‘தாமான் யூனிவர்சிட்டியில் வேண்டும் தமிழ்ப்பள்ளி’, நடவடிக்கை குழு கோரிக்கை மனு…

ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டியில் தமிழ்ப்பள்ளி கோரும் நடவடிக்கைக் குழுவினர், எதிர்வரும் 14-ம் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில், கோத்தா இஸ்கண்டார் சட்டமன்றத்தில் (பழைய பெயர் - நூசாஜெயா) போட்டியிடவிருக்கும் சுல்கிப்ளி அஹ்மட்டிடம் தங்களின் கோரிக்கை மனுவைக் கையளித்தனர். நேற்றிரவு, ஸ்கூடாய் தாமான் யூனிவர்சிட்டியில் நடந்த, ‘ஜெலாஜா பாசுகான்…

மதிக – திசையற்றதா! அல்லது திறனற்றதா?

‘ஞாயிறு’ நக்கீரன் - கடந்த நூற்றாண்டில் அன்றைய மலாயாவில் இதேக் காலக் கட்டத்தில் சுய மரியாதை இயக்கம் அமைப்பு ரீதியாக செயல்படா விட்டாலும், நாடெங்கும் பகுத்தறிவுச் சிந்தனைகள் பரவிக் கொண்டிருந்தன. அதற்குக் காரணம், சென்னை மாகாணத்தை நீதிக் கட்சி ஆண்டதும், பிராமணர் அல்லாதோரின் நலம் பலவகையாலும் பல தளங்களிலும்…

தமிழர் எழுச்சியின் அடையாளம் கோசா!

மலாயா - சிங்கைவாழ் தமிழர்தம் நெஞ்சந்தனில் தமிழ் எழுச்சியைத் தோற்றுவித்தவர் ‘தமிழவேள்’ கோ.சா. மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தோன்றுவதற்கு விதையாகவும் அது தோன்றியபின் அதற்கு வேராகவும் விழுதாகவும் இருந்த கோமான் கோ.சாரங்கபாணி என்னும் இந்த ‘கோ.சா.’ ஏறக்குறைய புதிய தலைமுறை மறந்துவிட்ட இந்தப் பெயர், இன்றைய தலைமுறைக்கும் இதற்கு…

நீதிமன்ற வழக்கின் வழி, இருமொழித் திட்டம்  அகற்றப்பட்டது!

பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் மீதும் கல்வி அமைச்சின் மீதும் இருமொழித் திட்டத்தை அகற்றக் கோரி போடப்பட்ட வழக்கு நேற்று (16.4.2018) ஒரு முடிவுக்கு வந்தது. அதன் விளைவாக அந்தத் திட்டம் அப்பள்ளியில் இருந்து அகற்றப்பட்டது. இது தமிழ்வழிக் கல்விக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியென மே 19 இயக்கத்தினரும்…

நல்ல ஜனநாயக சகுனம்!

கி. சீலதாஸ், ஏப்ரல் 14, 2018.   பதினான்காம்  பொதுத் தேர்தல்  நடத்துவதற்கான  ஏற்பாடுகள்  தொடங்குவதற்கு  முன்பு  நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டுவிட்டது.  வேட்பாளர்  நியமனத்  தேதி,  வாக்களிப்பு  நாள்,  வாக்குகளை  எண்ண  வேண்டிய  நாள்  எதுவும்  அறிவிக்கப்படுவதற்கு  முன்பே அறிவியல்  கருவிகளின்  வழி  தேர்தல்   பிரச்சாரம்  ஆரம்பித்துவிட்டது.  முகநூல்,  வாட்ஸ்அப், …

இன்றைய  நிலை  எங்கு  போய்  முடியும்?

- கி.சீலதாஸ், ஏப்ரல் 2, 2018. நமது  நாடு  சுதந்திரம்  பெற்று  அறுபது  ஆண்டுகளைத்  தாண்டிவிட்டது.  சுதந்திரத்திற்கு  முன்பு  நிலவிய  சூழ்நிலையை  நினைத்துப்  பார்க்கிறேன்.  அது  நிரந்தமற்ற  நிலை!  எதிலும்  பாதுகாப்பு இல்லாத  காலம்!  வெள்ளைக்காரன்  நம்மை  கட்டுப்பாட்டில்  வைத்திருந்தான்.  பேச்சுரிமை,  மனித  நேயம்  போன்ற  அடிப்படை  உரிமைகள்…

தமிழ் இடைநிலைப்பள்ளியும் தேசிய முன்னணியும்!

ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 30, 2018. நாட்டில் நூற்றுக் கணக்கான தமிழ் தொடக்கப்பள்ளிகள் இருக்கும் நிலையில், ஒரேவோர் இடைநிலைப்பள்ளிகூட தமிழ் மொழிக்காக அமைவதில் தேசிய முன்னணி அரசு ஏன் இப்படி தடை போடுகிறது என்று தெரியவில்லை! வெகு அண்மைக் காலம்வரை, இந்தச் சிக்கல் நாட்டின் வடபுலத்தில் மையம் கொண்டிருந்த…

மருத்துவரா? மிட்டாய் வியாபாரியா?

