மூன்று, நான்கு பாலங்கள் இருக்க வேண்டும், மகாதிர் கூறுகிறார்

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலானப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மூன்று அல்லது நான்கு பாலங்கள் தேவை என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். “ஆரம்பத்தில், குறைந்த எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களைக் கொண்டிருக்கும் பினாங்கு, அதன் முதல் பால நிர்மாணிப்பை எதிர்த்த போதிலும், தற்போது மூன்றாவது சுரங்கவழி பாலத்தை நிர்மாணிப்பதில்…

இனிப்புப் பானங்கள் வரியைக் கொண்டு பள்ளிகளுக்கு இலவச காலை உணவு

இனிப்புப் பானங்களுக்கான வரியால் கிடைக்கும் வருமானம் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியமான காலை உணவு இலவச வழங்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அடுத்த ஆண்டிலிருந்து இந்த வரி மூலமாகக் கிடைக்கும் வருமானம் எல்லாத் தொடக்கநிலைப் பள்ளிகளுக்கும் அரோக்கியமான இலவச காலை உணவு…

மக்களவை வர நோ-வுக்குத் தடை; பிஎன், பாஸ் வெளிநடப்பு

மக்களவைத் துணைத் தலைவர் ங்கா கொர் மிங், தம்மை இகழ்ந்துரைத்த நோ ஒமார்(பிஎன் -தஞ்சோங் காராங்) மூன்று நாள் மக்களவைக்கு வரக்கூடாது என இன்று தடை விதித்தார். “தஞ்சோங் காராங் வேண்டுமென்றே மக்களவையை அவமதித்துள்ளார், அவைத் தலைவரின் அதிகாரத்தை மதிக்கவில்லை, அவைத் தலைவர் அந்த இடத்தில் இருக்கத் தகுதியற்றவர்…

ரந்தாவ் இடைத்தேர்தலில், ஸ்ரீராம் வெற்றி அத்தியவசியமானது! – கா. ஆறுமுகம்

அம்னோ மற்றும் பாஸ் கூட்டணி ரந்தாவ் இடைத்தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டும். மலாய் மற்றும் இஸ்லாம் என்ற அடிப்படையில் இணைந்துள்ள இந்த கூட்டணி கேமரன் மலை மற்றும் செமிஞ்சி இடைத்தேர்தல்களில் வென்றது. அந்த வியூகம் இந்த முறை வென்றால அது பல்லின  அரசியலுக்கு ஒரு பின்னடைவாக அமையும். மலாய்காரக்கள்…

உடம்புப் பிடி நிலையங்களுக்கு அனுசரணையாக இருந்து வந்த போலீஸ் அதிகாரியும்…

தலைநகரில் உடம்புப் பிடி நிலையங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவை இயங்குவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 16 பேரை ஊழல்தடுப்பு ஆணையம்(எம் ஏசிசி) கைது செய்தது. அவர்களில் ஒருவர் ஒரு போலீஸ் நிலையத் தலைவர். அவர்கள் அனைவரும் நேற்றுக் காலை பத்து மணிக்கும் மாலை 5 மணிக்குமிடையில் கைது செய்யப்பட்டார்கள் என்று…

அம்னோவுடன் பாஸ் இணையாது- ஹாடி திட்டவட்டம்

இரண்டு வாரங்களுக்குமுன் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை முறைப்படுத்திக்கொள்ளும் நிகழ்வில் பேசிய அம்னோ தலைவர் அதை ஒரு “திருமணச் சடங்கு” என்று வருணித்திருந்தார். ஆனால், இப்போது இஸ்லாமியக் கட்சித் தலைவரோ அம்னோவும் பாஸும் ஒன்றிணைவது நடவாத காரியம் என்றும் அது கூடா உறவுமுறையாகிவிடும் என்றும் கூறுகிறார். அம்னோவுக்கும் பாஸுக்குமிடையிலான உறவுமுறை உடன்பிறப்புகளுக்கிடையிலான…

சுங்கை கிம் கிம் : இரசாயணக் கழிவு மாசு, போலிஸ்…

பாசீர் கூடாங், சுங்கை கிம் கிம், இரசாயணக் கழிவு மாசு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, கடந்த சனிக்கிழமை வரை 9 பேரை போலிஸ் கைது செய்துள்ளது. ஜொகூரில் இருவரும், ஜொகூருக்கு வெளியில் எழுவரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தலைவர், முகமட் ஃபூஸி ஹருண் தெரிவித்தார். இன்று தொடக்கம்…

