தமிழகம் முழுவதும் வறட்சி: அனைத்து மாவட்ட அறிக்கைகளும் நாளை தாக்கல்

தமிழகம் முழுவதும் காணப்படும் வறட்சி நிலைமைகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த அறிக்கைகள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட உள்ளன. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான நிவாரண நிதிகளும், உதவிகளும் அளிக்கப்பட…

விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் அனுமதித்தால் ரூ.2,000 பரிசு: அரசு அதிரடி…

சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்து உதவி செய்யும் நபருக்கு ரூ.2000 பரிசு வழங்கப்படும் என டில்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் சாலை விபத்தில் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகளவில் பெருகிக்கொண்டு செல்கிறது. விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் சிக்கியவரை காப்பாற்றவும் பல்வேறு அரசாங்கங்கள்…

ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்ககோரி சென்னையில் பிரமாண்ட பேரணி

பழங்காலத்தில் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்த பழக்கம் பிற்காலத்தில் சல்லிகட்டு என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ஜல்லிக்கட்டு என்று ஆனது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி…

வறட்சி பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பயிருக்கான இழப்பீடு, மீண்டும் பயிரிட மானியக் கடன் வழங்கி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலினை செய்யப்படுவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…

மோடியால் நாட்டை வழிநடத்த முடியாது.. அத்வானியை பிரதமராக்குங்கள்.. மமதா போர்க்கொடி

கொல்கத்தா: பிரதமர் மோடியால் இந்தியாவை வழிநடத்த முடியாது. அதற்கான முயற்சியில் அவர் தோற்றுவிட்டார் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அல்லது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்றோர் புதிய பிரதமராக வரவேண்டும் என மமதா பானர்ஜி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் பெரும் பொருளாதார தேக்கநிலை…

உடல்நலக் குறைவால் விவசாயிகள் மரணம் என்பதா.. அமைச்சர் பேச்சால் உறவினர்கள்…

புதுக்கோட்டை: பயிர்கள் கருகிய துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சம்பத் பேசிய சர்ச்சைப் பேச்சால் விவசாயிகள் கொந்தளிப்படைந்துள்ளனர். காவிரியில்…

விவசாயிகள் மரணம்- தடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ரயில்…

நாகப்பட்டினம்: பயிர்கள் கருகியதால் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் நாகப்பட்டினத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காததாலும், பருவ மழை போதிய…

விவசாயிகள் தற்கொலை 42 சதவீதம் அதிகரிப்பு..மகாராஷ்டிரம் முதல் இடம்.. தமிழகத்தின்…

மும்பை: 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, 5,650 விவசாயிகள் 2014 ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுவே 2015ம் ஆண்டு 8,007 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி…

தொடரும் விவசாயிகள் மரணத்தைத் தடுக்க… பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய…

சென்னை: பயிர்கள் கருகியதைக் கண்டு தற்கொலை, மாரடைப்பு என விவசாயிகள் மரணம் அடைந்து வருகின்றனர். தொடர் விவசாயிகளின் மரணத்தைத் தடுக்க பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரியுள்ளார். காவிரியில் இருந்தும் தண்ணீர் இல்லை. பருவமழை பொய்த்துப் போனதாலும்…

சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு

சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர்,…

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி பொது நல வழக்கு..…

மதுரை: தமிழகம் நீரில்லாமல் காய்ந்து கிடக்கிறது. பயிர்கள் கருகி இதுவரை 100 பேர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த பாலகணேசன் என்பவர்…

தொடரும் அதிர்ச்சி.. அரியலூர் விவசாயி சுருண்டு விழுந்து பலி.. 100ஐ…

அரியலூர்: நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகளின் மரணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை அரியலூர் மற்றும் நாகையைச் சேர்ந்த விவசாயிகள் இருவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளனர். இத்தோடு சேர்ந்து 98 விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோயில் கிராமத்தில் வசித்து…

பயிர்கள் கருகியதால் ஒரே நாளில் 12 விவசாயிகள் மரணம் –…

சென்னை: பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன. இதைப்பார்த்து மனம் உடைந்து தற்கொலை செய்தும், மாரடைப்பு ஏற்பட்டும் விவசாயிகள் இறக்கின்றனர். ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்பலியான நிலையில் மேலும் 12 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே…

15 வயதில் இருந்து மணல் சாப்பிட்டு வந்த பெண்: எப்படி…

இந்தியாவை சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு மண் தான் காரணம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் குஸ்மாவதி(78). இவர் தன்னுடைய 15 வயதில் இருந்து மணல் மற்றும் கிராவல் போன்றவற்றை சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை…

ஜெயாவின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை செய்யத் தேவையில்லை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. கேள்வி எழுப்பப்படுவதாலேயே அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர்.…

துயரத்தில் தமிழகம்! ஒரே நாளில் 7 விவசாயிகள் மரணம்: காரணம்?

தமிழகத்தில் ஒரே நாளில் 7 விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிரிட்டிருந்த நெற்பயிர் கருகிய அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் விவசாயிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த லாடன், கல்யாணசுந்தரம், முருகையன். சீர்காழியை சேர்ந்த முருகேசன். சிவகாசியை சேர்ந்த அப்பய்யா. விழுப்புரத்தை சேர்ந்த…

விவசாயிகளின் தற்கொலைக்கு அரசுதான் காரணம்.. அறிக்கை கூட இதுவரை இல்லை:…

சென்னை: தண்ணீர் இன்றி கருகும் பயிர்களைப் பார்த்து உயிரிழக்கும் விவசாயிகளின் மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கோரியுள்ளார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வரும் 5ம் தேதி…

உலக சாதனையுடன் இந்த ஆண்டை தொடங்கும் இஸ்ரோ…!

இஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவுகனையில் 103 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க தயாராகியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கேட்டுகளை தயாரித்து அதன் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த ராக்கெட்டுகளில் வணீக ரீதியில்…

தோண்டப்படுமா? வலுவடையும் மரண சந்தேகம்!

மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களை நக்கீரன் தொடர்ச்சியாக சொல்லிவந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் அதே கருத்தை வெளியிட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை, விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற விடு முறைக்கால அமர்வு, மக்களுக்குள்ள சந்தேகம்…

விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம்: வேல்முருகன்

சென்னை : தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த புத்தாண்டிலாவது விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம் என புத்தாண்டு வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டிலாவது பொருளாதார நெருக்கடி நீங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் 'தமிழக மக்கள் அனைவருக்கும்…

இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் .. சொல்வது சாமி

சென்னை : பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து மாடுகள் விரைவில் நீக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான…

காலில் விழுந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்! சசிகலா என்ன செய்தார்…

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச் செயலாளரான நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக இன்று சசிகலா நடராஜன் பதவியேற்றுக் கொண்டார். இதன் பின்னர் கட்சியினரிடையே ஏற்புரை நிகழ்த்திவிட்டு மேடையில் அவர் இருந்து கீழே இறங்கினார்.…

குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக கொச்சைப்படுத்துவதா? திருமாவளவன் காட்டம்

சென்னை: குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக தமிழக அரசு கொச்சைப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:…