அமைச்சர்கள் மகாதிரைப்போல் ‘நடக்க’ வேண்டும்

டாக்டர்  மகாதிர்  முகம்மட்  பிரதமராக  இருந்தபோது   கால்நடையாக சென்று  நாட்டு  நிலவரங்களை  நேரில்  கண்டறிந்ததுபோல்  இப்போதுள்ள  அமைச்சர்களும்  செய்ய  வேண்டும்  என்று  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்  கேட்டுக்கொண்டிருக்கிறார். நடப்பது  உடல்நலனுக்கு  நல்லது  என்பதுடன்  அமைச்சர்கள்  மக்களை  நன்கு  அறிந்துகொள்ளவும்  அது  உதவும். “அமைச்சர்கள்  ஆடம்பர  அலுவலகங்களில்  இருக்கும் …

காலிட் பதவிக்காலத்தை முடிக்க அனுமதிக்க வேண்டும்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமின் பதவிக்காலம்  முடியும்வரை  அவரை  ஒன்றும்  செய்யக்கூடாது. காலிட்டின்  ஆதரவாளர் ஒருவர்  இப்படிச்  சொல்லி  இருந்தால்  வியப்பில்லை.  ஆனால், சொன்னவர்  அம்னோ  செராஸ்  தொகுதித் தலைவர்  சைட்  அலி  சைட் அல்ஹப்ஷி. காலிட்டைத்  தேர்ந்தெடுத்தவர்கள்  மக்கள்  என்பதால்  அவரைப்  பதவியிலிருந்து  அகற்றும் …

பினாங்கில் போலீஸ் காவலில் நிகழும் மரணங்களை ஆராய பணிக்குழு

பினாங்கு  அரசு,  ஜனவரியிலிருந்து  போலீஸ்  காவலில்  எழுவர்  இறந்துபோனதைத்  தொடர்ந்து  அவ்வாறு  நேரும்  மரணங்களை  ஆராய   ஒரு  பணிக்குழுவை  அமைக்கிறது. அக்குழுவுக்கு  மாநில  துணை  முதலமைச்சர் II பி.இராமசாமி  தலைமை  வகிப்பார்  எனவும் மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்களான ஜகதீப்  சிங்  டியோவும்  டாக்டர்  அரிப்  பஹார்டினும்  அதன்  உறுப்பினர்கள் …

காசிம் அஹமாட்டின் நீதிமன்ற மறுஆய்வு மனுவை ஏஜி ஆட்சேபிக்கிறார்

புத்ராஜெயா ஷரியா உயர்நீதிமன்றத்தில் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கான நீதிமன்ற மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அறிஞர் காசிம் அஹமட் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு சட்டத்துறை அலுவலகம் இன்று ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்த மனுவை செவிமடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு கிடையாது என்று…

சிறார் மத மாற்றம்: பக்கத்தான் குரல் எங்கே?, குடைகிறார் அம்பிகா

ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்ற விவகாரத்தில் பக்கத்தான் நிலைப்பாடு பலவீனமாக காணப்படுவதால் அக்கூட்டணியை மூத்த வழக்குரைஞர் அம்பிகா சாடினார்.

சிறார் மத மாற்றம்: பக்கத்தான் குரல் எங்கே?, குடைகிறார் அம்பிகா

ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்ற விவகாரத்தில் பக்கத்தான் நிலைப்பாடு பலவீனமாக காணப்படுவதால் அக்கூட்டணியை மூத்த வழக்குரைஞர் அம்பிகா சாடினார்.

ஜோகூர் பாரு மலாய்க்காரர் கையிலிருந்து நழுவிச் செல்லலாம்: மகாதிர் எச்சரிக்கை

ஜோகூர்  பாருவின்  விரைவான  வளர்ச்சியைப்  பார்க்கையில்,  மலாய்  தேசியத்தின்  கோட்டையான  அது  மலாய்க்காரர்  கையை  விட்டுப்  போய்விடுமோ  என்ற  கவலை  மேலிடுவதாக  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  எச்சரித்துள்ளார். ஜோகூர்  பாருவில்  வானளாவும்  கட்டிடங்கள்  நிரம்பி  வருவதைக்  குறிப்பிட்டு  அது  “ஜோகூர்  பாரு  பாரு”-வாக  மாறி  வருகிறது…

