அது நோரா என் உடல்தான் – நெகிரி செம்பிலான் காவல்துறை…

செவ்வாய்க்கிழமை பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வெள்ளை தோல் கொண்ட பெண்ணின் சடலம், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, நீலாயில் உள்ள ஒரு ரிசோர்ட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நோரா என் குய்ரின், 15, உடையது. சிரம்பான், துவான்கு ஜாஃபர் மருத்துவமனையில், அப்பெண்ணின் குடும்பத்தினரால் சடலம் அடையாளம் காணப்பட்டதாக நெகிரி…

நோரா என் காணாமல்போய் இன்று பத்தாவது நாள்

ஆகஸ்ட் 4-இல் சிரம்பான் பந்தாய் ஓய்வுத் தளத்திலிருந்து காணாமல்போன அயர்லாந்து சிறுமி நோரா என்னைத் தேடும் பணி இன்று பத்தாவது நாளாகத் தொடர்கிறது. தேடும் பணியை மேர்கொண்டிருக்கும் தேடல், மீட்புக் குழுவுடன் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் கூட வருவதை நீலாய் ஓசிபிடி முகம்மட் நோர்…

நாட்டு நன்மைக்காக சொன்ன கருத்தைக் கிண்டல் செய்வது தேவையற்றது- மகாதிருக்கு…

பல விவகாரங்கள் மீதும் கருத்துரைக்கப்படுகிறது என்று கூறிய சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, நாட்டு நான்மைக்காகத்தான் அப்படிப்பட்ட “ஆக்ககரமான” கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன என்கிறார். எனவே, தன்னையோ கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சநிதியாகுவையோ பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கிண்டலடிப்பதோ நையாண்டி செய்வதோ அவசியமற்றது என்றாரவர். இனிமேல்…

அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள்: டிஏபி-மகாதிர் மோதலுக்கு வழிகோலுமா?

நாளைய அமைச்சரவைக் கூட்டம் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைனாஸ் நிறுவனத்தின் லைசென்ஸைப் புதுப்பிப்பது ஏற்கனவே பக்கத்தான் ஹரப்பானில் சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது. நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அமைச்சர்கள் அதற்கு ஒப்புதல் அளிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது ஒரு…

மலேசியாவுக்கு சிரமமான, அபாயகரமான கட்டம்- முன்னாள் அமைச்சர்

மலேசியா போகும் பாதையும் சகிப்புணர்வு குறைந்து வரும் நிலையும் கவலையளிப்பதாக முன்னாள் உள்துறை அமைச்சர் சைட் ஹமிட் அல்பார் கூறினார். “மலேசியாவுக்கு இது சிரமமிக்க, அபாயகரமான கட்டம். தனித்தனி குழுக்களாக பிரிந்து நிற்கும் போக்கும் சகிப்புணர்வின்மையும் அதிகரித்து வருகிறது. “இன, சமய, கலாச்சார அடிப்படையில் அமைந்த பேச்சுகள்  கவலையளிக்கின்றன.…

பி.எஸ்.எம் : அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்க…

எந்தவொரு அரசாங்கக் கொள்கையையும், மக்களிடம் அறிவிக்கும் முன், அதனை உன்னிப்பாக மறுஆய்வு செய்ய, ஓர் உயர்மட்டக் குழுவைப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அமைக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அழைப்பு விடுத்துள்ளது. பி.எஸ்.எம். தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், மொழி, மதம் மற்றும் கல்வி தொடர்பான…

ஏடிஎம் இயந்திரங்கள் தகர்ப்பு: ரிம300,000 களவாடப்பட்டது

இன்று தஞ்சோங் மாலிம், ஜாலான் ஹாஜி முஸ்டபா ராஜா கமலாவில் ஒரு வங்கியின் மூன்று ஏடிஎம் இயந்திரங்களைக் கொள்ளையர்கள் வெடிவைத்துத் தகர்த்தனர். பின்னர், அவற்றில் ஒன்றில் மட்டும் இருந்த ரிம300,000 -த்தை எடுத்துக் கொண்டு தப்பினர். அச்சம்பவம் இன்று காலை மணி 6.30க்கு நிகழ்ந்ததாக தஞ்சோங் மாலிம் போலீஸ்…

நெடுஞ்சாலை கோர நிகழ்வை இன விவகாரமாக்காதீர்: போலீஸ் எச்சரிக்கை

பாங்கியில் சாலை விபத்து தொடர்பில் இருவர் சர்ச்சையிட்டுக் கொண்டதில் அது ஒருவரின் கொலையில் முடிந்த சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி அதை இன விவகாரமாக்கி விடக்கூடாது என்று துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் மஸ்லான் மன்சூர் எச்சரித்துள்ளார். நடந்த சம்பவத்தை போலீஸ் விளக்கி இருப்பதுடன் அதற்குக் காரணமானவர்கள்…

ஒருதலைப்பட்ச மதமாற்ற சட்டவரைவு: சிலாங்கூர் சுல்தான் மறு ஆய்வு செய்கிறார்

சிலாங்கூர் மாநிலத்தில் ஒருதலைப்பட்ச மதமாற்றுக்கு இடமளிக்கும் சட்டவரைவை சிலாங்கூர் சுல்தான் மறு ஆய்வு   செய்வதாக மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறினார். அந்த மறு ஆய்வுக்குப் பின்னரே அந்தச் சட்டவரைவை மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்யப்படும் என்று அவர் இன்று காலை ஷா…

கெடாவில் புயலால் 171 பள்ளிகள் சேதமடைந்தன

கடந்த வெள்ளிக்கிழமை கெடா மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக கடும் மழையுடன் வீசியடித்த புயலில் 171 பள்ளிகள் சேதமுற்றதாக மாநில கல்வி, மனிதவள விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் சல்மீ சைட் கூறினார். நேற்றிரவு பத்து மணி வரை கிடைத்த தகவல் அது. லங்காவி, பெண்டாங், சிக், பாலிங், கோத்தா…

சர்ச்சைகள் இருந்தபோதிலும் கல்வி சீர்திருத்தம் தேவை

கறுப்பு காலணிகள் பயன்பாடு, மெட்ரிகுலேஷனில் கோட்டா முறைமை, ஆரம்பப்பள்ளி மலாய் பாடத்தில் ஜாவி எழுத்து என, ஒன்றன்பின் ஒன்றாக பல சர்ச்சைகளில் கல்வி அமைச்சு எதிர்கொண்டு வருகிறது. பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்.) அரசாங்கம் அமைத்த 15 மாதங்களுக்குப் பிறகு, தொழில்துறை 4.0 புரட்சியால் மலேசியா பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி…

ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை எதிர்ப்பதில் எக்ஸ்கோ தீவிரம்

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் (எக்ஸ்கோ) வி.கணபதி ராவ் ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை எதிர்ப்பதில் முழு மூச்சாக இருக்கிறார். அதில் அரசியல் வாழ்க்கையையே பறிபோனாலும் கவலையில்லை என்கிறார். கணபதிரா உள்பட மலாய்க்காரர்- அல்லாத எக்ஸ்கோகள் நால்வர் ஒருதலைப்பட்ச மதமாற்றத்துக்கு வழிகோலும் சட்டத் திருத்தங்களை எதிர்ப்பது குறித்து விளக்குவதற்கு அண்மையில் சிலாங்கூர் சுல்தானைச்…

மகாதிருக்கு ஜாகிர் நாய்க் புகழாரம்

நேற்றிரவு கிளந்தான், கோத்தா பாருவில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை வானளாவ புகழ்ந்துரைத்தார். மத்திய கிழக்கில் பெரு வல்லரசுகளான அமெரிக்காவும் யுனைடெட் கிங்டமும் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கண்டித்த மகாதிரின் துணிச்சலை அவர் பாராட்டினார். “2011-இல் போர் குற்றங்களை…

காட் எழுத்து அமலில் விருப்பத் தேர்வு என்பதற்கு விளக்கம் தேவை-…

தொடக்கநிலைப் பள்ளிகளில் சிறிய மாற்றங்களோடு அரபுச் சித்திர எழுத்துப் பாடத்தை அமல்படுத்த செய்யப்பட்டிருக்கும் முடிவு குறித்து கல்வி அமைச்சு விளக்கம் தர வேண்டும் என்று டிஏபி புக்கிட் அசேக் சட்டமன்ற உறுப்பினர் விரும்புகிறார். கல்வி அமைச்சு அதன் அறிக்கையில் பயன்படுத்தியுள்ள “விருப்பத் தேர்வு” என்ற சொல்தான் குழப்பம் தருகிறது…

புகை மூட்டப் பிரச்னைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை தேவை- சமூக…

ஆசியான் நாடுகள் இவ்வட்டார மக்களின் சுகாதாத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கும் புகைமூட்டப் பிரச்னைக்கு ஒன்றுகூடி முடிவு காண வேண்டும் என்கிறார் பிரபல சமூக ஆரவலர் ஆங் லாய் சூன். திரும்பத் திரும்ப வந்து மிரட்டும் இப்பிரச்னையை ஆசியான் நாடுகள் கடுமையான ஒன்றாகக் கருத வேண்டும். இதன் தொடர்பில் கடந்த ஆண்டுகளில்…

‘அடிப் குடிம்பத்தினருக்கு ஏஜி மன்னிப்பு கேட்டால் போதும், சிறை செல்ல…

முன்னாள் தீயணைப்பு வீரர், முஹமட் அடிப் முஹமட் காசிமின் மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிப்பதற்கான விசாரணையில், அரசு சட்டத்துறை தலைவர் (ஏஜி) தோமி தோமஸ் மன்னிப்பு கேட்டால் போதும் என்று அவர்தம் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். தோமஸ்-ஐ சிறையில் தள்ளுவது அவர்களது நோக்கம் அல்ல என்று அடிப் குடும்பத்தினரின் வழக்குரைஞர் ஹனிஃப்…

