கெடா மாநிலத்தில் பாஸ் கட்சிக்கு பெரும்பான்மை என அறிவிப்பு

புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய கூட்டணிக்கு எளிதான பெரும்பான்மை இருப்பதாக கெடா பாஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஸ் தேர்தல் இயக்குநர் முகமட் சனுசி முகமட் நோர், கெடாவில் உள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க ஒப்புக் கொண்டதாகக்…

பேராக் மாநில சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ங்ஙே

பேராக் சட்டமன்றம் - சித்தியாவான் சட்டமன்ற உறுப்பினர் ங்ஙே கூ ஹாம் இன்று பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள அவர், நீண்ட உரை நிகழ்த்திய பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது உரையில், நல்ல சட்டம் மற்றும்…

முக்ரிஸ் ஆதரவாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறது பெரிக்காத்தான்

முகரிஸ் மகாதீரின் தலைமையை ஆதரிக்கும் பெர்சத்து பிரதிநிதிகளை ஈர்க்க முயற்சிப்பதன் மூலம் தேசிய கூட்டணி (பி.என்.) கெடா மாநில சட்டசபையில் தனது நிலையை வலுப்படுத்த முயற்சிக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "பெர்சத்து கட்சியும் இரண்டு அணிகளாக பிளவுபட்டு, பாக்காத்தானை ஆதரிக்கும் ஒரு குழு, பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான…

2 பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகல், கெடா…

டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். கெடாவில் உள்ள இரண்டு பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள், டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ்) ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறுவதாக…

பேராக்கின் புதிய அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றார் சுல்தான்…

அங்கீகாரம் பெற்ற புதிய மாநில அரசு, அந்நம்பிக்கையை நேர்மையுடனும் செயல்படுத்த வேண்டும் என்று பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார். "நம்பகமான நிர்வாகத்தை விரும்பும் என் நம்பிக்கை எப்போதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், தூய்மையான தலைமைத்துவத்தை விரும்பும் மக்களின் நம்பிக்கை நிறைவேற வேண்டும். அரசியலுக்கு எல்லைகள் உள்ளன, அரசியலில் கட்டுப்பாடுடன்…

கெடாவும் கவிழ்ந்ததா? இன்று பிற்பகல் ‘சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு’

முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான மாநில அரசின் நிலைப்பாட்டை பாதிக்கும் ஒரு அறிவிப்பை இரண்டு கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ்) ஆகியோர் இன்று "சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு" அழைப்பு விடுத்துள்ளர்.…

உலக செவிலியர் தினம் 2020

இன்று மே 12, உலக செவிலியர் தினம், உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்கை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆண்டின் செவிலியர் தினக் கரு, "வழிநடத்த ஒரு குரல்: உலகை ஆரோக்கியத்திற்கு இட்டு செல்லுதல்” "A Voice to Lead :…

நோர்ஹிசாம்: நான் வேண்டுமென்றே தூண்டப்பட்டேன், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை

எதிர்க்கட்சி பிரதிநிதிகளால் வேண்டுமென்றே ஆத்திரமூட்டப்பட்டதால் மலாக்கா மாநில சட்டசபையில் "பன்றி" என்ற வார்த்தையை உபயோகிக்கத் தொடங்கியதாக பெங்க்காலான் பாத்து சட்டமன்ற உறுப்பினர் நோர்ஹிசம் ஹசான் பக்தே கூறினார். ‘துரோகி’, ‘பின் கதவு அரசாங்கம்’ என்ற வார்த்தைகளால் அவர் கேலி செய்யப்பட்டதாகவும், "பன்றி" என்று முதலில் அழைக்கப்பட்டதாகவும், அவர் கூறினார்.…

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இருந்தாலும் முகிதீன் பிரதமராக நிலைப்பார்

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் முகிதீன் யாசின் பிரதமராக நீடிப்பார் என்று கிளந்தான் பாஸ் செயலாளர் சே அப்துல்லா மாட் நவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் திட்டம் எவ்வாறு தோல்வியடையும் என்பதை அவர் விவரித்தார். "நாடாளுமன்றத்தில் இதுபோன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்தாலும், அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் போதுமான…

70 புதிய பாதிப்புகள், மேலும் ஓர் இறப்பு, 76% மீட்கப்பட்டனர்

மலேசியாவில் 70 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்று பிற்பகல் வரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,726 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 70 புதிய பாதிப்புகளில் 13 இறக்குமதி பாதிப்புகளையும் 57 உள்ளூர்…

செத்தியா ஆலாம் குழுமம் எஸ்ஓபி மீறல் காரணமாக இல்லை

கடந்த வாரம் ஏற்பட்ட புதிய கோவிட்-19 பாதிப்பு, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ், இயக்க நடைமுறைகளை (SOP) மீறியதன் விளைவாக இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். மாறாக, SOP-க்கு முதலாளிகள் இணங்கியதால் தான் சிலாங்கூரின் செத்தியா ஆலாமில் ஒரு கட்டுமான…

ரவூப்பை மலாக்கா சட்டமன்ற சபாநாயகராக பாக்காத்தான் அங்கீகரிக்கவில்லை

மலாக்காவின் புதிய சட்டமன்ற சபாநாயகராக அம்னோ தலைவர் அப்துல் ரவூப் யூசோவின் நியமனத்தை பாக்காத்தான் அங்கீகரிக்க மறுத்துள்ளது. பாக்காத்தனைப் பொருத்தவரை, ஒமார் ஜாஃபர் இன்னும் முறையான சட்டமன்ற சபாநாயகராகவே இருக்கிறார் என்றார் டாக்டர் வோங் ஃபோர்ட் பின் (பெம்பன்-டிஏபி). "அவர்கள் செய்வது சட்டப்பூர்வமற்றது, செல்லுபடியற்றது" என்று இன்று ரவூப்பின்…

செலாயாங்கில் நடந்த சோதனைகளில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்

செலாயாங்கில் முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் மீது இன்று அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையைச் சுற்றியுள்ள தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.டி) பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இங்கு இன்னும் இரண்டு நாட்களில், மே 13 அன்று பி.கே.பி.டி. முடிவடையும் என்று…

மலாக்கா சட்டமன்ற சபாநாயகராக அம்னோ தலைவர் நியமிப்பு

மலாக்கா சட்டமன்றம் - தேசிய கூட்டணி (பி.என்) இன்று எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இல்லாமல் மாநில சட்டமன்ற கூட்டத்தை மீண்டும் தொடங்கியது. பின்னர், புதிய சபாநாயகராக மலாக்கா அம்னோ தலைவரும், மலேசிய முன்னாள் அம்னோ செயலாளருமான அப்துல் ரவூப் யூசோ நியமிக்கப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். முன்னதாக இன்று காலை தொடங்கிய…

கெடாவில் பாதிக்கும் மேற்பட்ட ஆதரவை இழந்துவிட்டார் முக்ரிஸ்- பாஸ்

பெர்சத்துவின் உச்ச கவுன்சில் (எம்.பி.டி) கூட்டம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் கட்சி துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் ஆகியோர் இக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்று தெரிகிறது. டாக்டர் மகாதிர் மற்றும் முக்ரிஸுக்கு எதிராக ஓர் அரசியல் முயற்சி இருப்பதாக கட்சியின் வட்டாரங்கள்…

கோவிட்-19: 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்தனர், 67 புதிய நோய்த்தொற்றுகள்

குணமடைந்து மீட்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 5,025 அல்லது 75.5 சதவீதத்தை எட்டியுள்ளது. இன்று 96 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இன்று பிற்பகல் நிலவரப்படி 67 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன, அவற்றில் 49 வெளிநாட்டினர் சம்பந்தப்படவை ஆகும். கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையைச் சுற்றியுள்ள தீவிர…

BPN முறையீட்டு காலம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல் (பிபிஎன்) நிதி உதவிக்குத் தகுதியான ஆனால் இன்னும் கிடைக்கப்பெறாத நபர்கள், மே 31 வரை மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மக்களின் புகார்களைக் கேட்டதாகப் பிரதம மந்திரி முகிதீன் யாசின் கூறினார். அவர்களில் சிலர் வேலை இழந்துள்ள போதிலும்…

நோம்புப் பெருநாள் உபசரிப்புகள் ஒரே மாநிலத்தில் மட்டுமே, 20 பேர்…

பிரதமர் முகிதீன் யாசின் இன்று ஒரு சிறப்பு செய்தியில், சில நிபந்தனைகளின் கீழ் நோம்புப் பெருநாள் உபசரிப்புகள் நடத்த முடியும் என்று விளக்கினார். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 20 பேருக்கு மிகாமலும் ஒரே மாநிலத்தில் வசிக்கும் குடும்பங்களிடையேயும் மற்றும் அண்டை அயலார் இடையே மட்டுமே நோம்புப் பெருநாள் உபசரிப்புகள்…

5 மாவட்டங்கள் கோவிட்-19 பாதிப்பு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டன

செயலில் இருந்த இறுதி பாதிப்பும் மீட்கப்பட்டு குணமடைந்த பின்னர் ஐந்து மாவட்டங்கள் கோவிட்-19 இல்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த ஐந்து மாவட்டங்கள், திரங்கானுவில் கோலா நெருஸ் மற்றும் செட்டியு, சரவாகில் சிமுஞ்சன், சபாவில் பீஃபோர்ட் மற்றும் சிலாங்கூரில் சபாக் பெர்னாம் ஆகும். இது பச்சை மண்டலங்களின் எண்ணிக்கையை 118…

பிரதமர்: பி.கே.பி.பி ஜூன் 9 வரை தொடர்கிறது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி) ஜூன் 9 வரை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார். சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றுடனான கலந்தாலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். "சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு…

அலோர் செட்டாரில் பாஸ், அம்னோ இரகசிய கூட்டம்

பாஸ் மூத்த தலைவர்களிடையே ஒரு இரகசிய கூட்டம் இன்று அலோர் செட்டாரில் நடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிக தகவல்கள் இல்லை என்றாலும், இக்கூட்டத்தில் பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான், கெடா பாஸ் ஆணையர் அகமட் யஹாயா மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் எதிர்க்கட்சித்…

ஜி.எல்.சி நியமனங்கள் மிகவும் துரிதமாக நடைபெறுகின்றன

கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி முகமட் நோர் உட்பட அரசு-இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி) பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இருப்பினும், மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, நியமனக் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று ரம்லி கூறினார். மலேசியாகினி கண்ட அந்நியமனக் கடிதத்தின்படி, ரம்லி, அமனா ராயா பெர்ஹாட் (Amanah…

கோவிட்-19 தினசரி நேரடி ஒளிபரப்பில் இருந்து ‘ஓய்வெடுக்கிறது’ சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சு இன்று 'சிறிது நேரம்' ஓய்வெடுக்கிறது. வழக்கமான முறையில் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று இல்லை என்று தெரிவித்தது. பிப்ரவரி 27 ஆம் தேதி கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலை தொடங்கிய பின்னர், அமைச்சு இன்று முதல் தடவையாக நேரடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை. கோவிட்-19 தினசரி…