இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக தகவல்!

இந்திய எல்லையில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் சிவப்பு பதாகையை உயர்த்திப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலாய் லாமா பிறந்தநாள் இந்தியாவில் உள்ள எல்லையோர கிராமத்தில் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜம்மு காஷ்மீரின் லடாக்கை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 11 சீனர்கள் பதாகையை உயர்த்திப் பிடித்தனர். இதுகுறித்து…

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தல் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பொலிஸ் அதிரடி!

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படும் கஞ்சா கடத்திச் செல்லப்பட்ட காரை, சினிமா பாணியில் விரட்டிச் சென்று, துப்பாக்கியால் சுட்டு, மதுரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து மதுரைக்கு போதைப்பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

அதிக மழை, கடும் வறட்சி என இந்திய வானிலை அடிக்கடி…

சமீபத்தில் சில வாரங்கள் பெய்த கனமழையால், இந்தியாவின் வணிக தலைநகரான மும்பை தத்தளித்து கொண்டிருந்த அதேவேளையில், நாட்டின் பல இடங்களில் கடும் வறட்சி நிலவியது. இதனை பார்க்கிறபோது, ஓரிடத்தில் அதிக மழை, இன்னொரு இடத்தில் கடும் வறட்சி காணப்படுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறதோ? என்ற கேள்வி எழுகிறது. பல…

நியூட்ரினோ திட்டத்துக்காக தமிழகத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜித்தேந்தர சிங் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். படத்தின் காப்புரிமைPIB முன்னர், இத்திட்டத்துக்கு…

முகிலனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததாக கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து அழைத்துச் சென்றனர். கரூர்…

13 வயதில் 100க்கும் மேல் புத்தகம் எழுதியுள்ள சிறுவன்!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதி சாதனை புரிந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமான்யு (Aaaj Ka Abhimanyu) என்ற புனை பெயரில் புத்தகங்களை எழுதி வருகிறார். தனது 6 வயது முதல் புத்தகங்களை…

வேலூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்: குழாய் பதிக்க…

சென்னை நகரத்தின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்துவருவதில் சிறு தடங்கல் ஏற்பட்டது. வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து  நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டுவரும் திட்டம் புதன்கிழமை தொடங்குவதாக இருந்தநிலையில் தற்போது…

சென்னை தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் சிம்லா

ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு சவால்தான். பெரும்பாலும் அதற்கு பரந்த, நீடித்த தீர்வுகள் கிடைக்கும். வட இந்தியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற மலைவாழிடமான - சிம்லா கடந்த 2018 ஜூன் மாதம் மிக மோசமான குடிநீர் பஞ்சத்தை எதிர்கொண்டது. இந்த ஆண்டு தென்னிந்தியாவில் சென்னை மாநகரில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.…

தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் வகையில் ஐ.நா அறிக்கை – இந்தியா கடும்…

காஷ்மீர் குறித்த ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கை தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்ப காஷ்மீரில் மக்களின் சுய நிர்ணய உரிமையை இந்தியா மதிக்க வேண்டும் என்றும், அளவுக்கு அதிகமான படைகளை பயன்படுத்தி இணைய சேவையை முடக்கி வருவதாகவும் மனித…

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீத வரி!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலைப்படை பயங்கவராதி நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில்…

‘நிலமற்றவர்களாகவே இருக்கும் தலித்துகள்’ – இங்கு நிலம் ஏன் முக்கியம்?

நாம் ஒரு உண்மையை இங்கு எதிர்கொண்டே ஆக வேண்டும். வேளாண்மையை பிரதானமாக கொண்டிருக்கும் இந்தியாதான், சாதியையும் பிரதானமாக கொண்டிருக்கிறது. இவை இரண்டும் ஒன்றாக கலக்கும்போது மோசமான விளைவுகள் ஏற்படும். நாம் இதைதான் தற்போது எதிர்கொண்டு வருகிறோம். ஏழ்மை, குறைந்த உற்பத்தித்திறன் போன்ற பலவற்றுக்கும் இதுவே காரணம். இந்தியாவில் தலித்துகள்…

முகிலன் தமிழக பொலிசாரிடம் ஒப்படைப்பு!

சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் நடந்தது என்ன? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது பொலிசார்…

சீர் வரிசையாக தண்ணீர் வண்டி தரும் ராமநாதபுரம் கிராமங்கள்

தண்ணீர் வண்டி என்றவுடன் லாரியும், டிராக்டரும்தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு சக்கரத்துடன் ஐந்து தண்ணீர் குடங்களை, எரிபொருள் செலவின்றி எளிதாக சுமந்து வரும் சிறிய வாகனம்தான் இந்த 'தண்ணீர் வண்டி' ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டர் டேங்கர்கள், காவிரி குடிநீர் குழாய்களில் இருந்து வீட்டிற்கு…

தேர்வில் தோல்வியால் 22 மாணவர்கள் தற்கொலை – என்னதான் நடக்கிறது…

ராணுவ அதிகாரி, அறநெறியுடன் செயல்படும் இணையதள ஹேக்கர், விமானப் பொறியாளர், மருத்துவர், பொறியாளர் என்ற கனவுகளுடன் இருந்த மாணவ மாணவிகள்தான் தெலங்கானா இன்டர்மீடியேட் கல்வி வாரிய தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, 16 முதல்…

சமூக ஆர்வலர் முகிலன் ஆந்திர காவல்துறையிடம் உள்ளாரா?

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2019ல் காணாமல் போனதாக கூறப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் ஆந்திரா காவல்துறையின் பிடியில் இருப்பது போன்ற ஒரு காணொளி வெளியாகி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது தொடர்பாக…

தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: வைகோவுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரசு அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்றுகுவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதையத் திமுக அரசு, அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. இந்திய…

“இது தேசத் துரோகமென்றால் இதை நான் தொடர்ந்து செய்வேன்”: வைகோ

தேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தான் தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கப்போவதாகவும், தான் செய்தது தேசத் துரோகமல்ல என்றும், இது தேசத் துரோகமென்றால் அதை தான் தொடர்து செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார். தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார். "இன்று…

ஆந்திராவில் 18 தமிழர்கள் கைது!

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் 18 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர பிரதேசம் மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இன்று 18 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். செம்மரம் வெட்ட அவர்கள் சென்றதாக சந்தேகத்தின் பெயரில்…

மகாராஷ்டிரா கனமழை: அணை உடைந்து பெரும் பாதிப்பு – என்ன…

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் திவாரே அணை கடந்த செவ்வாயன்று உடைந்தது. கொங்கன் பகுதியில் சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்துள்ளது. ஆனால் செவ்வாயன்று பெய்த கனமழை காரணமாக நீரோட்டம் அதிகமாகி அணையில் விரிசல் விழுந்தது. அடுத்து சில தருணங்களில் அங்கிருந்த அனைத்தும் அழிந்துவிட்டது. அங்கு வாழ்ந்த…

விலகும் நேரு குடும்பம்.. மாறும் 70 ஆண்டு காங்கிரஸ் சரித்திரம்..…

டெல்லி: 70 வருடங்களாக நேரு குடும்பத்தின் தலைமையின் கீழ் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது முற்றிலும் விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் படுதோல்வியால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி உள்ளார். இதனால். தாங்காத சோகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள் இனி யார் அந்த கட்சிக்கு…

பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தகவல்!

மும்பை நிழல் உலக தாதா என கூறப்படும் தாவூத் இப்ராகிம் கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். பல சட்டவிரோத செயல்கள் மூலம் பணத்தை குவித்த தாவூத் இப்ராகிமுக்கு 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால்…

ராகுல் காந்தி பதவி விலகல்: ‘தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி…

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில்…

மும்பை வெள்ளம்: மஹாராஷ்டிராவில் மழையின் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்து…

மஹாராஷ்டிராவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்து சுமாராக 24 பேர் உயிரிழந்துள்ளனர்.. கடந்த 24 மணி நேரம் தொடர் தீவிர மழையினால் மஹாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, கல்யாண், புனே பகுதிகளில் நிறைய சுவர்கள் ஆங்காங்கே இடிந்து விழுந்ததால் 24 பேர் இறந்துள்ளனர். நேற்று…