‘அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க முயற்சி’

அரசாங்கம் இனவாதம் என்ற போர்வையில், பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க முயற்சிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சஹ்ரானுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து, அவர்களை சிறையில் அடைக்காமல், அவர்களுக்கு 3 மாதங்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனத்  தேரர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை எனத்…

இலங்கை ராணுவம்: இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகள் யாரும் ராணுவத்திடம்…

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்…

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க அமெரிக்காவிடம் கோரும் முன்னாள்…

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த…

90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்: ரத்தன தேரர்

இந்து- பௌத்த மக்கள் 90,000க்கு மேற்பட்டோர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதுரலிய ரத்தன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாடசாலைக்கு செல்லும் வயதுடைய பிள்ளைகள்…

ஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்

தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், இரா. சம்பந்தன் ஆற்றிய உரையில், ஒரு பகுதி கவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, “...(நாங்கள்) ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து நீங்கள் (அரசாங்கம்) ஆக்கபூர்வமாகக் கருமங்களை ஆற்றுவீர்கள்; (எம்மிடம்) ஆயுதப் பலம் இல்லாவிட்டால், அதைக் கைவிடலாம் என்று நினைப்பீர்கள் என்றால்,…

தமிழர்களின் மற்றுமொரு எழுச்சி; திணறும் பிக்குகள்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடியில் மீளவும் ஈழத்தமிழர்கள் தமது வரலாற்றை இன்றையதினம் நிலைநாட்டியுள்ளனர். வரலாற்று ரீதியாக தமிழர்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்து பௌத்தகோவிலை கட்டி தமிழருக்கு அங்கே உரிமையில்லை என அடாத்தாக தெரிவித்த பிக்குகளுக்கு அது எமது மண்தான் என இன்றையதினம் நிரூபித்துள்ளனர் தமிழர்கள். அந்தவகையில் பழைய செம்மலை நீராவியடிப்…

’200 வருடப் பிரச்சினையை 5 வருடங்களில் தீர்ப்பது கடினம்’

மலையக மக்களின் 200 வருடகாலப் பிரச்சினையை, 5 வருடங்களில் தீர்த்துவிட முடியாது என்று தெரிவித்த மலைநாட்டு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தாம் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர், இந்த 5 வருடக் காலப்பகுதியில், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார். அரசாங்கத் தகவல்…

வௌிநாடு செல்ல முயன்ற தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய…

வௌிநாடு செல்ல முயன்ற தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையின் புலனாய்வுப்பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் செல்ல முயன்ற போதே அவர் கைது…

காத்தான்குடியில் ஷரியா சட்டத்திற்கு இணங்க இதுவரை 20 பேர் கொலை!

காத்தான்குடியில் ஷரியா சட்டத்திற்கு இணங்க இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர், தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, வட்டிக்கு கடன் வழங்கியமை, விபசாரம் மேற்கொண்டது, சூதில் ஈடுபட்டது, இஸ்லாம் மதத்தை விட்டு வேறு ஒரு மதத்தை பின்பற்றியது மற்றும் இராணுவத்தில் இணைந்து கொண்டமை…

மட்டக்களப்பு புதூர் பகுதியில் பதற்றம் – 9 பேர் கைது!

மட்டக்களப்பு புதூர் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து, இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு புதூர் பகுதியில் பதற்றம் – இராணுவத்தினர்…

ஈஸ்டர் தாக்குதல்: ஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால்…

புலிகளை அழிக்க உதவிய இந்தியா தமிழர் பிரச்சினைக்கு உதவவேண்டும்!

”தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா, அமெரிக்கா உட்படச் சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவி வழங்கின. புலிகளை அழித்த பின் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்திக்கொடுப்போம் என்று சர்வதேசத்துக்கு இலங்கை அரசு வாக்குறுதி வழங்கியது. ஆயினும் போர் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை .…

அரசாங்கத்தின் அதிரடி திட்டம்; மகிழ்ச்சியில் யாழ் மக்கள்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதுடன் தென்னிந்திய நகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விமான சேவையை விஸ்தரிக்கும் சர்வதேச தளமாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான நிலைய விஸ்தரிப்புக்காக செலவிடப்படவுள்ள தொகையானது சுற்றுலாத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொகையின் அரைப்…

தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக இப்பத்தான் கண்டுபிடித்தார் மனோ!

சிறிலங்காவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஏமாற்றம் காரணமாகவே…

விடுதலைப்புலிகளை கேவலப்படுத்தாதீர்கள்; மைத்திரிக்கு சரத்பொன்சேகா கடுமையான பதில்!

ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காகவே விடுதலைப்புலிகளின் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல்…

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர்…

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்…

‘புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை’

இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தகவ​லுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ், 2019.04.04 அன்று அனுப்பிவைக்கப்பட்ட விண்ணபத்துக்கு, 2019 ஜூன் 25ஆம் திகதி குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏ.எம்.எஸ்.…

“போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை”

போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என்றும் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இதனை வன்மையாக…

கலஹா பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புபுரெஸ்ஸ வீதியின் வெதஹெக்க காட்டுப்பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (30) இரவு கம்பளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் கலஹா பொலிஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதல்…

அனைத்து இன மக்களும் இலங்கையர்களே என்பது தமிழ் மொழிப் பாடத்…

தமிழ் மொழியிலான வரலாற்றுப் பாடநூல்களைக் கற்கின்ற மாணவர்களுக்கு, தமிழர் மற்றும் இஸ்லாமியர் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்தினைத் தோற்றுவிக்கும் வகையில் பாடநூல்கள் அமைந்திருப்பது, கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்…

மரண தண்டனை நிறைவேற்றும் சிறிசேனவின் முடிவுக்கு எதிராக போராட்டம்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. கொழும்பு - வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை முதலாவது போராட்டம் தொடங்கியது. வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட சமூக செயற்பாட்டாளர்கள், மரண தண்டனை நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை கைவிடுமாறு…

விகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பௌத்த விகாரை, தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இரண்டு கட்ட தற்கொலை தாக்குதலை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து சி.ஜ.டி.யினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக…

இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்ப்பட்டன; ஆதாரங்கள் இருக்கின்றன!

சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி…