டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம்

புதுடில்லி : காற்றுமாசு பிரச்னையை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக டில்லியில் காற்று மாசுபாடு அபாய அளவிலேயே இருந்து வருகிறது. இத்துடன் தற்போது பனிமூட்டமும் அதிக அளவில் உள்ளதால் வாகன ஓட்டிகளும்,…

750 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.1,064 மட்டும் தானா?

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், நான்கு மாதம் வயலில் கஷ்டப்பட்டு 750 கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்தார். ஆனால், வெறும், 1,064 ரூபாய்க்கு தான் அது விலைக்கு போனது. வெறுப்படைத்த அந்த விவசாயி அந்த தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு மணியார்டர் செய்து விட்டார். ஒபாமாவுடன்…

45 ட்ரில்லியன் யு எஸ் டாலர்: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை…

வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு எல்லாருக்கும் தெரியும். இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டி கொழுத்தது என்பதும் தெரிந்த கதை. விலை மதிப்பற்ற இந்திய கடவுள் சிலைகள்,…

விரக்தியில் விவசாயிகள்.. அதிகரிக்கும் தற்கொலைகள்.. டெல்டாவில் தலையெடுக்கும் புது பிரச்சினை!

சென்னை: கஜா புயல் பாதித்த காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அது விவசாயிகள் தற்கொலை. அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து வருவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. புயல் பாதிப்பிலிருந்து மீள முடியாத நிலைக்குப் போய் விட்டதை நினைத்தும், இருந்ததை எல்லாம் இழந்த துயரத்திலும்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கிய பிச்சைக்காரர்..!

மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிச்சைக்காரர் ஒருவர் நிதி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரணப்பொருள்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்தநிலையில் நமது மேட்டுப்பாளையம் அமைப்பு…

டெல்லியை அடுத்து சென்னையிலும் போராட்டம்.. சென்ட்ரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு போராட்டம்…

அமெரிக்காவில் 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அரசியல் தஞ்சம்..

சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் 4 ஆண்டுகளில் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சமீபகாலமாக தஞ்சம் அடைந்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை அளிக்குமாறு தகவல் பெறும் சுதந்திரம் சட்டத்தின் மூலம் அந்நாட்டின் குடியுரிமைத்துறையிடம் வட அமெரிக்காவில் உள்ள பஞ்சாபிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.…

போலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய…

தமிழ் தொலைக்காட்சிகளில் சித்த மருத்துவர் என்ற அடையாளத்துடன் தீராத வியாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி போலி மருத்துவர்கள் பங்கேற்பதால் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, தமிழ் நாடு சித்த மருத்துவக் கவுன்சில் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் சிலவற்றில் இரவு நேரங்களில்…

ஒரு வருடத்திற்குள் வழக்குகளை முடிப்பேன்… எங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்… -பொன்.மாணிக்கவேல்

உயர்நீதிமன்றம் இல்லையென்றால் நானும் இல்லை, இந்த குழுவும் இல்லை, இந்த ஆப்பரேஷனும் இல்லை. உயர்நீதிமன்றம்தான் பழமையான பொருட்களெல்லாம் வெளிநாடுகளிலிருந்து மீட்டெடுக்கவேண்டும், திருட்டை குறைக்க வேண்டுமென கடுமையான முயற்சி செய்தது உயர்நீதிமன்றம். உயர்நீதிமன்றம் இல்லையென்றால் நாங்களெல்லாம் இல்லை. இந்த வழக்குகளை உறுதியாக ஒரு வருடத்திற்குள் முடிப்பேன், ரொம்பநாள் நான் இழுக்கமாட்டேன்.…

நமக்கு “நல்ல சோறு” போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் “புழுத்துப்போன……

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. இதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் தனது கட்சியின் சார்பாக கிட்டதட்ட 60 இலட்சம் மதிப்புள்ள நிவாரணபொருட்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இந்நிலையில்…

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கத் தடை : பொன்.…

தமிழ்நாட்டில் கோவில் சிலைகள் திருடப்பட்டு, கடத்தப்படுவது தொடர்பான வழக்குகளை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டில் கோவில் சிலைகள் திருடப்பட்டு, கடத்தப்படுவது தொடர்பான வழக்குகளை தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரித்து…

“விலை கொடு, செவி மடு”: டெல்லியை உலுக்கிய இந்திய விவசாயிகளின்…

"எங்களுக்கு இந்தி அவ்வளவாகத் தெரியாது. நாங்கள் எந்த மாணவர் அமைப்பிலும் உறுப்பினராகவும் இல்லை.இங்கு கூடியுள்ள விவசாயிகளின் கோஷங்களை எங்களால் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், விவசாயிகளின் இன்னல்களை எங்களால் புரிந்துகொள்ள முடியும்." இதைக் கூறியவர் 18 வயதாகும் கல்லூரி மாணவி ராணியா. கேரளாவைச் சேர்ந்த ராணியா, சாவித்ரி மற்றும்…

நாளை டெல்லி ஸ்தம்பிக்கும்.. களத்தில் 5 லட்சம் விவசாயிகள்.. நிர்வாண…

டெல்லி: டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மாலையில் இருந்து நாளை மாலை வரை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாம் நட்ட விதையொன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது என்று தமிழக விவசாயிகள் சந்தோசமாக மார்தட்டிக் கொள்ள முடியும். தமிழக விவசாயிகள் டெல்லியில் சென்று வருடம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ அதிரடி.. போலீஸ் மீது…

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொலை செய்ய காரணமாக இருந்ததாக காவல்துறை, வருவாய் துறையினருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வலியுறுத்தி, பொதுமக்கள் மாபெரும் பேரணி…

காலிஸ்தான் ஆதரவாளருடன் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை

பாகிஸ்தானில் நடந்த விழாவின்போது காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானின் கர்தார்பூரில், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் அடக்கஸ்தலத்தில் தர்பார் சாகிப் குருத்வாரா கட்டப்பட்டு உள்ளது. இந்த நகரை இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள…

பாக்., சேட்டை: அரசு விழாவில் காலிஸ்தான் தலைவர்

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் சிறப்பு பாதைக்கான பணிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். விழாவில், பஞ்சாபை தனி நாடாக்க வலியுறுத்தும் பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் தலைவரும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கல் நாட்டு விழா சீக்கிய மத ஸ்தாபகர், குருநானக் தேவின் சமாதியான…

“ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம்” – ஆய்வு செய்த நிபுணர்…

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி, அதற்கு எதிராக பொதுமக்கள் போராடிவந்த…

‘சென்டினல் பழங்குடியினர் தேடித் தாக்க விரும்புவதில்லை’- நேரில் சென்றவரின் அனுபவம்

சென்டினல் தீவிலுள்ள பழங்குடியினர் குறித்து இந்தியர் ஒருவரை தவிர வேறு யாருக்கும் அதிக விஷயங்கள் தெரிந்திருக்காது. அவர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட். இந்தியாவின் பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் பிராந்திய தலைவராக இருந்த பண்டிட் தனித்துவிடப்பட்டுள்ள இந்த தீவில் உள்ள மக்களை சந்திக்க பல தசாப்தங்களை செலவிட்டுள்ளார். லட்சக்கணக்கான ஆண்டுகளாக உலகின்…

தேவசம் போர்டு கமிஷனர் இந்துவாக இருக்க வேண்டும்: கேரள ஐகோர்ட்…

திருவனந்தபுரம்: கேரளாவில், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டுகளின் கமிஷனர் இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3,000 கோவில்கள் கேரளாவில், 3,000 கோவில்களை நிர்வகிக்க, ஐந்து தேவசம் போர்டுகள் உள்ளன. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சி, கூடல் மாணிக்கம் என ஐந்து தேவசம்…

சபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா கைது…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா பாத்திமாவை இன்று போலீசார் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி…

‘கஜ’ புயலிலும் வீழாத பனை மரங்கள்

கஜ புயலின் தாக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்து கிடக்க, பாதிக்கப்பட்ட இடங்களில் உறுதியாக நின்ற பனை மரங்கள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தின. மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் பனை மரங்கள் வரிசையாக நிற்கும் விளமல் கிராமத்தின் படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.…

முல்லை பெரியாறு, மேகதாது.. அனைத்து வழிகளிலும் வஞ்சிக்கப்படும் தமிழகம்.. பெரும்…

சென்னை: முல்லைப் பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு அனுமதி அளித்த கையோடு, அடுத்த சில மாதங்களிலேயே கர்நாடக அரசு மேகதாது பகுதியில், அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் அடுத்தடுத்த இந்த அனுமதிகள் காரணமாக, நதிநீர் பங்கீட்டில், தமிழகம் பெரும் சிக்கலான…

கஜாவால் டெல்டாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.. மத்தியக்குழுவை அதிர வைத்த…

தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு செய்ய சென்ற மத்தியகுழு கூறியுள்ளது. கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள். கஜா புயல் சேதம் குறித்து தமிழகம் வந்திருக்கும் மத்திய…