந்தியர்கள் தேசிய நீரோட்ட வளர்ச்சியில் இருந்து விலகாமலிருக்க 25 வாக்குறுதிகளை  நம்பிக்கை கூட்டணி அந்தச் சிறப்பு பகுதியில்…

சீர்கேடுகளைக் களைவோம், ஏற்றத்திற்கு ஒன்றுபடுவோம், உறுதி கொள்வோம், ஓங்கட்டும் சமுதாயம்,…

  சீர்கேடுகளைக் களைவோம், ஏற்றத்திற்கு ஒன்றுபடுவோம், உறுதி கொள்வோம், ஓங்கட்டும் சமுதாயம்,  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,  இத்தீபத் திருநாளில் மறையட்டும் இருள், ஒழியட்டும் ஊழல், ஓங்கட்டும் உழைப்பு, ஒளிரட்டும் நாடு, மலரட்டும் புதிய மலேசியா! மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,. ‘’தீபாவளி நாள் மட்டுமின்றி…

தாய்மொழிப்பள்ளிகள் ஒருமைப்பாட்டிற்குத் தடையா? இயக்கங்கள் கண்டனம்!

தாய்மொழிப்பள்ளிகள் ஒருமைப்பாட்டிற்குத் தடங்களாக இருக்கின்றன என்ற பிரதமர் மகாதிரின் கருத்துகள் போன்றவைதான் இன ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக அமையும்.   தாய்மொழிக்கல்வியின் தனிச்சிறப்பு ஐயத்திற்கு அப்பாற்பட்டது என்ற கண்டனத்தை சமூக அமைப்புகள் முன்வைத்துள்ளன. ஐபிபிஎன் (IPPN) என்ற என்றழைக்கப்படும் 12 அரசுசார்பற்ற பல்லின அமைப்புகளின் தேசிய கல்வி சீரமைப்பு முனைப்பு இந்நாட்டில்…