புகை மூட்டத்தால் பள்ளிகள் மூடப்பட்டன

அரசாங்கம் கோலாலும்பூர், சிலாங்கூர்,  புத்ரா ஜெயா, மலாக்கா,  நெகிரி  செம்பிலான்  ஆகிய  மாநிலங்களில்  பள்ளிகளை  மூடும்படி  உத்தரவிட்டுள்ளது. கல்வி  அமைச்சர்  மஹாட்சிர்  காலிட்  அந்த  உத்தரவைப்  பிறப்பித்திருப்பதாக  துணை  அமைச்சர்  பி.கமலநாதன்  நேற்றிரவு  டிவிட்டரில்  தெரிவித்திருந்தார். புகை  மூட்டம்  மோசமடைந்ததைத்  தொடர்ந்து  இம்முடிவு  எடுக்கப்பட்டது. நேற்றிரவு  கோலசிலாங்கூரில்  காற்றுத் …

நீங்கள் மலாய்க்காரர்களைப் பாதுகாக்கவில்லை: சிகப்புச் சட்டைகளிடம் மகாதிர் வலியுறுத்து

நாளை  நடக்கும்  சிகப்புச்  சட்டைப்  பேரணி  மலாய்க்காரர்களைப்  பாதுகாக்க  நடத்தப்படுவதாகவும்  பெர்சே  4 ஒரு  இனவாதப்  பேரணி  என்றும் கூறப்பபடுவதை  அபத்தம்  என்று  கூறி  ஒதுக்கித்  தள்ளினார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். “பெர்சே 4  இனவாதம்  சார்ந்ததல்ல,  எல்லா  இனத்தவரும்  அங்கு  இருந்தனர். “அவர்கள் (சிகப்புச் …

ஜோகூரில் இனவாதத்துக்கு இடமில்லை: சுல்தான் அறிவிப்பு

ஜோகூர்  சுல்தான்  சுல்தான்  இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டர் அம்மாநிலத்தில்  இனவாதமோ  வெறுப்போ  வளர்வதற்கு  இடமளிக்க  மாட்டார். “மலாய்க்காரர்களுக்குச்  சிறப்புச்  சலுகைகள்  உண்டு. அதேபோல்  இந்தியர்களுக்கும்  சீனர்களுக்கும்  ஜோகூரைத்  தங்களின்  தாயகம்  என்று  கூறிக்கொள்ளும்  உரிமை  உண்டு. “அவர்களின்  முன்னோர்கள்  சீனாவிலிருந்து  அல்லது  இந்தியாவிலிருந்து  வந்திருக்கலாம். ஆனால் அவர்கள்  ஜோகூர் …

கடல்படை அதிகாரி ரிம19,000 கடிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு

அரச  மலேசிய  கடல்படை  அதிகாரி  லெப்டனண்ட்  கமாண்டர்  கைருல்  இஸ்வான்  முகம்மட்  கீர்,37, கடல்படைக்குப்  பொருள்களை  சப்ளை  செய்யும் குத்தகையாளரிடமிருந்து  ரிம19,000  பெறுமதியுள்ள  கைக்கடிகாரத்தைப்  பெற்றுக்  கொண்டதாக  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  இன்று  குற்றம்  சாட்டப்பட்டது. கைருல் குற்றச்சாட்டை  மறுத்தார். பொருள்  கட்டுப்பாட்டு  அதிகாரியான  கைருல் அந்த  பெல் &…

சிகப்புச் சட்டைப் பேரணியைத் தடுப்பீர்: நஜிப்புக்கு என்ஜிஓ-கள் கூட்டணி கோரிக்கை

என்ஜிஓ-களின்  கூட்டணி  ஒன்று  புதன்கிழமை  நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ள  ‘சிகப்புச்  சட்டை’ப்  பேரணியைத்  தடுத்து  நிறுத்தக்  கோரி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குத் திறந்த  மடல்  ஒன்றை  வரைந்துள்ளது. 19 அமைப்புகளின்  ஒப்புதலுடன்  Otai Reformis  வரைந்துள்ள  அக்கடிதம்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  ‘இஸ்லாமிய  அரசு’ (ஐசிஸ்)  போராளிகள்  போன்றவர்கள்  எனக்…

செப். 16 பேரணி மலாய்ப் பேரணி அல்ல; அது அரசாங்க-ஆதரவுப்…

செப்டம்பர்  16-இல்  நடைபெறும்  பேரணி  “மலாய்க்காரர்  மானம்  காக்கும்” பேரணி  அல்ல  என்றும்  அது  நாட்டின்மீது  அன்பு  கொண்டவர்களும்  அரசாங்கத்தை  ஆதரிப்போரும்  கூடும்  பேரணி  எனக்  கூட்டரசுப்  பிரதேச  அமைச்சர் தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கூறினார். “இது  மலாய்க்காரர்கள் கூடும்  கூட்டமல்ல.  எல்லா இனங்களையும்  சேர்ந்த  மக்கள் …

ஐஜிபி: ஜோலிக்குத் தகவலளித்தவர்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கக் கூடும்

அல்  ஜசீரா  செய்தியாளர்  மேரி  என்  ஜோலி  மங்கோலியப்  பெண்ணான  அல்டான்துன்யாவின்  கொலை பற்றி  ஆவணப்படமொன்றைத்  தயாரிப்பதற்குத்  தகவலளித்து  உதவியதாகக்  கூறிக்  கொள்வோரை  போலீசார்  கண்காணித்து  வருகிறார்கள். “ஜோலிக்குத்  தப்பான  தகவல்களைக்  கொடுத்தவர்கள்  பற்றி  எங்களுக்குத்  தெரியும். அவர்களைக்  கண்காணித்து   வருகிறோம்.  அவசியம்  என்றால்  அவர்கள்மீது  நடவடிக்கையு  எடுப்போம்”,…

வழக்குரைஞர்கள்: செப் 16 பேரணியில் வன்செயல்கள் மூளாமல் போலீசார் பார்த்துக்கொள்ள…

செப்டம்பர்  16-இல் மலாய்  என்ஜிஓ-கள் நடத்தும்  பேரணியில்  இனவாத  வன்செயல்கள்  தலையெடுக்காமல்  அதிகாரிகள்  பார்த்துக்கொள்ள  வேண்டும்  என  சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்கள்  அமைப்பு  கேட்டுக்  கொண்டிருக்கிறது. மலாய்  மானம்  காப்பதற்காக  நடத்தப்படும்  பேரணி  என்று  அழைக்கப்படும்  அதில்  வன்செயல்கள்  தலையெடுக்கும்  அபாயம்  இருப்பதாக  அந்த  அமைப்பின்  செயல்முறை இயக்குனர்  எரிக்…

அம்னோ தொகுதி டிஏபி தந்தை,மகன் கொடும்பாவிகளைக் கொளுத்தியது

கோத்தா  பாரு  அம்னோ  தொகுதி  உறுப்பினர்கள்  டிஏபி  தலைவர்கள்  லிம்  கிட்  சியாங் அவரின்  மகன்  லிம்  குவான்  எங்  ஆகியோரின்  கொடும்பாவிகளை  எரித்தனர். கொடும்பாவிகளுக்கு  மஞ்சள்நிற  பெர்சே 4  டி-சட்டைகள்  அணிவிக்கப்பட்டிருந்தன. யுடியூப்பில்  பதிவேற்றம்  செய்யப்பட்டிருந்த  காணொளியில்,  அத்தொகுதித்  தலைவர்  பாத்மி  சே  சாலே  கொடும்பாவிகளுக்கு  எரியூட்டுவதைக் …

அல் ஜசீரா செய்தியாளரை நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு

அவசியம்  நேரும்போது  யாரையும்  நாடு  கடத்தும்  சிறப்புரிமை  அரசாங்கத்துக்கு  உண்டு என  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  கூறினார். மங்கோலிய  நாட்டவரான அல்டான்துன்யா  கொலை  பற்றி  ஆவணப்படம்  தயாரிப்பதில்  ஈடுபட்டிருந்த  அல்  ஜசீரா  செய்தியாளர்  நாடு  கடத்தப்பட்டது  பற்றிக்  கருத்துரைத்தபோது  நூர்  ஜஸ்லான்  அவ்வாறு  குறிப்பிட்டார்.…

ஜமால்: செப்டம்பர் 16-இல் ஒரே பேரணிதான்

பெர்சே-க்கு  எதிர்ப்பாக  சிகப்புச்  சட்டைப்  பேரணி  நடத்தப்போவதாகக்  கூறிகொண்டிருந்த  ஜமால்  முகம்மட்  யூனுஸ்,  சிகப்புச்  சட்டையினர்  செப்டம்பர்  16-இல்  தேசிய  சீலாட்  கூட்டமைப்பு (பெசாகா) ஏற்பாடு  செய்துள்ள  பேரணியில்  சேர்ந்து  கொள்ளப்போவதாக  அறிவித்துள்ளார். பெசாகா  தலைவர்  முகம்மட்  அலி  ருஸ்தம்,,  சீலாட்  தரப்பினரின்  ‘ஹிம்புனான்  ரக்யாட்  பெர்சத்து (மக்கள் …

5 மாநிலங்களிலும் கூட்டரசுப் பிரதேசத்திலும் காற்றின் தரம் மோசமடைந்திருந்தது

இன்று  காலை  9மணிக்குப்  பதிவான  காற்றுத்  தூய்மைக்கேட்டுக்  குறியீடு(ஏபிஐ)  தீவகற்ப  மலேசியாவிலும்  சரவாக்கிலும் 18  இடங்களில்  காற்று  ஆரோக்கியமற்ற  நிலையில்  இருந்ததைக்  காண்பிக்கிறது. தீவகற்ப  மலேசியாவில்  மலாக்கா,  நெகிரி  செம்பிலான், சிலாங்கூர்,  கோலாலும்பூர்,  புத்ரா  ஜெயா,  ஜோகூர்  ஆகியவை  புகை  மூட்டத்தால்  பாதிக்கப்பட்டிருந்ததாக  சுற்றுசூழல்  துறை  அதன்  அகப்பக்கத்தில் …

லிம்: அல்டான்துன்யா விவகாரம்மீது முழு விசாரணை நடந்தாலொழிய நஜிப்புக்கு நிம்மதி…

மலேசியர்களும்  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்கும் மங்கோலிய  நாட்டவரான  அல்டான்துன்யா  வழக்கு  முடிந்துவிட்டதாக  நினைக்க  இயலாது. அதன்மீது  முழுமையான  விசாரணை  நடந்த  பிறகுதான்  அப்படி  ஒரு  முடிவுக்கு  வர  முடியும்  என்கிறார்  டிஏபி பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங். “அல்டான்துன்யாவின்  ஆன்மா  சாந்தி  அடையாது, நஜிப்பும்  மலேசியர்களிடமிருந்தும் …

2016 பட்ஜெட்டில் கல்விக் கட்டணம் குறைய வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு

பல்கலைக்கழக  மாணவர்களுக்கு  வருமானம்   கிடையாது  என்பதால்  செலவுகளைச்  சரிக்கட்டுவது  தீராத  தலைவலி. அதனால்  தங்கள்  துயர்தீர 2016  பட்ஜெட்  உதவும்  என்று  அவர்கள்  எதிர்பார்ப்பதில்  வியப்பில்லைதான். கல்விக்  கட்டணம்தான்  உயர்வாக  இருக்கிறது  என்றால்  தங்கும்  இடத்துக்கும்  வாடகையாக  நிறைய  கொடுக்க  வேண்டியிருப்பதாக  அங்கலாய்க்கிறார்  மலாயாப்  பல்கலைக்கழக(யுஎம்)  மாணவர்  நூருல் …

