‘பெர்சே’ ஏற்பாடு செய்யும் விவாதத்தில் கலந்துகொள்ள, பிஎஸ்எம் வேட்பாளர் தயார்

செமினி இடைத்தேர்தல் | செமினி இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) வேட்பாளர், நிக் அஸிஸ் அஃபிக் அப்துல், பெர்சே ஏற்பாடு செய்யும் வேட்பாளர் விவாதத்தில் கலத்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பிப்ரவரி 25-ம் தேதி, மலேசிய நோர்த்திங்ஹெம் பல்கலைக்கழகத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் 4 வேட்பாளர்களும் கலந்துகொள்ளும்…

ஹாடி பிஎன் வேட்பாளருக்குப் பரப்புரை செய்வாராம்: தாஜுடின் கூறுகிறார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், செமிஞ்யே வருவார், வந்து பிஎன் வேட்பாளர் சக்கரியா ஹனாபிக்காக பரப்புரை செய்வார் என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான். “ஆமாம், அவர் நிச்சயம் வருவார்”, என்று தாஜுடின் இன்று செமிஞ்யே-இல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால், எப்போது வருவார்.. அதை…

நீதித்துறை ‘முறைகேடு’மீது ஆர்சிஐ தேவை என்று எப்போதும் கூறிவந்துள்ளோம்- பார்…

நீதித்துறையில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அதிரடியாக ஒரு குற்றச்சாட்டு முன்மைக்கப்பட்டிருப்பதை அடுத்து அதை விசாரிக்க அரச ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இன்றைய நிலையில் அது அவசியமும் அவசரமுமான ஒன்றாகும் என்று அது கூறிற்று. தலைமை நீதிபதிக்கு எதிரான நீதிபதி ஹமிட்…

அனுமதி இல்லை எனவே, இசி ஹரப்பான் செராமாவை தடுத்து நிறுத்தியது

செமிஞ்யே தேர்தல்| செமிஞ்யே இடைத் தேர்தல் வேட்பாளர் நியமனம் முடிந்ததோடு பக்கத்தான் ஹரப்பான் ஒரு செராமாவுக்கு ஏற்பாடு செய்தது. ஆனால், ஏற்பாட்டாளர்கள் முன் அனுமதி பெறவில்லை என்பதால் அந்த செராமா தொடர்ந்து நடக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது. திடுமென அங்கு வருகை புரிந்த தேர்தல் ஆணைய(இசி) அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்…

சொத்து விவரம் அறிவித்தார் பிஎஸ்எம் வேட்பாளர்; மற்ற வேட்பாளர்களும் அவ்வாறு…

செமிஞ்யே தேர்தல்| செமிஞ்யே இடைத் தேர்தலுக்கான பார்டி சோசியலிஸ் மலேசியா(பிஎஸ்எம்) வேட்பாளர் நிக் அசிஸ் அபிக் அப்துல் அவருக்குள்ள சொத்துகளை இன்று பகிரங்கமாக அறிவித்தார். அதேபோல், இடைத் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறார். “1999-இலிருந்தே பிஎஸ்எம் தான் ஊழலைச் சகித்துக்கொள்ளாத…

பிரதான கூட்டணிகளை எதிர்த்து போராட, மக்களிடமிருந்து நிதி உதவியை எதிர்ப்பார்க்கிறது…

செமினி இடைத்தேர்தல் | செமினி இடைத்தேர்தலை முன்னிட்டு, தனது வேட்பாளருக்கு நிதி திரட்டும் வகையில், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) நிதி திரட்டு பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. எந்தவொரு கூட்டணியிலும் இணையாமல், தனித்து நிற்கும் பிஎஸ்எம், பக்காத்தான் ஹராப்பான் போன்ற பெருங் கூட்டணிகளுடன் மோத, தங்களுக்குப் பணபலம் தேவை…

‘சுங்கை பூலாய் சதுப்புக்காடு பிரச்சனை – அரசாங்கத்திற்கு அதிக அதிகாரம்…

‘ஃபோரஸ்ட் சிட்டி கோல்ப் ரிசார்ட்’ ஆக மாற்றங்கண்டு வரும், பாதுகாக்கப்பட்ட சுங்கை பூலாய் காடு பிரச்சனையில், அரசாங்கம் சில சிக்கல்களில் கட்டுப்பட்டுள்ளது என்ற அமைச்சரின் கூற்றை, வழக்குரைஞர் என் சுரேந்திரன் நிராகரித்தார். மத்திய அரசாங்கத்தால், இப்பிரச்சனையில் ஒன்றும் செய்ய இயலாது எனும் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை…

