சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்: இந்தியாவின் மிகச்சிறந்த புலிகள் காப்பகத்தின் சாதனைகளும்…

ஒரே வனப்பரப்பில் புலி, யானை, கழுதைப் புலி, வெளிமான் ஆகிய விலங்குகள் வாழும் உலகின் அரிய கானுயிர் வாழ்விடமான தமிழகத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், இந்தியாவில் சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்ட வரும் புலிகள் காப்பகத்திற்கான விருதினை பெற்றுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின்…

பாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார்: உன்னாவ் பெண்ணின் கடிதம்…

பாஜக எம்.எல்.ஏ.வால் வன்புணர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் தாம் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்து உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தை தங்கள் முன் சமர்ப்பிக்காதது ஏன் என்று உச்சநீதிமன்ற தலைமைச் செயலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய். இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் பேசிய ரஞ்சன் கோகோய், "உன்னாவ்…

முத்தலாக் மசோதா நிறைவேற்றம்: பாலின நீதிக்கு நன்னாளா, கருப்பு நாளா?

முத்தலாக் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்டின. 11 எம்.பி.க்களைக் கொண்டுள்ள அதிமுக எதிர்த்து கருத்துத் தெரிவித்தது. ஆனால் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இந்நிலையில் 99-84 என்ற வாக்கு கணக்கில்…

‘திருமணம், வளைகாப்பு, சடங்கு நிகழ்ச்சிகளில் பறை இசைக்கலாம்’ அமெரிக்க பேராசிரியை…

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் சோயிக் செரினியன். இசையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ள இவர், இசையின் மீதுள்ள ஆர்வத்தால் தமிழகம் வந்து மதுரையில் உள்ள கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இசை குறித்து படித்துள்ளார். அதையும் தாண்டி நாட்டுபுற கலைகள் தொடர்பாக புத்தகம் எழுதி உள்ளார். அவரிடம் பறை இசை தொடர்பாக பல்வேறு…

அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி

ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம், உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை…

புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் 33 சதவீதம் அதிகரிப்பு – தமிழ்நாட்டில்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் புலிகளின் நிலை இன்று சர்வதேச புலிகள் தினம். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி இந்தியாவில் 2018ம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. இன்று நடைபெற்ற…

காஷ்மீரில் குவிக்கப்படும் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர்; பதற்றப்படும்…

இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது, அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தைத் தூண்டியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, காஷ்மீர் மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள், தனி அரசியலமைப்பு ஆகியன குறித்த எதிர்மறை விவாதங்கள் தீவிரமாகியுள்ள சூழலில் படைகள் குவிக்கப்படுவதே இந்தப்…

’தமிழை விட சமஸ்கிருதமே பழமையானது’ பாடப்புத்தகத்தில் சர்ச்சை தகவல்!

பிளஸ் டூ ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என்பது போல, அதன் தொன்மையான ஆண்டு குறிப்பிடப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் டூ ஆங்கிலப்பாடப்புத்தகம் 10 ஆண்டுகளுக்கு பின்பு இந்த ஆண்டு புதிதாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 142 ம் பக்கத்தில் தொன்மையான மொழிகள்…

’வேண்டாம்’ என பெயர் வைக்கப்பட்ட மாணவி: 22 லட்ச சம்பளத்தில்…

பெண் குழந்தையாக பிறந்ததால், 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண், கல்வியால் உயர்ந்து, ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் ஆண்டிற்கு ரூ.22 லட்சம் சம்பளம் பெறும் வேலைக்கு தேர்வாகியுள்ளார். 'வேண்டாம்' என பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால், அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும்…

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில்…

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின்எதிர்ப்புகளுக்கு மத்தியில் முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இஸ்லாமிய பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், 3 முறை தலாக் எனக் கூறி உடனுக்குடன் விவாகரத்து செய்வதை தடை செய்யும் வகையில், முத்தலாக் தடை சட்ட மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த…

ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 9 இந்தியர்கள் விடுதலை!

இங்கிலாந்து கப்பலில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் 9 இந்தியர்களை ஈரான் விடுவித்துள்ளது. ஈரான் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலை கடந்த சில வாரங்களுக்கு முன் இங்கிலாந்து சிறைபிடித்தது. இதற்குப் பதிலடியாக இங்கிலாந்தின் ஸ்டெனா இம்பெரோ ((Stena Impero)) என்ற எண்ணெய்க் கப்பலை ஹார்முஸ் நீரிணையில் ஈரான் நாடு சிறைபிடித்தது. இந்தக் கப்பலில்…

விண்ணில் இருந்து விளைநிலத்தில் விழுந்த கல்!