டிஏபி: இன்னொரு மே 13 நிகழ்வதைத் தடுக்க பிஎன்னுடன் ஒத்துழைக்கத்…

இனங்களுக்கிடையிலும்  சமயங்களுக்கிடையிலும்  வெறுப்புணர்வை  முடிவுக்குக்  கொண்டுவருவதில் பிஎன்  உண்மையிலேயே  அக்கறை  கொண்டிருந்தால்,  மலேசியாவில்  மே 13-இல்  ஏற்பட்டதைப்  போன்ற  இனக் கலவரம்  மீண்டும்  நடப்பதைத்  தடுப்பதில்  அரசாங்கத்துடன் ஒத்துழைக்க  பக்காத்தான்  ரக்யாட்  தயாராக  உள்ளது. டிஏபி-இன்  தேசிய  ஆலோசகர்  லிம் கிட்  சியாங் இவ்வாறு  கூறினார். அதற்கு முன்னாள் …

ஜாஹிட்: பாதுகாப்புத் தகவல்களைக் கசியவிட்டவர்கள் யார் என்பது தெரியும்

கிழக்கு  சாபாவில்  பல  ஆள்கடத்தல்  சம்பவங்களில்   உள்நாட்டுப்  பாதுகாப்புத்  தகவல்களைக்  கசியவிட்டவர்கள்  என்று  நம்பப்படும்  பலரை  அதிகாரிகள்  அடையாளம்  கண்டிருக்கிறார்கள். ஆனாலும்,  அவர்களைக்  கைது  செய்ய  முடியாதிருக்கிறது  என்று  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். “சந்தேகத்துக்குரிய அந்த  “ஆள்களை”க்  கைது  செய்ய  வலுவான  ஆதாரங்கள்  தேவை”,…

முஸ்லிம் உணவகங்கள் மூன்று மணிக்குமுன் உணவு விற்கக் கூடாது

முஸ்லிம் உணவகங்கள்  பிற்பகல் மூன்று  மணிக்குமுன்  உணவு  விற்பது  தடுக்கப்பட்டிருப்பதாக  பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோம் இன்று  தெளிவுபடுத்தினார். புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  பேசிய  ஜமில்,  இந்த  உத்தரவு  எல்லா  மாநிலங்களுக்கும்  பொருந்தும்  என்றார். இந்த  உத்தரவு  பின்பற்றப்படுவதை  நாட்டில்  உள்ள  சமய  அலுவலகங்கள்  உறுதிப்படுத்தும்  என்றாரவர்.…

பினாங்கில் வீடற்றோருக்கு எதிராக நடவடிக்கை இல்லை

பினாங்கு  அரசு,  வீடற்றோருக்கு  எதிராக  அல்லது  அவர்களுக்கு  உணவளிப்போருக்கு  எதிராக  நடவடிக்கை எடுக்காது  என  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறியுள்ளார். “பிச்சைக்காரர்களுக்கு  அன்னதானம்  செய்தால்  அபராதம் ரிம150  எனக்  கூட்டரசு  அரசாங்கம்  அறிவித்துள்ளது.  இதை  ஏற்பதற்கில்லை. பினாங்கு  அதுபோன்ற  நடவடிக்கையில்  இறங்காது”, என்றாரவர். நேற்றிரவு  ஜாலான்  பினாங்கில் …

பிரதமர் அலுவலகத்தில் மலேசியாகினிக்குத் தடை

இன்று காலை  10 மணிக்கு பிரதமர்  அலுவலகத்தின்  செய்தியாளர்  கூட்டத்துக்குச்  செய்திகள்  சேகரிக்கச்  சென்ற  மலேசியாகினி  செய்தியாளரும்  படப்பிடிப்பாளரும்  தடுத்து  நிறுத்தப்பட்டனர். “விஜய்” எனப்  பெயர்பட்டை  அணிந்திருந்த  அதிகாரி  ஒருவர்  பிரதமர்  அலுவலகத்தில்  நுழைய  மலேசியாகினிக்கும்  மலேசியன்  இன்சைடருக்கும்(டிஎம்ஐ)  அனுமதி இல்லை  என்றார். கடந்த வெள்ளிக்கிழமை  மலேசியாகினி  அங்கு …

