மகாதீரை குறைசொல்ல மஇகா-விற்கு தகுதி உண்டா?

நம்பிக்கைக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள மகாதீர், முன்னர் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது மீண்டும் பதவிக்கு வந்தால் இந்திய சமுதாயத்திற்கு நிறைய செய்வேன் என்பதெல்லாம் நம்பக்கூடியதல்ல என்று மஇகா தொடர்ந்து மகாதீரை விமர்சித்து வருகிறது. இதில் முதல் பகுதியில் உண்மை உள்ளது, அதை மஇகா ஒப்புக்கொண்டது…

சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க, தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும்!

மலேசியாவில் தமிழ்மொழியும் தமிழ்ப்பள்ளிகளும் நிலைத்திருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆற்றி வந்த அரும்பணியாகும். காலனித்துவ காலம் தொட்டு ஆசிரியர் பணியை ஒரு தொண்டாகக் கருதி இந்த நாட்டில் தமிழ்மொழி வளர பெரும்பணி ஆற்றியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள். அவர்களின் சுவடுகளில் வளர்ந்த இன்றையத் தலைமை ஆசிரியர்களில்…

கடும் போட்டியை எதிர்கொள்ளத் தயார் – மாலிம் நாவாரில் பவானி…

சிங்கத்தின் குகையில் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவதைப் போல 70 விழுக்காட்டிற்கும் மேலாக சீன வாக்காளர்கள் நிறைந்துள்ள மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களம் காணவுள்ளார் இளம் அரசியல்வாதியான கே. எஸ். பவானி. மாலிம் நாவார் வட்டாரத்தில் நிலப் பிரச்சினையால்தான் மக்கள் பெரிதும்…

பாஸ் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படுமாம்!

-கி. சீலதாஸ், பெப்ரவரி 26, 2018.    நாம், ஒரு  வரலாற்று  உண்மையை  அறிந்துகொள்ள வேண்டும். சீனமொழிக்கு தொடக்கநிலை,  இடைநிலை,  உயர்நிலைவரை  கற்பிக்கும்  வசதிகள்  கொண்ட  சீனப்பள்ளிகள்  நாடெங்கும்  உள்ளன. அவை  சுமார்  நூறு  ஆண்டுகளாக  தொடர்ந்து  இயங்குகின்றன.  இந்தியர்களில்  பெரும்பான்மயைப்  பிரதிநிதிக்கும்  தமிழர்களின்  பொருளாதார  நிலை  தொடக்கப்பள்ளியோடு …

பிரித்து வைக்கப்பட்ட பள்ளிகள் ஒற்றுமைக்கு நல்லதல்ல, நஜிப் கூறுகிறார்

  தாய்மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளியையும் பிரித்து வைத்திருப்பது நாட்டின் ஒற்றுமையைப் பாதித்துள்ளது என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். செய்திகளின்படி, 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் கல்வி அமைவுமுறையைப் புதுப்பிக்கப் போவதாக நஜிப் வாக்குறுதி அளித்துள்ளார். இன்று மலாய்க்காரர்கள் தேசியப்பள்ளியில் இருக்கிறார்கள். அதே வேளையில் சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளும்…

அசிம் வாங்க RM50 கோடி, பயன் RM1க்கும் குறைவு –…

மலேசிய இந்தியர்களுக்கான பெருந்திட்டத்தின் வழி கீழ்மட்டத்தில் குறைந்த   வருமானத்தில் வாழ்கின்ற இந்தியர்கள் பயன் பெற நமது அரசாங்கம் 50 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இதற்கு வட்டி கிடையாது . இதை வங்கிகள் மூலம் விண்ணப்பம்  செய்து அசிம் என்ற Amanah Saham 1 Malaysia என்ற பங்குகளை வாங்கலாம்.…

ஜிஇ14 : இந்திய வாக்காளர்கள் ம.இ.கா.-உடன் இருப்பர்

மலேசியர்கள் அனைவரும், 14-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ14) நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜிஇ14 நெருங்கிவரும் வேளையில், மலாய் இனத்திற்கான அம்னோவின் ஆதரவையும் போராட்டங்களையும் மலாய்க்காரர்கள் மறந்துவிட மாட்டார்கள் என, ஆளுங்கட்சியின் தலைமையான அம்னோ கூறியுள்ளது. டிஏபி-யில் சலித்துபோன சீனர்கள், ஜிஇ14-ல் மீண்டும் மசீச வேட்பாளர்களை ஆதரிப்பர் என்று…

2018-ல் மலேசியர்கள் எதிர்நோக்கவிருக்கும் சவால்கள்

சிவராஜன் ஆறுமுகம், மலேசிய சோசலிசக் கட்சி ஒவ்வொரு ஆண்டும், அம்னோ-பாரிசான் அரசாங்கம் முன்னெடுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளின் விளைவாக, சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் சவாலானதாகிவிடுகிறது. அதேசமயம், பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாற்று நிர்வாகமும், இரண்டு தவணைகளாக மாநிலங்களில் எந்தவொரு கணிசமான மாற்றமும் இல்லை என்பதையும் மக்கள்…

தாய்மொழிப்பள்ளிகளுக்குச் சமாதி கட்டும் அம்னோவின் இறுதிக் குறிக்கோளின் ஓர் அங்கம்…

ஜீவி காத்தையா, பெப்ரவரி 12, 2018.     மலேசியாவில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்ற ஆளுங்கட்சி அம்னோவின் இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் மிக அண்மையில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை இருமொழித் திட்டம் (DLP). இந்த இருமொழித் திட்டத்தை ஒரு கொள்கையாக…

துங்கு அப்துல் ரகுமானின் நினைவு  மனதில் என்றும் நிலைத்திருக்கும்!

