துருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ…

தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அங்கு கொலை…

சிரியா அகதிகளுக்கு உதவ தேவைப்படும் ஐந்தரை பில்லியன் டாலர்

பக்கத்து நாடுகளில் பராமரிக்கப்படும் சிரியாவில் இருந்து வந்த அகதிகளுக்கு உதவ ஐந்தரை பில்லியன் டாலர் தொகை தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது. இந்த தொகை துருக்கி, லெபனான், ஜோர்டன் மற்றும் பிற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் பிற உதவிகளுக்காக செலவு செய்யப்படும்.…

‘பதவி விலக்கல், சிறையை ட்ரம்ப் எதிர்கொள்ளலாம்’

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கல் கொஹனால் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை வெளிப்படுத்தாமலிருக்க பணம் வழங்கப்பட்டமை பிரசார நிதி மீறல்களென நிரூபிக்கப்பட்டால், ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலக்கல், சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாம் என ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரோல்ட் நட்லர் நேற்றுத் தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவின்…

நூற்றுக் கணக்கான டாங்கிகளை யூக்கிரேன் நாட்டு எல்லைக்கு அனுப்பியது ரஷ்யா…

நூற்றுக் கணக்கான யுத்த டாங்கிகளை , யூக்கிரேன் நாட்டு எல்லைக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. அதிபர் புட்டினின் நேரடி உத்தரவில் இது இடம்பெற்றுள்ளது என தெரிய வருகிறது. கடந்த வருடம் யூக்கிரேன் நாட்டில் உள்ள கிரீமியா என்னும் மாநிலத்தை ரஷ்யா தனதாக்கிக் கொண்டது. அன்று முதல் இன்று வரை யூக்கிரேன்…

வரலாற்றில் முதன் முதலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் போப்…

வரலாற்றில் முதன் முதலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (UAE) செல்லும் பாப்பாண்டவராக போப் பிரான்சிஸ் விரைவில் பெருமை பெறவுள்ளார். அதாவது அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விரைவில் செல்லவுள்ளதாகவும் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை அபுதாபியில் நடைபெறும் கூட்டத்தில் சொற்பொழிவு…

கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..

ஹூவாய் நிறுவன அதிகாரியை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி…

லிபியாவில் பணயக்கைதிகள் 6 பேரை படுகொலை செய்த ஐஎஸ் பயங்கரவாதிகள்..

லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு 10 பேரை பயங்கரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர். நகரை விட்டு வெளியேறும் முன்பாக பல்வேறு ராணுவ வீரர்களை கொன்றதாகவும், சிலர்…

ஆப்கானிஸ்தான்- ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட தலிபான்…

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 10 தலிபான் பயங்கரவாதிகள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பர்யாப் என்ற இடத்தில் தலிபான்களை குறிவைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.…

பிரான்ஸில் தொடரும் போராட்டம்: ஒற்றுமையை மீட்டெடுக்க பிரதமர் உறுதி

பிரான்ஸில் எரிபொருள் உயர்வை கண்டித்து நான்காவது வாரமாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து பிரதமர் இடுவா பிலீப் தேசிய ஒற்றுமையை மீட்டெடுப்பதாக உறுதி பூண்டுள்ளார். மஞ்சள் ஜாக்கெட் என்று அழைக்கப்படும் அந்த போராட்டம் பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராகவும், அந்நாட்டில் வாழ்வதற்கான செலவுகள் அதிகரித்து வருவதற்காகவும் நடைபெற்று…

பருவநிலைமாற்ற அச்சுறுத்தல்: விவாதத்துக்கு முட்டுக்கட்டை போட்ட உலக நாடுகள்

முந்தைய கணிப்புகளைவிட பூமியின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக கூறிய சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகளை அடிப்டையாகக் கொண்டு போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவான ஐபிசிசி, கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட…

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா..

பீஜிங்: நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program)…

அமெரிக்காவின் தடைகள் பொருளாதார பயங்கரவாதம்- ஈரான் அதிபர் கடும் தாக்கு..

