‘ராயிஸுக்கு முன், கிட் சியாங் மீது நடவடிக்கை எடுங்கள்’

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணி ஆட்சியை இழக்கும் என்று நம்பும் அதன் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், ஒருதலைப்பட்சமாக இருக்க வேண்டாம் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகட்டை நஜிப் ரசாக் வலியுறுத்தினார். அந்த முன்னாள் பிரதமரின் கூற்றுப்படி, யாரையாவது முதலில் தண்டிக்க வேண்டுமானால், அந்த நபர் டிஏபி…

டாக்டர் எம் – அமைச்சரவையில் அன்வார்? தற்போதைக்குக் காலியிடம் இல்லை.

அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், தனது அமைச்சரவையில் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் அங்கம் வகிக்கமாட்டார் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது சூசகமாக தெரிவித்தார். "அமைச்சரவையின் (உறுப்பினர்களில்) எண்ணிக்கையில் எந்த மாற்றமும் அதிகரிப்பும் இல்லை. “இராஜினாமா செய்ய விரும்புவதாக யாரும் கூறாததால், எங்களுக்குக் காலியிடம் இல்லை (அன்வாரை ஆதரிக்க),"…

அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு- முஸ்டபா

முன்னாள் அமைச்சர் முஸ்டபா மீண்டும் அமைச்சராவார் என்று வதந்தி உலவுகிறது. அது குறித்து அவரிடமே கேட்டதற்குப் பதிலளிக்காமல் நழுவிய அவர், அதை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு என்றார். அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுவது பற்றியும் அவர் கருத்துரைக்க மறுத்தார். “அதெல்லாம் பிரதமரின்…

கடன்களைத் திரும்பப் பெற அரசாங்க அமைப்புகளின் உதவியை நாடுகிறது பிடிபிடிஎன்

தேசிய உயர்க் கல்வி கடனுதவி நிறுவனம் (பிடிபிடிஎன்) கொடுத்த கடன்களைத் திரும்பப் பெற, அரசாங்க அமைப்புகளுடன் கலந்து பேசி வருகிறது. குறிப்பாக நெடுநாளாகக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் கடனைத் திரும்பப் பெற மாறுபட்ட அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கூறினார். “கடன் வாங்குவோரில்…

திருமணமாகாத தாயார்களுக்கு உதவ சினிமா விளம்பரம்

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு, திருமணமாகாமலேயே குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு உதவ விளம்பரப் படமொன்றைத் தயாரித்துள்ளது. அந்த 30-வினாடி காணொளி குறித்து நேற்று டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்த துணை அமைச்சர் ஹன்னா இயோ, அதை சிசுக்கள் வீசியெறியப்படுவதைத் தடுக்கும் அமைச்சின் ஒரு முயற்சி என்று வருணித்திருந்தார். “மணமாகாமல்…

கிட் சியாங் : புதிய மலேசியாவை மறந்து, நான் பின்வாங்க…

தனது ஆதரவாளர்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதால், அரசியலில் இருந்து விலக அழைப்புகள் உருவாகியுள்ளதை லிம் கிட் சியாங் உணர்ந்துள்ளார். பல தசாப்தங்களாகப் போராட்டம் மற்றும் தியாகம் குறித்து பேசிய லிம், மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்க மாட்டேன் என்றும் புதிய மலேசியாவின் கொள்கைகள், நம்பிக்கைகள் மற்றும் குறிக்கோள்களை விட்டுவிட…

ஏஏடிசி கல்லூரி மாணவர்கள் பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது : பிடிபிகே…

இரண்டு நாட்களுக்கு முன்னர், போலிசாரால் கைது செய்யப்பட்ட ‘ஏலைட் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Allied Aeronautic Training Centre) தனியார் பயிற்சிக் கல்லூரியின் மாணவர்கள் எழுப்பிய பிரச்சினை, இன்று மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமூகமாத் தீர்க்கப்பட்டது. ஏஏடிசி மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு இடையே நடந்த…

சிங்க, கடல்நாக நடனங்களுக்கு விளையாட்டு அமைச்சின் அனுமதி தேவையில்லை

இளைஞர், விளையாட்டு அமைச்சு சிங்க, கடல்நாக நடனங்கள் நடத்த அமைச்சின் அனுமதி பெற வேண்டியதில்லை என விளக்கமளித்துள்ளது. சிங்க நடனம், கடல்நாக நடனம் எல்லாம் கலாச்சார நடவடிக்கைகள். அவை 1997 விளையாட்டு மேம்பாட்டுச் சட்டத்தின்கீழ் வரமாட்டா என்று அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது. சில தரப்புகள் சிங்க, கடல்நாக…

