மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட 1.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு!

பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார். மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும்…

வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள்

வாட்சாப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஹேக்கர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்சாப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, 'திறன்பெற்ற ஹேக்கர்' இதை மேற்கொண்டதாக…

புதைத்தபடி 35 சடலங்கள் கண்டுபிடிப்பு

மெக்ஸிக்கோவின் இரண்டாவது நகரமான குவாடலஜராவின் நகர்ப் பகுதியைச் சூழ 35 சடலங்களை மெக்ஸிக்க விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக, அந்நாட்டு அரச வழக்குத் தொடருநர்கள், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், குழுக்களுக்கிடையிலான மோதலில் ஏறத்தாழ 29,000 கொலைகள் கடந்தாண்டு இடம்பெற்ற நிலையில், கடந்தாண்டு டிசெம்பரில் மெக்ஸிக்கோ ஜனாதிபதியாகப் பதவியேற்ற அன்ட்ரேஸ் மனுவல்…

ஹொடெய்டாவிலிருந்து வெளியேறுகின்றனர் ஹூதிகள்

கடந்தாண்டு டிசெம்பரில் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தமொன்றின் கீழான முதலாவது பாரிய நடவடிக்கையாக, முக்கியமான மூலோபாயமிக்க துறைமுகமான ஹொடெய்டாவிலிருந்து யேமனின் ஹூதிப் போராளிகள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். முக்கியமான மனிதாபிமான உதவி சென்றடைவதற்காக, ஹொடெய்டா துறைமுகத்திலிருந்து வெளியேற ஹூதிகளும், யேமனிய அரசாங்கப் படைகளும் இணங்கியிருந்தன. இந்நிலையில், ட்ரக்குகளில் ஹூதிப் படைகள் வெளியேறும்…

தெருநாய்க்குட்டியை காப்பாற்றிய பெண் ‘ரேபிஸ்’ தொற்றால் மரணம்

பிலிப்பைன்ஸில் தெரு நாய் ஒன்றிடம் இருந்து ரேபிஸ் நோய் தொற்று பெற்ற நார்வே நாட்டை சேர்ந்த பெண் உயிரிழந்தார். 24 வயதான பீயர்கீட்ட கலெஸ்டட், தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்கு தெருவில் நாய்க்குட்டி ஒன்றினை கண்டெடுத்ததாக அவரது பெற்றோர் கூறினர். அந்த நாய்க்குட்டியை தன்னுடைய இடத்திற்கு…

பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த சகோதரர்கள் முதலிடம்

பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளனர். சண்டே டைம்ஸ் நாளிதழ் இந்த பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா இருவரும் கடந்த ஆண்டில் 1.356 பில்லியன் பவுண்டுகள் லாபத்துடன் மொத்தம் 22 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில்…

பாகிஸ்தானிலுள்ள நட்சத்திர விடுதியில் தாக்குதல் – குறைந்தது ஒருவர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மூன்று துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பு மிக்க திட்டத்தின் மைய பகுதியாக திகழும் க்வாடர் துறைமுக நகரத்திலுள்ள சாவேர் பேர்ல்-கான்டினென்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் சம்பவம்…

புர்கினா ஃபாசோ தேவாலயத்தில் தாக்குதல் – 6 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவின் வடக்குப்பகுதியில் டாப்லோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் அந்த தேவாலயத்தின் பாதிரியாரும் அடக்கம். தாக்குதல் நடந்தபோது வழிபாடு நடந்துகொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 9 மணிக்கு…

அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை கைவிட வேண்டும்- வடகொரியாவுக்கு 70 நாடுகள்…

அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வட கொரியாவை 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்டனம் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம்…

சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர் – சுவாரஸ்ய தகவல்!

பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். ஒரு வீட்டின் தலைவர் பொறுப்பில் இருப்பவர், அன்றாடம் செய்யும் பணிகளில் அடையும் கஷ்டங்கள், பணத்தை செலவு செய்யும்முன் சேமிக்க வேண்டும் எனும் முனைப்பு, குழந்தைகள், உறவினர்கள் என அனைவரும்…

உலகிலேயே முதல் முறையாக கிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை

நியூசிலாந்தில் உள்ள விலங்குகள் நல மருத்துவர்கள் பிறந்து 56 நாட்களே ஆன கிளிக்குஞ்சு ஒன்றுக்கு, உலகிலேயே முதல் முறையாக மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அழியும் நிலையில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள, நியூசிலாந்தை பூர்விகமாகக் கொண்ட காகபோ வகைக் கிளிகள் தற்போது வெறும் 144 மட்டுமே உள்ளன. நியூசிலாந்தின்…

சீனாவுக்கு ஆதரவான சட்டத்திருத்தம்: ஹாங்காங் பிராந்திய நாடாளுமன்றத்தில் கைகலப்பு

குற்ற விசாரணைக்கு உள்படுத்தப்படுவோரை சீனாவுக்கு அனுப்பிவைத்து விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிகளின்போது ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கைகலப்பு நடந்தது. இன்று, சனிக்கிழமை, நடந்த இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் காயமடைந்தனர். கேரி ஃபேன் எனும் உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேசைகள் மீது…

அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம்!

டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறுக்குமதி…

தடுப்பில் தேசிய சபையின் பிரதித் தலைவர்

வெனிசுவேலா தேசிய சபையின் பிரதித் தலைவர் எட்கர் ஸம்பிரானோவை அந்நாடு பொலிவேரிய புலனாய்வுச் சேவையின் முகவர்கள் தடுத்து வைத்துள்ளனர். எட்கர் ஸம்பிரானோ உள்ளிருக்க, அவரது வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்றிருந்தனர். அந்தவகையில், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவின் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியொன்றைத்…

பவளப்பாறைகளின் பேரழிவு: மூடப்படும் தாய்லாந்தின் பிரபல கடற்கரை

2000ஆம் ஆண்டு வெளிவந்த 'தி பீச்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலுள்ள 'பி பி லே' எனும் தீவிலுள்ள 'மாயா பே' கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக…

அமெரிக்கா – வட கொரியா மோதல்: ஆயுத சோதனை, கப்பல்…

வட கொரியா சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. வட கொரியா அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் நிலக்கரியை கொண்டுசெல்ல இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்த அமெரிக்க சட்டத்துறை, ஆனால் இந்த போக்குவரத்து ஐநாவின் ஏற்றுமதி தடையை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளது.…

ஈரான் உலோக ஏற்றுமதி மீது பொருளாதார தடை – அமெரிக்கா…

அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய…

வடகொரியா ஆயுத சோதனை ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நடந்தது

குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்த ஒரு வாரத்திற்கு பின்னர் அடையாளம் காணமுடியாத கணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. தலைநகர் பியோங்யாங்கின் வடக்கில் சினோ-ரி என்ற இடத்தில் இருந்து இந்த கணைகள் ஏவப்பட்டன என்று தென்கொரிய கூட்டு படைகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.…

எண்ணெய் வளம் வறுமையில் உழலும் கயனா நாட்டிற்கு சாபமாக அமையபோகிறதா?

தென்னமெரிக்காவில் வறுமையில் உழன்று இருந்த ஒரு தேசத்தில் அபரிமிதமான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் இந்த நாடு பொருளாதாரரீதியாக மேன்மை அடையும். புதிய உச்சங்களை தொடும். ஆனால், அந்த எண்ணெய் வளம் கயானா மக்கள் அனைவரது வாழ்விலும் வசந்தம் வீச செய்யுமா? அல்லது எண்ணெய் வளமே சாபமாக…

இரான் அணு ஒப்பந்தம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து அதிபர் ரூஹானி…

கடந்த 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் எல்லா அம்சங்களுக்கும் இனி கட்டுப்பட முடியாது என இரான் கூறியிருப்பது அணு ஆயுத தயாரிப்புக்கான மிரட்டலாகும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கு இதில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரானும், ரஷ்யாவும்…

ஜாமீன் முடிந்ததும் பேரணியாக மீண்டும் ஜெயிலுக்கு திரும்பிய நவாஸ் செரீப்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பை அவரது கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். பேரணியில் ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் இடம் பெற்றன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து…

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி கனடா சென்றார் ஆசியா பீவி!

மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி, நாட்டை விட்டு வெளியேறி கனடாவிற்கு சென்றுள்ளார். பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 8 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47), உச்ச நீதிமன்றம்…

எரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா?

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அந்த விமானத்தில் இருந்த 78 பேரில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் மின்னல் தாக்கியதை அடுத்தே அவசரமாகத் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கியதாக உயிர் தப்பிய விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது…