‘திருடர்களும் கொள்ளைக்காரர்களும் சேர அனுமதிக்கப்பட்டால், நான் பெர்சத்துவிலிருந்து விலகுவேன், சைட்…

  பெர்சத்துவில் 'திருடர்களும் கொள்ளைக்காரர்களும்' சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டால் அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்வேன் என்று பெர்சத்துவின் இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சடிக் கூறுகிறார். எந்தத் திருடர்களும் கொள்ளைக்காரர்களும் பெர்சத்துவில் சேர்ந்தால், நானே அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்வேன். அம்மாதிரியான ஒன்று நடப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். பெர்சத்துவின் தலைமைத்துவம் இதில்…

நஜிப்: எஸ்எஸ்டிதான் விலை உயர்வுக்கு காரணம், கேஎப்சி அதற்கு ஓர்…

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) போல் விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி)யில் வெளிப்படைத்தன்மை குறைவு அதுதான் சமூக ஊடகங்களில் கெண்டக்கி பொறித்த கோழி(கேஎப்சி) விலை உயர்ந்திருப்பதாக செய்தி பரவலாவதற்குக் காரணம் என்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். கேஎப்சியே நேற்றிரவு அதன் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதற்கு எஸ்எஸ்டி…

அடிப் மரணம் மீதான விசாரணை விரைவில் நடத்தப்படும், முகைதின் கூறுகிறார்

காலஞ்சென்ற தீயணைப்புப் படை வீரர் முகம்மட் அடிப் முகமட் காசிம் மரணத்தின் மூலகாரணங்களைக் கண்டறிவதற்காக ஒரு முழு விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படும் என்பதை உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் உறுதிப்படுத்தினார். சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸுடன் கலந்தாலோசித்தப் பிறகு அது குறித்து தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக முகைதின் தமது…

ஆடிப்-பின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு மாதத்தில் தயாராகும்

தீயணைப்பு வீரர் முகமட் ஆடிப் முகமட் காசிம்மின், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை, ஒரு மாதக் காலத்தில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நோயியல் வல்லுநர்கள் நினைத்தால், அந்தக் கால அளவு தேவைப்படும், மேலும் விதிமுறைப்படி, ஒரு மாதம் எடுக்க வாய்ப்புள்ளது என…

கேமரன் மலை இடைத்தேர்தலில் மனோகரன் போட்டியிட வேண்டும், பஹாங் டிஏபி…

எதிர்வரும் ஜனவரி 26-ல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில், வழக்குரைஞர் எம் மனோகரன் போட்டியிட வேண்டும் என பஹாங் டிஏபி பரிந்துரைத்துள்ளது. கடந்த 2013 தொடக்கம், கேமரன் மலை தொகுதியில் சேவையாற்றி வருவதால், அங்குப் போட்டியிட மனோகரன்தான் தகுதியான வேட்பாளர் என்று பஹாங் டிஏபி தலைவர், லியோங் ங்கா…

தாபோங் ஹரப்பான் ரிம200 மில்லியன் இலக்கை அதன் இறுதி வாரத்தில்…

  புத்ரா ஜெயாவின் தாபோங் ஹரப்பான் அதன் ரிம200 மில்லியன் திரட்டும் இலக்கை அது இன்னும் ஒரு வாரத்திற்குள் மூடப்படுவதற்கு முன்பே எட்டிவிட்டது. இன்று பிற்பகல் மணி 3.00 அளவில், அந்த நிதியம் ரிம200,032,580.24-ஐ பெற்றிருந்தது. பெடரல் அரசாங்கத்தின் கடனைக் குறைக்கும் முயற்சியாக மக்கள் நிதி உதவி அளிப்பதற்கு…

அஸ்வாண்டினிடமிருந்து ரிம30 மில்லியன், மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் அமைச்சர்…

  அமைச்சர் தெரெசா கோ ஜாரிஞான் மிலாயு மலேசியா (ஜெஎம்எம்)-வின் தலைவர் அஸ்வாண்டினிடமிருந்து அவர் கூறியதைத் திரும்பப் பெறுதல், மன்னிப்பு கோருதல் மற்றும் ரிம30 மில்லியன் இழப்பீடு ஆகியவற்றை கோருகிறார். சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு கலவரத்தில் தம்மைத் தொடர்பு படுத்தி…

என்ஜிஓ தலைவர் அஸ்வாண்டின் கைது செய்யப்பட்டதாக ஜேஎம்எம் கூறுகிறது

ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) அதன் தலைவர் அஸ்வாண்டின் ஹன்சாவைப் போலீசார் கைது செய்துவிட்டதாகக் கூறிக்கொள்கிறது. அதன் மின்னஞ்சல் ஒன்று அஸ்வாண்டின் இன்று பிற்பகல் 2.45க்கு டத்தோ கிராமாட்டில் கைது செய்யப்பட்டு கிள்ளான் உத்தாரா போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறிற்று. முன்னதாக, சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில்…

டிபிஎச் மரணம்மீது விரைவான விசாரணை தேவை- டிஏபி இளைஞர் அணி…

அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதற்காக தியோங் பெங் ஹொக் மரணம் மீதான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று டிஏபி இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. அதன் செயல்குழு உறுப்பினர்களான லியோங் யு செங், டான் தியோங் ஈய், வூ கா லியோங் ஆகியோர் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில், தியோவின் மரணம்மீது…

‘காவல் நிலையத்தைத் தாக்குவேன்’ என்று மிரட்டிய அஸ்வான்டின்மீது போலீஸ் விசாரணை

நேற்றைய பேரணியில் சினமூட்டும் வகையில் பேசிய அஸ்வான்டின் ஹம்சாமீது போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. கிறிமினல் மிரட்டல் விவகாரங்கள் தொடர்பான குற்றவியல் சட்டம் 506-ஆவது பிரிவின்கீழ் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில் அஹமட் கூறினார். அவரை வினவியதற்கு, “பிரிவு 506-இன்கீழ் விசாரணை நடக்கிறது”, என்று குறுஞ் செய்திவழி…

வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலக்குங்கள், அரசாங்கத்திற்கு 40 நாள் அவகாசம்

கெராக்கான் ரக்யாட் மலேசியா இயக்கம் (கெராஸ்), தங்களது ஏழு கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு 40 நாள்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது. இன்று, செனி கிள்ளான் சதுக்கத்தில் கூடிய அவர்கள், தீயணைப்பு வீரர் முகமது ஆடிப் முகமது காசிம் இறப்பிற்கு நீதி கேட்டும் பொ வேதமூர்த்தியைப்…

மலேசியா.. மலேசியர்களுக்காக, சித்தி காசிம்

அன்பு செலுத்தவும் உதவி நல்குவதற்குமான பருவம் இது. ஆனால், இதற்கு மாறாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? வெறுப்பைக் காட்டுவதற்கான பருவத்தைப் போல ஒரு சில தரப்பினர் செயல்படுகின்றனர். இதற்காக ஒரு பலியாட்டை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர்களைப் போல.. இப்படிப்பட்ட சந்தர்ப்ப்பத்தை உருவாக்கி,தங்களின் வஞ்சத்தை வெளிப்படுத்துகின்றனர். இப்படிப்பட்டவர்கள், அதிகாரத்தை…

பாஸ் தலைமைச் செயலாளர் கிறிஸ்மஸ் வாழ்த்துத் தெரிவித்தார்

கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி பாஸ் தலைமைச் செயலாளர் தகியுட்டின் ஹசான் கிறிஸ்மஸ் வாழ்த்துத் தெரிவித்தார். “கிறிஸ்மஸ் கொண்டாடும் மலேசியர் அனைவருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ். நாம் நேசிக்கும் இந்நாட்டில் அனைவரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோமாக. “மலாயாப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்விப் புலத்தில் என்னுடன் பயின்ற பெரும்பாலோர் மலாய்க்காரர்- அல்லாதார்தான். இன்றும்…

அம்னோவை மிகவும் நெருங்கிச் சென்றால் பாஸும் மூழ்கிவிடும்- ஹாடி

அம்னோ மூழ்கிக் கொண்டிருப்பதால் அதனுடன் இணைவது நடக்கக்கூடியதல்ல என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். “அம்னோ இப்போது மூழ்கிக் கொண்டிருக்கிறது. கடலுக்குப் போகும்போது மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலுக்கு அருகில் சென்றால் நாமும் சேர்ந்து மூழ்கி விடுவோம். “ஓட்டை விழுந்த கட்சியுடன் இணைவது தொல்லை மிக்கது”, என்றவர்…

ஊழல்  பெருச்சாளிகள்…!