ஹாடி: தலைவன் திருடினால் மக்கள் கொள்ளை அடிப்பார்கள்

ஒரு  தலைவன்  திருடனாக  மாறும்போது    தொண்டர்களுக்கு  அவன்  ஒரு  முன்மாதிரியாக  அமைந்து  விடுகிறான்  என  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  கூறினார். இயற்கை வளம்  நிறைந்த  மலேசியா  ரிங்கிட்  மதிப்புக்  குறைவு,  பணவீக்கம்  எனப்  பொருளாதார பிரச்னைகளை  எதிர்நோக்குகிறதே  என்று  ஹாடி  அங்கலாய்த்துக்  கொண்டார். “தலைவன்  திருடனாக மாறினால் …

ரபிடா அசீஸ்: ‘முதலில் மலாய்க்காரர்’ என்ற எண்ணத்துக்கு முடிவு கட்டுவீர்

மக்கள்  அனைவரும் மலேசியர்களாகத்தான்  தங்களை  அடையாளப்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என  முன்னாள்  அம்னோ  அமைச்சர்  ரபிடா  அசீஸ் வலியுறுத்தினார். குறிப்பாக  மலாய்க்காரர்கள்  தாங்கள்  முதலில்  மலாய்க்காரர்கள்  என்று  அடையாளப்படுத்திக்  கொள்வதை  நிறுத்த  வேண்டும்.  தேச  நிர்மாணிப்புக்கு  அது  அவசியம்  என்றாரவர். “நான்  மலாய்  இனத்தைச்  சேர்ந்தவள்  என்பதில்  பெருமை …

சீலாட் குழு: எங்கள் பேரணியும் சிகப்புச் சட்டைப் பேரணியும் ஒன்றல்ல

பெர்சத்துவான்  சீலாட்  கெபாங்சான்(பெசாகா) தலைவர்  அலி  ருஸ்தம்,   தம்முடைய  அமைப்பு  செப்டம்பர்  16இல்  ஏற்பாடு  செய்திருக்கும்  பேரணிக்கும்  ஹிம்புனான்  மாருவா மலாயு(மலாய்க்காரர் மானம் காக்கும் பேரணி)  அல்லது  சிகப்புச்  சட்டைப் பேரணி  என்று  அழைக்கப்படுவதற்கும்  எந்தச்  சம்பந்தமுமில்லை  என்கிறார். சிகப்புச்  சட்டைப்  பேரணியும்  அதே  நாளில்தான்  நடக்கிறது.  அப்பேரணிக்கு…

போலீஸ் விசாரணை பற்றிக் கருத்துரைக்க அல்-ஜசீரா செய்தியாளர் மறுப்பு

அல்டான்துன்யாவின்  கொலை  பற்றி  ஆவணப்  படம்  தயாரித்த அல்  ஜசீரா  செய்தியாளர்  மேரி  என்  ஜோலி,  அப்படம்  தொடர்பில்  மலேசிய  போலீசார்  இன்னும்  தம்மைத்  தொடர்பு  கொள்ளவில்லை  என்றார். “அதனால்,  அவ்விவகாரம்  தொடர்பில்  என்னால்  மேலும்  கருத்துரைக்க  இயலாது”, என  மலேசியாகினியின்  மின்னஞ்சலுக்குப்  பதில்  அனுப்பி  இருந்தார். 2006…

