ரிம1.6பி கூலிம் விமான நிலையத்தைக் கட்டப்போவது தனியார் துறை

கூலிம் அனைத்துலக விமான நிலையத்தைக் கட்டப்போவது தனியார் துறையாம். பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி இதைத் தெரிவித்தார். “யார் சொன்னது அரசாங்கம் என்று?”, என்றவர் வினவினார். “விமான நிலையம் கட்ட அரசாங்கத்திடம் பணமில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் தனியார் துறை முன்வந்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது அவசியம்”, என்று…

பாகிஸ்தானில் கார் பூட்டும் தொழிற்சாலையைத் திறக்கிறது புரோட்டோன்

தேசிய கார் தயாரிப்பு நிறுவனம் புரோட்டோன் பாகிஸ்தானில் அந்நாட்டு நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து கார்-பூட்டும் தொழிற்சாலை ஒன்றை நிறுவும். அதுவே தென் ஆசியாவில் அதன் முதலாவது தொழிற்சாலையாக அமையும். அதற்கான ஒப்பந்தத்தை புரோட்டோனும் பாகிஸ்தான் நிறுவனமொன்றும் செய்து கொண்டிருப்பதாக பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர் இக்ராம் முகம்மட் இப்ராகிம் கூறினார்.…

எம்ஏஎஸ்-ஸை மீட்டெடுக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை- அஸ்மின்

பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள மலேசிய விமான நிறுவனத்துக்குப் புத்துயிரூட்டும் நிலையில் அரசாங்கம் இல்லை எனப் பொருளாதார விவகார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி கூறினார். “எங்களால் முடிந்த அளவுக்கு நல்லதே செய்ய விரும்புகிறோம். பிரதமர் கூறியதுபோல் கடந்த ஐந்தாண்டுகளாக அதற்கு நிறைய பணம் செலவிடப்பட்டுள்ளது. மேலும் செலவிட போதுமான…

இயோ : பாசீர் கூடாங்கில் 46 இடங்கள் மாசு ஆபத்தில்…

ஜொகூர், பாசீர் கூடாங்கில் மொத்தம் 46 இடங்களில், மாசு ஆபத்து சாத்தியக்கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யின் கூறியுள்ளார். சுங்கை கிம் கிம்மில், இரசாயணக் கழிவு மாசுபாட்டின் ஆதாரங்களைத் தேடும் பணியின்போது, செயற்கைக்கோள் தரவுகளின் மூலம்…

முஹிடின் : தேச நிந்தனைச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் உள்ளது

உள்துறை அமைச்சர், முஹிடின் யாசின், தேச நிந்தனைச் சட்டம் 1948 இன்னும் நடப்பில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நீக்கப்படும்வரை அது பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், ஒரு முக்கியமான சிக்கலைக் கையாள்வதில், அதிகாரிகளின் தேவை மற்றும் கொள்கைகளைப் பொறுத்து அது அமையும் என்றும் அவர் சொன்னார். “சட்டப்படி, நீக்கப்படும்…

வன்தொடர்தலைத் தடுப்பீர்: அரசாங்கத்துக்கு எம்பி கோரிக்கை

அரசாங்கம் வன்தொடர்தலை (ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக பின்தொடர்வதை) ஒரு குற்றச்செயலாக்கும் சட்டத்தை விரைவில் கொண்டுவர வேண்டும் என்று கஸ்தூரி பட்டு(பக்கத்தான் ஹரப்பான் -பத்து கவான்) கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்போதைய அரசாங்கம் முந்தைய அரசாங்கம் செய்யத் தவறிய ஒன்றைச் செய்துகாட்டி தான் பெண்கள் நலன் நாடும் அரசு என்பதை நிறுவ…

எம்ஏஎஸ் விற்கப்படுமா?

தட்டுத்தடுமாறி நடைபோடும் மலேசிய விமான நிறுவனத்தை வாங்குவதற்குச் சிலர் முன்வந்திருப்பதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். அந்த விமான நிறுவனத்தைத் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய அவர், அரசாங்கம் அதை விற்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். “எம்ஏஎஸ்ஸை எனக்கு மிகவும் பிடிக்கும். எம்ஏஎஸ்…

இசிஆர்எல் செலவு குறித்து பிஎன்னிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்: எதிர்கட்சியைச்…

கிழக்குக் கரை ரயில் இணைப்பு(இசிஆர்எல்)க்கான  அதிகப்படியான செலவு குறித்து கேள்வி எழுப்பும் எதிரணி, பிஎன் அரசாங்கம் சீனாவுடன் அதற்கான ஏறுமாறான ஒப்பந்தம் செய்து கொண்டபோது அல்லவா அதைக் கேட்டிருக்க வேண்டும். இப்போது “காலம் கடந்து” கேட்கிறார்கள் எனக் கூறிய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , அதற்கான ஒப்பந்தம்…