மகாதிர்: செமிஞ்சே-இல் பாஸ் அம்னோவை ஆதரிக்காது

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எதிர்வரும் செமிஞ்யே இடைத் தேர்தலில் அம்னோவுக்குப் பாஸ் ஆதரவு இருக்காது என்கிறார். இதை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கே நேற்று தம்மைச் சந்திக்க வந்தபோது தெரிவித்ததாக மகாதிர் கூறினார். “இந்த இடைத்தேர்தலில் பாஸ் ஆதரவு அம்னோவுக்கு இல்லை", என்றாரவர். நேற்று, பாஸ்…

வரலாறு படைத்த செமினி வேட்பாளர் நியமனம்

செமினி இடைத்தேர்தல் | இன்று, செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி மிகவும் சுமூகமான முறையில், விரைவாக நிறைவுபெற்று, வரலாறு படைத்ததாக தேர்தல் ஆணையர் அஸார் அஸிஸா ஹரூண் தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் நேரம் நிறைவடைந்த அடுத்த 25 நிமிடங்களில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.…

வேட்பு மனு தாக்கல் மையத்துக்கு ‘போஸ்கூ’ டி-சட்டை அணிந்துவந்த மசீச…

இன்று காலை மசீச கட்சியினர் அடங்கிய ஒரு கூட்டம், செமிஞ்யே இடைத் தேர்தல் வெட்புமனு தாக்கல் மையத்துக்கு, வந்திருந்தது. அவர்கள் அனைவரும் “Malu Apa Bossku (வெட்கப்பட என்ன இருக்கிறது, போஸ்)” என்ற வாசகத்தையும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் படத்தையும் கொண்ட டி-சட்டை அணிந்திருந்தார்கள். அவர்களில்…

செமிஞ்யே இடைத் தேர்தலில் 4முனைப் போட்டி

செமிஞ்யே இடைத் ஹேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை முடிவுக்கு வந்தது. மார்ச் 2-இல் நடைபெறும் அந்த இடைத் தேர்தல் 4முனைப் போட்டியாக அமையும் என்பதை தேர்தல் ஆணையம் (இசி) உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது பக்கத்தான் ஹரப்பான். அந்த வெற்றியை ஹரப்பானால்…

13 செட் நியமனப் பாரங்கள் விற்பனையாகியுள்ளன

செமினி இடைத்தேர்தல் | நாளை, செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, இதுவரை, 13 நியமனப் பாரங்கள் விற்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் அஸார் அஸிசான் ஹருண் தெரிவித்துள்ளார். பாரிசான் நேசனல் (பிஎன்) பிரதிநிதி ஐந்து பாரங்களையும், பக்காத்தான் ஹராப்பான் மூன்று பாரங்களையும், மலேசிய சோசலிசக்…

சபாவின் 5 எம்பிக்கள், 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவில் இணைய…

கடந்தாண்டு இறுதியில், அம்னோவைவிட்டு விலகிய சபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்மர் பெர்சத்துவில் இணைய, விண்ணப்பப்பாரங்களைக் கொடுத்துள்ளனர். பிரதமரும் பெர்சத்துவின் தலைவருமான டாக்டர் மகாதிர், பெர்சத்து சபாவில் கால் பதிக்க உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கட்சியில் சேருவதற்கான அவர்களின் நோக்கம் பிரகாசமாகி வருகிறது என்று…

பெட்ரோல் விலை ஒரு சென் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லை

இன்று நள்ளிரவு தொடக்கம், பெட்ரோலின் விலை ஒரு சென் உயர்வு காண்கிறது, டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், நிதி அமைச்சு, ரோன்95 வகை பெட்ரோலின் விலை ஒரு சென் அதிகரித்து, லிட்டருக்கு RM1.98-ஆகவும், ரோன்97 வகை பெட்ரோல் லிட்டருக்கு RM2.28 ஆகவும் விற்கப்படும் என…

‘தீயணைப்பு வீரரையும் தாக்குவீர்களா’, சாட்சி காதில் விழுந்தது

ஆடிப் புலன்விசாரணை | தீயணைப்பு வீரர் ஒருவர், மயக்கமடைந்த நிலையில், காரின் மீது சாய்ந்திருந்தார், அவரைச் சுற்றி ஏறக்குறைய 12 பேர் நின்றிருந்தனர். "அடிக்காதே!" என சிலர் தமிழில் கத்தினர். "தீயணைப்பு வீரர்களையும் தாக்குவீர்களா? என்று இன்னொருவர் கூறினார். சீஃபீல்ட் கோயில் கலவரத்தின் போது, இப்படியான உரையாடல்களைக் கேட்டதாக,…

செமினியில் 24 மணி நேர இயக்க அறை, எம்.ஏ.சி.சி. திறக்கிறது

செமினி இடைத்தேர்தல் | இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) செமினி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, 24 மணி நேர இயக்க அறையை (bilik gerakan) தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலின் போது நடக்கும் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களைப், பொது மக்கள் உடனுக்குடன் புகார் செய்ய…