1எம்டிபி மீது வழக்குரைஞர் மன்ற அவசரக் கூட்டம்

மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்  1எம்டிபி  விவகாரம்  பற்றி  விவாதிக்க  அவசர  பொது  கூட்டமொன்றை(இஜிஎம்)க்  கூட்டியுள்ளது. கோலாலும்பூர்  தங்குவிடுதி  ஒன்றில்  நடைபெறும் அக்கூட்டத்துக்கு  ஆயிரத்து மேற்பட்ட  வழக்குரைஞர்கள்  வருகை  தந்துள்ளனர். இஜிஎமில் 1எம்டிபிமீது  அரச  விசாரணை  ஆணையம்(ஆர்சிஐ)  அமைக்க  அரசாங்கத்துக்கு  அழுத்தம்  கொடுப்பதா  அல்லது  அவ்வூழல்  பற்றிய  விசாரணைகளுக்குத்  தடையாக …

தும்பாட் எம்பி-இன் கட்சித் தாவலால் பாஸ் பிகேஆருடன் உறவுகளை முறித்துக்…

தும்பாட்  எம்பி  கமருடின்  ஜாப்பார்  பாஸிலிருந்து  விலகி  பிகேஆரில்  சேர்ந்திருப்பதை  அடுத்து  பிகேஆருடன்  உறவுகள்  முறித்துக்கொள்ளப்படுமா  என்பதை  பாஸ்  அறிவிக்க  வேண்டும். பாஸின் பொக்கோக்  செனா  எம்பி  மாபுஸ்  ஒமார்  இவ்வாறு  கேட்டுக்கொண்டிருக்கிறார். பாஸ்  அக்கட்சியிலிருந்து  பிரிந்து  சென்று  பார்டி  அமானா  ரக்யாட் எனத்  தனிக்  கட்சி  அமைத்த, …

பேரரசர் சிவப்புச் சட்டை பேரணியை நிறுத்த வேண்டும், என்ஜிஒ-கள் கோரிக்கை

சிவப்புச் சட்டையினர் செப்டெம்பர் 16 இல் நடத்த திட்டமிட்டிருக்கும் பெர்சே எதிர்ப்பு பேரணியை நிறுத்த வேண்டும் என்று 20 அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணி பேரரசரிடம் ஒரு மனுவை இன்று தாக்கல் செய்தது. இதுவரையில் கிடைத்துள்ள தகவல்படி இந்த எதிர்ப்பு பேரணி இரத்தக்களரியில் முடிவடையலாம் என்ற கருத்து நிலவுகிறது…

அல்டான்துயா ஷரீபூ கொலை பற்றி நிகழ்ச்சி தயாரித்த செய்தியாளர் நாடு…

மங்கோலிய  நாட்டவரான அல்டான்துயா ஷரீபூ கொலை  தொடர்பில் புலனாய்வு ஆவணப்படம்  தயாரித்த  அல் ஜசீரா  செய்தியாளர்  நிகழ்ச்சி  தயாரிப்பில்  ஈடுபட்டிருந்தபோதே  நாடு கடத்தப்பட்டார். அல் ஜசீராவின்  வாராந்திர  நிகழ்ச்சியான  101 East-இல்  இத்தகவல்  தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய  செய்தியாளரான  மேரி  என் ஜோலியின்  நடவடிக்கை “மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்”…

போலீசுக்குத் தெரிவிக்காவிட்டால் பேரணி சட்டவிரோதமாகிவிடும்

செப்டம்பர்  16-இல்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும் பெர்ஹிம்புனான்  மாருவா மலாயு  சிகப்புச்  சட்டைப்  பேரணி  பற்றி  அதன்  ஏற்பாட்டாளர்கள்  போலீசுக்குத்  தகவல் தெரிவிக்க  வேண்டும்.  தெரிவிக்காவிட்டால்  அது சட்டவிரோத  பேரணியாகி  விடும். பேரணி  ஏற்பாட்டாளர்கள்  பேரணி  நடக்கும்  இடத்துக்குச்  சொந்தக்காரர்களிடமிருந்தும்  அனுமதி  பெற  வேண்டும்  என கோலாலும்பூர்  போலீஸ்  துணைத் …