கேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள்

"வெள்ளத்தால் சூழப்பட்டு வரும் எங்களது வீட்டிலிருந்து மனைவியையும், மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்கான வழியை தேடுவதற்காக அவர்களை விட்டு சென்றேன். கிட்டத்தட்ட அரைமணிநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வீடு வெள்ளத்தில் சூழப்பட்டுவிட்டது. எனது மனைவியையும், மகனையும் அங்கு காணவில்லை" என்று கூறுகிறார் லாரன்ஸ். தற்போது தனது பன்னிரண்டு…

தண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் இந்தியா

தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பாகிஸ்தானில் இரண்டு…

ஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை? பக்ரித் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுமா?…

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்து ஒரு வாரம் முடிவடைய உள்ளது. ஆறாவது நாளான இன்று ஸ்ரீநகரில் என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து பதிவு செய்கிறார் பிபிசி செய்தியாளர் அமீர் பீர்ஸாடா. அவர் இன்று மாலை 4 மணியளவில் பிபிசி செய்தி…

இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை: உஷார் நிலையில்…

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், இந்திய கடற்படை தனது போர் கப்பல்களுடன் உஷார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370 சமீபத்தில் நீக்கம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்தியாவுடனான…

சட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டப்பிரிவின் முழு…

அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜகவின் நரேந்திர மோதி அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த சிறப்பு சட்டப்பிரிவை மாற்றுவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளும் முயற்சித்த வரலாறு உண்டு. இந்தச் சட்டப் பிரிவு ஏன்…

இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..!

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து மும்பையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பி உள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த அமைப்பின்…

காஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து: “ஆழ்ந்த கவலையைத் தருகிறது”

இந்தியா நிர்வாகத்தில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், இது மனித உரிமைச் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும் ஐ.நா. கருத்துத் தெரிவித்துள்ளது. தொலைத் தொடர்பு முடக்கம், தான்தோன்றித் தனமாக அரசியல் தலைவர்களை காவலில் வைப்பது, அரசியல்ரீதியாக மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது…

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்”…

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை…

காஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன கிடைக்கும்?

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கி மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் கீழ், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும். ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இருக்காது.…

அமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பெண்களுக்கு எதிரானவர்கள்”

காஷ்மீரிருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பெண்களுக்கு, பழங்குடிகளுக்கு மற்றும் கல்விக்கு எதிரானவர்கள் என்றும், இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் வரலாற்று பிழையை திருத்தியுள்ளோம் என்றும் மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர்…

காஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரத் துரோகம் –…

காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துச் செய்து தன்னாட்சி உரிமையைப் பறித்திருப்பது காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்! சனநாயகத்தைப் படுகொலை செய்து சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று 05-082019 அவர் விடுத்துள்ள அறிக்கையில்; காஷ்மீர் மாநிலத்திற்குரிய…

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரின் நிலை இனி என்னவாக இருக்கும்? –…

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், 61 வாக்குகள் எதிராகவும் பதிவாகியிருந்தன. இது தொடர்பாக அரசமைப்புச்சட்ட…

காஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம் – உச்ச நீதிமன்றத்தால்…

இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ல் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியுமா? என்று சட்ட வல்லுநர்களிடம் கேள்வி எழுப்பினோம். அவர்கள்…

மாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர்

மத்திய அமைச்சரவையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை இரத்து செய்யும்…

சட்டப்பிரிவு 370 சிறப்புரிமை ரத்து: இனி என்னென்ன நிகழும்? –…

"அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு வழங்கும் அதிகாரத்தின்படி மாநில அரசின் ஒப்புதலோடு" குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவில் இதுவரை இந்தியாவில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசின் ஒப்புதலுடன் என்று சொல்லும்போது, அது இங்கு…

ஜம்மு காஷ்மீர்: குவிக்கப்படும் வீரர்கள், மூன்றாக பிரிக்கப்படுவதாக பரவும் வதந்திகள்…

காஷ்மீரில் ஜூலை 26ம் தேதி முதல் இன்று வரை நடந்த சம்பவங்களை 10 தகவல்களாக தொகுத்துள்ளோம். இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது 10,000 துணை ராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்படுவதாக ஜூலை 26 அன்று இந்திய அரசின்…

