ஜோகூர் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் எம்.ஏ.சி.சி.-யால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

ஜோகூரில் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்பு ஆலோசகர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி) இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாடாளுமன்ற தொகுதியின் கீழ் ஒரு திட்டத்திற்கு RM58,000 மதிப்புள்ள மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் அது செயல்படுத்தப்படவில்லை…

2 உப்கோ சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்

கினாபாலு ஐக்கிய முற்போக்கு அமைப்பு (உப்கோ)/Pertubuhan Kinabalu Progresif Bersatu (Upko) கட்சியைச் சேர்ந்த இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். தற்போது சுயேட்சை உறுப்பினர்களாக இருந்து, தேசிய கூட்டணிக்கு (பி.என்) ஆதரவளிப்பதாக லிமுஸ் ஜூரி (கோலா பென்யு) மற்றும் ஜேம்ஸ் ரதிப் (சுகுட்)…

சிலாங்கூர் பாக்காத்தான அரசாங்கத்தை வீழ்த்த சதித்திட்டம் ஏதும் இல்லை

தேசிய கூட்டணிக்கு (பிஎன்) ஆதரவு அளிப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை மறுத்துள்ளார் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனல் ஆபிடின். பி.கே.ஆர் கட்சியில் ஒரு தலைவராக இருக்கும் ரோசானா, அக்குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று விவரித்தார். இது தேசிய கூட்டணியின் "திட்டமிட்ட பிரச்சாரம்" என்றும், மத்திய அரசு…

41 புதிய பாதிப்புகள், 32 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை

இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியாவில் 41 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,494 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் மூன்று இறக்குமதி பாதிப்புகள்…

பாலர் பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் நர்சரிகள் ஜூலை 1…

பாலர், மழலையர் பள்ளி மற்றும் நர்சரிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். கல்வி அமைச்சு அதன் நிலையான இயக்க நடைமுறையை முன்வைத்த பின்னர், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தில்…

உலகளாவிய அடிப்படை வருமான வகை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகிறது PSM

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் பணத்தை செலவழிக்கத் தயாராக இருக்கும் வேளையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் உதவும் நோக்கில், இதை திறம்பட செய்ய வேண்டும் என்று மலேசிய சோசலிய கட்சி (பிஎஸ்எம்) தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் கூறியுள்ளார். தற்போது வருமான…

“தரோயா மாநில சட்டமன்ற உறுப்பினர் இருக்கையை காலி செய்ய வேண்டும்”…

கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் தரோயா அல்வியை செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் இருக்கையை காலி செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிலாங்கூர் பி.கே.ஆர் தலைவர் அமிருதின் ஷாரி. முன்னாள் சிலாங்கூர் பி.கே.ஆர் மகளிர் தலைவரான தரோயா, பி.கே.ஆர் கட்சியிலிருந்தும், சிலாங்கூர் துணை சபாநாயகர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவிப்பு செய்ததை…

கோவிட்-19: குடிநுழைவு தடுப்பு முகாம் மற்றும் தஃபிஸ் தொற்றுகள், 43…

இன்று 43 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,445 ஆக கொண்டுவந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "அறிவிக்கப்பட்ட 43 புதிய பாதிப்புகளில், நான்கு பாதிப்புகள் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நோய்த்தொற்றுகள். ஒரு பாதிப்பு…

சிலாங்கூர் துணை சபாநாயகர் பி.கே.ஆரை விட்டு வெளியேறினார்

சிலாங்கூர் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் தரோயா அல்வி, பி.கே.ஆரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியை விட்டு வெளியேறிய முகமது அஸ்மின் அலியுடன் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் இவர். பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கட்சித் தலைமை மீது நம்பிக்கையை இழந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பி.கே.ஆர்…

இனவாதம்: ஏன் மதபோதகர்களும், மத சார்பு கட்சியும் கேள்வி கேட்பதில்லை…

அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் இனவெறியை ஊதி பெரிதாக்கி விட்டன. இதனால், பக்காத்தான் ஹராப்பான் கட்சி மலாய்க்காரர்களின் அடிமட்ட ஆதரவை இழந்துள்ளது என்று அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் இனவெறி உணர்வுகளை கடுமையாக எதிர்ப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்றும்…

பொதுத் தேர்தலுக்குத் தயாராகிறார் முகிதீன்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட திடீர் அரசாங்க மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் தணிந்து வருவதால், பிரதமர் முகிதீன் யாசின் தனது தேசிய கூட்டணி அரசாங்கம் தேர்தலின் மூலம் ஆணை கோருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் தேர்தலை நடத்தத் தயாராகி வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி…

பெர்சத்துவில் இருந்து நீக்கம்: நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோருகிறார் டாக்டர்…

பெர்சத்து கட்சியில் தங்களது உறுப்பியத்தை தக்கவைக்க, டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் சிலர் நீதிமன்றத்தில் தற்காலிக தடை உத்தரவை தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தை வழக்கறிஞர் முகமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா உறுதிப்படுத்தினார். ஜூன் 18 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் விசாரிக்கப்படும் என்று அவர்…

கோவிட்-19: முடிதிருத்துபவர் ஒருவர் கிருமியால் பாதிப்பு, உறுதிப்படுத்தியது சுகாதார அமைச்சு