RM1.5 மில்லியன் இலஞ்சம், கருவூலத்துறை அதிகாரியின் செயலாளரை எம்.ஏ.சி.சி. கைது…

கருவூலத்துறை மூத்த அதிகாரி ஒருவரின் அலுவலகச் செயலாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது. RM1.5 மில்லியன் இலஞ்சம் கோரிய வழக்கு விசாரணையில் உதவுவதற்காக, 5 நாட்களுக்கு அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் எனத் தெரிகிறது. நீதிமன்றத்தில், எம்.ஏ.சி.சி.-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, நீதிபதி அஹ்மாட் அஃபிக் ஹசான்,…

‘நிலப்பிரச்சனைக்குத் தீர்வு காணாவிட்டால், இடைத்தேர்தலில் ஹராப்பானைப் புறக்கணிப்போம்’

செமிஞ்சே இடைத்தேர்தல் | தேசிய வகை செமிஞ்சே தோட்டத் தமிழ்ப்பள்ளி தரப்பினர், பள்ளி நிலப்பிரச்சனைக்குச் சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால், 1,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானைப் புறக்கணிப்பர் என்று கூறியுள்ளனர். பள்ளி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த (ஜிஎல்சி) நிறுவனமான சைம் டர்பி இடையேயான நிலப்பிரச்சனையைக் கையாள்வதில்,…

ஜக்காரியா, ஐமான் செமிஞ்சேயில் போட்டி

செமிஞ்சே இடைத்தேர்தல் | மலேசியத் தேசியப் பல்கலைகழகத்தின் (யூகேஎம்) முன்னாள் நிர்வாக அதிகாரி, ஜகாரியா ஹனாஃபி, 58, பிஎன் சார்பில் செமிஞ்சே இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்னோ உலு லாங்காட் சமர்ப்பித்த ஆறு பேர் கொண்ட பட்டியலில், உள்ளூர்வாசியான ஜாகரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிஎன் நடப்புத் தலைவர், முகமட்…

இசி துணைத் தலைவராக அஸ்மி ஷாரோம், பேரரசர் இணக்கம்

தேர்தல் ஆணையத்தின் (இசி) புதியத் துணைத் தலைவராக, மலாயாப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர், டாக்டர் அஸ்மி ஷாரோம்-ஐ நியமிக்க, யாங்டி பெர்த்துவான் அகோங், சுல்தான் அப்துல்லா ரியாதுட்டின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா இணக்கம் தெரிவித்துள்ளார். 2019, ஜனவரி 1-ம் தேதி முதல், தனது சேவையை முடித்துக்கொண்ட, ஒத்மான் மாஹ்முட்டுக்குப்…

கருத்துக்கணிப்பு: செமிஞ்யில் ஹரப்பான் ஆதரவில் சரிவு

செமிஞ்யி சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பானுக்கிருந்த ஆதரவு சரிவு கண்டிருப்பதாக சிலாங்கூர் அரசாங்கச் சிந்தனைக் குழு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. எதிர்வரும் இடைத் தேர்தலில் அக்கூட்டணிக்கு 46விழுக்காடு ஆதரவுதான் உள்ளது எனக் கருத்துக் கணிப்பு காட்டுவதாக இன்ஸ்டிடியுட் டார்ல் எஸான்(ஐடிஇ) கூறியது. இது 14வது பொதுத் தேர்தலில்…

பாஸுடனான மறைமுக ஒத்துழைப்பை முறைப்படுத்துவீர், கிளந்தான் அம்னோ வலியுறுத்து

பாஸுடன் உள்ள மறைமுகமாக ஒத்துழைப்பு முறைப்படுத்தப்பட. வேண்டும் என கிளந்தான் அம்னோ விரும்புகிறது. அதன் தலைவர் அஹமட் ஜஸ்லான் யாக்கூப், ஒத்துழைப்பை முறைப்படுத்திக் கொண்டால் அவ்விரு கட்சிகளுக்குமிடையிலும் எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு மேம்படும் என்றார். “கிளந்தான் அம்னோ இப்போதுள்ளதைப் போன்ற ஒத்துழைப்பை வரவேற்றாலும் உறவுகள் மேலும் வலுவடைவதைக் காண…

அமனா: செமிஞ்யில் கட்சிச் சின்னத்துக்கோ அரசாங்க இயந்திரங்களுக்கோ இடமில்லை

அமனா கட்சி , அதன் உறுப்பினர்கள் செமிஞ்யி பகுதியில் அங்கு இடைத் தேர்தல் முடிவுறும்வரை பக்கத்தான் ஹரப்பான் சின்னங்களைத்தான் அணிய வேண்டும் கட்சிச் சின்னத்தை அணியக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. நேற்றிரவு நடந்த அமனா தலைமைத்துவக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி இன்று வெளியிட்ட அறிக்கை கூறியது. இடைத் தேர்தல்…