அமெரிக்கா விதித்துள்ள தடைகள் பொருளாதார பயங்கரவாதம் என்றும், இதனை சகித்துக்கொள்ள முடியாது என்றும் ஈரான் அதிபர் கூறியுள்ளார். ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகியதுடன், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இந்த பொருளாதார தடைக்கு ஒத்துழைக்காத நாடுகள்…

பிரான்ஸின் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டம்: தொடரும் வன்முறை

பிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளதால் சுமார் 90,000 பாதுகாப்புப் படையினர் தெருக்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாரீஸ் நகரில் மட்டும் சுமார் 8000 அதிகாரிகள் மற்றும் 12 கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்நகரின் மத்திய பகுதியில் சுமார் 5000 பேர் கூடியுள்ளனர். பாரீஸ் நகரில்…

‘தலைவணங்காத கத்தார்’ – தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு:…

சக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவீனமடையாதது எப்படி? செளதி அரேபியாவின் எந்தவொரு தந்திரமும், கத்தாரை தலை குனிய வைக்காதது ஏன்? தடை விதிக்கப்பட்ட பிறகு, கத்தார் வளர்ச்சியடைந்ததோடு, மனித உரிமைகள் மீறல் தொடர்பாக தன் மீது…

மியான்மார் அமைச்சரைக் கண்டிக்கிறது பங்களாதேஷ்

மியான்மாரின் சமய அமைச்சர், அந்நாட்டு றோகிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துத் தொடர்பில், மியான்மார் தூதுவரை அழைத்த பங்களாதேஷ், தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அத்தோடு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அது கோரியுள்ளது. மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, அவர்களில்…

41ஆவது ஜனாதிபதிக்கு அரச மரியாதை

ஐக்கிய அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியான ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரச மரணச் சடங்கு, அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சியில், உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. ஐ.அமெரிக்காவின் அண்மைக்கால அரசியல், துருவமடைந்ததாகக் காணப்பட்ட நிலையில், இந்த மரணச் சடங்கு, அந்த வேறுபாடுகளையும் தாண்டியதாக அமைந்திருந்தது. ஐ.அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உயிருடன்…

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் – 14…

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப்…

பிரான்ஸ் வன்முறை: இழுத்து மூடப்படுகிறது ஈபிள் கோபுரம்

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான "மஞ்சள் ஜாக்கெட்" என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை (சனிக்கிழமை) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர்…

ஈரானில் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே தற்கொலை குண்டுத்தாக்குதல்

தென்கிழக்கு ஈரானில் துறைமுக நகரமான சபாஹார் நகரில் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் குறைந்தது இருவர் உயிரிழந்ததோடு பல பொலிஸார் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சபாஹார் சிங்கன்-பெலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்திருக்கிறது. கார் மூலம் வெடிகுண்டு வெடித்த உடனேயே, துப்பாக்கி ஏந்தியவர்கள் பொலிஸ் தலைமையகத்தைத் தாக்க முயன்றனர்,…

அமெரிக்காவுக்கு போட்டியாக நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் – ரஷிய அதிபர்…

மாஸ்கோ: 2-ம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் ஒன்று சேர்ந்து போரில் ஈடுபட்டன. ஆனால், போர் முடிவுக்கு பிறகு அமெரிக்கா-ரஷியா இடையே நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளும் ஆயுதங்களை குவித்தன. குறிப்பாக அணுகுண்டு தயாரிப்பிலும், அவற்றை ஏவும் ஏவுகணை தயாரிப்பிலும்…

யேமன் போர்: முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை ஸ்வீடனில் தொடக்கம்

யேமனில் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற நோக்கிலான அமைதிப் பேச்சுவார்த்தை, யேமன் அரசுப் பிரதிநிதிகள் மற்றும் ஹூதி கிளர்ச்சிக் குழு இடையில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தொடங்கியுள்ளது. இதுவொரு முக்கிய திருப்புமுனை என்று ஐநா சிறப்பு தூதர் மார்ட்டின் கிரிஃபித்திஸ்…

‘கிம்மின் விருப்பங்களை நிறைவேற்றுவேன்’

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னை, தான் விரும்புகிறார் என்பதையும், அவரது விருப்பங்களை நிறைவேற்றவுள்ளார் என்பதையும் அவரிடம் கூறிவிடும்படி, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தாரென, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜனாதிபதி மூனும், ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற ஜி20 மாநாட்டில் வைத்துச் சந்தித்திருந்தனர். இதன்போதே,…

ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 72 தலிபான்…

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 72 பேர் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள நாவா, கிலான் மற்றும் கியோக்யானி பகுதிகளில் வசிக்கும் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான்…