மாபுஸ்: பேரணி தேவையில்லை, பணத்தைப் பள்ளிப் பிள்ளைகளின் செலவுக்குப் பயன்படுத்தலாம்

அமனா எம்பி மாபுஸ் ஒமார், ஐசெர்ட்- எதிர்ப்புப் பேரணிக்கு ஏற்பாடு செய்வோருக்கு நிதி நிர்வாகம் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார். அரசாங்கம் ஐசெர்ட் -டில் கையொப்பமிடுவதில்லை என்று முடிவு செய்து விட்டதால் கோலாலும்பூரில் டிசம்பர் 8-இல் பேரணி நடத்த வேண்டிய அவசியமே இல்லை என பொக்கோக் சேனா எம்பி…

ஐசெர்ட் பேரணியை நஜிப் ஆதரிக்கிறார்

எதிர்வரும் சனிக்கிழமையன்று, அனைத்து வகையான இனவாதப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சர்வதேச மாநாட்டிற்கு (ஐசெர்ட்) எதிரான பேரணியில், தனது ஆதரவாளர்களைக் கலந்துகொள்ளும்படி நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டார். முஸ்லீம்களும் மலாய்க்காரர்களும் வெற்றிகரமாக இணையும் ஒரு பேரணி என்ற வரலாற்றை அது உருவாக்க வேண்டும் என்று அந்த முன்னாள் பிரதமர் சுட்டிக்…

’ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்கும் வாக்குறுதியை ஹரப்பான் நிறைவேற்றும்’

பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது வெறும் பேச்சல்ல என்று மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறினார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஆற்றல் அரசாங்கத்துக்கு உண்டு என்று கூறிய அமைச்சர் இப்போது மனிதவளம் போதுமான அளவில் இல்லாதிருப்பதுதான் பிரச்னை என்றார்.…

உதவியாளர்: 1எம்டிபி வரலாற்றுப் பாடத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று மஸ்லி கூறவே…

கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் 1எம்டிபி விவகாரம் பள்ளி வரலாற்றுப் பாடத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்திகள் தவறானவை என்று அமைச்சரின் உதவியாளர் ஷாருல் அமான் முகம்மட் சாரி கூறினார். “பொந்தியான் எம்பி(அஹமட் மஸ்லான்)-இன் கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த மஸ்லி, 1எம்டிபி விவகாரம் மலேசிய வரலாற்றில் இடம்பெறும்…

ஜொகூர் மாநில அரசு பட்ஜெட் : தேவை அடிப்படையிலானது, இன…

ஜொகூர் மாநிலப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், 2019 வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது, இந்தியர்கள் மீது அக்கூட்டணிக்கு அக்கறை இல்லை என்பதையேக் காட்டுகிறது எனும் குற்றச்சாட்டை, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் மறுத்துள்ளார். பாரிசான் நேசனல் ஆட்சியின் போது, இந்தியச் சமூகத்திற்கு 8…

சீபீல்ட் தோட்ட கோவிலை நிலைநிறுத்தக் கோடீஸ்வரர்கள் நன்கொடை

  சுபாங் ஜெயா சீபீல்ட் தோட்ட ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்தக் கோடீஸ்வரர் வின்சன்ட் டானுடன் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் சுமார் 200 பொது மக்களும்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குச்  சீபில்ட் மகா மாரியம்மன்  ஆலயத்திற்கு வருகை…

மலேசியத் தமிழ்க்கல்வி தேசிய மாநாட்டில், 11 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன

கடந்த வாரம், பினாங்கில் நடைபெற்ற மலேசியத் தமிழ்க்கல்வி தேசிய மாநாட்டில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, 11 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன. மலேசியத் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்கான 11 தீர்மானங்கள் :- இந்தியர்கள் அதிகமாக வாழுமிடங்களில் புதிய ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளை நிறுவ வேண்டும். தமிழ்ப்பள்ளிகளை மேற்பார்வையிட, கூடுதலாக ஒரு துணைக் கல்வி…

கலவரம் பற்றிய விசாரணைக்கு உதவ சந்தேகப் பேர்வழிகள் ஆலயத்துக்குக் கொண்டு…

சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 25-இல் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் இன்று போலீஸ் விசாரணைக்கு உதவ ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். லாக்-அப் உடை அணிந்த அவர்கள் பிற்பகல் மணி 12.45க்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு 1.10 அளவில்…

