ஜோ லவ்-வை கண்டுபிடிக்க சீன அதிகாரிகளுடன் போலீஸ் சந்திப்பு

  ஒளிந்து கொண்டிருக்கும் தொழில் வணிகர் ஜோ லவ்-வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மலேசிய போலீஸ் சீன அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் முகமட் பூசி ஹருண் இன்று கூறினார். விபரங்கள் எதுவும் அளிக்காமல், ஜோ லோ இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றாரவர்.…

சினமூட்டும் நோக்கம் சிறிதும் இல்லை, ஜோகூர் எம்பி விளக்கம்

ஜோகூர் மந்திரி புசார் ஒஸ்மான் சாபியான் , தாம் புதன்கிழமை சிங்கப்பூர் நீர் எல்லையைத் தாண்டிச் செல்லவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார். தாம் அப்பகுதிக்குச் சென்றது மலேசியப் பாதுகாப்புப் படைகள் முறையாக பணியாற்றுகிறார்களா என்பதைப் பார்ப்பதற்கே என்றாரவர். எம்.வி. பீடோமான் கப்பலுக்குச் சென்றதில் சினமூட்டும் நோக்கம் சிறிதும் இல்லை.…

‘முதல்முறையாக ஓராங் அஸ்லி ஒருவரைத் தேர்ந்தெடுத்து வரலாறு படைப்பீர்’

கேமரன் மலை இடைத் தேர்தல்: கேமரன் மலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இன்று காலை பிஎன் வேட்பாளர் ரம்லி முகம்மட் நோர், தானா ராத்தாவின் முதன்மை சாலை சென்று அங்கு வாக்காளர்களைச் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரம்லி, தீவகற்ப மலேசியாவில் இதுவரை பழங்குடி மக்களில் ஒருவர்…

கட்டிடத்தில் சிலுவை: முஸ்லிம்-அல்லாதாரின் உணர்வுக்கும் மதிப்பளிப்பீர், ரீசால் மரைக்கானுக்கு அறிவுறுத்து

ஒரு கட்டிடத்தின் விளக்குகள் சிலுவை வடிவில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அம்னோ கப்பளா பத்தாஸ் எம்பி ரீசால் மரைக்கான் முஸ்லிம்-அல்லாதாரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்திய புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் ஹிஸ்யாவ் லியோங், “பிரச்னை இல்லாத ஒன்றையும் இன, சமய விவகாரமாக்கும்” அம்னோ தலைவர்களின் செயல்களைக்…

முன்னாள் தலைமை நீதிபதி பிரதமர் மகாதிரிடம் மன்னிப்பு கோரினார்

  பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சியில் மே9-இல் டாக்டர் மகாதிர் இஸ்தானா நெகாராவுக்கு அழைப்பு இன்றி சென்றார் என்று கூறியதற்காக மகாதிரிடம் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். முன்னாள் நீதிபதியின் இக்கூற்றை பிரதமர் அனுவலகம் மறுத்ததைத் தொடர்ந்து, தாம் எழுதிய கட்டுரையில்…

இராமசாமி: செனட்டில் ஒரு இடத்துக்காகவும் கொஞ்சம் நிலத்துக்காகவும் கேமரனை விட்டுக்…

செனட்டில் மேலும் ஒரு இடம் கிடைக்கிறது என்பதற்காக மஇகா கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக டிஏபி-இன் பி.இராமசாமி கூறினார். வழக்கமாக போட்டியிட்டு வந்த ஓரு தொகுதியில் இம்முறை போட்டியிடுவதில்லை என்று மஇகா முடிவு செய்ததற்கு இதுதான் காரணம் என்று ஊகிக்கப்படுவதாக அவர் இன்று…

ஹரப்பானை ஆதரிக்கிறார் கேவியெஸ்: அவர் மகாதிர் மற்றும் அன்வார் ஆதரவாளராம்

சர்ச்சைக்குரிய மைபிபிபி தலைவர் எம். கேவியெஸ் கேமரன் மலை இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பானுக்கே தம் ஆதரவு என்று அறிவித்தார். ஏனென்றால் அவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆதரவாளராம். “ஒன்றைத் தெள்ளத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நான் மகாதிர் மற்றும்…

கேமரன் மலையில் நான்கு-முனைப் போட்டி

இன்று தொடங்கி தேர்தல் பரப்புரைகளால் பரபரப்படையப் போகிறது கேமரன் மலை . தொடர்ந்து பிஎன் வசம் இருந்து வந்துள்ள அத்தொகுதியை இந்தத் தேர்தலிலாவது கைப்பற்றி ஒரு வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது பக்கத்தான் ஹரப்பான். வழக்கமாக அத்தொகுதியில் மஇகா வேட்பாளரையே களமிறக்கும் பிஎன் இம்முறை அவ்வழக்கத்தை மாற்றி பிஎன்…

போப் மனோலனுக்கு அன்வார் கண்டனம்

கேமரன் இடைத்தேர்தல் | கேமரன் மலை, ‘தோக் பாத்தின்’களை (பூர்வக்குடியினர் கிராமத் தலைவர்கள்) அச்சுறுத்தியது பற்றி, பிகேஆர் செனட்டர் போப் மனோலன் விளக்கப்படுத்த வேண்டுமெனக் கட்சியின் தலைவர் அன்வார் வலியுறுத்தியுள்ளார். "ஜனநாயகத்தில் எந்தக் கட்டாயமும் இல்லை, போப் உடனடியாக தனது அறிக்கையை விளக்க வேண்டும்," என்று அவர் டுவிட்டரில்…

கேவியஸ் : ரம்லியை எனக்குப் பிடிக்கும், அவர் நல்லவர்

கேமரன் இடைத்தேர்தல் | எதிர்வரும் ஜனவரி 26-ல், கேமரன் மலை இடைத்தேர்தலில், பாரிசான் நேசனல் வேட்பாளராக ரம்லி முகமட் நோர்-ஐ நிறுத்திய பிஎன் முடிவை எம் கேவியஸ் பாராட்டினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கேமரன் நாடாளுமன்றத் தொகுதியில் அவருடன் இணைந்து பணியாற்றிய போது, அந்த முன்னாள் போலீஸ் கமிஷனரைத்…

சீனப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ரிம12 மில்லியன் ‘தேர்தல் இனிப்புகள்’ அல்ல, துணை…

  புத்ரா ஜெயா 62 சுயேட்சை உயர்நிலை சீனப்பள்ளிகளுக்கும் நியு இரா யுனிவர்சிட்டி கல்லூரிக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தல் நியமன நாளுக்கு முந்திய நாளில் ரிம12 மில்லியன் வழங்குகிறது. இது சம்பந்தமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணைக் கல்வி அமைச்சர் தியோ…

பெர்சத்து செமினி சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

  பெர்சத்து செமினி சட்டமன்ற உறுப்பினர் முகமட் பக்தியார் முகமட்நோர் இன்று அதிகாலையில் காலமானார். மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் போர்ஹாம் ஷா இதை உறுதிப்படுத்தினார். இன்று அதிகாலை மணி 4.45 அளவில் முகமட் பக்தியார் காலமானார்…

‘நானும் அவரும், ஒளிவுமறைவு இன்றி வெளிப்படையாகப் பேசிக்கொண்டோம்’

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரும் தானும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேச ஒப்புக்கொண்டதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார். "அவருடன் நேரடியாக என்னால் தொடர்புகொள்ள முடியும். இரகசியம் ஏதுமின்றி, வெளிப்படையாக பேச நாங்கள் ஒப்புக் கொண்டோம். "அவருடையக் கருத்தை அவர் சொன்னார், என்னுடையக் கருத்துகளை நான்…

தேசநிந்தனைச் சட்டம் : ஹராப்பான் தலைவர்கள் மௌனத்திற்கு, முன்னாள் பிகேஆர்…

தேச நிந்தனைச் சட்டம் 1948, தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை அறிந்தும், மௌனமாக இருக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களை, வழக்குரைஞர் என் சுரேந்திரன் சாடினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது, அந்தத் தலைவர்கள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தனர் என்றும் சுரேந்திரன் சொன்னார். “எதிர்க்கட்சியாக இருந்தபோது, தேசநிந்தனைச் சட்டத்தை எதிர்த்து நின்ற ஹராப்பான் தலைவர்களுக்கு…

மகாதிர்: உண்மையான சொந்தக்கார்கள் யார் என்பதை வெளிப்படுத்த வணிக நிறுவனங்கள்…

  வணிக நிறுவனங்களின் இலாபத்தை எடுத்துக்கொள்ளும் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்பதை வணிக நிறுவனங்கள் வெளிப்படுத்துவதற்காக அவற்றை கட்டாயப்படுத்த ஊழல் தடுப்பு சட்டங்களில் புதிய சட்டவிதிகள் சேர்க்கப்படும் என்று பிரதமர் மகாதிர் கூறினார். அரசாங்கத்தின் கவனத்திலிருந்து தப்புவதற்காக பல தொழில் நிறுவனங்களின் சொந்தக்காரர்கள் தங்களின் தொழில்களை மற்றவர்களின் பெயரில்…