ஞாயிறு நக்கீரன், பெப்ரவரி 8, 2018 -  “சுதந்திர மலாயாவில் அனைத்து சமூக மக்களுக்கும் எதிர்காலம் நலமாகவும் வளமாகவும் அமையும்” என்று உறுதி மொழியளித்து நாட்டின் விடுதலைப் பிரகடனத்தை ஏழு முறை முழங்கிய தேசத் தந்தை மேதகு துங்கு அபுதுல் ரகுமான் அவர்களுக்கு இன்று(பிப்ரவரி 8) பிறந்த நாள்.…

விரல் சப்பும் பழக்கமும் தேசிய முன்னணியின் அசிம் திட்டமும்!

வெண்மதி: அக்கா, உன் பையன் கட்டைவிரல் சப்புற பழக்கத்தை எப்படி விட்டான்? வான்மதி: அது அப்படி ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல... இடுப்புல நிக்காத தொள தொள கால் சட்டையைப் போட்டு விட்டேன்....அவ்வளவுதான்.. ..; அதுனால அவன் பட்ட பாடு எனக்குதானேத் தெரியும்!  அந்த கால்சட்டை நழுவாம இருக்க,…

தாமதமாக  வரும்  நீதி – நீதியல்ல! – கி.சீலதாஸ் 

இந்திரா  காந்தியின்  வழக்கு  பல  ஆண்டுகளுக்குப்  பிறகு  நீதி  தேவதையின்  அருளைப் பெற்றுள்ளது.  இதைப் பாராட்டும் அதே வேளையில் இந்த காலதாமதம்  ஏற்புடையது   அல்ல.  தாமதமாக  வரும்  நீதி – நீதியல்ல;  இதையும்  எல்லோரும்  உணரவேண்டும் என சாடுகிறார் மூத்த வழக்கறிஞர் சீலதாஸ்  1988 ஆம்  ஆண்டு   அரசமைப்புச் …

தமிழும் சைவமும் இரு கண்கள் – ந. தருமலிங்கம்

‘ஞாயிறு’ நக்கீரன்  -  சிவ நெறியான சைவ நெறியைப் பின்பற்றும் தமிழர்கள் தங்களின் தாய் மொழியான தமிழில்தான் பரம்பொருளை வழிபட வேண்டும். சிந்து சமவெளி நாகரிக சான்றின்படி ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இமயம் முதல் குமரிவரை செழித்து துலங்கிய சைவ நெறியைப் போற்றி…

தேர்தல் ஆணையம் எதற்காக? – -பிஎஸ்எம்

‘ஞாயிறு’ நக்கீரன, பெப்ரவரி 3, 2018 - ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலை சுதந்திரமாக நடத்த முடியவில்லை என்றால், நாட்டில் தேர்தல் ஆணையம் என்ற ஒரு தேசிய  அமைப்பு எதற்காக என்று பிஎஸ்எம் என்னும் மலேசிய சோசலிசக் கட்சி வினா தொடுத்துள்ளது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை…

ஆலயங்களில்  அள்ளிவிடுபவர்களை நம்பலாமா?, சேவியர் கேட்கிறார்

   முன்பு  எப்போதும் இல்லாத அளவு பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் இருவரும் சேர்ந்து இந்து ஆலயங்களில் இறங்கித் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால்  அவர்களின் கோலசிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பத்துமலை கோவில் உரைகள் உலக மகா நகச்சுவையாக இருந்தது  என்றார்  கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய…

‘நிஜம்’தான், நம்புகிறோம்! பிரதமர் அவர்களே!”, என்று எப்படிச் சொல்வது?

“மலேசிய இந்தியச்  சமுதாயத்தின் பிரச்சினைகளை ஓரிரு நாள்களில் தீர்க்க முடியாது; ஆனால், தீர்க்க முடியும்; இது நிஜம்” என்று கோலசிலாங்கூர் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு பிரதமர் அறிவித்துள்ளார். இதை வழிமொழியும் விதமாகத்தான், பத்துமலை தைப்பூச விழாவில் கலந்துகொண்ட துணைப் பிரதமரும் வரும் பெருநாளில் (பொதுத் தேர்தலில்) தேசிய…

