ஆற்றில் இராசனக் கழிவு: கொட்டியவர்களைத் தேடுகிறது ஜோகூர் போலீஸ்

பாசிர் கூடாங் அருகில் சுங்கை கிம் கிம்மில் இராசயனக் கழிவு கொட்டப்பட்டது குறித்து நேற்றிலிருந்து ஐந்து போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அப்புகார்களைச் செய்திருப்பதாக ஜோகூர் போலீஸ் தலைவர் முகம்மட் காலில் காடர் முகம்மட் கூறினார். “சுற்றுச்சூழல்துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது. என்றாலும் போலீசும்…

எம்எச்370 தலைமை விசாரணை அதிகாரி: எந்தத் தகவலும் மறைக்கப்படவில்லை

எம்எச்370 விமானம் காணமல்போனது தொடர்பாக முக்கிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டதாகக் கூறப்படுவதைத் தலைமை விசாரணை அதிகாரி மறுத்தார். த ஸ்டாரிடம் பேசிய எம்எச்370 தலைமை விசாரணை அதிகாரி கொக் சூ சோன், தகவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வெளியிட்டதில்லை என்றார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தார் சிலர், ஜூலை மாதம் வெளியிடப்பட்ட விபத்துமீதான…

டாக்டர் எம்: கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்க…

ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் கற்பிக்கும் அணுகுமுறையை அரசாங்கம் அனுமதிக்கிறது, அதேசமயம் தேசிய மொழியில் கற்பிக்கப்படுவதும் தொடரும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். "மலேசியர்களில் சிலர் இப்பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படுவதை விரும்புகிறார்கள், சிலர் அதனை எதிர்க்கிறார்கள். எனவே, அரசாங்கம் இவ்விஷயத்தில் நடுநிலையாக இருக்க விரும்புகிறது."…

‘கட்டாயம்’ என்ற சொல்லை அகற்றிவிட்டு, மரணத் தண்டனையை நிலைநிறுத்தவும்

மலேசிய இக்ராம் அமைப்பு (இக்ராம்) கட்டாய மரண தண்டனையைத் தடை செய்ய வேண்டும் எனும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால், மரண தண்டனையை நிலைநிறுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அது அழைப்பு விடுத்துள்ளது. ‘கட்டாயம்’ எனும் சொல்லை அதிலிருந்து விலக்கிவிட்டால், அக்குற்றத்திற்கு, நீதிமன்றம் வேறு தண்டனை வழங்க…

எம்எச் 370 : தேடும் பணி கைவிடப்படவில்லை

2014 மார்ச் 8-இல் காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் படலம் கைவிடப்படாது. புதிய சான்றுகள் கிடைத்தால் காணாமல்போன விமானத்தைத் தேடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிக்கை கூறியது. அவ்விபத்தில் உறவுகளைப் பறிகொடுத்த குடும்பத்தார் மனம் தளர்ந்து விடக்கூடாது என்றும் அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது.…

‘சந்தேகத்திற்குரிய’ நிலப் பரிவர்த்தனை தொடர்பில், சாமிவேலுவை விசாரிக்க எம்ஏசிசி-க்கு வலியுறுத்து

பிகேஆர் முன்னாள், துணைச் செயலாளர், ஜனபாலா பெருமாள், ‘சந்தேகத்திற்குரிய’ நிலப் பரிவர்த்தனை தொடர்பில், மஇகா முன்னாள் தேசியத் தலைவர் சாமிவேலுவை விசாரிக்க சொல்லி, எம்ஏசிசி-ஐ வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், எம்ஏசிசி மீது புகார் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், இரண்டு முறை…

பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான், நஸ்ரி அல்ல

புத்ரா ஜெயா எம்பி தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்தான் இன்னமும் பிஎன் தலைமைச் செயலாளர். பிஎன் இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் இன்று இதனைத் தெரிவித்தார். பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அப்துல் அசிஸ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அது முறையாக அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் தெங்கு அட்னான்…

பிஎன்-ஐ கலைக்க, தலைவர்களிடையே கருத்து ஒப்புதல் ஏதும் இல்லை

கடந்தாண்டு பொதுத் தேர்தலில் தோல்வி கண்டதை அடுத்து, அக்கூட்டணியைக் கலைக்கலாமா என்பது தொடர்பாக நடைபெற்ற பிஎன் உச்சமன்ற முதல் கூட்டம், எந்தவித உடன்பாடும் இல்லாமல் முடிவுற்றது. இன்று காலை, சுமார் 11 மணியளவில், புத்ரா உலக வாணிப மையத்தில் அமைந்துள்ள பிஎன் தலைமையகத்தில் கூட்டம் தொடங்கியது. பிஎன் துணைத்…