மூன்று, நான்கு பாலங்கள் இருக்க வேண்டும், மகாதிர் கூறுகிறார்

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலானப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மூன்று அல்லது நான்கு பாலங்கள் தேவை என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். “ஆரம்பத்தில், குறைந்த எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களைக் கொண்டிருக்கும் பினாங்கு, அதன் முதல் பால நிர்மாணிப்பை எதிர்த்த போதிலும், தற்போது மூன்றாவது சுரங்கவழி பாலத்தை நிர்மாணிப்பதில்…

இனிப்புப் பானங்கள் வரியைக் கொண்டு பள்ளிகளுக்கு இலவச காலை உணவு

இனிப்புப் பானங்களுக்கான வரியால் கிடைக்கும் வருமானம் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியமான காலை உணவு இலவச வழங்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அடுத்த ஆண்டிலிருந்து இந்த வரி மூலமாகக் கிடைக்கும் வருமானம் எல்லாத் தொடக்கநிலைப் பள்ளிகளுக்கும் அரோக்கியமான இலவச காலை உணவு…

மக்களவை வர நோ-வுக்குத் தடை; பிஎன், பாஸ் வெளிநடப்பு

மக்களவைத் துணைத் தலைவர் ங்கா கொர் மிங், தம்மை இகழ்ந்துரைத்த நோ ஒமார்(பிஎன் -தஞ்சோங் காராங்) மூன்று நாள் மக்களவைக்கு வரக்கூடாது என இன்று தடை விதித்தார். “தஞ்சோங் காராங் வேண்டுமென்றே மக்களவையை அவமதித்துள்ளார், அவைத் தலைவரின் அதிகாரத்தை மதிக்கவில்லை, அவைத் தலைவர் அந்த இடத்தில் இருக்கத் தகுதியற்றவர்…

ரந்தாவ் இடைத்தேர்தலில், ஸ்ரீராம் வெற்றி அத்தியவசியமானது! – கா. ஆறுமுகம்

அம்னோ மற்றும் பாஸ் கூட்டணி ரந்தாவ் இடைத்தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டும். மலாய் மற்றும் இஸ்லாம் என்ற அடிப்படையில் இணைந்துள்ள இந்த கூட்டணி கேமரன் மலை மற்றும் செமிஞ்சி இடைத்தேர்தல்களில் வென்றது. அந்த வியூகம் இந்த முறை வென்றால அது பல்லின  அரசியலுக்கு ஒரு பின்னடைவாக அமையும். மலாய்காரக்கள்…

உடம்புப் பிடி நிலையங்களுக்கு அனுசரணையாக இருந்து வந்த போலீஸ் அதிகாரியும்…

தலைநகரில் உடம்புப் பிடி நிலையங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவை இயங்குவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 16 பேரை ஊழல்தடுப்பு ஆணையம்(எம் ஏசிசி) கைது செய்தது. அவர்களில் ஒருவர் ஒரு போலீஸ் நிலையத் தலைவர். அவர்கள் அனைவரும் நேற்றுக் காலை பத்து மணிக்கும் மாலை 5 மணிக்குமிடையில் கைது செய்யப்பட்டார்கள் என்று…

அம்னோவுடன் பாஸ் இணையாது- ஹாடி திட்டவட்டம்

இரண்டு வாரங்களுக்குமுன் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை முறைப்படுத்திக்கொள்ளும் நிகழ்வில் பேசிய அம்னோ தலைவர் அதை ஒரு “திருமணச் சடங்கு” என்று வருணித்திருந்தார். ஆனால், இப்போது இஸ்லாமியக் கட்சித் தலைவரோ அம்னோவும் பாஸும் ஒன்றிணைவது நடவாத காரியம் என்றும் அது கூடா உறவுமுறையாகிவிடும் என்றும் கூறுகிறார். அம்னோவுக்கும் பாஸுக்குமிடையிலான உறவுமுறை உடன்பிறப்புகளுக்கிடையிலான…

சுங்கை கிம் கிம் : இரசாயணக் கழிவு மாசு, போலிஸ்…

பாசீர் கூடாங், சுங்கை கிம் கிம், இரசாயணக் கழிவு மாசு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, கடந்த சனிக்கிழமை வரை 9 பேரை போலிஸ் கைது செய்துள்ளது. ஜொகூரில் இருவரும், ஜொகூருக்கு வெளியில் எழுவரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தலைவர், முகமட் ஃபூஸி ஹருண் தெரிவித்தார். இன்று தொடக்கம்…