‘லைனஸ்’-ஐ விரட்ட முடியாது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்கள்’

நிபுணர்களின் ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஒருசில தரப்பினரின் செயலுக்காக, மலேசியாவில் முதலீடு செய்ய அழைத்த பிறகு, ‘லைனஸ்’ அரியமண் சுரங்கத் தொழில் நிறுவனத்தை ‘விரட்ட’ முடியாது எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். மலேசியாவில், அதன் செயல்பாடுகளுக்காக லைனஸ் RM1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்துள்ளதாக…

சிறார் மதமாற்றத்துக்குப் பெற்றோர் இருவரின் ஒப்புதல் தேவை- டிஏபி வலியுறுத்து

சிறார்களை இஸ்லாத்துக்கு மதமாற்ற பெர்றோர் இருவரின் சம்மதம் தேவை என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். “எங்கள் நிலைப்பாடு தெள்ளத் தெளிவானது. நாங்கள் கூட்டரசு அரசமைப்பையும் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பையும் பின்பற்றுகிறோம் அவை சிறார் மதமாற்றத்துக்கு பெற்றோர் இருவரது ஒப்புதலும்…

சிலாங்கூர் அரசிலிருந்து டிஏபியை நீக்குவீர்- பாஸ் இளைஞர் தலைவர் கோரிக்கை

பாஸ் இளைஞர் துணைத் தலைவர் அஹமட் ஃபாட்லி ஷாரி, சிலாங்கூர் அரசாங்கத்திலிருந்து டிஏபி-யை வெளியேற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளார். “மந்திரி புசார் ஆட்சிக்குழுவில் மாற்றங்களைச் செய்ய சிலாங்கூர் சுல்தானின் அனுமதியைப் பெற்று டிஏபி கட்சியினரை வெளியேற்ற வேண்டும், அத்துடன் அதே கட்சியைச் சேர்ந்த சிலாங்கூர் சட்டமன்றத் தலைவரையும் தூக்க வேண்டும்”,என்று…

நஜிப்பின் மகன் நஸுபுடின்மீது ரிம37.6 மில்லியன் வருமான வரி வழக்கு

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் ரிம1.69 மில்லியன் வருமான வரியை வசூலிக்க புத்ரா ஜெயா முயன்று வரும் வேளையில் அவரின் புதல்வர் முகம்மட் நஸிபுடின் முகம்மட் நஜிப்மீது ரிம37.6 மில்லியன் வரி செலுத்துமாறு உள்நாட்டு வருமான வாரியம் வழக்கு தொடுத்துள்ளது. நஸிபுடின் 2011,…

பாக்காத்தானை விமர்சிக்க வேண்டும். ஆனால், ஆக்கப் பொறுத்த நாம், ஆறப்பொறுக்க…

'அடுத்த பொதுத்தேர்தல் வரட்டும், பக்காத்தான் அரசாங்கத்திற்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டியதுதான்.' இதுபோன்ற கூக்குரல்கள் அண்மைய காலமாக சற்று அதிகமாகவே ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. புதிய அரசாங்கம் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை, என்ற ஆதங்கம் ஆதரவாளர்களிடையே வலுத்துவருவது உண்மைதான். ஆனால் 'ஆக்கப்பொறுத்தது ஆறப்பொறுக்க வேண்டாமா' என்பதற்கு…

காட் எழுத்துமுறை: கல்வி அமைப்புகள் ஏற்கவில்லை, திட்டத்தைத் தள்ளிவைக்கச் சொல்கின்றன

காட் எழுத்து வடிவ அறிமுகத் திட்டத்துக்குத் தமிழ், சீனக் கல்வி அமைப்புகள் “ஒருமித்த ஆதரவு” கொடுத்ததாகக் கல்வி துணை அமைச்சர் தியோ நை சிங் கூறிக் கொண்டிருந்தாலும் அந்த அமைப்புகள் தொடக்கநிலைப் பள்ளிகளில் அத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றன. தியோ நேற்று…

பிரதமர் பதவி ஒப்படைப்பு: தேதி திட்டவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும்- பெர்சேயும்…

பெர்சே தலைமையில் என்ஜிஓ-களின் கூட்டணி ஒன்று டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியை எப்போது அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார் என்பதைத் தெளிவாக உரைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. பெர்சேயுடன் அங்காத்தான் பீலியா இஸ்லாம் மலேசியா(அபிம்), காபோங்கான் பெர்திண்டாக் மலேசியா(ஜிபிஎம்) ஆகியவற்றையும் உள்ளக்கிய அக்கூட்டணி, இன்று வெளியிட்ட ஒரு திறந்த…