பீகாரில் விண்ணில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் கல் குறித்த ஆராய்ச்சிகள் மும்முரம் அடைந்துள்ளன. பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள மகதேவா என்ற கிராமத்தில், கடந்த திங்கள் கிழமை அன்று விளைநிலங்களில் விவசாயிகள் உழவுப் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விண்ணில் இருந்து தீப்பற்றி எரிந்த நிலையில் ஒரு கல்…

உயிரிழந்துவிட்டார் என நினைத்த நபர் 23 வருடங்களுக்குப்பின் இலங்கையில் பிச்சை…

இலங்கையில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும், தனது தந்தை பரதனை மீட்க வேண்டும் என அவரின் மகள் சரவண சுந்தரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட் கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறைச் செயலர், தமிழக உள்துறைச்…

சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்குத் தொடர்பு: பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சிலை தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். தன்னைத் துன்புறுத்துவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, தீனதயாளன் என்பவருடன் தன்னையும் இணைத்து கைதுசெய்து…

மத்தியஸத்திற்கு இடமில்லை: ராஜ்நாத் உறுதி

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் என்ற கேள்விக்கு இடமில்லை என லோக்சபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 'காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண உதவும்படி, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியது…

ராஜராஜ சோழன்: அரசர்கள், கோயில்கள், நிலங்கள் குறித்த மறுபரிசீலனை அவசியம்…

இந்தியா இன்னும் சாதி கடந்த சமூகம் ஆகவில்லை. இதன் பொருள், சாதியம் இங்கு உயிரோடு இருந்து இந்தியர்களின் தினசரி வாழ்வில் இன்றும் தாக்கம் செலுத்துகிறது என்பதுதான். எனவே சாதியற்ற மானுடம் காணவேண்டும் என்று நினைத்தால், அதற்கு சாதியம் குறித்து, வாய்ப்புள்ள எல்லாக் கோணங்களிலும் விமர்சனபூர்வமாக ஆய்வு செய்வது மிகவும்…

3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்

சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம்,…

வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான் -2: என்ன சொல்கிறார் இஸ்ரோ தலைவர்…

கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. சந்திரயான் ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சிவன் ஆற்றிய உரை பின்வருமாறு.: ''இது நிலவை நோக்கிய இந்தியாவின் வரலாற்று பயணத்தின்…

தமிழகத்தில் தீவிரவாதம்… அதிர வைக்கும் ரெய்டு!

தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) எனப்படும் தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் தமிழகத்தில் தொ டர்ந்து ரெய்டுகள் நடத்திக் கொண்டி ருக்கின்றனர். கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தில் தீவிரவாதி களின் நடமாட்டம் மிக அதிகம் என்கிற பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது உண்மையா என்கிற கேள்வியை தமிழக காவல்துறை…

நகர வாழ்க்கை வேண்டாம் – தமிழக மேற்கு தொடர்ச்சிமலையில் இயற்கை…

தமிழக - கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியான ஆனைகட்டியில் இருந்து சோலையூர் செல்லும் மலைப்பாதையில் சில கிலோமீட்டர் தூரம் பயணித்தால் உள்ளது தெக்கே கடம்பரா எனும் கிராமம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள இப்பகுதியில் இருளர் மற்றும் கடம்பர் இன வனப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். ஆங்காங்கே வறண்ட நிலமும்,…

அஸ்ஸாம் வெள்ளம்: காசிரங்கா பூங்கா 95 சதவீதம் தண்ணீரில் மூழ்கியதால்,…

உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தின், கோலகாட், நாகோன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பரவியுள்ளது. உலகில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் வாழ்கின்றன. கடந்த வருடம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 2413 ஒற்றை கொம்பு…

திருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை – ஏன்?

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதன்கிழமையன்று அறிவித்துள்ளது. திருமலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பா ரெட்டி இதனைத் தெரிவித்தார். அவருடன் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி…

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும்: சர்வதேச…

இந்திய உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சீராய்வுக்கும், மறுபரிசீலனைக்கும் உட்படுத்தவேண்டும் என்று ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணை செய்த அமர்வில் 15 பேர் மறுபரிசீலனை செய்வதற்கு ஆதரவாகவும், ஒருவர் எதிராகவும்…