சிங்கப்பூரில் இன்னொரு மலேசியருக்குத் தூக்குத் தண்டனை

போதை மருந்து கடத்தலுக்காக, மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் ஒருவரின் மன்னிப்பு முறையீட்டைத் தள்ளுபடி செய்து, அவரைத் தூக்கிலிட்ட 5 மாதங்களுக்குப் பின்னர், இந்த வாரத்தில் மற்றொருவரைத் தூக்கிலிட சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், கொலை குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட, சரவாக்கைச் சேர்ந்த மைக்கேல் காரிங்’கின்…

பி.ஏ.சி தலைவர் விவகாரம் : பிஎச், தேர்தல் அறிக்கையில் பிணைக்கப்பட்டுள்ளது…

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருப்பது போல், தேசியக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவர் பதவியில், எதிர்க்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்தான் நியமிக்கப்பட வேண்டும் என அன்வார் தெரிவித்தார். “தேர்தல் வாக்குறுதியில் நான் உறுதியாக இருக்கிறேன், ஆனால், இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் என்ன என்பதையும் நாம் கேட்டறிய…

‘இரட்டை நாக்கு’ மசீச: கெப்போங் எம்பி சாடல்

டிஏபி எம்பி லிம் லிப் எங், பிஎன்னில் தொடர்ந்து இருக்கப்போவதாகக் கூறியுள்ள மசீசவை ‘இரட்டை நாக்கு’ கொண்ட கட்சி என்று சாடினார். மசீசவுக்கு பிஎன் கூட்டணியிலிருந்து வெளியேறும் நோக்கம் இருந்ததே இல்லை என்று அந்த கெப்போங் எம்பி கூறினார். மசீச மத்திய செயல்குழு, பிஎன்னின் பல இன ஒத்துழைப்பை…

அம்னோ அக்கட்சியிலிருந்து வெளியேறிய மக்கள் பிரதிநிதிகள்மீது நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டது

அம்னோ, பக்கத்தான் ஹரப்பானுக்கு மாறிச் சென்ற அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை - அது செலவுமிக்கது என்பதால்- கைவிட்டதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன. அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் கட்சியை வலுப்படுத்துவதில்தான் மிகுந்த கவனம் செலுத்துகிறார் என்று அவை கூறின. “இப்போதைக்குக்…

அம்னோவின் ‘வலிமை’தான் மசீச-வை பிஎன்னில் தொடர்ந்து இருக்க வைத்துள்ளது -நஸ்ரி

மசீசவுக்கு அம்னோவின் வலிமைமீது நம்பிக்கை உள்ளது, அதனால்தான் அது பிஎன்னில் தொடர்ந்து இருக்க முடிவு செய்தது என்கிறார் பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அசிஸ். “நம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் பிஎன்னில் இருக்க மாட்டார்கள். “அம்னோ வலிமை வாய்ந்தது அதனால்தான் பிஎன்னில் ஒன்றாய் இருப்போம் என்றவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்”, என…

‘மனிதாபிமானம்’ காரணமாக ஶ்ரீராமை மாற்ற மனம் வரவில்லை

ரந்தாவ் இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நிறுத்தியது, மனிதாபிமான அடிப்படையில் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். ஶ்ரீராமுக்குப் பதிலாக வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த மனம் வரவில்லை என, இன்று, ரெம்பாவ்வில், சுமார் 500 பேர் கூடியிருந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் அன்வார் சொன்னார். “ஶ்ரீராம் ஓர்…

கெடா, பெண்டாங்கில் வெப்பஅலை நிலை 2-ல் உள்ளது

இன்று, தீபகற்ப மாநிலங்கள் ஒன்பதில் வெப்பஅலை நிலை 1-ல் - எச்சரிக்கை நிலை - இருந்தவேளை, கெடா, பெண்டாங்கில் 2-ம் நிலையில் - 37-ல் இருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை - இருந்தது. மலேசிய அளவியல் இலாகாவின் (மெட்ரோலோஜி) தகவல்படி, இன்று மாலை 5.20 மணி வரை,…

பாத்தாமில் 24 மணி நேரம்கூட இல்லை, ஜொகூர் எம்பி விளக்கம்

பாசீர் கூடாங் வட்டாரம், நச்சு மாசு பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இந்தோனேசியா, பாத்தாம் சென்றதன் காரணத்தை, இன்று ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சப்பியான் விளக்கினார். முன்னமே திட்டமிடப்பட்ட பயணம் என்பதால், பாத்தாம் சென்றதாக ஒஸ்மான் தெரிவித்தார். ஜொகூர், இந்தோனேசியா சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை…