‘நிறைய ஊழல்கள்’ நிகழ்வதாகக் கூறி அதற்கான ஆதாரங்களை எம்ஏசிசி-இடம் ஒப்படைத்தார்…

தொலைக்காட்சிப்  பிரபலம்  அஸ்வான்  அலி  ஒரு  தலைவர் “நிறைய  ஊழல்கள்  செய்து  செல்வச்  செழிப்பில்   மிதப்பதாக”க்  குற்றஞ்சாட்டி   அதற்கான   ஆதாரங்களை  எம்ஏசிசி-இடம்   கொடுத்திருக்கிறார்.  ஊழல்  தலைவரின்   பெயரை   அவர்  குறிப்பிடவில்லை. ஆனால்,  அவரின்  இன்ஸ்டாகிராமைப்  பார்க்கும்போது    அவர்   கொடுத்த   ஆவணங்கள்  அவரின்   அண்ணன்   சிலாங்கூர்  மந்திரி  புசார்   அஸ்மின்  …

ஜேபி பெட்ரோல் நிலையக் கொலை: இருவர் கைது

திங்கள்கிழமை   இரவு   ஜோகூர்    தாமான்   பெலாங்கியில்  பெட்ரோல்   நிலையம்  ஒன்றில்   44வயது   நிரம்பிய   டான்  ஏய்க்   சாயைக்   கொலை   செய்ததாக   சந்தேகிக்கப்படும்    நான்கு  பேரில்  இருவரை   போலீஸ்   கைது   செய்துள்ளது. சில   வட்டாரங்களை   மேற்கோள்காட்டி   இச்செய்தியை   வெளியிட்டிருக்கும்   உத்துசான்   மலேசியா,   சந்தேகப்  பேர்வழிகளின்  காரை  விரட்டிச்  சென்று  போலீசார்  …

மாணவன் அறையப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவன் குடும்பத்தார் ச்சேகு அசிசான்மீது…

ஒரு மாணவனை அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட   ச்சேகு    அசிசான்   என்று    அழைக்கப்படும்   அசிசான் மானாப்    மீது   அவன்  குடும்பத்தார்    வழக்கு   தொடர்வார்கள்   என்று   கூறப்படுவதை    மாணவனின்  தந்தை    மறுத்தார். இதற்குமுன்  வந்த   ஒரு    செய்தி,   அசிசான்மீதான   குற்றச்சாட்டுகளை   அரசுத்தரப்பு   கைவிட்டதை     அடுத்து   அவர்மீது    குடும்பத்தார்     வழக்கு    தொடுக்கப்போவதாக   மாணவனின்  …

போரெக்ஸ் ஆர்சிஐ சம்பந்தமாக நஜிப், அரசாங்கம் மீது மகாதிர் வழக்கு…

1990களில் அந்நியச் செலாவணி நட்டம் குறித்து விசாரணை நடத்திய அரச ஆணையத்தின் (ஆர்சிஐ) ஆறு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை முழுமையானதாக இல்லாததால் அவர்களுக்கு எதிராக முன்னாள் பிரதமர் மகாதிர் ஒரு வழக்கை இன்று பதிவு செய்தார். அந்த ஆணையத்தின் ஆறு உறுப்பினர்கள் - முகமட் சிடெக் ஹசான், கமாலுடின்…

அம்னோவுக்கு மலாய்க்காரர் ஆதரவு குறைந்து வருகிறது; ஆனாலும் ஹரபான் மகிழ்ச்சி…

இன்வோக்கின்   அண்மைய    கருத்துக்கணிப்பில்,  பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)   காரணமாக   அம்னோவுக்கு   மலாய்   ஆதரவு  குறைந்து   வருவது   தெரிய  வருகிறது. அந்தப்  பக்கம்   குறையும்   ஆதரவு   பக்கத்தான்   ஹரபான்  பக்கம்   வருகிறதா   என்றால்   அதுவும்  இல்லை.  மலாய்க்காரர்களின்  ஆதரவைப்   பெற   அது  கடுமையாக  பாடுபட   வேண்டியிருக்கும்போலத்தான்   தோன்றுகிறது. மும்முனைப்   போட்டி  …

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் எம்ஏசிசி அஸ்வானை விசாரிக்கும்

