‘என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்’ – இரண்டாவது ஆடியோ பதிவு வெளியானது

பாக்காத்தானை விட்டு வெளியேறும் முன், பெர்சத்துவின் உச்ச மன்ற கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது ஆடியோ பதிவு டாக்டர் மகாதிர் முகமது சார்பு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் குரலை ஒத்திருந்த அந்த ஆடியோவில், தான் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப பதவி விலகுவதிலிருந்து அவரைத் தடுக்க வேண்டாம் என்று…

கோவிட்-19: 40 புதிய பாதிப்புகள், 70 பாதிப்புகள் மீட்கப்பட்டன

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மதியம் நிலவரப்படி 40 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி உள்ளன என்று தெரிவித்தார். அதில், 31 பாதிப்புகள் மலேசிய அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இறக்குமதி பாதிப்புகள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். இவ்வாறு, மலேசியாவில் மொத்த கோவிட்-19…

பதவிகளுக்காக திசைமாறும் தவளை அரசியல், நெறிகளுக்கும் கொள்கைகளுக்கும் இடம் இல்லை…

மே 18 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் நேரத்தை குறைப்பதற்கான முயற்சி, முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணிக்கு (பிஎன்) பெரும்பான்மை இல்லை என்பதைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தங்கள் இருக்கைகளை இடைவெளி…

நஜிப்பின் வளர்ப்பு மகன் ரீசா ஆஜிஸ் விடுவிக்கப்பட்டார்

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரீசா ஆஜிசை 1MDB நிதிகளுடன் இணைக்கப்பட்ட RM 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 5 பண மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று விடுவித்தது. அரசு தரப்பும் குற்றம்சாட்டப்பட்டவரும் ஒரு உடன்பாட்டை எட்டியதை தொடர்ந்து, நீதிபதி அஸ்மான்…

ஜோகூர் சட்டமன்றம் அசல் நிகழ்ச்சி நிரலின் படி அமைதியாக முடிந்தது

ஜோகூர் சட்டமன்றம் அசல் நிகழ்ச்சி நிரலின் படி அமைதியாக முடிந்தது குழப்பம் மற்றும் சண்டைகள் ஏற்பட்ட மலாக்கா மற்றும் பேராக் மாநில சட்டமன்றங்களுடன் ஒப்பிடும்போது, ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று அமைதியாக தோன்றியது. பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தரப்பினர் அரசியல் ஆட்டங்களில் ஈடுபடக்கூடாது என்ற அரச…

வேற்றுமை கிருமியை பரப்ப வேண்டாம், ஜோகூர் சுல்தான் கூறினார்

ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக பிளவு பட வேண்டாம் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் அறிவுறுத்தினார். தேசிய கூட்டணி தலைமையில் புதிய மாநில அரசாங்கக் கட்சி, மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சிக்கும் இடையே விவாதங்களும் வாக்குவாதங்களும் ஏற்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவரது ஆலோசனை…

கையெழுத்திடப்பட்ட 23 உறுதிமொழிகள் பெரிக்காத்தான் கையில் உள்ளன

கெடா தேசிய கூட்டணி (பி.என்) தற்போது மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உட்பட 23 கையெழுத்திடப்பட்ட உறுதிமொழிகள் (statutory declaration) தயாராக உள்ளன. பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்து மாநில அரசைக் கைப்பற்றுவதற்கான அடுத்த கட்டத்திற்காக அவர்கள் காத்திருப்பதாக கெடா பாஸ் வட்டாரங்கள்…

கோவிட்-19: 37 புதிய பாதிப்புகள், இரண்டு இறப்புகள்

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று மதியம் நிலவரப்படி 37 புதிய கோவிட்-19 பாதிப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார். மொத்தம் 21 பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை என்றும் நான்கு இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 33 உள்ளூர் பாதிப்புகள் என்றும் அவர் கூறினார். எனவே, மலேசியாவில்…

அஸ்மின்: இந்த மாத இறுதியில் பொருளாதார மீட்பு திட்டத்தை அரசாங்கம்…

கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதாரத்தை புதுப்பிக்க ஆறு மாத பொருளாதார மீட்பு திட்டத்தை இந்த மாத இறுதியில் அரசாங்கம் அறிவிக்கும். இந்த தொற்றுநோய் மலேசியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளை பாதித்துள்ளதாக அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார். “வணிகங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டியிருந்தது, வேலையில்லா…

நாடாளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரல் மே 18 நம்பிக்கையில்லா தீர்மானத்தை…

மே 18 அன்று நாடாளுமன்றத்தின் ஒரு நாள் அமர்வுக்கான அறிவிப்பு கடிதத்தில் இப்போது ஒரே ஒரு நிகழ்ச்சி நிரல் மட்டுமே உள்ளது - அது, பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் உரை மட்டுமே. இறுதியில் இது பிரதமர் முகிதீன் யாசினின் அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு…

TNB தலைவராக மஹாட்ஸீர் நியமனம் குறித்து மஸ்லீ கேள்வி

தற்போது விசாரணையில் உள்ள சூரிய மின்சக்தித் திட்ட வழக்குடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தெனகா நேஷனல் பெர்ஹாட்டின் (TNB) தலைவராக அம்னோ துணைத் தலைவர் மஹாட்ஸீர் காலித் நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மஹாட்ஸீரின் பெயரை மேற்கோள் காட்டவில்லை என்றாலும், அவரது…

நான் இன்னும் கெடாவின் மந்திரி புசார் – முக்ரிஸ்

மாநில சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறினாலும், தான் இன்னும் கெடா மந்திரி புசாராக இருப்பதாக முக்ரிஸ் மகாதீர் தன் பதவியை தக்க வைத்துக் கொண்டார். "கெடாவில் அரசியல் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது, நான் இன்னும் மந்திரி புசாராக தான் இருக்கிறேன், அரசாங்கம் இன்னும் நடைமுறையில்…

என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டனர்

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தான் குற்றமற்றவர் என்பதையும் தன் தலைமைத்துவத்தின் தரத்தையும் நிரூபிக்க முயற்சிப்பதில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். ஒரு வீடியோ வெளியீட்டில், அவர் மலேசிய அரசியலின் நிலையற்ற தன்மை பற்றி பேசினார். "மலேசியாவின் அரசியல் எவ்வாறு…

‘இப்போது மலாய்க்காரர்கள் கோழையாகி விட்டனர்’ – டாக்டர் மகாதீர் முகமது

டிஏபி கட்சி அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருந்தால், அது மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்று பல மலாய்க்காரர்கள் நம்புவது மிகவும் வெட்கமாக உள்ளது. ஆம். மலாய்க்காரர்களுக்கு பல பலவீனங்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்கள் வணிகத்திலும் நிறுவனத்திலும் சிறந்து விளங்கவில்லை. போதைப்பொருள், குற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஏராளமான…

16 புதிய பாதிப்புகள், 2 மாதங்களில் மிகக் குறைவான பதிவு

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நண்பகல் வரை 16 புதிய கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன என்றும், இது இரண்டு மாதங்களில் மிகக் குறைவான பதிவு ஏன்றும் கூறியுள்ளார். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு முன்பு தான் மலேசியா இவ்வளவு குறைந்த பாதிப்பை பதிவு செய்திருந்தது.…

இஸ்மாயில்: பி.கே.பி. மீண்டும் அமல்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) கீழ் அமைக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு (SOP) பொது மக்கள் இணங்கத் தவறினால் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி) மீண்டும் அமல்படுத்தப்படலாம். பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பி.கே.பி.பி.யின் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பேரங்காடிகளுக்கு கொண்டு செல்வது உட்பட…

கெடா மாநிலத்தில் பாஸ் கட்சிக்கு பெரும்பான்மை என அறிவிப்பு

புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய கூட்டணிக்கு எளிதான பெரும்பான்மை இருப்பதாக கெடா பாஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஸ் தேர்தல் இயக்குநர் முகமட் சனுசி முகமட் நோர், கெடாவில் உள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க ஒப்புக் கொண்டதாகக்…

பேராக் மாநில சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ங்ஙே

பேராக் சட்டமன்றம் - சித்தியாவான் சட்டமன்ற உறுப்பினர் ங்ஙே கூ ஹாம் இன்று பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள அவர், நீண்ட உரை நிகழ்த்திய பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது உரையில், நல்ல சட்டம் மற்றும்…

முக்ரிஸ் ஆதரவாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறது பெரிக்காத்தான்

முகரிஸ் மகாதீரின் தலைமையை ஆதரிக்கும் பெர்சத்து பிரதிநிதிகளை ஈர்க்க முயற்சிப்பதன் மூலம் தேசிய கூட்டணி (பி.என்.) கெடா மாநில சட்டசபையில் தனது நிலையை வலுப்படுத்த முயற்சிக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "பெர்சத்து கட்சியும் இரண்டு அணிகளாக பிளவுபட்டு, பாக்காத்தானை ஆதரிக்கும் ஒரு குழு, பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான…

2 பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகல், கெடா…

டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். கெடாவில் உள்ள இரண்டு பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள், டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ்) ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறுவதாக…

பேராக்கின் புதிய அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றார் சுல்தான்…

அங்கீகாரம் பெற்ற புதிய மாநில அரசு, அந்நம்பிக்கையை நேர்மையுடனும் செயல்படுத்த வேண்டும் என்று பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார். "நம்பகமான நிர்வாகத்தை விரும்பும் என் நம்பிக்கை எப்போதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், தூய்மையான தலைமைத்துவத்தை விரும்பும் மக்களின் நம்பிக்கை நிறைவேற வேண்டும். அரசியலுக்கு எல்லைகள் உள்ளன, அரசியலில் கட்டுப்பாடுடன்…

கெடாவும் கவிழ்ந்ததா? இன்று பிற்பகல் ‘சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு’

முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான மாநில அரசின் நிலைப்பாட்டை பாதிக்கும் ஒரு அறிவிப்பை இரண்டு கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ்) ஆகியோர் இன்று "சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு" அழைப்பு விடுத்துள்ளர்.…

உலக செவிலியர் தினம் 2020

இன்று மே 12, உலக செவிலியர் தினம், உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்படுகிறது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்கை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆண்டின் செவிலியர் தினக் கரு, "வழிநடத்த ஒரு குரல்: உலகை ஆரோக்கியத்திற்கு இட்டு செல்லுதல்” "A Voice to Lead :…