பத்மாவதி பற்றி பிரகாஷ்ராஜ் – தமிழோசை சிறப்பு நேர்காணல்

  வில்லன், குணசித்தரப் பாத்திரம், நாயகன் என்றெல்லாம் எல்லா வகையாலும் தன்னுடைய நடிப்புத் திறமையை செம்மாந்த நிலையில் வெளிப்படுத்தி வருபவரும் தமிழ்-கன்னட இரசிகர்களை வெகுவாகவும் மலையாள திரைப்பட இரசிகர்களை ஓரளவிற்கும் கவர்ந்தவருமான பிரகாஷ் ராஜ், ஒரு சமூக ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் தாய்மொழியான கன்னட மொழியைச் சேர்ந்த…

ஹிண்ட்ராஃப் பதிவு: சங்கப்பதிவகம் பின்வாங்குகிறது, தேசிய முன்னணி அஞ்சுகிறது.

கோலாலம்பூர், நவம்பர் 27: நாட்டின் பன்னிரண்டாவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழக்கவும் ஐந்து மாநிலங்களில் ஆட்சியை இழக்கவும் காரணமான ஹிண்ட்ராஃப் கட்சியைக் கண்டு ‘சூடு கண்ட பூனை’யைப் போல தேசிய முன்னணி அஞ்சுகிறது. அதனால்தான், ஹிண்ட்ராஃப் இயக்கத்தை ஓர் அரசியல்…

ஹிண்ட்ராஃப் நவம்பர் எழுச்சி

‘ஞாயிறு’ நக்கீரன், 21 - ஆம் நூற்றாண்டில் மலேசியவாழ் இந்திய சமுதாயம் அரசியல்-சமூக மறுமலர்ச்சியை ஓரளவிற்காவது எட்டியுள்ளது என்றால் அதற்கு, பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நவம்பர் திங்கள் 25-ஆம் நாளில் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் எழுச்சி ஒருமுகப்பட்டு தலைநகரில் வெளிப்பட்டதுதான். அதேவேளை, இந்திய சமுதாயம் பொருளாதார - கல்வி…

இன்று எரி நெய்(பெட்ரோல்) விலை குறையக்கூடும்?

‘ஞாயிறு’ நக்கீரன், இனி வாகனங்களைப் பயன்படுத்து வாய்ப்பு பொது மக்களுக்கு அற்று விடுமோ என்று ஐயுறும் அளவிற்கு பன்னாட்டுச் சந்தையில் எரிணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 140 டாலர் வரை உயர்ந்தது. அப்போதுகூட மலேசியாவில் இந்த அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்தது இல்லை. இப்போது வெறும் அறுபது டாலர்…

யோக ஆசனத்தைக் கண்டவர்கள் அன்றைய தமிழ்ச் சித்தர்கள்! உடற்பயிற்சியை அடியோடு…

‘ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 22, 2017. ‘உடற்பயிற்சி’ என்னும் சொற்றொடரை தமிழர்கள் அடியோடு தொலைத்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அத்துடன் உடற்பயிற்சியையும் மறந்தே விட்டனர். அப்படியே போகிற போக்கில் ஏதாவது மனமகிழ் மன்றம், அல்லது சமூக அமைப்பு-களின் சார்பில் எங்கேயாவது ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கைகளையும்…

பினாங்கு வெள்ளத்திற்குக் காரணம் கரும வினையா? பிற்போக்குத்தனத்தின் உச்சம்

‘ஞாயிறு’ நக்கீரன், இந்த மாத தொடக்கத்தில் பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பிரச்சினைக்குக் காரணம் ஒரு சிலரின் கரும வினைதான் காரணம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், மாண்புக்குரிய நாடாளுமன்றத்தில்; அப்படிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருப்பவர் ஆளும் தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். பெர்லிஸ், பாடாங் பெசார்…

ஸ்ரீகோம்பாக் ருக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் தீபாவளி பொது உபசரிப்பு

பத்துமலைக்கு அருகில் உள்ள தாமான் ஸ்ரீகோம்பாக்கில் தீபாவளி பொது உபசரிப்பு அண்மையில் நடைபெற்றது. தாமான் ஸ்ரீகோம்பாக், பத்தாவது பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ருக்குன் தெத்தாங்கா அமைப்பினர், பொது ஒழுங்கையும் மக்களிடையே நல்லிணக்கத்தையும் வட்டார அளவில் பேணுவதுடன் இரவு நேரத்தில் பாதுகாவல் சுற்றுப் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்பேரில் பாசா பத்து,…

அன்வார், பிரதமராக ஆதரவு பிராயசித்தம் தேடுகிறார் மகாதீர்.