தொலைக்காட்சி   பிரபலம்   அஸ்வான்   அலி,  தன்   குடும்பத்தைச்   சேர்ந்த   ஒருவர்   ஊழலில்   ஈடுபட்டுள்ளார்    என்று   கூறியிருப்பதன்    தொடர்பில்  எம்ஏசிசி   நாளை   அவரிடம்   வாக்குமூலம்   பதிவு    செய்யும். அச்சந்திப்பு   நாளைக்  காலை  10.30க்கு   புத்ரா   ஜெயாவில்   எம்ஏசிசி   தலைமையகத்தில்    நடைபெறும்    என  மலேசியாகினிக்குத்    தெரியவந்துள்ளது. சிலாங்கூர்   மந்திரி  புசார்   அஸ்மின்  …

பிப்ரவரி இறுதிவாக்கில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்

பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  பிப்ரவரி   இறுதியில்   நாடாளுமன்றத்தைக்   கலைக்க   மார்ச்   அல்லது   ஏப்ரலில்   பொதுத்   தேர்தல்   நடைபெறலாம்.   சீனமொழி    நாளேடான   சின்  சியு  டெய்லியில்  இப்படியொரு   செய்தி  வெளிவந்துள்ளது. சிலாங்கூரில்    தேர்தல்   தொகுதி  திருத்தங்கள்மீதான    ஆட்சேபங்களை   விசாரிப்பதற்கு  விதிக்கப்பட்டிருந்த  நீதிமன்றத்   தடையுத்தரவைத்   தள்ளுபடி  செய்யும்   வழக்கில்   தேர்தல்  …

திரெங்கானு பள்ளிவாசல்களில் குற்றச்செயல்களைத் தடுக்க சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு

திரெங்கானு  பள்ளிவாசல்கள்  ஒவ்வொன்றிலும்  “போலீஸ்  ராக்கான்  மஸ்ஜிட்  எனப்படும்   பாதுகாப்புப்  பிரிவு  அமைக்கப்படும்.  அது   போலீஸ்   ஒத்துழைப்புடன்  பள்ளிவாசல்களில்   குற்றச்செயல்கள்   நிகழ்வதைத்   தடுக்கும். பள்ளிவாசல்களில்   கண்காணிப்பு   கேமராக்களும்   பாதுகாவலர்களும்  இருந்தாலும்    இதுவும்  சேர்ந்து   பாதுகாப்பை   வலுப்படுத்தும்    என  மாநில,   தொடர்பு,  பல்லூடக,  சிறப்புப்  பணிகள்  குழுத்   தலைவரான  கஜாலி  …

மாணவனை அறைந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை நீதிமன்றம் விடுவித்தது

    ஒரு மாணவனை அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அஸிசான் மானாப் இன்று சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அஸிசான் இன்று காலை மணி 8.30 க்கு நீதிமன்றம் வந்து சேர்ந்தார். சுமார் 300 ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளூர்வாசிகள் மற்றும் ஆசிரியர்களின் தொழிற்சங்கத்தின் (என்யுடிபி) பிரதிநிதிகளும் நீதிமன்றத்தில்…

பக்கத்தான் ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் யார்?

பக்கத்தான் ஹரப்பான் அதன் பிரதமர் வேட்பாளரின் பெயரை அடுத்த மாதம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். அறிவிக்கப்படவிருக்கும் வேட்பாளர் பிரதமர் பதவிக்கு கூட்டணியின் பெரும்பான்மைத் தேர்வான அன்வார் இப்ராகிமுக்கு பதிலாக அமர்த்தப்படுவார், ஏனென்றால் அன்வார் இன்னும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பிரதமர் பதவிக்கு…

மகாதிர் நாட்டை அழித்து விடுவார், பாஸ் இளைஞர் உதவித் தலைவர்…

  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நாட்டை ஆள்வதற்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டால், அவர் நாட்டை அழித்து விடுவார் என்று பாஸ் கட்சியின் இளைஞர் உதவித் தலைவர் அஹமட் பாதிலி ஷஆரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்தச் சூழலில், மகாதிர் காலத்து சம்பவங்கள், மெமாலி சம்பவம், மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட…

