நஜிப், அருள் புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் 1எம்டிபி முன்னாள் தலைவர் அருள் கண்ட கந்தசாமியும் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்ததன்வழி அதிகார மீறலில் ஈடுபட்டதாக புதன்கிழமை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) வட்டாரங்கள் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தின. நஜிப்மீது…

டாக்டர் எம் : ஏழைகளால் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க…

ஏழைகளுக்கு உதவும் வகையில், குறுகிய கால புதிய திட்டங்களை உருவாக்கும்படி, பிரதமர் மகாதிர் நிதியமைச்சர் லிம் குவான் எங்-ஐ கேட்டுக்கொண்டார். அடுத்த ஆண்டு, நாட்டின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கலாம், ஆனால் அதுவரை ஏழை மக்களால் காத்திருக்க முடியாது என்று, நேற்றிரவு ‘பிஎச் 208’ நிதிதிரட்டு விருந்து நிகழ்ச்சியில்…

‘கடந்த கால தியாகங்களை’க் கேட்டு அலுத்துப் போய்விட்டது: டிஏபி தலைவர்களுக்கு…

நேற்றைய சிலாங்கூர் டிஏபி தேர்தல் முடிவு, தலைவர்கள் கடந்த கால அர்ப்பணிப்புகள் பற்றிப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு உறுப்பினர்களுக்கு அலுத்துப் போய்விட்டது என்பதைக் காண்பிப்பதாக தெங் சாங் கிம் கூறினார். டிஏபி மத்திய செயல்குழு உறுப்பினரான தெங், சிலாங்கூர் தலைவராக இருந்த டோனி புவா தேர்தலில் தோற்றுப் போனது…

சிலாங்கூர் டிஏபி-யின் புதிய தலைவராக கோபிந் சிங் நியமனம்

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிலாங்கூர் டிஏபி-யின் புதியத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த, டிஏபி-யின் தேசியத் துணைத் தலைவராகவும் இருக்கும் அவர், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள, மாநிலக் கட்சி உறுப்பினர்களையும் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாகத் கூறினார். "கட்சியின்…

ஜொகூர் இளவரசர்: ‘வெளியாள்’ சேவியர், புலாவ் குகுப் விவகாரத்தில் குறுக்கிடாதீர்

  ஜொகூரின் புலாவ் குகுப் ஒரு தேசியப் பூங்கா என்ற அதன் தகுதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக நீர், நிலம் மற்றும் இயற்கைவளம் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை ஜொகூர் பட்டத்து இளவரசர் குறைகூறியுள்ளார். முந்தைய அரசு புலாவ் குகுப்பை தேசிய பூங்கா என்ற தகுதியிலிருந்து அகற்றியுள்ளதையும்…

ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியை வரலாற்று நூலில் போட வேண்டும் என்கிறார்…

  கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் நேற்று நடைபெற்ற ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியை வரலாற்று பாடப் புத்தகங்களில் போட வேண்டும் என்று அஹமட் மஸ்லான் இகழ்ச்சியாகப் பேசியுள்ளார். முந்தைய பாரிசான் நிருவாகத்தில் துணைக் கல்வி அமைச்சராக இருந்த மஸ்லான் இந்தப் பேரணி நாட்டின் வரலாற்றில் மிகப் பெரியது என்று…

பேரணிக்குப் பின்னர் கோலாலம்பூர் எப்படியிருக்கிறது?, மகாதிர் தானே சென்று பார்த்தார்

  இன்று மாலை ஐசெர்ட்டிற்கு எதிரான பேரணி முடிவுற்ற பின்னர் பிரதமர் மகாதிர் கோலாலம்பூரை சுற்றிப் பார்த்தார். அவரது காரை அவரே ஓட்டிச் சென்றார். ஐசெர்ட் எதிர்ப்பு பேரணிக்குப் பின்னர் தலைநகரில் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதைத் தானே பார்த்து தெரிந்துகொள்வதற்காக மகாதிர் அவரது புரோட்டோன் காரில் சென்றார்…

பக்கத்தான் ஆட்சிக் காலத்தை குறைக்கக் கோரும் பிராத்தனையுடன் பேரணி முடிவுற்றது

  இந்தப் பேரணியில் 500,000 பேர்கள் பங்கேற்றனர் என்று அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறிக் கொண்டார். அம்னோவும் பாஸும் அவற்றின் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இஸ்லாத்திற்காகவும் மலாய்க்காரர்களின் உரிமைக்காகவும் போராட ஒன்றுகூட வேண்டும் என்று அவர் கூறினார். 50,000 மக்கள்தான் கூடுவார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது.…

பாஸ் துணைத் தலைவர்: நாங்கள் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல

பிற்பகல் மணி 4.05: டத்தாரான் மெர்தேக்காவிற்கு மேல் கடும் மழைக்கு அறிகுறியாக மேகம் இருளத் தொடங்கியது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இதர பகுதிகளில் மழை பொழியத் தொடங்கிவிட்டது. பிற்பகல் மணி 4.25: இப்பேரணி நடத்தப்படுவது மற்ற இனங்களைக் கண்டனம் செய்வதற்காக அல்ல என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ரகிம்…

பேரணியில் அம்னோ, பாஸ் தலைவர்கள்

  பிற்பகல் மணி 3.45: ஜாலான் ராஜா - வனிதா அம்னோ தலைவர் நோராய்னி அஹமட் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து பேசினார். அங்கிருந்த இதர தலைவர்கள்: பாஸ் தாலைவர் ஹாடி அவாங், அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ துணைத் தலைவர் முகம்மட்…

மக்கள் கூட்டத்தால் குழப்பம்

  பிற்பகல் மணி 3.05 அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜாலான் ராஜாவுக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. மயக்கமுற்ற பலருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது. அம்னோ, பாஸ் தலைவர்கள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் தலைவர்கள் வண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மேடையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். பாஸ்…

ஆலய கலவரம்: இதுவரை 106 பேர் கைது

நவம்பர் 26 சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் மேலும் நால்வர் கைதாகியுள்ளனர். அவர்களையும் சேர்த்து இன்று காலை 8மணிவரை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 106 ஆகியுள்ளது. இவர்கள் தவிர அச்சம்பவம் தொடர்பில் போலீசாரால் தேடப்படும் 66 பேரில் எழுவர் தாமே முன்வந்து சரணடைந்து…

பேரணி நிலவரம்: மஸ்ஜிட் நெகாராவில் சுமார் 4,000பேர், போலீஸ் மதிப்பீடு

இன்று பிற்பகல் 12.50 அளவில் மஸ்ஜித் நெகாரா வட்டாரத்தில் சுமார் 5,000 ஆர்ப்பாட்டாளர்கள் திரண்டிருந்ததாக போலீஸ் கூறியது. அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரியும் அங்கு இருந்தார். அவர் ஆர்ப்பாட்டாளர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். போலீஸ் எச்சரிக்கையையும் மீறி சிலர் பிள்ளைகளையும் பேரணிக்கு அழைத்து வந்திருப்பதாக சினார் ஹரியன்…

ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள 170கிமீ சைக்களில் வந்தவர், நஜிப்…

  கோலாலம்பூரில் நடைபெறும் ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக ஒரு 52-வயது ஆடவர் கம்பாரிலிருந்து கோலாலம்பூருக்கு சைக்கிளிலில் புறப்பட்டார். சமயத்திற்காகவும் இனத்திற்காகவும் நாட்டிற்காகவும் தாம் இந்த 170 கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொண்டதாக அபிட்ஸுல் அரிப்பின் என்ற அந்த நபர் கூறினார். நான் எனது இலக்கை அடைகிற வரையில்…

ஐசெர்ட் எதிர்ப்புப் பேரணியில் எதையும் சமாளிக்கும் தயார் நிலையில் போலீசார்

இன்று நடைபெறும் எல்லாவகை இனப் பாகுபாடுகளையும் ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்)த்தை எதிர்க்கும் பேரணியில் கலந்து கொள்பவர்கள் சினமூட்டும் செயல்களில் இறங்கிவிடக் கூடாது என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் அறிவுறுத்தியுள்ளார். போலீஸ் நேற்று முதல் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகாவும் எது நடந்தாலும் அதை அவர்கள் சமாளிப்பார்கள்…