கி.சீலதாஸ், மார்ச் 26, 2018. மேற்கத்திய நாடுகளின் தத்துவத் தந்தை என போற்றப்படும் ஏதன்ஸின் சாக்ரடீஸ், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர் ஜனநாயகத்தை வெறுத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கான காரணத்தைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். சாக்ரடீஸின் தலையாய நோக்கம் ஒரு நாட்டின் ஆட்சியாளர் தத்துவஞானியாக இருக்கவேண்டும். தத்துவஞானி…

இன்று மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்!

‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 23, 2018 - இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் மகத்தான எழுச்சி நாயகன் பகத் சிங், தனது 23 வயதில் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று .. .. மார்ச் 23. அகிம்சை வழியில் இந்திய விடுதலைப் போரை நடத்திய மகாத்மா காந்தி, இந்தியாவிற்கு மட்டுமல்ல;…

பி.எஸ்.எம். ஜெயக்குமாரை ‘சாகடிப்பதில்’ டிஏபி-க்கு மகிழ்ச்சியா?

ஃபிரான்சிஸ் பால் சியா, மாற்றத்திற்கான இயக்கம், சரவாக் (எம்.ஓ.சி.எஸ்.)  மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தலைவர்கள் மற்றும் சில பக்காத்தான் ஹராப்பான், குறிப்பாக பேராக் டிஏபி ஆகியவற்றிற்கு இடையேயான ஆழ்ந்த விரோதத்தைப் பற்றி, கடந்த சில மாதங்களாக நான் கேட்டு, படித்து நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். 14-வது பொதுத் தேர்தலில்,…

இருமொழித்   திட்டம்: கமலநாதன் மீது சட்ட நடவடிக்கை!

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டத்தை திணிக்க தவறான வழிமுறையைக்  கையாண்ட துணைக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ப. கமலநாதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் எங்கள் உயிர் குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த 5.2.2018-இல், ‘வணக்கம் மலேசியா’ என்ற தகவல் ஊடகத்திற்கு கமலநாதன் அளித்த பேட்டியில் அவர்…

பாலியல் துன்புறுத்தல் ஒரு குற்றம் : குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

யா.கோகிலா, மலேசிய சோசலிசக் கட்சி கடந்த ஜனவரி 16, 2018, மலேசியாகினி ஒரு பெண் பத்திரிக்கையாளர் நாடாளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தப் பத்திரிக்கையாளர் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தபோது, அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாலியல் துன்புறுத்தலைச் செய்ததாக தெரிய வந்துள்ளது.…

தமிழ்ப்புத்தாண்டு

கி. சீலதாஸ், மார்ச் 12, 2018.                  உலகின்  மிகப் பெரும்பான்மையான    சீனர்கள்  ஒரே  தேதியில்  அவர்களின்  புத்தாண்டு  பிறப்பைக்  கொண்டாடுகிறார்கள்.  உலகக்  கிறிஸ்தவர்களும்  ஒரே  நாளில்,   அதாவது  ஜனவரி  முதல்  தேதியை,  புத்தாண்டு  நாளாகக்  கொண்டாடுகின்றனர்.  இஸ்லாமியர்களும் …

2018 அனைத்துலக மகளிர் தினம் : பெண் விடுதலைக்கான போராட்டங்கள்…

மலேசிய சோசலிசக் கட்சி -  ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8 உலக மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்துலக மகளிர் தினம், உலக மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெண்கள் கொண்டிருக்கும் சக்தியைக் கொண்டாடும் ஒரு மாபெரும் நாள். சமத்துவம், பாலினம் பொருட்படுத்தாத சமூக இடம் மற்றும் பெண் உரிமைகளுக்கான…

தொழிலாளர்களுக்காக உணவக உரிமையாளர்கள் கெஞ்சல்!  நியாமும், அநியாயமும்!

‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 8, 2018 - மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் தங்களின் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு ஆள்பல பற்றாக்குறையால் அல்லல்படுவது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், அந்நியத் தொழிலாளர்களை வரவழைப்பதற்காக அவர்கள் விடுக்கும் கோரிக்கையை, மத்திய தேசிய முன்னணிக் கூட்டரசு பரிசீலிக்கவில்லை! நியாயமானது…

வீட்டுப்  பணிப்பெண்கள்

- கி. சீலதாஸ், பெப்ரவரி 8, 2018 நம்  நாட்டு  பெண்கள்  வீட்டு  வேலைகாரர்களாக  பணியாற்றுவதைத்  தவிர்க்கிறார்கள். அப்படிப்பட்ட வேலையை  இழிவானதாகக்  கருதுகிறார்கள். கணவன்,  மனைவி  இருவருமே  பணம்  சம்பாதிப்பதில்  குறியாக  இருக்கும்போது  வீட்டு வேலைகளைக்  கவனிக்கும்  பொருட்டு  வெளிநாட்டுப்  பெண்களை  வேலைக்கு  வைத்துக்  கொள்வது  வழக்கமாகிவிட்டது.  வெளிநாடு …

ரோம் எரிகையில் பிடில் வாசித்த நீரோ மாதிரி மஇகாவா?