தாம்பத்திய சங்கீதத்தைச் சிதைத்தவர் – இந்திராவின் முன்னாள் கணவர்

ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 31, 2018 - மலேசியாவின் மாண்பிற்கும் பெருமைக்கும் சிறப்பு சேர்ப்பது, காலங்காலமாக இந்த மண்வாழ் மக்கள் போற்றிப் பாதுகாக்கும் இன இணக்கமும் சமய சகிப்புத் தன்மையும்தான். இந்த இரண்டுக்கும் நடுவே அடையாளம் காண முடியாத ஒரு மெல்லிய நெருடலை கடந்த பத்து ஆண்டு காலமாக…

பிஎஸ்எம் : குறைந்தபட்ச சம்பளத்தை ரிம 1,500-ஆக உயர்த்தவும்

கடந்த ஜனவரி 15-ம் தேதி, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்), தேசியச் சம்பள தொழில்நுட்பக் குழுவுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டது. கடந்தாண்டு நவம்பர் 29-ல், தேசிய சம்பள ஆலோசனைக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் தொடர் நடவடிக்கையாக இச்சந்திப்பு நடைபெற்றது. 2018, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் தொகையை மறுஆய்வு செய்யும்…

உங்கள் கருத்து: எங்களுக்காக மலேசியாகினி, மலேசியாகினிக்காக நாங்கள்

 ‘நியாயமான,  சுதந்திரமான,  முற்போக்கான   மலேசியாவை  உருவாக்கும்   போராட்டத்துக்கு   எப்போதும்   துணை  நிற்போம்’ கொகிடோ எர்கோ  சம்:  பத்திரிகைச்  சுதந்திரம்  விலை  மதிக்க  முடியாதது.  எப்போதெல்லாம்   தேவைப்படுகிறதோ  அப்போதெல்லாம்   எங்களால்   முடிந்ததைக்  கொடுப்போம்.  நாளையே   உதவி  தேவை  என்றால்  மக்களை   நீங்கள்  நம்பலாம். மீண்டும்  மீண்டும்  கொடுப்பார்கள். மலேசியாகினி  மக்கள் …

சமய  சுதந்திரத்துக்கு  பாதுகாப்பு  இல்லை! –  கி. சீலதாஸ்.

ஆகஸ்ட் 31, 1957- இல்  மலாயா கூட்டரசு  அமைந்தது.  பல  நாடுகள்  இதில்  இணைந்தன.  இணைந்த  நாடுகள்  அரசமைப்புச்  சட்டம்  பெற்றிருந்தன.  ஆனால்  மலாயா  கூட்டரசு  எனும்போது  அதற்கு  அரசமைப்புச்  சட்டம்  கிடையாது.  பொதுவாகவே, 1957ஆம்   ஆண்டுவரை    மாநில  அரசமைப்புச்  சட்டம்  பேச்சுரிமை,  சிந்தனை  உரிமை,  வழிபாடு  உரிமை, …

மலேசியாகினி தற்காப்பு நிதி ரிம320 ஆயிரத்தைத் தொட்டது

நீதிமன்றம்    ரவூப்   ஆஸ்திரேலியன்   கோல்ட்  மைன்ட்(ஆர்ஏஜிஎம்)  நிறுவனத்துக்கு    மலேசியாகினி   ரிம350,000  இழப்பீடு   வழங்க  வேண்டும்  என்று  தீர்ப்பளித்ததும்   அந்த  இழப்பீட்டுத்   தொகையை    மலேசியாகினி   அதன்  வாசகர்களிடமிருந்து   நன்கொடையாக    திரட்ட   முயன்று   வருவதும்  தெரிந்ததே. மலேசியாகினியின்    நிதிக்கு  இப்போது  ரிம320,000  திரண்டிருப்பதாக   அதன்  தலைமை    செயல்    அதிகாரி   பிரமேஷ்   சந்திரன்  …

பிரதமர் பதவிக்கு வயது ஒரு கட்டுப்பாடா?

-கி.சீலதாஸ். ஜனவரி 16, 2018. ஜெர்மனியின்  அதிபர்,  சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர்  மற்ற  நாடுகள்  ஆக்கிரமிப்பில்  கொம்பனாக  விளங்கினார்.  ஐரோப்பிய  நாடுகளை  தமது  கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவரவேண்டும்  என்பது  அவரின்  பேராசை.  ஜெர்மனி  வம்சமே  உயர்வானது,  தனித்தன்மை  வாய்ந்தது. அது  மட்டுமே  ஆளும்  தகுதி  கொண்டது  என்று  பிரச்சாரம்  செய்தார். …

மலேசியாகினி தற்காப்பு நிதி ரிம110,000-ஐ தாண்டி விட்டது

நான்கு நாள்களுக்கு முன்பு துவங்கப்பட்ட மலேசியாகினியின் சட்ட தற்காப்பு நிதி ரிம110,000-ஐ தாண்டி விட்டது. இந்நிதி திரட்டல் ரவுப் ஆஸ்திரேலியன் தங்கச் சுரங்கம் வழக்கில் மலேசியாகினி அந்நிறுவனத்திற்கு இழப்பீடாகவும் வழக்கு செலவுத் தொகையாகவும் ரிம350,000 வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சம்பந்தப்பட்டதாகும். மலேசியாகினியின் தலைமை…