‘சினாயில் பாதுகாப்புப் படையினர் எண்மர் கொல்லப்பட்டனர்’

இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் நீண்ட காலமாக எகிப்தியப் படைகள் மோதலில் ஈடுபடுகின்ற வட சினாயில், சோதனைச் சாவடியொன்றைத் தாக்கிய ஆயுததாரிகள், பாதுகாப்புப் படையினர் எண்மரை நேற்று (05) கொன்றதாக எகிப்திய அரச செய்தி முகவரகமான மெனா தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐந்து ஆயுததாரிகளும் இறந்ததாகவும், சிலர் தப்பித்துள்ளதாகவும் எகிப்திய அரச தொலைக்காட்சியும்,…

பால்வினை நோய்த் தொற்று: 10 லட்சம் பேர் பாதிப்பு –…

உலகில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு புதிதாக பால்வினை நோய்த் தொற்று ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கோனோரியா, சிபிலிஸ், ச்லாமைதியா, ட்ரைகோமோனியாசிஸ் போன்ற பாலுறவு மூலம் பரவும் நோய்த் தொற்றுகளுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2012 முதல் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று…

புதின் – ஷி ஜின் பிங் சந்திப்பு: சீனா –…

வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தன் நெருங்கிய நண்பர் என்று விவரித்தார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகப் போர் நடக்கும் சூழலில் ஷி ஜின்பிங் இந்த சுற்றுப் பயணத்தை…

இந்திய, சீன மக்கள்தொகை அதிகரிப்பை சூழல் மாசுக்கு காரணமாக்கும் டிரம்ப்

தனது பிரிட்டன் பயணத்தின்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு அளித்த பேட்டியில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகையே உலகின் நீர் மற்றும் காற்றின் தரம் குறையக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். பருவநிலை…

அரசுக்கு எதிரான போராட்டம்; 46 பேர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்ளும் சூடான்…

சூடானில் மக்களின் போராட்டங்களின்போது சூடான் ராணுவம் குறைந்தது நூறு பேரை கொன்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை தவறானது என மறுத்த ஒரு சூடான் அதிகாரி, அதிகபட்சம் 46 பேர் போராட்டங்களின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர் என ஒப்புக்கொண்டார். புதன்கிழமையன்று ராணுவத்துக்கு எதிராக போராடியவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள்…

எகிப்தில் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் பலி!

எகிப்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 காவல்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர். எகிப்தின் மேற்கில் அமைந்துள்ளது சினாய் தீபகற்பம், மிகவும் பதற்றமான பகுதியாக இது கருதப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் இன்று காலை இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சோதனைச்சாவடி…

நேட்டோ- ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும்: அதிபர் விளாமிடிர் செலன்ஸ்கி…

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உக்ரைன் இணையும் என புதிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைனின் அதிபராக பதவியேற்ற விளாமிடிர் செலன்ஸ்கி, தனது முதல் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக பெல்ஜியம் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரசல்ஸ் நகரில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய…

சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு 30 ஆண்டுகள் கழித்து மீண்டும்…

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளனர். சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14 ம் நாள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்து…

”எனக்கு எதிரான போராட்டம் எல்லாம் போலிச் செய்திகள்” – டொனால்டு…

அமெரிக்கா - பிரிட்டன் கூட்டணி தான் உலகத்தில் எப்போதும் அறியப்பட்ட ஒரு மிகச்சிறந்த கூட்டணி என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரிட்டனுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உடன் செய்தியாளர் சந்திப்பில்…

ஹூவாவே விவகாரம்: டொனால்ட் டிரம்புடன் தெரீசா மே ஆலோசனை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின் அமெரிக்காவுடன் ஒரு நீடித்த வணிக ஒப்பந்தத்தை பிரிட்டன் பெறும் என தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் மூன்று நாட்கள் அரச பயணமாக பிரிட்டன் சென்றுள்ளனர். பிரிட்டன் அரசி எலிசபெத்தை…

தியானன்மென் சதுக்கம்: சீனாவில் என்ன நடந்தது? ரத்தம் தோய்ந்த நிகழ்வை…

பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த ஜனநாயக ஆதரவு மாணவர் போராட்டங்களை நசுக்க சீனா தனது ராணுவ வல்லமையை பயன்படுத்தி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. என்ன நடந்தது தியானன்மென் சதுக்கத்தில்? ஜனநாயக சீர்திருத்தம் வேண்டும் என்று கோரி தியானன்மென் சதுக்கத்தில் 1989ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். தியானன்மென்னில்…

‘ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேற வேண்டும்’

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானிய அரசாங்கத்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பேரம்பேசல்களில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான நைஜல் ஃபராஜ் பங்கெடுக்க வேண்டும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் வெளியேற பிரித்தானியா தயாராக வேண்டும் எனவும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். த சண்டே டைம்ஸ் இணையத்தளமுடனான…

வர்த்தக போரை வரவேற்கவில்லை- சீனா அறிவிப்பு!

சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு…

டிரம்ப் பிரிட்டன் பயணம்: அரசி எலிசபெத்துடன் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலினியா டிரம்ப் பிரிட்டன் அரசி எலிசபெத்தை சந்தித்தனர். பக்கிங்காம் அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருவருக்கும் பிரிட்டன் ராணி மதிய விருந்து அளித்தார். பிரிட்டன் பயணம் பிரிட்டனில் பயணம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு…

கத்தோலிக்க திருச்சபையின் பாகுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டார் போப் பிரான்சிஸ்

ருமேனியாவில் பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக ரோமா மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ருமேனியாவில் பயணம் மேற்கொண்ட கடைசி நாளில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், 'வரலாற்றில் பாகுபாட்டோடும், தவறாகவும், சந்தேகத்துடன் நடத்திய தருணங்களுக்காக' மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ். பல நூற்றாண்டுகளாக ரோமா மக்கள்…

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் இனி ஆராயப்படும்

அமெரிக்க அரசின் புதிய விதிமுறைகளின்படி, அந்நாட்டிற்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் கிட்டதட்ட அனைத்துவித விண்ணப்பதாரர்களும் இனி தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களோடு, கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய…

மது பழக்கத்தைக் குறைக்க உகாண்டா அரசு புதிய முயற்சி

பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி உகாண்டா நாட்டு அதிகாரிகள் பாக்கெட் சாராயத்துக்கு தடை விதித்துள்ளனர். 45% அளவுக்கு மதுசாரம் (ஆல்கஹால்) இருக்கும் இந்த மதுபானங்கள் வருவாய் குறைவாக உள்ளவர்களால் அதிகமாக உட்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பாக்கெட் சாராயம் பள்ளி மாணவர்கள்கூட வாங்கி அருந்தும் சூழல் இருந்ததாக உகாண்டா…

டிரம்ப் உடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 வடகொரிய அதிகாரிகளுக்கு…

டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்தார். வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன் சர்ச்சைக்கு பெயர் போனவர். தனது தந்தையின் மறைவுக்கு பின் கடந்த…

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநில அரசு கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு –…

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 7 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய ஊழியர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அரசு கட்டடம் ஒன்றில் "பாரபட்சம் இன்றி"…

’விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்’

உண்மையை வெளிக்கொணருதல் என்ற பெயரில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் 'நீண்ட கால உளவியல் சித்திரவதைக்கு' உட்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். நில்ஸ் மெல்சர் எனும் ஐநாவை சேர்ந்த வல்லுநர், அசாஞ் இந்த விசாரணைக்கு தகுதியற்றவர் என்றும், இதன் மூலம் அவரது மனித…

மலேரியா கொசுக்களை கூண்டோடு அழிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி

சிலந்திக்கே உரித்தான ஒருவித நஞ்சை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பூஞ்சையை வெளியிட வைத்து மலேரியாவை பரப்பும் கொசுக்களை பெருமளவில் அழிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அங்கிருந்த மலேரியா கொசுக்களின் எண்ணிக்கை 45 நாட்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது.…

பாகிஸ்தானில் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததால் இருவருக்கு மரண தண்டனை

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஜெனரல் ஒருவருக்கு வெளிநாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகளின் பேரில், ராணுவ நீதிமன்றம் ஒன்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் அரசு அதிகாரி ஒருவருக்கு இதே குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அரசு…

‘இராக், சிரியாவில் 1,300 பொதுமக்களை தெரியாமல் கொன்றுவிட்டோம்’ – அமெரிக்கா…

இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களில், 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எதிர்பாராத விதமாக 1,300 குடிமக்களை கொன்றுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் தெரிவித்துள்ளன. எனினும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மனித உரிமைகள்…