செமிஞ்யே தேர்தலில்தான் அதிகமான தேர்தல் குற்றங்கள், அதிக தவறுகள் செய்த…

14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடந்துள்ள ஆறு இடைத் தேர்தல்களில் செமிஞ்யேயில் அதிகமான தேர்தல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே கூறியது. அதிகமான தேர்தல் குற்றங்களைச் செய்தது ஹரப்பான்(21) என்றும் அதை அடுத்து பின் (13) என்றும் பெர்சே தலைவர் தாமஸ் பான் தெரிவித்தார்.…

“கூட்டரசு சாலைகளில் பராமரிப்பு வேலைகள் தேங்கிக் கிடப்பதற்கு நிதிப் பற்றாக்குறைதான்…

நாட்டில் கூட்டரசு சாலைகள் சிலவற்றில் பராமரிப்பு வேலைகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன என்றால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததுதான் அதற்குக் காரணம் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் கூறினார். 2019 பட்ஜெட்டில் நாடு முழுக்க கூட்டரசு சாலைப் பராமரிப்புக்கு ரிம100 மில்லியனே ஒதுக்கப்பட்டதால் சாலைப் பராமரிப்பு…

தாமான் மங்கீஸ் குடியிருப்பாளர்கள், டாக்டர் எம்-ன் அரசியல் செயலாளரை வழி…

பினாங்கு, தாமான் மங்கீஸ் மக்கள் வீடமைப்பு திட்டத்தின் (பிபிஆர்) குடியிருப்பாளர்கள் டாக்டர் மகாதிரின் அரசியல் செயலாளர், அபு பாக்கார் யாஹ்யாவை, கொம்தார் கட்டடத்திலிருந்து வெளியேறவிடாமல், வழிமறித்து நின்றனர். அண்மையில் தங்கள் வாடகைக் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அம்மக்களைக் காண, அபு பாக்கார் நேற்றிரவு மணி 7 அளவில், அவர்கள்…

பிரதமர்: அமெரிக்காவைவிட ‘பணக்கார’ சீனாவே மலேசியாவின் தேர்வு

மலேசியா, இரண்டு மிகப் பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வதாக இருந்தால் “அடுத்து என்ன செய்யும் என்பதை முன்னறிய முடியாத” அமெரிக்காவைவிட “பணக்கார” சீனாவைத் தேர்வு செய்யும் என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறு கூறிய…

அம்பிகா : ‘அம்னோ-பாஸ்’ , சொல்லாடலில் அச்சம் கொள்ள வேண்டாம்

‘அம்னோ-பாஸ்’ எனும் சொல்லாட்சியில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தொந்தரவு அடையக்கூடாது என்று முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். அதற்கு மாறாக, பல்லின மக்களை ஒற்றுமைபடுத்துதல், மக்களுடையப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் பிஎச் கூட்டணி கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர். அம்பிகாவின்…

பத்துமலை கோயில் அதிகாரிகளில் ஒருவர் விடுதலை, இருவருக்கு காவல் நீட்டிப்பு

கோலாலம்பூர், ஜாலான் பண்டாரில் அமைந்திருக்கும் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ஒரு நில மேம்பாடு தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 3 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். கோயிலின் உயர் நிர்வாக உறுப்பினரான, ‘தான் ஶ்ரீ’ பட்டம் வைத்திருக்கும் 75 வயது கொண்ட…

உங்கள் கருத்து: அம்னோவும் பாஸும் ஒன்று சேர்வதால் மஇகாவும் மசீசவும்…

‘நேர்மையாக நினைத்துப் பாருங்கள், இப்போது முற்றிலும் மதிப்பிழந்து கிடக்கும் பிஎன்னுடன் 60ஆண்டுகளாகச் சேர்ந்திருந்தீர்களே, என்ன சாதித்தீர்கள்?’ பெயரிலி_3f4b: மசீச அல்லது மஇகா என்ன செய்யப்போகிறது என்பது பிரச்னை அல்ல, பக்கத்தான் ஹரப்பானுக்கு முழுமனத்துடன் பிளவுபடாத ஆதரவைக் கொடுத்தார்களே சீனர்களும் இந்தியர்களும் அவர்களின் நிலை என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி.…

12 தடுப்பூசிகளில் இரண்டைக் கட்டாயமாக்கலாமா என்று சுகாதார அமைச்சு பரிசீலனை

தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் உள்ள 12 வகை தடுப்பூசிகளில் இரண்டையாவது போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டுமென்ற மலேசிய குழந்தைமருத்துவர் சங்கத்தின் பரிந்துரையைப் பரிசீலிக்கச் சுகாதார அமைச்சு தயாராகவுள்ளது. தட்டம்மை, தாளம்மை அல்லது கூவைக்கட்டு, ரூபெல்லா (எம்எம்ஆர்) ஆகியவற்றுக்கும் டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோய்க்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குமாறு கூறும்…

பிஎன் பேச்சுகளுக்குமுன் இன்று அம்னோ உச்சமன்றம் கூடுகிறது

பிஎன் உறுப்புக் கட்சிகள் கூட்டணியைக் கலைக்கக் கோரிக்கை விட்டுவரும் வேளையில் அது குறித்துப் பரிசீலிக்க அம்னோ உச்சமன்றம் இன்று கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டம் நடைபெறுவதை உச்சமன்ற உறுப்பினர் அர்மாண்ட் அஸ்ஹா அபு ஹானிபா உறுதிப்படுத்தியதாக த மலேசியன் இன்சைட் கூறியது. அக்கூட்டத்தில் அம்னோ தலைவர்கள், மசீசவும் மஇகாவும் புதிய…

ஏப்ரல் 13-ல், ரந்தாவ் இடைத்தேர்தல்

எதிர்வரும் ஏப்ரல் 13-ம் தேதி, ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் (இசி) முடிவெடுத்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதியும், ஆரம்ப வாக்களிப்பு ஏப்ரல் 9-ம் தேதியும் நடைபெறும் என இசி தலைவர் அஸார் அஸிசான் ஹருண் தெரிவித்தார். ரந்தாவ் இடைத்தேர்தலுக்கு, RM1.8 மில்லியன் செலவாகும்…

நஸ்ரி பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குச் செல்லமாட்டார்

பிஎன் உச்சமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது ஆனால், பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசிஸ் அதில் கலந்துகொள்ள மாட்டார். நஸ்ரி கலந்துகொள்ளும் கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான மசீசவும் மஇகா எச்சரித்ததை அடுத்து நஸ்ரி கூட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார்.…

புதிய கூட்டணியால் பேராக்கில் ஆட்சி கவிழும் என்று பாஸ் கூறுவது…

அம்னோவும் இஸ்லாமியக் கட்சியும் கூட்டுச் சேர்ந்தால் பேராக்கில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி ஆட்டம் காணும் என்ற பேராக் பாஸ் இளைஞர் தலைவர் அக்மால் கமருடினின் கணிப்பு தப்பு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் சட்டமன்றத்தில் அம்னோ 27 இடங்களையும் பாஸ் மூன்று இடங்களையும் ஆக மொத்தம் 30…

பாஸ், அம்னோ கூட்டுச் சேர்வது பேராக்கிலும் கெடாவிலும் ஹரப்பானுக்கு ஆபத்து

பாஸும் அம்னோவும் முறையாக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் பேராக்கிலும் கெடாவிலும் பக்கத்தான் ஹரப்பானின் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கும். பேராக், பாஸ் இளைஞர் தலைவர் அக்மால் கமருடின், அம்னோவும் பாஸும் சேர்ந்து சட்டமன்றத்தில் 30 இடங்களை வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஹரப்பானுக்கு 29 இடங்கள்தான். கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ…

பிறந்தநாள் அன்று, சாமிவேலு மீது எம்ஏசிசி-யில் புகார் அளிக்கப்படும்

முன்னாள் சுங்கை சிப்புட் மஇகா தொகுதி தலைவர், எம் லோகநாதன், எதிர்வரும் மார்ச் 8-ம் தேதியன்று, கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் எஸ் சாமிவேலுவுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் அளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மூன்றாவது முறையாக புகார் செய்ய, லோகநாதன் தேர்ந்தெடுத்துள்ள மார்ச் 8,…

நஸ்ரி அல்லது மசீச, மஇகா – அம்னோவின் தேர்வு எது?

பிஎன் –னின் உறுப்புக்கட்சிகளான மசீச மற்றும் மஇகா இரண்டும், அக்கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்தில் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், தாங்கள் அக்கூட்டத்தைப் புறக்கணிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளன. மசீச மற்றும் மஇகா உயர் தலைவர்களால், இன்று வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், பிஎன் தலைமைச் செயலாளராக நஸ்ரி நியமிக்கப்பட்டது நியாயமற்றது…