‘ஞாயிறு’ நக்கீரன்,  நவம்பர் 7, 2017 -   அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானவர் அன்வார் என்றும் தற்பொழுது அவர் அனுபவித்து வரும் சிறைவாசத் தீர்ப்பில் அரசாங்கத்தின் தலையீடு அப்பட்டமாக இருக்கிறது என்றும் இப்பொழுது சொல்லும் டாக்டர் மகாதீர், அப்பொழுது தான் செய்ததை நினைவுகூர்கிறாரோ என்று எண்ணிடத் தோன்றுகிறது. நீதிமன்றம், காவல்துறை,…

கேமரன் மலை நிலைகொள்ளும் கேவியஸ், நெகிரியில் களம் காண்கிறார் சி.…

‘ஞாயிறு’ நக்கீரன், வரும் பொதுத்தேர்தலில் கேமரன் மலையில் ஜசெக மனோகரனை எதிர்த்து களம் காணப்போவது ஏறக்குறைய கேவியஸ் என்று உறுதியாகிவிட்ட நிலையில், அங்கு மஇகா சார்பில் களம் காணக் காத்திருந்த சி.சிவராசா நெகிரி செம்பிலானில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இன்னொரு தொகுதி அடையாளம் காணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி புத்ராஜெயா…

வீட்டு பணிப்பெண்கள்: இடைத்தரகர் கொட்டத்திற்கு முடிவு

‘ஞாயிறு நக்கீரன்’,அண்மைக் காலத்தில் தேசிய முன்னணி கூட்டரசு எடுத்த சில நல்ல முடிவுகளில் வீட்டு பணிப்பெண்களை இனி குடும்பப் பொறுப்பாளர்களே நேரடியாக அமர்த்திக் கொள்ளலாம் என்று எடுத்த முடிவு, குறிப்பிடத்தக்க நல்ல முடிவு ஆகும். அண்மையில் புத்ரா ஜெயா எடுத்த இந்த முடிவின் பிரதிபலிப்பு தேசிய அளவில் பிரதிபலிப்பதுடன்…

நாட்டில் 2000 பள்ளிகள் பாழடைந்த நிலையில்.. .. 2018 நிதிநிலை…

‘ஞாயிறு’ நக்கீரன், நாடு விடுதலை அடைந்தது முதல் நாட்டின் அதிகாரக் கட்டிலில் அயராமலும் சலிக்காமலும் அமர்ந்திருக்கும் தேசிய முன்னணிக்கு பதவி மோகம் தீர்ந்தபாடில்லை. இது, இந்த அரசியல் முன்னணியைச் சேர்ந்த ‘பெரியண்ணன்’ அம்னோ உயர்மட்டத் தலைவர்கள் மேடையேறும் போதெல்லாம் பளிச்சென வெளிப்படுகிறது. இந்த அரசியல் கூட்டணியின் ‘பெரிய தம்பி’,…

இந்திய சமுதாயத்தை உருமாற்ற விருப்பம் – ஜாஹிட் கடைந்தெடுத்த கேலிக்கூத்து…

இந்திய சமுதாயம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை அரசு உன்னிப்பாகக் கவனித்து வரும் அதேவேளை அவற்றுக்குகு தீர்வு காணவும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அமைக்கவும் புத்ராஜெயா ஆர்வம் கொண்டுள்ள-தாக டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்திருப்பது கடைந்தெடுத்த கேலிக்கூத்து என்று ஹிண்ட்ராஃப் கட்சித் தலைவர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். நான்கு, ஐந்து…

நஜிப்பின் தேர்தல் கால பட்ஜெட் இந்தியர்கள் ஏமாற வேண்டாம் பொன்.வேதமூர்த்தி…

2017 அக்டோபர் 27-ஆம் நாளில் பிரதமர் தாக்கல் செய்ய விருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, நிச்சயம் மக்களை வெகுவாகக் கவரும்படி கவர்ச்சியாக இருக்கும். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்பதால் பிரதமர் நஜிப் ஏராளமான சலுகைகளை வழங்கி பொதுமக்களை குறிப்பாக வாக்காளர்களை கவர முயற்சி செய்வார்.…

‘SEDIC’ பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும் -தேனீ

இங்கே ‘SEDIC’ இலாக்காவின் வழி அரசாங்கம் இந்தியர்களுக்கு வழங்கும் மானியத்தைப் பற்றி குறிப்பிடப் பட்டதால் அதைப்பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும். ‘செடிக்’ ஆரம்ப காலத்தில் ஏதோ இந்தியர்கள் பிழைக்கப் பல் வகையில் அரசாங்க மானியத்திற்கு மனு செய்தவர்களுக்குப் பங்கிட்டு கொடுத்தால் மட்டும் போதுமானது என்ற அளவில் நடந்தது.…

தமிழின் நிலை வேதனையானது; தமிழ் உயர்நிலைப்பள்ளி தேவையற்றது!