ஜாஹிட்: பிஎன்னைக் கலைக்கச் சொல்லும் உரிமை மசீச-வுக்குக் கிடையாது

பிஎன் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, மசீச பிஎன்னைக் கலைக்க வேண்டும் என்று சொல்வது ஏன் என்பதைத் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் ஆனால், அது தன்னிலை உணர்ந்து பேச வேண்டும் என்றும் கூறினார். மசீச அதன் ஆண்டுக் கூட்டத்தில் பிஎன் கூட்டணியைக் கலைக்கும் அதிகாரத்தைக் கட்சித்…

மலேசியத் தமிழ்க்கல்வி மேம்பாட்டிற்காக முதல் தேசிய மாநாடு

கடந்த 26 மற்றும் 27 நவம்பரில், பினாங்கு மாநில அரசு மற்றும் பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்க ஏற்பாட்டில், மலேசியத் தமிழ்க்கல்வி தேசிய மாநாடு, பினாங்கு, செப்ராங் ஜெயா, தி லைட் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. ‘புதிய மலேசியாவில் தமிழ்க்கல்வியின் எதிர்காலம்’ எனும் கருப்பொருளில், மொத்தம்…

அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் சுய நலனை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல

அரசாங்கத்துக்கும் அதன் பணியாளர்களுக்கும் கடமையைச் செய்வதற்காக அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர அவர்களின் சுயநலத்துக்காக அல்ல என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நினைவுறுத்தினார். புத்ரா ஜெயாவில் பிரதமர் துறையின் மாதாந்திர பணியாளர் கூட்டத்தில் பேசிய மகாதிர், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் நாடு முன்னேற்றம் அடையாது. சமுதாயத்தில் ஒழுக்கமும் கெடும்…

மஸ்லி: 1எம்டிபி ஊழல் மலேசிய வரலாற்றில் பதிவு செய்யப்படும்

மலேசிய வரலாற்று நூல்களில் 1எம்டிபி விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள ஆவன செய்யப்படும், அப்போதுதான் அது போன்ற தவறு எதிர்காலத்தில் நடக்காது என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கூறினார். “அரசியல்வாதிகள் (நாட்டின் வளத்தைக்) கொள்ளையடிப்பதற்காக செய்த குற்றச் செயல்கள் எல்லாம் பதிவு செய்யப்படும்”. இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மஸ்லி…

கேமரன் மலை தேர்தல் ஊழல், எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியது

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), மே 9 பொதுத் தேர்தலின் போது, பஹாங், கேமரன் மலையில் நடந்த தேர்தல் ஊழல்களை விசாரிக்க தொடங்கியுள்ளது. விசாரணை ஆவணம் திறக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் அதில் மிகக் குறைந்த தகவல்களே இருப்பதாகவும், துணைத் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறியுள்ளதாக என்.எஸ்.தி. வலைத்தளம்…

அம்ப்ரின்: 1எம்டிபி அறிக்கை மீது எல்லாவற்றையும் நாளை விளக்குவேன்

1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கை மாற்றப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து நாளை பொதுக் கணக்குக் குழு(பிஏசி)வைச் சந்திக்கையில் விவரமாய் விளக்கப் போவதாக முன்னாள் தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் கூறினார். “டிசம்பர் 4-இல்(நாளை) முழுக் கதையையும் சொல்வேன். எல்லாவற்றையும் விளக்குவேன். அதன்பின் அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்”, என்று அம்ப்ரின்…

பிஎன்னைக் கலைக்கவும் புதிய கூட்டணி அமைக்கவும் மசீச-வில் தீர்மானம்

இன்று மசீச ஆண்டுக் கூட்டத்தில் பிஎன்னைக் கலைக்கவும் புதிய கூட்டணி அமைக்கவும் கட்சிக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய கூட்டணி பொருத்தமான நேரத்தில் உருவாக்கப்படும் என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார். நிறைய கருத்துப் பரிமாற்றத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்துக்குக் கூட்டத்தில் கலந்து ஒரே…

வழிபாட்டுத் தலக் கட்டுமானச் சட்டம் தயாராகிறது- ஜூரைடா

வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு, வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு அரசு ஒப்புதல் பெறுவதைக் கட்டாயமாக்கும் சட்டமொன்றை வரைந்து வருகிறது. இதனைத் தெரிவித்த அதன் அமைச்சர் ஜுரைடா கமருடின், அச்சட்டத்தின்படி இப்போதுள்ள வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். “சொந்த நிலத்தில் அமைந்திராத வழிபாட்டுத் தலங்களை இடமாற்றம் செய்யுமாறு…