முஸ்லிம்கள் முன்னேரத்தில் உணவு விற்பது தவறல்ல

ரமலான்  மாதத்தில்  முஸ்லிம்கள்  முன்னேரத்தில்  உணவு  விற்பதில்  தவறில்லை  என்று முன்னாள்  பெர்லிஸ்  முப்தி  முகம்மட்  அஸ்ரி  சைனுல்  அபிடின்  கூறினார். “நோன்பிருக்காத  முஸ்லிம்-அல்லாதாருக்கு  உணவு விற்பது  குற்றமல்ல”, என  அஸ்ரி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். மேலும், மாதவிலக்கு  உள்ளவர்கள், நோயாளிகள், சிறார்கள், பயணிகள்  போன்றோர்  நோன்பிருக்க  வேண்டியதில்லை  என்றாரவர்.…

மைகார்டைப் புதுப்பித்தால் மட்டுமே பெட்ரோல் என்ற வதந்தியை நம்ப வேண்டாம்

மைகார்ட்  அடையாள  அட்டையைப்  புதுப்பித்தால்  மட்டுமே  பெட்ரோல்  வாங்க  முடியும்  என்பது  ஒரு  வதந்தி  என்றும்  அதை  நம்ப  வேண்டாம்  என்றும்  தேசிய  பதிவுத்  துறை (என்ஆர்டி) அறிவித்துள்ளது. அப்படி  ஒரு  அறிக்கையை  என்ஆர்டி  வெளியிடவில்லை  என்று  கூறிய  அதன்  தலைமை-இயக்குனர்  சுலைமான்  கிளிங்,  அதில்  உண்மை  இல்லை …

பதவி விலகல் என்பதைக் கேட்டு சிரித்தார் காலிட்

பதவி விலகப்போவது  உண்மையா  என்று  கேட்டதற்கு  அது  வீண்  புரளி  என்றார்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம். “அதில் (வதந்தியில்)  உண்மை  இல்லை. ஒரு கூட்டத்திலிருந்து  வருகிறேன். இன்னொரு கூட்டத்துக்குச் செல்கிறேன்”, என்றாரவர். பாங்குனான்  டாருல்  எஷானில்  செய்தியாளர்கள்  அவரைச்  சூழ்ந்துகொண்டு  பதவி  விலகல்  பற்றி …

மா: மே 13 பற்றி துணைப் பிரதமர் குறிப்பிட்டது ஒரு…

துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  அண்மையில்  மே 13  பற்றிப்  பேசியது  ஒரு “நினைவுறுத்தல்” மட்டுமே என மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்  கூறியிருப்பதை   கெராக்கான்  தலைவர்  மா  சியு  கியோங்   ஒப்புக்கொள்கிறார். முகைதின், இனக் கலவரம்  மீண்டும்  நிகழாது  என்பதற்கு  உத்தரவாதமில்லை  என்று  கூறியதாக  அண்மையில் …

காலிட் பதவி விலகல்? அரண்மனைகளில் ஊடகங்கள் முற்றுகை

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  பதவி  விலகுவார்  என்ற  வதந்தியைத்  தொடர்ந்து  செய்தியாளர்களும்  படப்பிடிப்பாளர்களும்  காலையிலிருந்து  சிலாங்கூரின்  இரு  அரண்மனைகளை  முற்றுகை  இட்டுள்ளனர். கிள்ளானில்  இஸ்தானா  ஆலம்  ஷா,  ஷா  ஆலமில்  இஸ்தானா  மெஸ்டிகா  தவிர்த்து சிலாங்கூர்  மாநிலச்  செயலகக்  கட்டிடத்திலும்  செய்தியாளர்கள்  திரண்டுள்ளனர். மந்திரி …

‘சமூக வலைத்தளங்களில் நல்லிணக்கத்தைக் கெடுக்காதீர்’

