வடக்கில் தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்; நேரில் ஆராய வடக்கு மாகாண…

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து நேரில் சென்று ஆராய்வதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். வடக்கு மக்களின் விருப்பத்துக்கு மாறாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் நடைபெற்றது. அதன்போது…

தொடர் ஆக்கிரமிப்புகளுக்கு வடமாகாண சபையின் தவறே காரணம்

வடக்கு மாகாண சபை எல்­லைக் கிரா­மங்­க­ளில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­ளாது மிகப் பெரிய தவறை விட்­டுள்­ளது. அத­னா­லேயே அங்கு ஆக்­கி­ர­மிப்­புக்­கள் இடம்­பெ­று­கின்­றன. இவ்­வாறு வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் சிவ­நே­சன் சுட்­டிக்­காட்­டி­னார். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­கான வடக்கு மாகாண சபை­யின் சிறப்பு…

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று காலை, நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இடம்பெற்றது. சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இதன்போது, விரிவாக கலந்துரையாடப்பட்டதாக…

இலங்கை: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற ரணில் ஏற்ற…

10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான தமிழர் விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரதமர் ரணிலுக்கு…

ரணிலைக் காப்பாற்றுவதா கூட்டமைப்பின் வேலை?!

கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாசவின் படங்களைத் தாங்கிய விளம்பரத் தட்டிகள் அங்கொன்றும்… …இங்கொன்றுமாக முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. சுமார் 72 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி கால்நூற்றாண்டுக்குப் பிறகு, புதிய தலைமைத்துவமொன்றை நோக்கி செல்லும் கட்சிகளின் பிரதிபலிப்பாகவே இதனைக் கொள்ள முடியும். கடந்த உள்ளூராட்சி…

உலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை- இன்றோடு 9…

2009ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 4ம் திகதி, உலகையே அதிரவைத்த சமர் அது. பல இடங்களை இழந்த நிலையில் இருந்தார்கள் விடுதலைப் புலிகள். இவ்வாறு பின்னோக்கி பின்னோக்கி நாம் சென்றால் என்ன செய்வது என்று கூறி, சினம் கொண்ட தலைவர் ஆனந்த புரத்தில் உள்ள தனது வீட்டில் தங்கிவிட்டார்.…

இலங்கை: பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான பிரேரணை 46 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகள் மாத்திரம் கிடைத்தன. எதிராக 122 வாக்குகள் கிடைத்தன. 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. புதன்கிழமை காலையில் ஆரம்பமான நம்பிக்கையில்லா பிரேரணை…

இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் (01.4.2018) அன்ன மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது அண்மையில் பெரும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த அரசியல் ஆயுட் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழ் அரசில் கைதிகளின் விடுதலையை கோரியும் பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் திரண்ட…

“மகாவலி அபிவிருத்தி’ என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில்…

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சி வரலாற்றில் புதுமையாக, நல்லாட்சி எனும் பெயரில் உருவாக்கப்பட்ட தேசிய கட்சிகளினது கூட்டாட்ச்சி, அதனை நம்பிய சிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றது என்பதுவே எமது அனுபவமாக அமைகின்றது. குறிப்பாக தமிழ் மக்களின் தரப்பு ஆட்சிமுறைமையில் எதிரணியாக இருந்தபோதிலும் கூட, இலங்கை பாராளுமன்றத்தின்…

துப்பாக்கி தூக்கிய கைகள் இன்று குடை பிடிக்கும் அவலம்

1983 முதல் 2009 வரை பல சினிமா பிரபலங்கள் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் தமிழ் இளைஞர்கள் குடை பிடித்ததில்லை.பாரதிராஜா , மகேந்திரன், என பல சினிமா ஜாம்பவான்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு யாரும் குடை பிடிக்கவில்லை.ஏனெனில் அப்போது நம் இளைஞர்கள் தம் கரங்களில் ஆயுதம் ஏந்தியிருந்தனர். அவர்கள்…

தேசியக் கட்சிகளுக்கான விசுவாசம்: எந்தக் கருமத்தையும் ஈடேற விடாது

அரசியல் சக்கரம் பல படிப்பினைகளை உணர்த்தியதாகவே சூழன்று கொண்டிருக்கின்றது, என்பதற்கு அண்மைய இலங்கை அரசியல் போக்கு சான்றாகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக எண்ணப்பட்ட பலரும், தமது பலம்பொருந்திய மக்கள் தளத்தை வெளிப்படுத்தியதாகவே, நடந்து முடிந்த தேர்தல் காணப்படுகின்றது. ஸ்திரமில்லாத சபைகளை உருவாக்கும் விதமாக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருந்தாலும் கூட, தேர்தல்…

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக…

தமிழ் அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பிரதமரின் அழைப்பின் பேரில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், அதன் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை,  தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அதன் மூலம், நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் வகையில்  கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கான பதில் என, முதலமைச்சர் வெளியிட்டு…

‘மாகாண சபை ஒரு தீர்வல்ல’

இந்தியாவின் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட தலையீடுகளையும் பங்களிப்பையும் நேற்று (01) நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அத்தலையீடுகளின் விளைவாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட போதிலும், அது ஒரு தீர்வல்ல எனவும் தெரிவித்தார். அகில இலங்கை…

வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்?

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்பு நிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும்…

நல்லாட்சி அரசால் மீண்டும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்ட விடுதலைப்புலிகள்! கொதிக்கும்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் உள்ள 20 அமைப்புக்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது!

தமிழர்களின் ஆயுத போராட்டத்தின் நியாய தன்மையை இன்று அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி .சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று நடைபெற்ற தந்தை செல்வா பிறந்ததின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்..…

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் மரணம்..

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வெளிநாட்டில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பின் சாவகச்சேரி பிரதேச கட்டளை அதிகாரியாக செயற்பட்டு தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த எஸ்.ஜே.மூர்த்தி (குணாலன் மாஸ்டர்) என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

கிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்து கலந்துரையாடினார். வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, நேற்றுக்காலை கிளிநொச்சிக்கும் பின்னர் முல்லைத்தீவுக்கும் சென்றிருந்தார்.…

2019இல் ஜெனிவாவுக்கான கதவுகளை மூடுகிறது சிறிலங்கா

ஜெனிவாவுக்கான கதவுகளை மூட விரும்புவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறப்புப் பணிகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ”நாம் தொடர்ந்து ஜெனிவாவுக்குச் செல்வதை விரும்பவில்லை. அதனை மூடுவதற்கு விரும்புகிறோம். நாங்கள் சில சாதகமான முடிவுகளை எடுத்திருக்கிறோம். நீதிமன்ற முறைமைகள் சுதந்திரமாக உள்ளன.…

ஒரு பெண் போராளியின் கதை

காயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார். ஆனால் இணையத்தளமும் செயற்படவில்லை. இது இவருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார். வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டு தலைமை…

பிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமணன் வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஜெனீவாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்…

தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் தலைவருமாகிய அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் 120வது ஜனன தின நிகழ்வு எதிர்வரும் 2018.03.31ம் திகதி காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உட்பட…