அன்வார் : வேதமூர்த்தியின் அமைச்சர் பதவி, பிரதமரைப் பொறுத்தது

பி வேதமூர்த்தியின் அமைச்சர் பதவி, பிரதமர் டாக்டர் மகாதிரைப் பொறுத்தது என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். வேதமூர்த்தியைப் பதவி விலகச் சொல்லும் இப்ராஹிம் அலியின் வலியுறுத்தல் தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார். “கோவில் பிரச்சனையை நாம் முதலில் தீர்க்க வேண்டும்; இனப் பிரச்சனை எழாமல், சூழலை…

இந்திய அமைச்சர்கள் ‘மிகவும் அதிகம்’, பெர்காசா கூறுகிறது

பக்காத்தான் ஹராப்பான் அமைச்சரவையில், இந்திய அமைச்சர்களுக்கான கோட்டாவை மீண்டும் ஆய்வு செய்யுமாறு, பெர்காசா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. “தற்போது, இந்தியர்களில் 4 அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் இருக்கின்றனர், ஆக மொத்தம் 5…. இந்திய மக்கள் தொகை 7 விழுக்காடுதான், அதனோடு ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்,”…

இனவாதப் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம், பெர்க்காசாவுக்கு முகைதின் எச்சரிக்கை

உள்துறை அமைச்சர், முகைதின் யாசின், நாளை கோலாலம்பூரில் நடைபெறவுள்ள பேரணியில், இனவெறி தூண்டும் வகையிலான எந்தவொரு அறிக்கையையும் வெளியிட வேண்டாம் எனப் பெர்காசா பிரிபூமி அமைப்பிற்கு (பெர்காசா) நினைவுறுத்தியுள்ளார். "பொது ஒழுங்கிற்குக் கேடு விளைவிக்கும் அல்லது இன உறவுகளில் பதட்டத்தை ஏற்படுத்தும் எந்தவொரு அறிக்கையையும் நடவடிக்கையையும் தவிர்க்கவும். "இப்பேரணி…

கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் தேவை- டிஏபி இளைஞர்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சித் தாவுவதைத் தடுக்க பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் சட்டமியற்ற வேண்டும் என்று டிஏபி இளைஞர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். டிஏபி இளைஞர் தலைவர் பதவிக்காலம் முடிந்து வெளியேறும் வொங் கா வோ, அதுபோன்ற சட்டத்தைக் கொண்டுள்ள இந்தியா, தைவான், உகாண்டா, பாப்புவா நியு கினி முதலிய…

கோவில் பிரச்சனை : தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் 4…

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், யுஎஸ்ஜே 25-இல் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கோவில் சம்பவம் தொடர்பாக, 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நான்கு புலனாய்வு ஆவணங்களைப் போலிஸ் திறந்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் தொடர்பில், தாங்கள் பெற்ற போலிஸ் புகார்களைத்…

பெர்சத்து ஓர் இனவாதக் கட்சிதான் என்கிறார் மகாதிர்

பூமிபுத்ராக்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பதை அடிப்படையாகக் கொண்ட கட்சி பெர்சத்து. ஆகவே அது ஓர் இனவாதக் கட்சி என்பதை அக்கட்சியின் தலைவர் டாக்டர் மகாதிர் ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், அக்கட்சி இன-அடிப்படையற்ற கட்சிகளுக்கு, பிகேஆர், அமனா மற்றும் டிஎபி போன்ற கட்சிகளுக்கு, எதிரானதல்ல என்பதை அவர் வலியுறுத்தினார். பெர்சத்து ஒரு…

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் மலேசியாகினியைப் போல் தேர்தல் ஆணையம் வேகமாக…

சரிபார்க்கப்படாத தேர்தல் முடிவு குறிப்புகளைப் பெற்றவுடன் தேர்தல் ஆணையம் (இசி) அந்த முடிவுகளை உடனே வெளியிடும், அப்போதுதான் இசி மலேசியாகினியைப் போல் வேகமாக இருக்க முடியும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸ்ஹார் அஸிஸான் ஹருண் கூறுகிறார். நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பல நடவடிக்கைகளில் ஒன்று சரிபார்க்கப்படதா பாரம்…