சமூக  வலைத்தளங்களைப்  பயன்படுத்தி  நாட்டின்  நல்லிணக்கத்துக்கும்  பாதுகாப்புக்கும்  இறையாண்மைக்கும்  மிரட்டல்  விடுக்கக்  கூடாது  என  தற்காப்பு  துணை  அமைச்சர்  அப்துல்  கரிம்  பக்ரி  மக்களுக்கு  அறிவுறுத்தியுள்ளார். அப்படிச்  செய்வோரை  அரசாங்கம்  கண்காணித்து  வருவதாகவும்  தேவையானால்  சட்டப்படி  தகுந்த  நடவடிக்கைகளை  எடுக்கும்  எனவும்  அவர்  தெரிவித்தார். சில தரப்பினர், சமூக …

பிகேஆரினால்தான் எம்பி-ஆக இருப்பதை காலிட் மறக்கக் கூடாது’

 ‘அப்துல்  காலிட்  இப்ராகிமை  சிலாங்கூர்  மந்திரி  புசாராக  நியமித்தது  பிகேஆர்தான்  என்பதால் அது  பதவி விலகச்  சொன்னால்  அவர்  விலகத்தான்  வேண்டும்  என்று  பிகேஆர்  இளைஞர்  தலைவர்  ஷம்சுல்  இஸ்கண்டர்  முகமம்ட்  அகின் கூறியுள்ளார். “அவரது  அறிக்கை 13வது  பொதுத்  தேர்தலில்  சிலாங்கூரில்  வெற்றி  பெற்றதை  அடுத்து  பக்காத்தான் …

கிட் சியாங்: முகைதின் துணைப் பிரதமர் பதவிக்குத் தகுதியற்றவர்

மே 13 என்று மிரட்டும் முகைதின் யாசின்  துணைப்  பிரதமராக  இருக்கத்  தகுதியற்றவர்  என விளாசியுள்ளார்  டிஏபி  மூத்த  தலைவர்  லிம்  கிட்  சியாங். முகைதின்  விடுத்துள்ள   மிரட்டலை,  நினைவுறுத்தல்  என்று  வருணித்து அவருக்கு  வக்காலத்து  வாங்கும்  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாயையும்  லிம்  சாடினார். இதுவரை …

ஸைட் இப்ராகிம்: முஸ்லிம் உணவகங்கள் பிற்பகல் மணி 3.00க்கு முன்பு…

  முஸ்லிம் உணவகங்கள் நோன்பு காலத்தில் பிற்பகல் மணி 3.00 க்கு முன்பாக திறக்கக்கூடாது என்று விடுக்கப்பட்டுள்ள உத்தரவை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கடுமையாகக் குறைகூறியுள்ளார். கெடா மாநில அரசு இவ்வாறான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவ்வுத்தரவை ஆதரித்து பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கிரி பஹாரும் இன்று…

பிச்சைக்காரர் விவகாரம்: பெர்காசாவும் தெங்கு அட்னானைச் சாடியது

கோலாலும்பூர்  மாநகர்  மையத்தின்  இரண்டு  கிலோமீட்டர்  சுற்றுவட்டத்தில்  பிச்சை  எடுப்பதையும்  இடுவதையும்  தடைசெய்யும்  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூரின்  திட்டத்தைக்  குறைசொல்வோரின்  வரிசையில்  பெர்காசாவும்  சேர்ந்து  கொண்டிருக்கிறது. “ரமலான்  மாதத்தில்  பலர்  பிச்சை  இட  விரும்பும்  நேரத்தில் அமைச்சர் மடத்தனமான,  அறிவுக்கு  ஒவ்வாத  திட்டத்தை …

முகைதின்: இன்னொரு ‘மே 13’? சாத்தியமில்லை என்று சொல்வதற்கில்லை

இன்று  இனங்களுக்கிடையில்  பதற்றநிலை  அதிகரித்து வருவதைப்  பார்க்கையில்  “அதுபோன்ற  சம்பவம்” மீண்டும்  நிகழ்வதற்கு  வாய்ப்பில்லை  என்று  கூறிவிட  முடியாது  எனத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கூறியுள்ளார். மே 13-ஐ மனத்தில்  வைத்தே  அவர்  இவ்வாறு  கூறியுள்ளார். ஓர்  இனம்  இன்னோர்  இனத்தைக்  குற்றம்சொல்வது  இப்போது  சாதாரணமாகி  விட்டது …