‘ஞாயிறு’ நக்கீரன், பெப்ரவரி 5, 2018 - நாட்டில் உள்ள தேசியப்பள்ளிகளிலும் தாய்மொழிவழிப் பள்ளிகளான தமிழ்-சீனப் பள்ளிகளிலும்  கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கும் இருமொழிக் கொள்கைக் குறித்த சலசலப்பு, ஆதங்கம், பெற்றோரின் அச்சம், மாணவர்களின் ஐயம் கலந்த தடுமாற்றம், தமிழ்மொழிசார் இயக்கங்களின் போராட்டம், கால்நடைப் பயணம்,…

இருமொழிக் கொள்கையால் தமிழாசிரியர்களுக்கு பாதிப்பு – சரவணன்

‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 5 - “நம்முடைய தமிழ்ப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்த முற்படுவது, எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளில் தமிழாசிரியகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று இளைஞர்-விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோசிறி மு.சரவணன் குறிப்பிட்டார். ரவாங் சு.மகேஸ்வரியின் வெற்றியின் விழுதுகள் எ னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து…

மகாதீரை குறைசொல்ல மஇகா-விற்கு தகுதி உண்டா?

நம்பிக்கைக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள மகாதீர், முன்னர் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது மீண்டும் பதவிக்கு வந்தால் இந்திய சமுதாயத்திற்கு நிறைய செய்வேன் என்பதெல்லாம் நம்பக்கூடியதல்ல என்று மஇகா தொடர்ந்து மகாதீரை விமர்சித்து வருகிறது. இதில் முதல் பகுதியில் உண்மை உள்ளது, அதை மஇகா ஒப்புக்கொண்டது…

சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க, தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும்!

மலேசியாவில் தமிழ்மொழியும் தமிழ்ப்பள்ளிகளும் நிலைத்திருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆற்றி வந்த அரும்பணியாகும். காலனித்துவ காலம் தொட்டு ஆசிரியர் பணியை ஒரு தொண்டாகக் கருதி இந்த நாட்டில் தமிழ்மொழி வளர பெரும்பணி ஆற்றியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள். அவர்களின் சுவடுகளில் வளர்ந்த இன்றையத் தலைமை ஆசிரியர்களில்…

கடும் போட்டியை எதிர்கொள்ளத் தயார் – மாலிம் நாவாரில் பவானி…

சிங்கத்தின் குகையில் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவதைப் போல 70 விழுக்காட்டிற்கும் மேலாக சீன வாக்காளர்கள் நிறைந்துள்ள மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களம் காணவுள்ளார் இளம் அரசியல்வாதியான கே. எஸ். பவானி. மாலிம் நாவார் வட்டாரத்தில் நிலப் பிரச்சினையால்தான் மக்கள் பெரிதும்…

பாஸ் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படுமாம்!

-கி. சீலதாஸ், பெப்ரவரி 26, 2018.    நாம், ஒரு  வரலாற்று  உண்மையை  அறிந்துகொள்ள வேண்டும். சீனமொழிக்கு தொடக்கநிலை,  இடைநிலை,  உயர்நிலைவரை  கற்பிக்கும்  வசதிகள்  கொண்ட  சீனப்பள்ளிகள்  நாடெங்கும்  உள்ளன. அவை  சுமார்  நூறு  ஆண்டுகளாக  தொடர்ந்து  இயங்குகின்றன.  இந்தியர்களில்  பெரும்பான்மயைப்  பிரதிநிதிக்கும்  தமிழர்களின்  பொருளாதார  நிலை  தொடக்கப்பள்ளியோடு …

பிரித்து வைக்கப்பட்ட பள்ளிகள் ஒற்றுமைக்கு நல்லதல்ல, நஜிப் கூறுகிறார்

  தாய்மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளியையும் பிரித்து வைத்திருப்பது நாட்டின் ஒற்றுமையைப் பாதித்துள்ளது என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். செய்திகளின்படி, 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் கல்வி அமைவுமுறையைப் புதுப்பிக்கப் போவதாக நஜிப் வாக்குறுதி அளித்துள்ளார். இன்று மலாய்க்காரர்கள் தேசியப்பள்ளியில் இருக்கிறார்கள். அதே வேளையில் சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளும்…