300 சீலாட் குழு உறுப்பினர்கள் இஸ்தான நெகாராவுக்கு செல்கின்றனர்

சோகோ வியாபார மையத்தின்முன் 3,000 பேர், 'ஹிடுப் இஸ்லாம்' முழக்கம் காலை மளி 11.00 அளவில் சோகோவின்முன் சுமார் 3,000 பேர் கூடியுள்ளனர். பல அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியுள்ளனர். பல ஆர்ப்பாட்டக்காரர்கள் 'பன்தா ஐடெர்ட்" என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளை டி-சட்டை அணிந்திருக்கின்றனர். அவர்கள்…

நாளை பேரணிக்குச் செல்பவர்கள் அமைதியாகவும் குப்பைகள் போடாமலும் இருப்பார்கள், மகாதிர்…

  நாளை கோலாலம்பூரில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பவர்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும், குப்பைகள் போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மகாதிர் வலுயுறுத்திக் கேட்டுக் கொண்டார். பேரணி ஏற்பாட்டாளர்களிடம் அரசாங்கம் விடுக்கும் ஒரே வேண்டுகோள் இதுதான் என்றாரவர். போலீசாருக்கும் அதிகாரிகளுக்கும் பேரணி ஏற்பாட்டாளர்கள் உதவ வேண்டும்; அமைதிக்கு பங்கம்…

சுஹாகாம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது

  அனைத்துலக மனித உரிமைகள் தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும். அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் சுஹாம் தலைவர் ரஸாலி இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அபாயங்கள் குறித்து போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இந்நிகழ்ச்சியை 24 மணி நேரத்திற்கு தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது…

பிடிபிடிஎன்: கடனைத் திருப்பிச் செலுத்தும் புதிய திட்டம் நிறுத்திவைப்பு

தேசிய உயர்க் கல்வி கடன் நிதி(பிடிபிடிஎன்)யிலிருந்து கடன் வாங்கியர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. “சம்பளத்தில் பிடித்தம் செய்யும் திட்டம் அதில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரிடமிருந்தும் பின்னூட்டம் பெறப்படும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது”, எனக் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இன்று டிவிட் செய்திருந்தார்.…

பாஸும் அம்னோவும் ஒன்றிணைவது நடவாத காரியம்

பாஸும் அம்னோவும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவை என்பதால் இரண்டும் ஒன்றிணைவது முடியாத செயல் என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். இரண்டின் கொள்கைகளும் வெவ்வேறானவை, பாஸ் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டது. அம்னோ இன அடிப்படையில் அமைந்தது என்று ஹாடி கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. “ஆனால், ஒத்துழைப்பதும்,…

நாளைய நிகழ்வை ஒத்திவைப்பீர்: சுஹாகாமுக்கு போலீஸ் கோரிக்கை

நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துலக மனித உரிமை நாள் கொண்டாட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் எனப் போலீஸ் சுஹாகாமுக்கு ஆலோசனை கூறியுள்ளது. பெட்டாலிங் ஜெயா பாடாங் தீமோரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்நிகழ்வில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். “அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து இறுதி…

டிசம்பர் 8 பேரணியில் சினமூட்டுதல், தேச நிந்தனை பேச்சுகள், குழந்தைகள்…

  சனிக்கிழை நடத்தப்படும் ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியில் சினமூட்டுதல் மற்றும் தேச நிந்தனை பேச்சுகள் இருக்கக்கூடாது என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேரணிக்குச் சென்று பொது ஒழுங்கிற்கு கெடுதல் விளைவிப்பவர்கள் மற்றும் தேச நிந்தனையானது என்று கருதப்படும் உரைகளை ஆற்றும் பேச்சாளர்கள் ஆகியோருக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தின்…

சுவாராம் நிர்வாக இயக்குநரிடம் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணை

சுவாராம் நிர்வாக இயக்குநர், சிவன் துரைசாமி, தேச நிந்தனை சட்டம் 1948-ன் கீழ் போலிசாரால் விசாரிக்கப்பட்டார். வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான, ஃபாடியா நட்வா ஃபிக்ரி எழுதிய, அரச நிறுவனத்திற்கு எதிரான ஒரு கட்டுரை தொடர்பில், தான் விசாரிக்கப்பட்டதாக, இன்று பிரிக்ஃபீல்ட்ஸ், போலிஸ் தலைமையகத்தில், விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த…