ராஜபக்சர்கள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும்

ராஜபக்சர்கள் மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை மேற்கொள்ளுவதற்காக சதி திட்டம் போட்டதற்காக அவர்கள் கைது செய்யப்படவேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.09.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர்…

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ ட்ரெய்லர் வௌியானது

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லர் வௌியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. ஆனால்…

உள்நாட்டு வருமான வரி திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்

உள்நாட்டு வருமான வரி திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். உள்நாட்டு வருமான வரி திருத்தச் சட்டமூலத்தை…

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர். இந்தியாவின் தமிழகத்துக்கு 14 பேர் கொண்ட வடபகுதி கடற்றொழிலாளர்கள் கடல் வழியாக படகு மூலம் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

தமிழர் தலைநகரில் பேரினவாதம் காட்ட இடமளியோம்

தமிழர் தலைநகரான திருகோணமலையில் பௌத்த விகாரைகளை நிறுவவும், மேலும் சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவும் பேரினவாதம் முயற்சிக்கின்றது. அவர்களின் இந்தச் சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "வடக்கு…

முகநூலின் மூலம் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்

தனது முகப்புத்தகத்தின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்பாவெல பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை (07) தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள…

நாட்டில் புதிதாக உருவாக்கபடவுள்ள அரசியல் கூட்டமைப்பு

இலங்கையில் இனிவரும் காலங்களில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய தலைவர்கள் இன்றிய ஒரு புதிய அரசியல்…

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்றவுள்ள ரணில் விக்ரமசிங்க

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஐக்கிய நாடுகள்…

புலிகளின் தலைவரின் துதிபாடுவோரை உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் துதிபாடுவோரை அரசாங்கம் உடனடியாகக் கைது செய்து சிறைச்சாலையில் அடைக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, "இலங்கையில் பயங்கரவாதத்தை விதைத்து, சொத்துக்களை நாசப்படுத்தி…

நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம்

நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டு வரிசை ஏற்படும் அபாயம் தலைதூக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார். இந்நிலையில் அண்மையில் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில்…

இலங்கை – இந்திய சமுதாயப் பேரவை தலைவராக ஜீவன் தொண்டமான்…

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான நகர்வுகளுக்கான உறவு பாலமாக திகழும் முக்கிய அமைப்பே இதுவாகும். தலைமைப் பதவி…

இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும்

இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். மேலும், இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும் என தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், "கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் என்பதே முதலாவது போராட்டத்தின் இலக்காக…

பாதுகாப்பு மிக்க குடிநீரை பெற்றுக் கொடுப்பதே இலக்கு

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பு அமைச்சில் நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ், அரச மறுசீரமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலை…

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கலந்துரையாடலில் பிரதமர்

இலங்கையை இடர் மற்றும் வறுமை நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவும் சர்வதேச குறிகாட்டிகளின் அடிப்படையில் எதிர்கால கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்றைய தினம் (31.18.2023) அலரிமாளிகையில் UNDP வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா (Azusa Kubota) மற்றும்…

அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் நிறுத்த தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரின் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எழுத்துமூல அறிவுறுத்தல் இதன்படி இலங்கை கிரிக்கெட் குறித்து விளையாட்டுப்…

மக்களின் வாக்களிக்கும் உரிமையை யாராலும் பறிக்க முடியாது

இலங்கையில் நடைபெறவுள்ளஅதிபர் தேர்தலை பிற்போடும் அல்லது ஒத்திவைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை சுதந்திர மக்கள் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளன. இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, அதிபர் அரசாங்கத்தை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய…

இந்து – பௌத்த மக்களுக்கிடையில் மோதலை உருவாக்க சதி

இந்து மற்றும் பௌத்த மக்களுக்கிடையில் மத ரீதியான மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தப்படுவதாக, நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார். இரு தரப்பினருக்கிடையிலான மோதலை உருவாக்குவதன் மூலம் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவை தடுத்து நிறுத்த முடியுமென எதிர்க்கட்சிகள்…

ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 6.3% ஆக பதிவாகியிருந்தது. மேலும் ஜூலை மாதத்தில் -1.4% சதவீதமாக இருந்த…

அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

இந்த வருடம் நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விரைவில் 9 இலட்சத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 8 இலட்சத்து 91 ஆயிரத்து 188 பேர் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் முழுவதும் மொத்தமாக…

இலங்கையில் முதலீடு செய்வதில் தென் கொரிய நிறுவனம் ஆர்வம்

இலங்கையில் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வது தொடர்பாக தென் கொரியாவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான திரு. கங்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சில் இன்று (29) இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. கடற்றொழில் துறையில் முதலீடு இச் சந்திப்பின் போது இலங்கையில் மீன்களுக்கான உணவு, கடலுணவு உற்பத்தி தொழிற்சாலை…

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அனுரகுமார திஸாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளராக தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த தகவலை தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதிகாரப்பூர்வமாக  அங்கீகரிக்கப்பட்டது தேசிய மக்கள் சக்தியின்…

மக்களின் ஓய்வூதியச் சேமிப்பினை அனுமதியின்றி பயன்படுத்த முயலும் அரசாங்கம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (28.08.2023) மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் போராட்டக்காரர்கள் குறிப்பிடுகையில், அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர்…