மின்சுடலை, இடுகாடு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டும் – குணராஜ்!

சிலாங்கூர் மாநிலத்தில் இன்னமும் தீர்க்கப்படாத மின்சுடலை மற்றும் இடுகாடு பிரச்சனைகளுக்கு மாநில அரசு  தீர்வு காண வேண்டும் என்று செந்தோசா சட்ட மன்ற உறுப்பிணர் குணராஜ் நேற்று முன்தினம் சட்ட சபையில் முன்வைத்தார். மேன்மை  தங்கிய  சிலாங்கூர் சுல்தான் அவர்களின் உரை சார்பாக நன்றியுரை நிகழ்த்திய குணராஜ், இந்தப்…

குடியுரிமை ஆவண சிக்கல் உள்ளவர்களின் எண்ணிக்கை 300,000 எட்டும் –…

கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகளை எதிர்கொண்டு அடையாள ஆவணங்களுக்காக இதுவரை பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 3853 பேர். மாறாக, தேசிய முன்னணி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட கடுமையான விதிகளாலும் தடை-களாலும் அடையாள ஆவணத்திற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களையும் விண்ணப்பித்தும் கடந்த 60 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டவர்களையும்…

நீதிபதியின் குமுறல்.

 - கி.சீலதாஸ்,ஆகஸ்ட் 28, 2018.   ஜனநாயகத்தில்  நீதித்துறை  மிகவும்  சிறப்பான  இடத்தை  வகிக்கிறது.  அதன்  தனித்தன்மையைக்   குறைத்து  மதிப்பிடக்  கூடாது.  அதன்  நீதிபரிபாலனத்தில்  தலையிட  எவர்க்கும்  அதிகாரம்  இல்லை,  உரிமையும்  இல்லை.  இது   நீதித்துறையின்  சுதந்திரத்தை  உறுதிப்படுத்துவதோடு  நீதிபதியின்  நீதிபரிபாலன  சுதந்திரத்தை  நிலைப்டுத்துகிறது.  நீதிபதி  ஒரு  வழக்கை …

கலைஞருக்கு  ‘பாரத ரத்னா’ விருது கிடைக்குமா?

இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது, முத்தமிழ் மூதறிஞர் கலைஞர் மு.கருணாநிதிக்கு அளிக்கப்பட்டால், அது அந்த விருதுக்கு பெருமையாக அமையும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் சென்னயில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு ஆகஸ்ட்…

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாட்கள்; கட்டமைப்புச் சீர்த்திருத்தங்களே மிக…

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாள் நிறைவையொட்டி, மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் இது. இந்த 100 நாள்களில் என்ன நடந்தது? கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயின? ஹராப்பான் முன்னெடுக்க வேண்டிய உடனடி சீர்திருத்தங்கள் என்னென்ன…

மீண்டும்  உள்ளாட்சித்  தேர்தல்.

- கி.சீலதாஸ்,ஆகஸ்ட் 18, 2018. அறுபதுகளின்  பிற்பகுதியில்  நிறுத்தப்பட்ட  உள்ளாட்சித் தேர்தலை  மீண்டும்  நடத்தப்படுவதற்கான  சட்டத்திருத்தங்கள்  செய்யப்படும்  என்ற  இணையாட்சி  அரசின்  முடிவு  மக்களாட்சிக்குக்  கொடுக்கப்படும்  மரியாதையாகும்.  முழுமையான மக்களாட்சி  செயல்படவும்  மக்கள்  தங்களின்  அன்றாடப்  பிரச்சினைகளுக்கு,  தேவைகளுக்குத்  தீர்வுகாணவும் உதவும். இந்த  நாட்டுக்குச்  சுதந்திரம்  நல்கப்படும்  என்று …

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்

கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று. ஃபிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரஸ் ஆகஸ்டு 13, 1926 அன்று கியூபாவில் உள்ள பிரான் எனும் கிராமத்தில் பிறந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான அவரது தந்தை ஏன்ஜல் மரியா…