பாகிஸ்தான் முடிதிருத்துபவர் ஒருவருக்கு கோவிட்-19 நேர்மறை பாதிப்பு இருப்பது குறித்து நேற்று கண்டறியப்பட்டதாக மலேசிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. தலைநகரில் ஒரு முடிதிருத்தும் கடையில் பணிபுரியும் அந்த நபர், சுற்றியுள்ள பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில் வீடு வீடாக சேவைகளை வழங்கியுள்ளார் என்று சுகாதார இயக்குநர் டாக்டர்…

கோவிட்-19: 33 புதிய பாதிப்புகள், 17 உள்நாட்டு பரவல்

இன்று 33 கோவிட்-19 புதிய நேர்மறை பாதிப்புகள் கண்டறியப்பட்டன. நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 8,402 என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "கோவிட்-19 தொடர்பான இறப்பில் இன்று ஓர் அதிகரிப்பு இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.” "இதனால், மலேசியாவில் கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை 119…

“தேசிய கூட்டணியின் பழமைவாத கொள்கை அரசியல்; மலேசியாவிற்கு இருண்ட காலம்”

டிஏபி எதிர்ப்பு, இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பதாக அச்சுறுத்து, என்று, நாடு தீவர வலதுசாரி அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, என்றும், பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை, நாடு தொடர்ந்து "இருளில்" தான் இருக்கும் என்று அமானாவின் துணைத் தலைவர் முஜாஹித்…

‘எனக்கு என்ன கிடைக்கும்’ கட்சியை திறக்க போகிறேன், மகாதீர் கிண்டல்

பெர்சத்து கட்சியில் தொடர்ந்த கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மீண்டும் மலாய்காரர்கள் சார்ந்த ஒரு கட்சியை உருவாக்கும் யோசனையை கிண்டலான முறையில் கூறியுள்ளார். பெர்சத்துவின் அவைத் தலைவராக தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்ட டாக்டர் மகாதீர், புதிய கட்சிக்கு ‘எனக்கு என்ன…

28 நாட்கள் பதிவு இல்லாவிட்டால் மலேசியா கோவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட்டதாக…

28 நாட்களுக்கு பாதிப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாவிட்டால் மட்டுமே மலேசியா கோவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கும். இந்த 28 நாள் காலம், கிருமி அடைகாத்தல் காலத்தின் இரண்டு சுழற்சிகள் ஆகும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் அவர்…

கோவிட்-19: 31 புதிய பாதிப்புகள், இறப்புகள் ஏதும் இல்லை

தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மலேசியர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று ஏதும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று சுகாதார அமைச்சு 31 புதிய பாதிப்புகளை அறிவித்தது. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கை 8,369 என்று இன்று புத்ராஜெயாவில் தனது…

ரைஸ், இட்ரிஸ், ஜாஹித் ஆகியோர் செனட்டர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

அடுத்த செவ்வாயன்று பதவியேற்கவுள்ள ஐந்து புதிய செனட்டர்களில் முன்னாள் அம்னோ அமைச்சர்கள் ரைஸ் யாத்திம் மற்றும் ராட்ஸி ஷேக் அகமது ஆகியோரும் அடங்குவர். அரசியல் வட்டாரங்களிடையே வலம் வந்த இப்பட்டியலை, சட்டமன்றத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார். பட்டியலின் படி, மற்ற மூன்று செனட்டர்கள் பாஸ் துணைத் தலைவர்…

கோவிட்-19: இரண்டு புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு

மலேசியாவில் இன்று இரண்டு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஒன்று வெளிநாட்டு நோய்த்தொற்றின் இறக்குமதி பாதிப்பு, மற்றொன்று உள்ளூர் பாதிப்பு ஆகும். உள்ளூர் பாதிப்பு ஒரு வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டது ஆகும். இது மலேசியாவில் இன்றுவரை மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,338 ஆகக் கொண்டுவருகிறது.…

ஜூன் 24 ஆம் தேதி பள்ளி தொடங்குகிறார்கள் 5, 6…

ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ - பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பள்ளி அமர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கவுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் ஆலோசனையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்ஸி ஜிடின் விளக்கினார்.…

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை ஏற்க மறுக்கிறது வங்கதேசம்

மலேசிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 269 ரோஹிங்கியா அகதிகளை ஏற்க மறுத்துவிட்டதாக வங்கதேசம் நேற்று தெரிவித்துள்ளது. "பங்களாதேஷ் அவர்களை ஏற்றுக்கொள்ளாது. ரோஹிங்கியா அகதிகளை இனி ஏற்றுக்கொள்வதற்கு வங்கதேசத்திற்கு எந்தக் கடமையும் இல்லை, நிலையும் இல்லை" என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் அனடோலு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.…

கோவிட்-19: ஏழு புதிய பாதிப்புகள், 281 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இறப்புகள்…

மலேசியாவில் இன்று ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில், ஆறு இறக்குமதி தொற்றும், ஓர் உள்ளூர் தொற்றும் பதிவாகியுள்ளன. பதிவான அந்த ஓர் உள்ளூர் பாதிப்பும் ஒரு வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டதாகும். கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 8,336 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர்…