ஓராங் அஸ்லி பிள்ளைகளின் பள்ளிப் பேருந்துகளுக்கு அரசு பணம் கொடுக்கவில்லை-…

ஓராங் அஸ்லி பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு ஏற்றிச் செல்லும் பேருந்து உரிமையாளர்களுக்கு ஐந்து மாதங்களாக அரசாங்கம் பணம் கொடுக்கத் தவறிவிட்டது என கேமரன் மலை எம்பி ரம்லி முகம்மட் நோர் குற்றஞ்சாட்டியுள்ளார். பணம் கிடைக்காததால் பேருந்து உரிமையாளர்கள்- அவர்களில் பெரும்பாலோர் ஓராங் அஸ்லிகள்- துன்பப்படுகிறார்கள் என்றாரவர். ஓராங் அஸ்லி மேம்பாட்டுத்…

‘சவூதி நன்கொடை’ என்பது ஒரு கட்டுக்கதை- அரசுத்தரப்பு

1எம்டிபி ஊழல் விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்ததும் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் லோ டேக் ஜோவும் அதை மூடி மறைக்க முயன்றார்கள். “அரபு நன்கொடையாளர்” ஒருவர் முன்னாள் பிரதமருக்கு அள்ளிக் கொடுத்தார் என்று கூறி அதற்கு ஆதாரமாக போலி ஆவணங்களையும் தயாரித்ததும்…

பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் தேவைதானா? -வீ

மசீச தலைவர் வீ கா சியோங், தொடக்கநிலைப் பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியம்தானா என்று கேள்வி எழுப்புகிறார். ஆண்டுக்கு 200 நாள்கள் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2.7 மில்லியன் மாணவர்களுக்குக் காலை உணவளிக்க சுமார் ரிம1.6 பில்லியன் செலவாகும் எனக் கணக்கிடுகிறார் வீ. “இந்தத்…

கிட் சியாங் : ஜொகூரில் சுற்றுச்சூழல் மாநாட்டை ஏற்பாடு செய்ய…

இவ்வாண்டின் ஐந்து மாதங்களில், ஜொகூரில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களை மாநில அரசும் மத்திய அரசும் தீவிரமாகக் கண்கானிக்க வேண்டும் என இஸ்கண்டார் புத்ரி எம்.பி. லிம் கிட் சியாங் தெரிவித்தார். இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று…

பிரதமரின் ஆலோசகர்: வறுமை நிலையைப் பொறுத்தவரை உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

நாட்டின் வறுமை நிலவரத்தை அளவிட பொருளாதார அமைச்சு பயன்படுத்தும் அளவுகோல் காலத்துக்கு ஒவ்வாதது என்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் முகம்மட் அப்துல் காலிட். “ஒரு புதிய அளவுகோல் வறுமை விகிதம் அதிக உயர்வாக உள்ளது என்று காண்பித்தால் அதற்காக நாம் ஆத்திரப்படக்கூடாது. அதுதான் உண்மை. “ உண்மை நிலவரத்தை…

தலைவர்கள் கட்சிக் கூட்டங்களுக்கு வராமலிருப்பதை பிகேஆர் கட்டொழுங்குக் குழு விசாரிக்க…

சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில், பிகேஆர் தலைவர்கள் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். “கட்டொழுங்குக் குழு இதை விசாரிக்க வேண்டும்”, என்றவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. தொடர்ந்து கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்கும் தலைவர்களைக் கட்டொழுங்குக் குழுவின்…

தனிப்பட்ட வங்கிக் கடன் பெற, கல்லூரி நிர்வாகம் மாணவர்களை நிர்பந்தித்தது,…

அரா டாமான்சாரவில் இயங்கும், ‘அட்வான்ஸ் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Advanced Aeronautic Training Centre) தனியார் பயிற்சி நிறுவனத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவர்கள் போலீசாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டனர். சக மாணவர்கள் இருவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 90 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