அம்ரபாலி நிறுவனம்: கட்டி முடிக்கப்படாத ஆயிரக்கணக்கான வீடுகள், கடனில் தத்தளிக்கும்…

ஆறு மாடி கட்டடத்தின் மேலே பால்கனியில் அமர்ந்து கொண்டிருக்கும், 52 வயது ஆண் ஒருவர், தனது வளாகத்தில் கட்டி முடிக்கப்படாத கட்டடத்தைப் பார்த்துக் கொண்டே காலை நேர டீ பருகிக் கொண்டிருக்கிறார். டெல்லியின் புறநகரில், வளர்ந்து வரும் நொய்டாவில் அம்ரபாலி வீட்டுவசதி நிறுவனத்தில் அடுக்குமாடி வீடு ஒன்று வாங்குவதற்கு…

காஷ்மீர்: பாகிஸ்தானிடம் இந்தியா போரில் கைப்பற்றிய கிராமம்

காஷ்மீரின் டுர்டுக் கிராமத்தை அடைவது மிகவும் கடினமானது. இந்தியாவின் வடக்கு பகுதியில் லடாக்கின் நுப்ரா பள்ளத்தாக்கில் தொலைதூரப் பகுதியில் இந்தச் சிறிய கிராமம் உள்ளது. ஷியோக் நதிக்கும் கரகோரம் மலைத்தொடர் சிகரத்திற்கு இடையில் இந்தக் கிராமம் உள்ளது. பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்தக் கிராமத்துக்குச் செல்வதற்கு ஒரே ஒரு சாலைதான்…

இந்தியா – பாகிஸ்தான் மோதல்: ‘வெள்ளைக்கொடியுடன் வந்து உடல்களை எடுத்துக்கொள்ளுங்கள்’

இந்தியா உடனான மோதலின்போது கொல்லப்பட்ட பாகிஸ்தான் எல்லைக் காவல் படையான 'பார்டர் ஏக்ஷன் டீம்' படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் என்று இந்திய அரசால் கூறப்படுபவர்களின் உடல்களை எடுத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் தாங்கள் கூறியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. வெள்ளைக்கொடியுடன் வந்து அந்த ஐந்து முதல் ஏழு…

காஷ்மீரில் படைகள் குவிக்கப்படுவது ஏன் – ஆளுநர் சத்யபால் மலிக்…

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கூடுதலாக படைகள் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வரும் சூழலில், என்ன நடந்தாலும் ரகசியமாக நடக்காது, என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மலிக் கூறியுள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும்…

காஷ்மீர் விவகாரம்: மீண்டும் தலையிட விரும்பிய டிரம்ப்; மறுப்புத் தெரிவித்த…

இந்தியா மற்றும் பாகிஸ்தான் விரும்பினால் இருநாடுகளிடையேயான காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தயார் என்று தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்துக்கு மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக பதிலளித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கிழக்காசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில்…

ஜம்மு – காஷ்மீரில் 25,000 கூடுதல் படைகள்: பதற்றப்படும் மக்கள்…

மத்திய காவல் படைகள் கூடுதலாக காஷ்மீருக்கு அனுப்பப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை பரவத் தொடங்கியதில் இருந்து காஷ்மீர் மக்களிடையே கடந்த சில நாட்களாக அச்ச உணர்வு நிலவுகிறது. கூடுதலாக 100 கம்பெனி துணை ராணுவப் படைகள் அனுப்பப்படும் என்று கூறிய அந்த உத்தரவு ஜூலை 25…

கோவிலை மூடிய ஆக்கிரமிப்பாளர்கள்..!

மதுரையில் கட்டிடம் கட்டும் பணியின் போது, சிதிலமடைந்த நிலையில் பழங்கால சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கோவிலையே மறைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியும், ஆக்கிரமிக்கப்பட்டும் மறைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. பழங்கா நத்தம் ரவுண்டானா அருகே குடிருப்பு பகுதிகளும், ஏராளமான கடைகளும் உள்ளன. இங்கு ஒரு கடையை அதன்…