ஜிஎஸ்டி-யை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை- மகாதிர்

பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யை மீண்டும் கொண்டுவரும் திட்டம் அரசாங்கத்துக்கு இப்போதைக்கு இல்லை என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார். “அது குறித்து இன்னும் நாங்கள் விவாதிக்கவில்லை. “அது குறித்து (அரசாங்கம் ஜிஎஸ்டி-யைத் திரும்பக் கொண்டு வருவது பற்றி) ஆலோசிக்குமா என்று செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது அது மக்களின்…

இசா சமட் ரிம3 மில்லியனுக்குமேல் கையூட்டு பெற்றார்- அரசுத் தரப்பு

இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் அம்னோ அரசியல்வாதி முகம்மட் இசா சமட் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. ஃபெல்டா முதலீட்டுக் கழகம்(எஃப்ஐசி) கூச்சிங்கில் ஆடம்பர தங்குவிடுதி ஒன்றை வாங்குவதற்கு ஒப்புதல் கொடுத்ததற்காக ஃபெல்டா முன்னாள் தலைவர் இசா சமட்டுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மெர்டேகா பேலஸ் ஹோட்டலின்…

தகவல் அளிப்போருக்கு வெகுமதி: வரவேற்கிறது டிஐ-மலேசியா

ஊழல் கண்காணிப்பு அமைப்பான ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா (டிஐ-எம்) அரசாங்க அமைப்புகளில் நிலவும் ஊழல் பற்றித் தகவல் அளிப்போருக்கு ரிம30,000வரை வெகுமதி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்திருப்பதை வரவேற்கிறது. எம்ஏசிசி கையூட்டையும் ஊழலையும் ஒழிக்கும் போராட்டத்தில் வெற்றிபெற தகவலளித்து உதவுமாறு டிஐ-எம் அரசு…

ஏழைகளைச் சென்றடையாத வளத்தால் பயனில்லை- ஹசான் கரிம்

பக்கத்தான் ஹரப்பான் முன்வைத்துள்ள நாட்டின் வளத்தைப் பகிர்ந்துகொள்ளும் 2030 தொலைநோக்குத் திட்டம்(எஸ்பிவி2030) வளம் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு அது பி40 தரப்பினரையும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என பாசிர் குடாங் எம்பி ஹசான் கரிம் வலியுறுத்தினார். “2020 தொலைநோக்குத் திட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மலேசியா ஒரு வளர்ந்த…

திங்கள்கிழமை நாடாளுமன்றக் கூட்டம்: பட்ஜெட் முக்கிய இடம் பெற்றிருக்கும்

இரண்டு மாதங்களுக்குமேலாக ஒத்தி வைகக்ப்பட்டிருந்த நாடாளுமன்றக் கூட்டம் திங்கள்கிழமை மறுபடியும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் 2020 பட்ஜெட் முக்கிய இடம் பெறும். இவ்வாண்டுக்கான நாடாளுமன்றத்தின் இந்த மூன்றாவது கூட்டம் 36 நாள்களுக்கு நீடிக்கும். இதில் பல புதிய சட்டவரைவுகளும் ஏற்கனவே உள்ள சட்டங்களுக்குத் திருத்தங்களும் தாக்கல் செய்யப்படும் என…

செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது…

மக்களிடம் பக்கத்தான் ஹரப்பானுக்கு உள்ள செல்வாக்கு 37 விழுக்காடுதானாம். ஆகஸ்ட் மாதக் கருத்துக்கணிப்பு ஒன்று காண்பிக்கிறது. . செல்வாக்கு இந்த அளவு சரிந்து போயுள்ள நிலையில் அது தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் களமிறங்குவதை எண்ணி கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். மெர்டேகா மையம் மேற்கொண்ட ஒர் ஆய்வின் முடிவுகள் ஷா…

சாலே: பிகேஆர் பல்லினக் கட்சி என்பதால்தான் அதில் சேர விண்ணப்பித்தேன்

சாபாவின் முன்னாள் முதலமைச்சரும் கூட்டரசின் தொடர்பு, பல்லூடக அமைச்சருமான சாலே சைட் கெருவாக் பிகேஆர் ஒரு பல்லினக் கட்சியாகவும் தன் அரசியல் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் கட்சியாகவும் இருப்பதால்தான் அதில் சேர விரும்பியதாகக் கூறினார். அக்கட்சியின் பல்லின அமைப்பும் முற்போக்கு அரசியலும்தான் மலேசியாவைத் தீவிரவாதத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்றாரவர். “நான்…

கட்சித்தாவல் தப்பல்ல என்ற மகாதிர் கருத்தை ஏற்க மறுக்கிறார் டிஏபி…

அரசியல்வாதிகள் நியாயமான காரணத்துக்காகக் கட்சி தாவுவதை ஏற்றுக்கொள்ளலாம் என்று டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பது “வருத்தத்துக்குரியது” என்கிறார் டிஏபி தேசிய சட்டப் பிரிவுத் தலைவர் ராம்கர்ப்பால் சிங். கட்சித் தாவல் “கொள்கையற்றது” என்பதால் அதை ஊக்குவிக்கக் கூடாது என்றாரவர். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தனிப்பட்டவர்கள் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, கட்சிக்காகத்தான்…

கம்போங் பாருவில் 90 விழுக்காட்டு நில உரிமையாளர்கள் நிலத்தை விற்க…

கம்போங் பாரு நில உரிமையாளர்களில் 90 விழுக்காட்டினர் அரசாஙகம் கொடுக்க முன்வந்த ஒரு சதுர அடிக்கு ரிம850 என்னும் விலைக்கு நிலத்தை விற்க முன்வந்தார்கள் என்று ஊடகங்களில் வெளிவந்த செய்தி சரியல்ல என்கிறார் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட். நிலத்தை விற்பதற்கும் கம்போங் பாரு மேம்பாட்டுத் திட்டத்துக்கும்…

உலக தடகள விளையாட்டுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் மலேசியர்…

உலக தடகள விளையாட்டுகளில் பெரிய சாதனை புரியாவிட்டாலும் அப்போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் மலேசியர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஹப் வெய். 32-வயதினரான அவர், செவ்வாய்க்கிழமை டோஹாவில் கலிபா அனைத்துலக அரங்கில் நடைபெற்ற பி பிரிவு தகுதிச் சுற்றில் 2.29 உயரம் தாண்டி இறுதிச் சுற்றுக்குத்…

தெங்கு அட்னான் வழக்கு: ரிம2 மில்லியன் அம்னோ கணக்கில் செலுத்தப்பட்டதற்கு…

தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் வழக்கில் ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் ரிம2 மில்லியன் அம்னோ கணக்கில் செலுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை என்று அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சரான தெங்கு அட்னான், அசெட் காயாமாஸ் சென். பெர்ஹாட் இயக்குனர் சாய் கின் கோங்கிடமிருந்து 2016, ஜூன்…

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: வியூகம் அமைக்க பக்கத்தான் நாளை…

பக்கத்தான் ஹரப்பான் நாளை அதன் கூட்டத்தில் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலுக்கு வியூகம் அமைப்பது குறித்து விவாதிக்கும் என பெர்சத்துக் கட்சித் தலைவர் முகைதின் யாசின் கூறினார். அக்கூட்டத்துக்கு அவரே தலைமை ஏற்பார். “நாளை இரவு நான் மூவாரில் இருப்பேன். அங்கு மத்திய நிலை தேர்தல் குழுக் கூட்டத்துக்குத்…

தஞ்சோங் பியாயில் மசீசதான் போட்டியிட வேண்டும்- அம்னோ உச்சமன்ற உறுப்பினர்

அடுத்த மாதம் தஞ்சோங் பியாயில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பிஎன் மசீச வேட்பாளரைக் களமிறக்க வேண்டும் என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர். வாக்காளர்கள் மலாய்க்காரர்- அல்லாத எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பாகும் என்று லொக்மான் ஆடம் கூறினார். 57 விழுக்காடு வாக்காளர்கள்…

பாதி வேலைதானே முடிந்துள்ளது, எப்படி பதவி மாற்றத்துக்கு நாள் குறிப்பது?-…

டாக்டர் மகாதிர் முகம்மட் எப்போது பிரதமர் பதவியை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார் என்பது தொடர்பாக பல மாதங்களாக பல்வகை ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று அவரிடமே இக்கேள்வி முன்வைக்கப்பட்டது. பிரதமர் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக இன்னும் செய்ய வேண்டிய வேலை நிறைய இருப்பதாக…

நஜிப் மீண்டும் பிஎன் தலைவராக வேண்டும்- அம்னோ இளைஞர்

அம்னோ இளைஞர் நிர்வாகக் குழு உறுப்பினர் ஷாருல் நஸ்ருன் கமருடின் பிஎன் உறுப்புக் கட்சிகள் நஜிப் அப்துல் ரசாக்கை மீண்டும் பிஎன் தலைவராக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அம்னோ, மசீச, மஇகா தலைவர்கள் ஹிஷாமுடின் உசேனை பிஎன் தலைமைச் செயலாளராக நியமிக்க உடன்பட்டிருப்பதாக ஒரு செய்தித் தளம் தெரிவித்திருப்பதை…

போலீஸ்: நால்வருக்கும் அடிப் மரணத்துக்கும் தொடர்பில்லை; அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பி…

கடந்த டிசம்பரில் போலீசால் தடுத்து வைக்கப்பட்ட நால்வருக்கும் தீ அணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் மரணத்துக்கும் தொடர்புண்டு என்பதற்குத் தெளிவான சான்று எதுவும் இல்லை. ஆதலால் அந்நால்வரும் வெளிநாட்டுக்குத் தப்பி ஓட வேண்டிய அவசியமில்லை என கூட்டரசு சிஐடி (வழக்குத் தொடுத்த, சட்டப் பிரிவு) தலைமை…

பினாங்கு பள்ளி பிரார்த்தனை விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரணை

கடந்த வாரம் பினாங்கு மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் ஒரு விருதளிப்பு நிகழ்வில் கிறிஸ்துவ பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் போலீஸ் இதுவரை ஐவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. போலீஸ் அதன் விசாரணைக்கு உதவியாக மேலும் ஒன்பதின்மரை அழைக்கும் எனத் தெரிகிறது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோரிடமும் மற்றவர்களிடமும்…

2013-இலிருந்து பயங்கரவாதிகளின் 25 திட்டங்களை போலீஸ் முறியடித்தது

2013-இலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் கிறிஸ்துவ, இந்து, பெளத்த வழிபாட்டு இல்லங்களையும் கேளிக்கை மையங்களையும் தாக்கும் 25 பயங்கரவாதத் திட்டங்களை போலீஸ் முறியடித்திருக்கிறது. பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிடல், தாக்குதலுக்குப் பணம் திரட்ட முற்படல் உள்பட, பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள குற்றங்களுக்காக 74 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப்…

கல்வி அமைச்சு எல்லா சமயங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்

அரசுசார்பற்ற அமைப்பான பூசாட் கோமாஸ், கல்வி அமைச்சு எல்லா சமயங்களையும் நம்பிக்கைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பினாங்கு மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் ஒரு விருதளிப்பு நிகழ்வில் கிறிஸ்துவ பிரார்த்தனை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதற்காக அப்பள்ளிக்குக் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அந்த என்ஜிஓ அவ்வாறு…

மூத்த அரசியல்வாதி சைட் உசேனைக் கண்டிக்கும் தகுதி சைட் சாதிக்குக்கு…

பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி,   பிகேஆர் நிறுவனர் சைட் உசேன் அலியைக் கண்டித்த பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானைக் கடுமையாக சாடினார். பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குத் துதிபாடும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தனக்கும் பிரச்னை எதுவுமில்லை என்று கூறிய அந்த…

அடிப் மரணம் :தடுத்து வைக்கப்பட்ட நபர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி…

அம்னோ எம்பி நோ ஒமார், அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற அமர்வில் தீ அணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணம் தொடர்பில் முன்பு தடுத்து வைக்கப்பட்ட நான்கு சந்தேகப் பேர்வழிகள் குறித்து மீண்டும் கேள்வி கேட்கப் போவதாகக் கூறியுள்ளார். கடந்த அமர்வில் அதே கேள்வியை எழுப்பியதாகவும் அதற்குச்…

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் நவம்பர் 16-இல்

தேர்தல் ஆணையம், ஜோகூர், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 16-இல் என்று அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய நாள் நவம்பர் 2. அத்தொகுதி, செப்டம்பர் 21-இல் பெர்சத்து எம்பி டாக்டர் முகம்மட் ஃபாரிட் முகம்மட் ரஃபிக் காலமானதை அடுத்து காலியானது.…

‘வருமான உத்தரவாதம் வேண்டும்!’ ஃபூட்பண்டா தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லாத, புதியக் கட்டணத் திட்ட அறிமுகத்தை எதிர்த்து, ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஃபூட்பண்டா தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஊடக அறிக்கையின்படி, கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியே, செப்டம்பர் 30, 2019 முதல் 3 நாட்கள், ஃபுட்பண்டா ரைடர்ஸ் இந்த வேலைநிறுத்தத்தில் இறங்கவுள்ளனர். ஜொகூர், மலாக்கா,…