சிங்கப்பூரில் இன்னொரு மலேசியருக்குத் தூக்குத் தண்டனை

போதை மருந்து கடத்தலுக்காக, மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் ஒருவரின் மன்னிப்பு முறையீட்டைத் தள்ளுபடி செய்து, அவரைத் தூக்கிலிட்ட 5 மாதங்களுக்குப் பின்னர், இந்த வாரத்தில் மற்றொருவரைத் தூக்கிலிட சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், கொலை குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட, சரவாக்கைச் சேர்ந்த மைக்கேல் காரிங்’கின்…

பி.ஏ.சி தலைவர் விவகாரம் : பிஎச், தேர்தல் அறிக்கையில் பிணைக்கப்பட்டுள்ளது…

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருப்பது போல், தேசியக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவர் பதவியில், எதிர்க்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்தான் நியமிக்கப்பட வேண்டும் என அன்வார் தெரிவித்தார். “தேர்தல் வாக்குறுதியில் நான் உறுதியாக இருக்கிறேன், ஆனால், இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் என்ன என்பதையும் நாம் கேட்டறிய…

‘இரட்டை நாக்கு’ மசீச: கெப்போங் எம்பி சாடல்

டிஏபி எம்பி லிம் லிப் எங், பிஎன்னில் தொடர்ந்து இருக்கப்போவதாகக் கூறியுள்ள மசீசவை ‘இரட்டை நாக்கு’ கொண்ட கட்சி என்று சாடினார். மசீசவுக்கு பிஎன் கூட்டணியிலிருந்து வெளியேறும் நோக்கம் இருந்ததே இல்லை என்று அந்த கெப்போங் எம்பி கூறினார். மசீச மத்திய செயல்குழு, பிஎன்னின் பல இன ஒத்துழைப்பை…

அம்னோ அக்கட்சியிலிருந்து வெளியேறிய மக்கள் பிரதிநிதிகள்மீது நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டது

அம்னோ, பக்கத்தான் ஹரப்பானுக்கு மாறிச் சென்ற அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை - அது செலவுமிக்கது என்பதால்- கைவிட்டதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன. அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் கட்சியை வலுப்படுத்துவதில்தான் மிகுந்த கவனம் செலுத்துகிறார் என்று அவை கூறின. “இப்போதைக்குக்…

அம்னோவின் ‘வலிமை’தான் மசீச-வை பிஎன்னில் தொடர்ந்து இருக்க வைத்துள்ளது -நஸ்ரி

மசீசவுக்கு அம்னோவின் வலிமைமீது நம்பிக்கை உள்ளது, அதனால்தான் அது பிஎன்னில் தொடர்ந்து இருக்க முடிவு செய்தது என்கிறார் பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அசிஸ். “நம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் பிஎன்னில் இருக்க மாட்டார்கள். “அம்னோ வலிமை வாய்ந்தது அதனால்தான் பிஎன்னில் ஒன்றாய் இருப்போம் என்றவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்”, என…

‘மனிதாபிமானம்’ காரணமாக ஶ்ரீராமை மாற்ற மனம் வரவில்லை

ரந்தாவ் இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நிறுத்தியது, மனிதாபிமான அடிப்படையில் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். ஶ்ரீராமுக்குப் பதிலாக வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த மனம் வரவில்லை என, இன்று, ரெம்பாவ்வில், சுமார் 500 பேர் கூடியிருந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் அன்வார் சொன்னார். “ஶ்ரீராம் ஓர்…

கெடா, பெண்டாங்கில் வெப்பஅலை நிலை 2-ல் உள்ளது

இன்று, தீபகற்ப மாநிலங்கள் ஒன்பதில் வெப்பஅலை நிலை 1-ல் - எச்சரிக்கை நிலை - இருந்தவேளை, கெடா, பெண்டாங்கில் 2-ம் நிலையில் - 37-ல் இருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை - இருந்தது. மலேசிய அளவியல் இலாகாவின் (மெட்ரோலோஜி) தகவல்படி, இன்று மாலை 5.20 மணி வரை,…

பாத்தாமில் 24 மணி நேரம்கூட இல்லை, ஜொகூர் எம்பி விளக்கம்

பாசீர் கூடாங் வட்டாரம், நச்சு மாசு பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இந்தோனேசியா, பாத்தாம் சென்றதன் காரணத்தை, இன்று ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சப்பியான் விளக்கினார். முன்னமே திட்டமிடப்பட்ட பயணம் என்பதால், பாத்தாம் சென்றதாக ஒஸ்மான் தெரிவித்தார். ஜொகூர், இந்தோனேசியா சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை…

‘ஏஜி-இன் அதிகாரம் அளவற்றதல்ல’- வழக்குரைஞர்

சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) விரிவான அதிகாரம் கொண்டவர்தான் ஆனாலும் அவரது அதிகாரம் அளவற்றதல்ல என்கிறார் ஒரு மூத்த வழக்குரைஞர். கிம் ஜொங்-நாம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டுள்ள தம் கட்சிக்காரர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த டோவான் தை ஹுவோங்கைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக் கோரி தான் செய்துகொண்ட மனு நிராகரிக்கப்பட்டது ஏன்…

ஹரப்பான் -தொடர்புடைய வழக்குகள் எனில் நீதிச் சக்கரம் சுழலாது நின்று…

கடந்த ஆண்டு மே மாதம் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆட்சியில் உள்ளோர் செய்த தவறுகள் குறித்து நிறைய புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஒரு வழக்குக்கூட நீதிமன்றம் வந்ததில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு, உள்துறை துணை அமைச்சர் அசிஸ் ஜம்மானின் சிறப்பு அதிகாரி ஒரு பெண்ணை ஆபாசமாக…

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக அப்துல் ஃபாரிட் தேர்வு

அப்துல் ஃபாரிட் அப்துல் காஃபூர், 2019/2020-ம் தவணைக்கான மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த அவர், இதற்கு முன்னர் வழக்கறிஞர் மன்றத்தின் துணைத் தலவராகவும், பினாங்கு மாநில வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தலைமைச் செயலாளரான ரோஜர் ச்சான்…

மகாதிர் நிலைப்பாட்டை விமர்சனம் செய்க, பிஎச் மற்றும் பிஎன்–னுக்குப் பெர்சே…

தேசியக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவராக, ரொனால்ட் கீண்டியின் பதவியைப் பராமரித்து வரும் டாக்டர் மகாதிரின் செய்கையை விமர்சிக்கச் சொல்லி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாலர்களைப் பெர்சே வலியுறுத்தியுள்ளது. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மகாதிரின் இந்த நடவடிக்கை, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பங்களிப்பை மக்களவையில் குறைத்து…

சுங்கை கிம் கிம்: 24 மணி நேர சுத்திகரிப்பு பணிகள்,…

பாசீர் கூடாங், சுங்கை கிம் கிம் ஆற்றில், நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள், பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடந்துவருகிறது. நியமிக்கப்பட்ட 3 குத்தகையாளர்களுடன் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு இலாகாவைச் சேர்ந்த ‘ஹஜ்மாட்’ குழு, மலேசிய ஆயுதப்படை, சுற்றுச்சூழல் துறை, வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும்…

டாக்டர் எம் : ஜொகூர் எம்பி பாத்தாம் சென்றது எனக்கு…

ஜொகூர், பாசிர் கூடாங் நச்சுக் கசிவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் வேளையில், மாநிலச் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்காக, ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சாப்பியான் இந்தோனேசியா சென்றது அதிர்ச்சியளிப்பதாக டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். இன்று புத்ராஜெயாவில், ஊடகச் சந்திப்பின் போது, ஒஸ்மானின் இந்தோனேசியப் பயணம் குறித்து பிரதமரிடம் கேள்வி…

இந்திராவின் முன்னாள் கணவர், மகள் மலேசியாவிலிருந்து வெளியேறியதற்கு அறிகுறிகள் இல்லை-…

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகம்மட் ரிதுவான் அப்துல்லாவும் அவர்களின் இளைய மகள் பிரசன்னா திக்‌ஷாவும் வெளிநாடு சென்றதற்கான அறிகுறி எதுவும் இல்லை என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார். “குடிநுழைவுத் துறையில் விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றார்கள் என்பதைக் காண்பிக்கும்…

பாசிர் கூடாங்கில் அவசரகால பிரகடனம் இல்லையா? பட்டத்திளவரசர் அதிர்ச்சி

ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், இராசனக் கழிவுகள் கொட்டப்பட்டதால் மோசமான தூய்மைக்கேட்டுப் பிரச்னை உருவாகியுள்ள பாசிர் கூடாங்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்படாததைக் கண்டு அதிர்ச்சி தெரிவித்தார். “ஈராயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவசரகால நிலை பிரகடனம் தேவையில்லை. அதிசயமாக இருக்கிறது..... “முதல் நாளே அவசரக்காலம்…