கல்லூரிக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் கைது

அரா டாமான்சாரவில் இயங்கும், ஒரு தனியார் பயிற்சி நிறுவனமான ‘அட்வான்ஸ் ஏரோநோதிக் டிரெய்னிங் செண்டர்’ (Advanced Aeronautic Training Centre) நிர்வாகத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவர்களைப் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களுடன், எட்டாவது நபராக, கல்லூரி மாணவர் சங்கத்தின் ஆலோசகரான மலேசிய சோசலிசக் கட்சியின்…

மஇகா : சைட் சாதிக் உடன்படவில்லை என்றாலும் கண்ணியமாக இருக்க…

‘க்ஹாட்’ ஜாவி எழுத்து கற்பித்தலை எதிர்க்கும் குழுவுடன், தனிப்பட்ட முறையில் உடன்படவில்லை என்றாலும், இளைஞர் மற்றும் விளையாட்டு துறையமைச்சர் சைட் சதிக் சைட் அப்துல் ரஹ்மான், அவர்களைத் தொட்டு வெளியிட்ட அறிக்கை கண்ணியமாக இருந்திருக்க வேண்டும் என்று மஇகா மத்தியச் செயற்குழு உறுப்பினர் எம்.வீரன் தெரிவித்தார். ஜாவி எழுத்து…

ஜாகிர் : தன்னைப் பிரபலமாக்க இராமசாமி என் பெயரைப் பயன்படுத்துகிறார்

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பி இராமசாமி, டிஏபி-யில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள, தன் பெயரைப் பயன்படுத்துகிறார் என்று டாக்டர் ஜாகிர் நாயக் கூறியுள்ளார். ஓர் இந்தியச் செய்தி நிறுவனத்திற்கு இராமசாமி அளித்த பேட்டி தொடர்பாக, ஆகஸ்ட் 23-ம் தேதி பதிவுசெய்த இரண்டாவது வழக்கறிக்கையில் ஜாகிர் இந்த விஷயத்தை…

ஜாகிர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர்- முகைதின்

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் இலர் என்கிறார் உள்துறை அமைச்சர் முகைதின் யாசின். தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் அது சர்ச்சைக்குரிய சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்காக இருந்தாலும் சரி. ஜாகிர் நாய்க் பிபிபிஎம் அமைச்சர்கள் உள்பட கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கலாம் அவர்களைச் சந்தித்திருக்கலாம்,…

வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் தேவை -முஜாஹிட்

இஸ்லாமிய விவகார அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா, 1948, நிந்தனைச் சட்டத்தில் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான விதிகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்கிறார், ஆண்டு முடிவடைவதற்குள் தேசிய நல்லிணக்க மற்றும் சமரச ஆணையமும் அமைக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார். “இப்போது இன, சமய வெற்ப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக பல சட்டங்கள்…

மகாதிர்: நான் தனி ஆள் இல்லை; ஹரப்பான் உடையவுமில்லை

பக்கத்தான் ஹரப்பான் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருப்பதாக அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியிருப்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நிராகரித்தார். தம்மை ஆதரவற்ற “தனி ஆள்” என்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் தம்மைப் பதவி இறக்கத் திட்டமிடுவதாகவும்…

விடுதலை ஆகி இரண்டு நாள்தான், வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வசமாய்ச்…

ஒரு முன்னாள் சிறைக்கைதி தாப்பா சிறையிலிருந்து விடுதலை ஆன இரண்டாவது நாள் ஜாலான் ஹோர்லியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு மறுபடியும் கைதானான். போதைப் பொருள் குற்றத்துக்காக எட்டு மாதங்கள் உள்ளே இருந்த அந்த 31-வயது ஆடவன் நேற்றிரவு ஜெலேபாங்கில் கைது செய்யப்பட்டதாக ஈப்போ இடைக்கால போலீஸ் தலைவர் முகம்மட்…

மஇகா: ஜாகிர் நாயக் விஷயத்தில் பாஸ்’சின் போக்கு வருத்தமளிக்கிறது

இந்தியாவிலிருந்து வந்திருக்கும் மதப்போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் பிரச்சினையைக் கையாள்வதில், தங்கள் புதிய நண்பர்களான பாஸ் தலைவர்கள் சிலரின் போக்கு வருத்தமளிப்பதாக மஇகா தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் பிற இனங்களை மதிக்க வேண்டும் என்று ஜாகிருக்கு பாஸ் அறிவுரை கூறியிருக்க வேண்டுமென, மஇகா தேசியத் தலைவர் எஸ் ஏ…