ஈழப்போரில் சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! பழ.நெடுமாறன்

(2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது) ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மையானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த…

சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய…

“தமிழ் மக்களாகிய எம்மை அடக்கி ஆள வேண்டும் என்று இன்று எண்ணுகின்ற சிங்களப் பெரும்பான்மைச் சமூகத்தினர், மிக விரைவில் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு, வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும், அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன்.”என்று வடக்கு…

வெடுக்குநாறி மலை ஆலயத்திற்கான தடை நீங்கியது!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஐயனார் ஆலயத்திற்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், ஆலயத்தில் மாற்றங்களை செய்யவோ கட்டடங்களை அமைக்கவோ முடியாதென தொல்லியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது ஆதி ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. இதனை மக்கள் காலங்காலமாக…

வாள்ப்பாணம் ஆகிறதா யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணத்தின் மறுபெயரே இன்று வாள்ப்பாணம் ஆகிவிட்டது. ஈழத் தமிழர்களின் பண்பாட்டுத் தலை நகரமாக உலகளவில் பிரசித்தமாக இருந்தது யாழ்ப்பாணம். ஈழத் தமிழ்ரகளின் அறிவுப் பொக்கிசமாகவும் கல்வியில் தலைசிறந்த நகராமாகவும் யாழ்ப்பாணம் பெயர் பெற்றிருந்தது யாவரும் அறிந்தது. அத்துடன் தமிழர்களின் விடுதலைக்காக துப்பாக்கிகளையும் புத்தகங்களையும் ஏந்திய இளைஞர்களை தந்தது யாழ்ப்பாணம்.…

யாருடன் கூட்டு என்பதை தேர்தல் காலத்தில் அறிவிப்பேன்: சி.வி.விக்னேஸ்வரன்

“வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள். ஆனால் மாகாண சபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே, எவருடன் சேருவது என்பதை தேர்தல் காலத்திலேயே தீர்மானிப்பேன்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் நேற்று சனிக்கிழமை…

வீரமுனைப் படுகொலைகளின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான  அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. 1990 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றிருந்தது. சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன…

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் வெற்றி!

முல்லைத்தீவு மாவட்;டத்தில் தடைசெய்யப்;பட்டதொழில்களை தடுத்து நிறுத்தக்கோரி 10வது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தினை கைவிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தக்கோரியும் 5000 க்கும் அதிகமான மீனவர்களின்…

குள்ள மனிதர்கள்; அரசியல் பின்னணிகள் இருகின்றன?

குள்ள மனிதர்கள் என்பது இல்லாத விடயம். அதன் பின்னால் அரசியல் பின்னணிகள் இருகின்றன என தாம் நம்புவதாக, பொலிஸார் தம்மிடம் தெரிவித்ததாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று முதலமைச்சர், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொஷன் பெர்ணான்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா…

வெடுக்குநாறி தமிழர் மலைக்கு யாரும் செல்ல கூடாதாம்! மீறி சென்றால்…

நெடுங்கேணி – ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது எனவும் மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.…

இனியும் தமிழீழம் சாத்தியமா?’ – தலைவர் பிரபாகரன் அவர்களின் பதில்…

காணும் பொழுதெல்லாம் உணர்வாளர்கள் எழுப்பும் கேள்வி, “ஈழம் இனியும் சாத்தியமா?’ தர்மத்தை சூது கௌவும், தர்மம் மறுபடியும் வெல்லும். ஈழம் வரும். கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் மக்கள் சமூகங்களையும் நாகரீக வளர்ச்சியையும் அதிகமாகப் பாதித்தவை போர்களும் நாடு பிடித்தல்களும்தான். வரலாற்றின் மிகப்பெரிய நாடுபிடித்தல், ஐரோப்பிய வெள்ளையர்கள் இன்று லத்தீன்…

விஜயகலாவிடம் விசாரணை நிறைவு

முன்னாள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன என, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு, நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்கவிடமே, அப்பிரிவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இதேவேளை, அவரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வதிகாரிகள், நீதிமன்றுக்கு…

வாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும்

வடக்கில் வாள்வெட்டுகள், வன்முறைகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் பற்றியும் விழிப்புக் குழுக்கள் பற்றியும் பேசப்படுவது வழக்கம். பொலிஸ் தரப்பு, சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை; அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றெல்லாம், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வன்முறைகளும், குற்றங்களும் ஒரு சுழற்சியான விடயங்களாக, நடந்து…

4 ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு 1,080.55 கோடி ரூபாவை வழங்கியது இந்தியா

கடந்த நான்கு ஆண்டுகளில் 1,080.55 கோடி ரூபாவை (இந்திய நாணயம்) அபிவிருத்தி உதவியாக சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியுள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் உள்ள ஆறு அண்டை நாடுகளுக்கு கடந்த நான்கு நிதியாண்டுகளில் இந்தியா வழங்கியுள்ள அபிவிருத்தி நிதி தொடர்பான புள்ளி விபரங்களை இந்திய வெளிவிவகார இணை அமைச்சர்…

வாள்வெட்டுக்குழு! ஆதாரங்கள் கொடுத்தும் பொலிஸார் மந்த போக்கு! ஆளுரிடம் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் ஆதாரங்களுடன் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியும் பொலிஸார் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவிடம் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல்கள் போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்புக் கூட்டம்…

விடுதலைப் புலிகளின் பாடல்களுக்கு இசையமைத்த யாழ்.ரமணன் காலமானார்!

யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும் யாழ். ரமணன் அவர்கள் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின்…

தமிழ் இன அழிப்பில் கருணாநிதி ? – வடக்கு முதலமைச்சர்…

முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத் தடுத்திருக்கமுடியும் என்ற ஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். துமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி வடக்கு…

ஒரே தலைமையில் ஒன்றுபடுவோம்

ஈழத் தமிழரின் பிரச்சினைகளைத் தெரியாத ஈழத் தமிழர் இருக்க முடியாது. பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதில்தான் குழப்பநிலை உள்ளது. தீர்வு காண வேண்டுமாயின் நாம் சில அடிப்படை உண்மைகளை அறிந்துகொண்டு அவற்றின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் யாரும் தாம் நினைத்தபடி விரும்பியபடி அனைத்தையும் அப்படியே சாதித்துவிட முடியாது.…

இராணுவ கட்டளை தளபதி மற்றும் இரணுவ சிப்பாய் ஆகியோருக்கு மரண…

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக கைதுசெய்து அவரை சித்திரவதை செய்து க‍ெலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இரணுவ சிப்பாய் ஆகியஇருவருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் (09.09.1998) யாழ்.குருநகர்…

27 அகதிகள் தாய் நாட்டை வந்தடைந்தனர்

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது, பயந்து  நாட்டை விட்டு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துச் சென்று, அங்கு முகாம்களில் தங்கியிருந்து வாழ்க்கை நடத்திய, இலங்கை அகதிகள் 27 பேர், இன்று (07), தாய் நாட்டை  வந்தடைந்துள்ளனர். இவர்கள் இந்தியாவிலிருந்து, மூன்று விமானங்களின் மூலம் இலங்கையை வந்தடைந்தனர். திருச்சி, சென்னை, மதுரை ஆகிய…

கருணாநிதி மரணம்; ஈழத்தமிழர்களுக்கு ஒரு அவசர கோரிக்கை!

முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை உயிரிழந்த செய்தி வெளியானதும் முல்லைத்தீவு நகரில் சிலர் வெடிகொழுத்தி ஆரவாரம் செய்துள்ள சம்பவம் பெரும்பாலான ஈழத்தமிழர்களிடையே அதிர்ப்தியையை ஏற்படுத்தியுள்ளது. இன்று (07.08.18) மாலை 7.00 மணியளவில் முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள் வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொழுத்தி…

வடக்­குத் தொடர்­பாக மோடிக்கும் ரணிலுக்கும் பிறந்த ஞானம்!!

வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பாக அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்­களை வியக்க வைத்­துள்­ளது. இந்­திய அர­சின் நிதி­யு­த­வி­யு­டன் இடம்­பெற்ற நோயா­ளர் காவு வண்­டி­யின் இல­வச சேவைக்­கான ஆரம்ப நிகழ்­வின்­போது இதை அவ­தா­னிக்க முடிந்­தது. இலங்­கை­யின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏனைய பிர­தே­சங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது வட­…

சட்டவிரோதமாக படகில் வெளிநாடு செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் ஆழ்கடலில்…

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய முற்பட்ட 21 இலங்கையர்களை சிறிலங்கா கடற்படையினர் ஆழ்கடலில் கைது செய்துள்ளனர். சிலாபத்தில் இருந்து 117 கடல் மைல் தொலைவில் நேற்று மாலை இழுவைப்படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் இடைமறித்தன. இதையடுத்து,…

விடுதலைப்புலிகள் கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் வெளிநாட்டில் திடீர்…

விடுதலைப் புலிகள் அமைப்பின், கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இந்தோனேஷியாவில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்தியா என்ற பெண்ணே இந்தோனேஷியாவின் ஜகார்த்தா வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “குறித்த பெண் சிறுநீரக…