கலைஞர் கடைசியாக வென்ற இடம் மெரினா! – ‘ஞாயிறு’ நக்கீரன்

கைம்மாறு கருதாமல் கொடையளிக்கும் ஈகைக் குணத்தை காலமெல்லாம் கைக்கொண்டிந்த சீதக்காதி வள்ளல் இறந்த பின்னும் அவரின் கொடைத் தன்மை வெளிப்பட்டதைப் போல, அரசியல் பயணத்திலும் பொது வாழ்விலும் காலமெல்லாம் போராட்டம் நடத்திய கலைஞர் மு.கருணாநிதி, 95-ஆவது அகவையில் இறந்த பின்னும் தனக்கான இடத்திற்காக போராட வேண்டியிருந்தது. சிற்பியர் தட்டிதட்டி…

தொழிலாளர்களுக்கு RM1500 குறைந்தபட்ச சம்பளமாக அறிவிக்கப்பட வேண்டும், பிஎஸ்எம் கோரிக்கை

மலேசியாவில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் 2012-ல் இயற்றப்பட்டு, 2013-ன் தொடக்கத்தில் அமலுக்கு வந்தது. மலேசியாவில் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தைச் சட்டமாக்க, 20 வருடத்திற்கும் மேலாக பல குழுக்கள் போராடிய பின்னரே இச்சட்டம் அமலாக்கம் கண்டது. 1998-ல் தொழிலாளர்கள் குறைந்தபட்ச சம்பள பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, அப்போதிருந்த வாழ்க்கை செலவினத்திற்கேற்ப வைக்கப்பட்ட…

இன, மத வெறுப்புணர்வை தடுக்கச்  சட்டம் இயற்றப்பட வேண்டும்

-கி.சீலதாஸ்., ஆகஸ்ட் 8, 2018.      துன்  டாக்டர்  முகம்மது  தலைமையிலான  இணையாட்சி  அரசு  இன,  சமய  உணர்வுகளைச்  சீண்டும்  பேச்சுகளைத்  தடை  செய்யும்  சட்டங்களை  இயற்றும்  என்ற  அறிவிப்பு  மிகவும்  முக்கியமானது,  இக்காலத்துக்கு  ஏற்றது,  வரவேற்கத்தக்கது.  இதுபோன்ற  சட்டங்கள்  இங்கிலாந்தில்  நடப்பில்  இருக்கின்றன. பிற  இனங்களை…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதத் தமிழரே இல்லை! – கா.…

பேராசிரியர் இராமசாமி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரை விசாரணை செய்யும்படி 50க்கும் மேற்பட்ட போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் போலிஸ் அவரை விசாரணை செய்கிறது. இராமசாமி போலிஸ் புகார் செய்தவர்களையும் விசாரிக்க கோரியுள்ளார். இதன் சாரம், இராமசாமி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவரை…

மனிதவள அமைச்சர், இளஞ்செழியனை நியமித்ததில் நியாயமுண்டு!  

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வரும், எச் ஆர் டி எப் (HRDF) எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிதி அமைப்பின் தலைமை நிருவாக அதிகாரியாக இளஞ்செழியன் வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பதவிக்கு தகுதியானவரா என்ற வினாவை சிலர் எழுப்பியுள்ளனர். இப்படி கேள்வி எழுப்புவர்களின் ஆதங்கம் என்ன? நம்பிக்கை…

வெண்சுருட்டு கடத்தலுக்கும் மலிவு சாராய விற்பனைக்கும் அரசே காரணம்!