மஇகா: இடைத் தேர்தலில் போட்டியிடாததற்கு ஆலய விவகாரம் ஒரு காரணம்

மஇகா கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வர, நவம்பர் 27-இல் நிகழ்ந்த சுபாங் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரமும் அதில் தீயணைப்புப் படைவீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிம் இறந்து போனதும்தான் காரணம். “சீபீல்ட் பிரச்னை காரணமாக மலாய் வாக்காளர்கள் இரு…

கிட் சியாங்: ரம்லி களமிறக்கப்படுவது பிஎன்னுக்குச் சாதகம் ஹரப்பானுக்குப் பாதகம்

கேமரன் மலை இடைத் தேர்தலில் பாரிசான் நேசனல் (பிஎன்), ரம்லி முகம்மட் நூரைத் தனது வேட்பாளராகக் களமிறக்குவதால் பக்கத்தான் ஹரப்பானின் வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதாக டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். போலீஸ் அதிகாரியாக சிறந்த பணியாற்றி ஓய்வு பெற்றவரான ரம்லி, கேமரன் மலையின் தவப்…

கேமரன் மலையில் முன்னாள் ஓராங் அஸ்லி போலீஸ் அதிகாரி பிஎன்…

ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலுக்கு முன்னாள் போலீஸ் அதிகாரியான ரம்லி முகம்மட் நூர்தான் தனது வேட்பாளர் என்பதை பிஎன் உறுதிப்படுத்தியது. நேற்றிரவு நடைபெற்ற பிஎன் உயர் தலைமைத்துவக் கூட்டத்தில் அவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது. இதனிடையே, மஇகா அத்தொகுதியில் போட்டியிடாததற்கு…

போட்டியிடுவதில்லை என்ற முடிவில் மஇகா உதவித் தலைவர் அதிருப்தி

ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ம இகா தலைமைத்துவம் எடுத்த முடிவால் கட்சி உதவித் தலைவர் டி.மோகன் அதிருப்தி அடைந்துள்ளார். என்றாலும், வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு என்ற தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் கருத்தை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து விலக மத்திய செயல்குழு செய்த முடிவை…

அமைச்சர்: தண்ணீர் கட்டணம் உயரலாம், ஆனால் ‘மக்களுக்குச் சுமையாக இராது’

நாட்டில் நீர் விநியோகத் தொழிலை அரசாங்கம் திருத்தி அமைத்து வருவதால் இவ்வாண்டில் நீர் கட்டணம் கட்டம் கட்டமாக உயர்த்தப்படலாம். பயனீட்டாளர் நலன் காக்கவும் அவர்களுக்குத் தரமான நீர் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் கட்டண உயர்வு அவசியமாகிறது என நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.…

கேமரன் மலையில் பல்முனைப் போட்டி?

ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள வேளையில் இதுவரை ஐந்து வேட்புமனுக்கள் விற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் அந்த மனு பாரங்களை வாங்கிச் சென்றதாக பகாங் இசி இயக்குனர் ஜம்ரி ஹமில் தெரிவித்தாக…

பினாங்கு பிகேஆர் தலைவர் நியமன விசயத்தில் அபிப், சைபுடின் நசுத்தியோன்…

பெர்மாத்தாங் பாவ் எம்பி நுருல் இஸ்ஸா திடீரென்று பதவி விலகியதை அடுத்து காலியான பினாங்கு பிகேஆர் தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதன் தொடர்பில் பிகேஆர் தலைவர்கள் இருவரிடையே கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அவ்விவகாரத்தில் அவசரப்படாமல் “பொறுமையாக இருப்பீர், கட்சித் தலைவரின் அதிகாரத்தை மதிப்பீர்” என்று அறிவுறுத்திய தலைமைச்…

கேமரன் மலை இடைத்தேர்தல் : பி.எஸ்.எம். போட்டியிடாது

ஜனவரி 26-ல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) போட்டியிடாது என அக்கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார். கட்சி விரும்பும் குணாதிசயங்களைக் கொண்ட வேட்பாளர்கள் இல்லாததால், அங்கு இம்முறை போட்டியிடப்போவதில்லை என்று அவர் சொன்னார். “கேமரன் மலையைச் சார்ந்த, அங்குள்ள…