கி.சீலதாஸ். வருமானம்  போதாது.  ஆனால்  மற்றவர்கள்  சிறப்பாக  வாழ்வதைப்  பார்த்து  புழுங்கி  அவர்களைப்போலவே  வாழவேண்டும்  என்ற  ஆசை  கொண்டவருக்கு  பாழ்நிலை  காத்திருக்கின்றது.  தம்முடைய  வருவாய்,  ஆடம்பர  வாழ்க்கைக்கு  உதவாதபோது  எப்படியாவது  அந்த  உயரிய  அந்தஸ்தை   அடைந்தாக  வேண்டும்  என  நினைப்பது  பேராசையாகும்.  இருப்பதை  வைத்து  திருப்தி  அடையாமல்  மேற்கொண்டு …

இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ இடமுண்டு, சேவியர்

  மலேசியர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பண்டிகையின் சிறப்பே இருப்போர் இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவது மட்டுமின்றி அன்பை அனைவரிடமும் பரிமாறிக் கொள்வதில்தான் உள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து      கிறிஸ்த்துவ குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியான, கிறிஸ்துமஸ் தினமாக இன்றும் இனி…

ரோன்95 ரிம1.86 ஆகத்தான் இருக்க வேண்டும்: நஜிப் கூறிக்கொள்கிறார்

அரசாங்கத்துக்கு மக்கள்தான் நிதியுதவி செய்கிறார்களாம். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ள போதிலும் எரிபொருள் விலையில் மாற்றமில்லாதிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். சிங்கப்பூரில் பிளாட்ஸ் நிறுவனம் வெளியிட்ட எரிபொருள் விலை நிலவரப்படி ரோன்95 ஒரு லிட்டருக்கு ரிம1.86 ஆகத்தான் விற்கப்பட வேண்டும்…

கோயில் கலவரம் : 6 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

கடந்த மாதம், சுபாங் ஜெயா, யு.எஸ்.ஜே. 25, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அறுவர், இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். முகமட் ஷாரில் டேனியல் சாஜெல், 22, முகமட் சைபுல்லா அப்துல்லா, 31, முகமட் ஹஸ்னீஜாம் ஷா, 29, அக்மால் இஸ்ஸாட்…

‘நாங்கள் வேதாவை ஆதரிக்கிறோம்’ – சித்தி காசிம் பிரதமரிடம் மனு

இன்று காலை, சுமார் 50 பேர் கொண்ட குழு ஒன்று, வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் சித்தி காசிம் தலைமையில், புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், ஒற்றுமை துறையமைச்சர் பொ வேதமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குறிப்பாணையை ஒப்படைத்தது. பிரதமர் துறையமைச்சரான வேதாவுக்குத் தங்கள் ஆதரவைக் காட்ட,…

பத்து பிகேஆர் சர்ச்சையைத் தீர்த்து வைக்க முன்வந்தார் தியான் சுவா

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, பத்து எம்பி பி.பிரபாகரனும் அத்தொகுதி பிகேஆர் உதவித் தலைவர் ரோசன் அஸனும் சர்ச்சையிடுவதை நிறுத்திக் கொண்டு ஒருவர் மற்றவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். பத்து பிகேஆர் தொகுதித் தலைவரான சுவா, அவ்விருவரும் பொதுவில் சர்ச்சையிட்டுக் கொள்வது தவறு என்றும்…

ரஃபிசி ஹராப்பானுக்கு உதவ வேண்டுமே ஒழிய, ஒதுக்கக்கூடாது

நாட்டை நிர்வகிப்பதில், ரஃபிசி ரம்லி பக்காத்தான் ஹராப்பானுக்கு உதவி செய்ய வேண்டுமே ஒழிய, அக்கூட்டணியை விமர்சிக்கக் கூடாது என தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் ரெட்ஷுவான் யூசோஃப் கூறியுள்ளார். "ரஃபிசி கெட்டிக்காரர், அவர் எங்களைத் தவறாக வழிநடத்தாது, ஒரு நல்ல திசையில் நாட்டை நிர்வகிக்க உதவ வேண்டும்," என…

பாஸ் சமயத் தலைவர்கள் இருவர், கிறிஸ்மஸ் தொடர்பாக இரு வேறு…

பாஸ் இளைஞர் தலைவர் முகம்மட் காலில் அப்துல் ஹாடி, முஸ்லிம்கள் நாளை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளார். கிறிஸ்மஸ் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்றாரவர். முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் கிறிஸ்மஸ் வாழ்த்துகளைப் பதிவு செய்யவும் கூடாது. அது கிறிஸ்துவ சமயத்தை அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும் என்றும்…