‘ஞாயிறு’ நக்கீரன், 206 எலும்புகளைக் கொண்டு கட்டியெழுப்பட்டுள்ள மனித உடல் என்னும் கோட்டையின் உயரம் என்னவோ ஆறு அடிதான். ஆனால், அப்படிப்பட்ட மனிதன் எழுப்பும் கட்டடக் கோட்டைக்கும் கற்பனைக் கோட்டைகளுக்கும் எல்லை இல்லை. இதற்கெல்லாம் காரணம், ஆறடி மனிதக் கோட்டைக்குள் குடி கொண்டிருக்கும் மனக்கோட்டைதான். உருவம் இல்லாத அந்தக்…

என் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம் – கஸ்தூரி

‘ஞாயிறு’ நக்கீரன், “அரசியல் பள்ளியில் என் தந்தை எனக்கு வகுப்பாசிரியர்; லிம் கிட் சியாங், தலைமை ஆசிரியர். என் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம்; நான் சுவாசிக்கும் காற்று அரசியல் காற்று; என் மனம் முழுக்க அரசியல் சிந்தனை. எனவே, என் தந்தை வகுத்துத் தந்த பாதையில் என்…

கே.பாலமுருகன் – எழுத்துலகத்தில் இன்னொரு துருவ நட்சத்திரம்!

தனிநாயகர் அடிகளார் பெயரில் அயலக நாட்டில் தமிழுக்காகவும் இலக்கியத்திற்காகவும் தீவிர செயல்பாடு கொண்டவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘தனிநாயகர்-தமிழ் நாயகர்’ விருதை பெரும் முதல் நபராக மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் திகழ்கிறார். இந்த விருதை கடந்த 05.07.2018-இல் தஞ்சை அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழங்கியது.…

இளங்கோ அடிகளின் ‘அறம் கூற்றாகும்’ என்பதற்கு நஜிப் ஓர் இலக்கணம்!

‘ஞாயிறு’ நக்கீரன். மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பதவி இழந்த 55-ஆவது நாளில் ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டார். அரச முதலீட்டு நிதியத்தில் இருந்து கோடிக் கணக்கான வெள்ளி மடை மாற்றப்பட்டது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, ஊழல் ஆகியவற்றின் பெயரில் கைது செய்யப்பட்ட அவர், அன்றைய…

மன்னரும்  நான்கு  மனைவிகளும்

கி.சீலதாஸ், ஜூலை 2, 2018. ஒரு நாட்டின் மன்னருக்கு மனைவிகள் நால்வர். நான்காவது மனைவி மீது மன்னருக்கு அளவற்றப்  பாசம், எனவே, அந்த மனைவிக்கு விலை உயர்ந்த ஆபரணங்களையும், உடைகளையும் வாங்கித் தந்து  மகிழ்ந்தார். தமது  மூன்றாவது  மனைவியை  அவர்  மிகவும்  நேசித்தார்.  அவளோடு  நேரத்தைக்  கழிப்பதில்  அவருக்கு …

கனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை’

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என…

உள்நாட்டு சமையல்காரர்களை ஊக்குவிற்கும் மனிதவள அமைச்சரின் கோரிக்கை வரவேற்கத்தக்கது –…

மனிதவள அமைச்சர் குலசேகரன் அண்மையில் விடுத்த அறிவிப்பின்படி, அயல்நாட்டு சமையல்காரர்களின் தேவை குறைக்கப் படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதை உணர முடிகிறது. அவர் அடுத்த ஆறு மாதங்களில் உள்நாட்டு சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். அமைச்சரின்  இந்த அறிவிப்பால் பலர் கொதிப்படைந்துள்ளனர். இப்படிக்  கொதிப்படைந்து உள்ளவர்கள்…

பெண்களுக்கு உடல் எடை குறைய, உடற்பயிற்சி செய்யும் சரியான நேரம்…

வளர்சிதை மாற்றம் என்பது உண்ணும் உணவை ஆற்றலாய் மாற்றகூடிய ஒரு முறையே ஆகும். நீங்கள் தூங்கும் பொழுது...உங்களுடைய உடம்பில் இருக்கும் செல்களின் சீரமைப்பு பணிக்காகவும், அத்துடன் சுவாசிப்பதற்க்கும் ஆற்றல் என்பது அவசியமாகிறது. நாம் செய்யகூடிய சில அடிப்படை செயல்களால், ஒரு குறிப்பிட்ட அளவிலான கலோரிகள் அதற்கு தேவைப்படுகிறது. அத்தகைய…