எம்பி: ஹாடியின் பாட்டை அப்படியே ஒப்புவிக்கிறார் லியோ

லிம்  கிட்  சியாங்   பிரதமரானால்    நாட்டின்  “இன  நல்லிணம்   கெடும்”  என்று   கூறிய   மசீச   தலைவர்    லியோ  தியோங்  லாயை    டிஏபி   தேசிய   விளம்பரப்  பிரிவுச்   செயலாளர்    டோனி  புவா    சாடினார். அதற்கு  முந்திய  நாள்   பாஸ்   தலைவர்    அப்துல்  ஹாடி    ஆவாங்   மலேசியாவை   வழிநடத்துபவர்    ஒரு  முஸ்லிமாகத்தான் …

பெட்ரோல் நிலைய கொலை தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை: போலீஸ்…

நேற்று  ஜோகூர்    தாமான்   பெலாங்கியில்  பெட்ரோல்   நிலையம்  ஒன்றில்   ஓர்   ஆடவரைக்   கொலை   செய்ததாக   சந்தேகிக்கப்படும்   நபர்களை  போலீஸ்   கைது   செய்திருப்பதாகக்  கூறும்   தப்பான   தகவல்களைப்  பரப்புவதைப்  பொதுமக்கள்   நிறுத்த   வேண்டும். சமூக  வலைத்தளங்களில்  பரவிவரும்   அத்தகவல்    உண்மையல்ல    என்று    ஜோகூர்    குற்றப்புலனாய்வுத்  துறைத்    தலைவர்   அஸ்மான்   ஆயுப்   …

கேஎல்ஐஏ2 குறைந்த-விலை விமான நிலையம் அல்ல- எம்ஏஎச்பி

மலேசியன்  ஏர்போர்ட்ஸ்   ஹோல்டிங்ஸ்  பெர்ஹாட்(எம்ஏஎச்பி)கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையம்2 (கேஎல்ஐஏ2)    குறைந்த-விலை  விமான  நிலையம்  அல்ல  வென்பதை    வலியுறுத்துகிறது. “குறைந்த-விலை  முனையம்   என்று  கூறிக்கொண்டு”  ஆசியானுக்கு   அப்பால்   செல்லும்   அனைத்துலகப்  பயணங்களுக்கான  பயணிகள்   சேவைக்  கட்டணம்(பிஎஸ்சி)   அதிகரிக்கப்பட்டிருப்பதைக்  குறைகூறிய    பெட்டாலிங்  ஜெயா    உத்தாரா   எம்பி   டோனி   புவாவுக்கு    அது  …

ஐஎஸ் எச்ஐவி வைரஸ்களை ஊசிவழி செலுத்த முயல்வதாக எச்சரிக்கும் அறிக்கையை…

தேசிய   போலீஸ்   படைத்   தலைவர்    நூர்   ரஷிட்    இப்ராகிம்,  எச்ஐவி  வைரஸ்களை  ஊசிவழி   செலுத்த   முயலும்    ஐஎஸ்  பயங்கரவாதிகளிடம்    பொதுமக்கள்   விழிப்பாக  இருக்க    வேண்டும்  என்று     போலீஸ்    அறிக்கை  விடுத்திருப்பதாகக்  கூறப்படுவதை   மறுத்தார். இரத்தத்தில்    சர்க்கைரை   இருக்கிறதா   என்பதைக்  கண்டறிய  வந்திருப்பதாகக்  கூறும்   அவர்கள்   தங்களை  ஒரு  மருத்துவக்  …

துருக்கி கிழக்கு ஜெருசலத்தில் அதன் தூதரகத்தைத் திறக்கப் போகிறதாம்

  துருக்கி கிழக்கு ஜெருசலத்தில் அதன் தூதரகத்தை திறக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக துருக்கி அதிபர் தேயிப் எர்டோகன் கூறுகிறார். ஆனால், அவர் இதை எப்படி செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை, ஏனென்றால் இஸ்ரேல் முழு ஜெருசலத்தையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதோடு அந்நகரை பகுக்க முடியாத தலைநகர் என்றும்…

ஜெருசலம் பற்றிய டிரம்பின் முடிவுக்காக அமெரிக்காவுடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டியதில்லை,…

  ஜெருசலத்தை அமெரிக்கா இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தற்காக மலேசியா அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பது அர்த்தமாகாது என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொல்லி விட்டார். ஏன் தெரியுமா? இஸ்லாத்தில் இன்னொரு நாட்டுடனான உறவும் அந்த நாட்டு மக்களுடனான உறவும் இரு வேறுபட்ட…

