பொலிஸ்சுக்கு மீண்டும் வேலை: 2 தமிழ் மாணவர் கொலை என்ன…

யாழ்ப்பாணத்தில் பொலிசார் சுட்டு 2 பல்கலைக் கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி நாம் அறிவோம். அவர்களை புதைத்த இடத்தில் இன்னும் புல் கூட முளைக்கவில்லை, ஆனால் சுட்ட பொலிசார் ஐவரையும் மீண்டும் வேலையில் அமர்த்தியுள்ளது மைத்திரி அரசு... யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன்…

நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏப்ரல் மாதம் 2ம் திகதி வரை கால…

நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏப்ரல் மாதம் 2ம் திகதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளோம். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 2015ம் ஆண்டு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையைஎதிர்காலத்திலாவது செயற்படுத்துவதற்கான சமிக்ஞைகள் ஏப்ரல் 2ம் திகதிக்குள்எமக்கு கிடைக்க வேண்டும்.…

சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையைக் கைவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொண்டமையானது, சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுள்ளமையைக் காட்டுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது…

ஆழ் கடலில் மூழ்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்!

இன்று கடலில் மூழ்கடிக்கப்பட்ட வேலின் என்ற கப்பல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஏற்றி வர பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சொந்தமான இந்த கப்பலை கடற்படையினர் இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வந்தனர். இந்த கப்பலை கடற்படையினர் சில வருடங்கள் பயன்படுத்தி…

அட்சய பாத்திரம் எப்படிப் பிச்சைப் பாத்திரமானது?

அண்மையில், வவுனியாவில் வசிக்கும் நண்பர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை எழுந்தது. அங்கு சென்றபோது, தரம் ஒன்றில் கல்வி கற்கும் தனது மகனுக்கு, அவர் படிப்பித்துக் கொண்டு இருந்தார். மகன், பாடசாலையில் ‘எங்கள் வீடு’ பற்றி மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும். அதையே அவர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். “எங்கள்…

யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும்…

புதிதாக அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக எத்தகைய காலத்திலும் இடம்பெற்ற நபர்கள் காணாமற்போனமை தொடர்பான விடயங்களை கண்டறிய முடியும் என்று அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பாக இந்த அலுவலகத்தின் ஊடாக…

’சர்வதேசத்துக்கு அடிப்பணிந்துவிட்டது அரசாங்கம்’ என்கிறார் பீரிஸ்

சர்வதேச சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணிந்து, பாதுபாப்புப் படையினரை வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்ய, தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் அமைச்சரும் பேரராசிரியருமான ஜு.எல்.பீரிஸ், அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும்  குற்றம் சாட்டினார். பத்தரமுல்லையில், இன்று இடம்பெற்ற…

மட்டக்களப்பு விமான நிலையம் திறப்பு – பெரும்பகுதி நிலம் சிறிலங்கா…

மட்டக்களப்பு விமான நிலையம் இன்று சிவில் விமானப் போக்குவரத்துக்காக இன்று திறந்து வைக்கப்பட்ட போதிலும், அதன் பெரும் பகுதி நிலம், சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையம், இன்று சிவில் விமானப் போக்குவரத்துக்காக…

வடக்கில் இராணுவத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசுவது…

“இராணுவத்தை வடக்கில் வைத்துக்கொண்டும், அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டும் பொருளாதார விருத்தி பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அரசாங்கம் பிரஸ்தாபிக்கும் போது நுண்ணறிவுள்ள தமிழர்கள் யாவரும் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ‘சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்’ என்று ஆகிவிடும்.” என்று வடக்கு மாகாண…

“பிரபாகரன் புத்திசாலி அல்ல” – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தான் கருதியதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவரிடம், போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளுடன் கடைசி நேரப்…

வட மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன் – “முதல் தமிழர்”

மேல் மாகாண ஆளுனராகப் பணியாற்றும், கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் எட்டு மாகாணங்களின் ஆளுனர்களுக்கு, விருப்ப அடிப்படையில், இடமாற்றங்களை வழங்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆளுனர் பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய எட்டு மாகாணங்களின் ஆளுனர்களை,…

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் சர்வதேசத்தின் கைகளில் உள்ளது

போருக்குப் பின்பான ஈழத் தமிழர்களின் எதிர்காலம் சர்வதேசத்தின் கைகளில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு உயர்ந்த பட்ச தீர்வுத் திட்டங்களை முன்வைத்த இலங்கை ஆட்சியாளர்களும் சிங்களத் தரப்புக்களும் இப்போது இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்கிறார்கள். இன்னும் சிலர் விடுதலைப்…

குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்த வலியுறுத்த வேண்டும்: ஜெனீவாவில்…

‘குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்துகின்றோம்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய…

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது – ஐ.நா நிபுணர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது  என்று  உண்மை, நீதி, இழப்பீடு மற்றும்  மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்  பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அவர், “ 2015 ஆம் ஆண்டிலிருந்து நான் சிறிலங்காவுடன் தொடர்ந்து செயற்பட்டு…

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அதிருப்தி

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபை, அதேநேரம், நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறைகளின் அமுலாக்கத்தில் காட்டுகின்ற தாமதத்துக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இலங்கையில் மறுசீரமைப்பை விரிவாக்கல், பொறுப்புக்கூறுதல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு ஆகிய விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்…

உள்நாட்டு சட்டத்தால் நீதி வழங்க முடியும்!- ஜெனிவாவில் இலங்கை திட்டவட்டம்

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மேம்படுத்தப்பட்ட நீதியை வழங்குவதற்கு இலங்கையில் காணப்படும் நீதி மற்றும் சட்ட அமுலாக்க பொறிமுறைகள் முழுமையாகஇயலுமானதாகவும், ஈடுபாடானதாகவும் உள்ளது என ஜெனிவாவில் இலங்கை அறிவித்துள்ளது. அத்துடன், அனைத்து நல்லிணக்க பொறிமுறைகளும் எமது அரசியலமைப்பிற்கு இயைபாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித…

யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியோரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா அதிபரின் ஊடகப்…

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது. கடந்த 19ஆம் நாள், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடந்த விழாவில் சிறிலங்கா அதிபர் பங்கேற்றிருந்த…

சிறிலங்கா பொறுப்புக்கூறல் வாக்குறுதியை நிறைவேற்றுவது சந்தேகமே – ஐ.நா மனித…

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே இடம்பெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன். சிறிலங்கா தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2017ஆம் ஆண்டு மீள உறுதிப்படுத்தப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள முன்னேற்றங்கள்…

26 சிங்களப் படையினரை கொன்றார்கள்: 3 முன் நாள் விடுதலைப்…

26 படையினர் கொலை.. 3 முன்னாள் புலி உறுப்பினர்களின் வழக்கு பதிவு வவுனியாவில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேரின் வழக்கு விசாரணை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவ வீரர்கள் வவுனியாவில்…

சவால்களைச் சமாளித்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்; மைத்திரியிடம்…

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஆர்வம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது என்பதை நன்றாக அறிவோம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

காணாமற்போனோர் தொடர்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தக் குழுவே விடயங்களைக் கையாளும்:…

“காணாமற்போனோர் தொடர்பில் சட்டத்தினை உருவாக்கி, குழுவொன்றை நியமித்துள்ளோம். காணாமற்போனோர் தொடர்பிலான விடயத்தை அந்தக் குழுவே கையாளும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டட திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு…

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம்

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும்…

பூகோள மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்- விக்னேஸ்வரன்

தமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில், கடந்த மார்ச் 17ஆம் நாள்,  மூலோபாய கற்கை நிலையம்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு,…