நமது நாட்டில் தமிழ் உயர்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? படாதா? கூடாதா? முடியாதா? இந்தக் கேள்விகளுக்குமுன்,  தேவையா? தேவையில்லையா? என்ற கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும். தமிழ் ஆரம்பப்பள்ளிகளே அவலநிலையில் அரசாங்கத்தின் மானியத்தை நம்பி நடை போட்டு கொண்டிருக்கின்றன! கல்வி என்பது மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் !…

“சைவர்களும் தீபாவளியும்” – ந.தருமலிங்கம்

‘ஞாயிறு’ நக்கீரன், உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இந்துப் பெருமக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி குதூகலித்தபின் சற்றே இளைப்பாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழர்கள், குறிப்பாக சைவ நெறியினை பின்பற்றும் அன்பர்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடலாமா என்பது குறித்து மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர் ‘திருமுறை செம்மல்’ ந.…

“தேர்தல் யானை நெருங்குகிறது, மணியோசைக் கேட்கிறது”

‘ஞாயிறு’ நக்கீரன்,அடுத்த வாரம் இதே வெள்ளிக்கிழமை நாட்டின் புதிய நிர்வாக நகரான புத்ராஜெயாவையும் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரையும் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என்பதற்கு அடையாளம் இப்பொழுதே தென்படுகின்றன. காரணம், அன்றுதான் அடுத்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிரதமர் தாக்கல் செய்யவிருக்கிறார். தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கடைசி…

தீபாவளி – தமிழர்களின் திருவிழா அல்ல!

தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்தனை இழிவு????* பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான் நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார் தீபாவளி இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம்…

காலமெல்லாம் மக்களை கையேந்த வைக்கும் தலைவர்கள்

‘ஞாயிறு’ நக்கீரன். நாடு விடுதலை அடைந்து மணிவிழாவைக் கடந்த பின்னும் நாட்டு மக்களை தொட்டதெற்கெல்லாம் கையேந்த வைப்பதில் நாட்டுத் தலைவர்கள் மனம் கொஞ்சமும் கூச்சப்படவில்லை. உலக வரலாற்றில் ஒரேக் கூட்டணி தொடர்ந்து அறுபது ஆண்டுகளாக ஒரு நாட்டை அரசாட்சி புரிகிறதென்றால், கீழ்திசை நாடுகளைப் பொறுத்தமட்டில் அது மலேசியாவாகத்தான் இருக்கும்.…

சாதனைத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் (அக். 12 நினைவு நாள்)

‘ஞாயிறு’ நக்கீரன், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பவள விழாவைக் கொண்டாடக் காத்திருக்கும் மஇகா-வின் நெடிய வரலாற்றில், அந்தக் கட்சிக்கென்று தேசியத் தலைமையகக் கட்டடத்தை நிறுவிய டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம்தான் மலேசிய இந்திய சமூகத்தின் உண்மையான சாதனைத் தலைவர் ஆவார். அடக்கத்தின் மறு உருவான அவர் அமைதியான வழியில்…

வீரத் துறவி-பெருங்கவி வள்ளலார் சுவாமிகள்

‘ஞாயிறு’ நக்கீரன்- ஆசு கவி, சிந்து கவி, சித்திரக் கவி, வித்தார கவி என்றெல்லாம் ஐம்பெருங்கவித்திறம் படைத்த பெரும்பாவலவராக.. சொற்பொழிவாளராக.. உரைநடை ஆசிரியராக.. எழுத்தாளராக.. நூலாசிரியராக.. உரையாசிரியராக.. ஞானாசிரியராக.. ஆன்மிக அறிஞராக.. சித்த மருத்துவராக.. இவர்களுக்கெல்லாம் மேலாகத் துறவியாக.. ஞானியாக.. சித்தராக.. என்றெல்லாம் பெருந்திருவுடன் விளங்கிய தமிழ்த் திருமகனார்…

அதீத சிவப்பணுக்கள் என்றால் என்ன? மின்னல் வானொலியில் தொடரும் ‘தகிடுதத்தம்’

குமரிமலையன், இன்றல்ல; நேற்றல்ல; ஆண்டுக் கணக்கில்  அரச வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் தொடரும் தகிடுதத்தம் நின்றபாடில்லை; ஏதோ உடற்கட்டமைப்பு ஆடை என்று சொல்லிக் கொண்டு அதை விற்பதற்காக அந்த ஆடைகள் ஜெர்மனிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை யென்றும் அதில் கலந்துள்ள அதீத சிவப்பணுக்கள்தான் தடித்த உடலையுடைய ஆண்-பெண் இருபாலரின்…

கேட்டுப் பெறுவதல்ல ‘கைத்தட்டல்’

‘ஞாயிறு’ நக்கீரன் இன்றைய நாட்களில் பொது நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி, திருமண விருந்து நிகழ்ச்சிகளுக்கும் செல்வதென்றால் ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியுள்ளது. நிகழ்ச்சியை வழி நடத்துகிறவர்களும் ஒலி வாங்கிக்கு முன் நின்று முழங்குபவர்களும் வித்தைக் காட்டும் கழைகூத்தாடி தன்வசப்பட்ட குரங்கை இப்படியும் அப்படியும் தாவச் சொல்வதைப் போல,…