கிட் சியாங் பிரதமரானால் ‘இன நல்லிணக்கம்’ இல்லை, மசீச கூறுகிறது

    டிஎபியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் பிரதமரானால், அது நாட்டிற்கு பெரும் தீங்காகி விடும் என்று மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லியோ தியோங் லாய் இன்று கூறினார். கிட் சியாங் ஒரு கோட்பாடற்ற அரசியல்வாதி. அவர் இனப் பிணக்கத்தை விதைப்பதில் வல்லவர் என்று போக்குவரத்து…

நஜிப் சிறீ லங்கா சென்றடைந்தார்

  மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டு பிரதமர் நஜிப் இன்று சிறீ லங்கா சென்றைடந்தார். பிரதமர் நஜிப்பையும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் ஏற்றி வந்த சிறப்பு விமானம் பண்டாரநாய்க் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ளூர் நேரம் காலை மணி 8.40 அளவில் இறங்கியது. பிரதமர் நஜிப்பையும்…

நஜிப்: ஜெருசலம் விவகாரத்தில் அம்னோவும் பாஸும் கூட்டாக செயல்பட வேண்டும்

  புத்ரஜெயாவில் டிசம்பர் 22 இல் பிரதமர் நஜிப்பும் பாஸ் தலைவர் தலைவர்களும் கலந்துகொள்ளவிருக்கும் ஒரு கூட்டத்தில் பாலஸ்தீன மக்களின் அவலநிலையைக் கையாள்வதற்கு தேவைப்படும் பொருத்தமான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இப்பிரச்சனையைக் கூட்டாக கையாள்வதற்கான வழிமுறைகளை அம்னோவும் பாஸும் காண வேண்டும் என்று அம்னோ தலைவர் நஜிப் கூறுகிறார்.…

‘தூய்மையற்ற’, ‘முஸ்லிமல்லாத’ டிஎபியை நிராகரிக்க வேண்டும், ஹாடி கூறுகிறார்

தமது முன்னாள் பக்கத்தான் ரக்யாட் பங்காளியான டிஎபியை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீண்டும் தாக்கியுள்ளார். அக்கட்சி ஒரு தூய்மையான அரசை நடத்த முடியாது; அதன் தலைவர்களை அது பிரதமாராக்க ஆசைப்படக்கூடாது ஏனெனெறால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று அவர் கூறியுள்ளார். "டிஎபி ஒரு தூய்மையான அரசாக…

பூலாய் அவ்வளவு எளிதில் எதிரணியிடம் வீழ்ந்து விடாது: நூர் ஜஸ்லான்

பூலாய்  நாடாளுமன்ற   உறுப்பினர்    நூர்    ஜஸ்லான்,    சிங்கப்பூரின்  சிந்தனைக்  களமான    Iseas-Yusof Ishak  கழகம்  கூறியிருப்பதுபோல்    அந்த   நாடாளுமன்றத்     தொகுதி   அவ்வளவு   எளிதில்   எதிரணியிடம்   வீழ்ந்து  விடாது   என்கிறார். 14வது  பொதுத்   தேர்தல்மீது   அக்கழகம்   செய்த   ஆய்வு   முறையான    ஆய்வல்ல.  அது  உண்மை  நிலவரங்களை    அடிப்படையாகக்   கொள்ளவில்லை   என்றாரவர்.…

ஜயிஸ் நடவடிக்கையில் எம்ஏசிசி அதிகாரிகள் இருவர் சிக்கினர்

சிலாங்கூர்   சமய   அதிகார  அமைப்பு(ஜயிஸ்)  எம்ஏசிசி    அதிகாரிகள்   இருவரைத்   தடுத்து   வைத்துள்ளது. ஓர்  ஆணும்  தனித்துவாழும்  தாயாரான   பெண்ணும்  ஸ்ரீகெம்பாங்கான்   கொண்டோமினியத்தில்   அதிகாலை  மணி   மூன்றுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டதாக   தகவலறிந்த    வட்டாரமொன்று   கூறிற்று. அவர்களில்  ஒருவர்   ஊழல்தடுப்பு   ஆணையத்தின்   பிரிவுகளில்   ஒன்றின்   இயக்குனர்    என்று   அது    தெரிவித்தது. அச்சம்பவத்தை  …